THIRU PALANAM - WORAIYOOR DISCIPLE

THIRU PALANAM

12 திருப்பழனம் 

காவிரி வடகரைத் தலம் 63ல் இது 50ஆவது திருத்தலம். திரு ஞானசம்பந்தர் திரு நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. இது திருவையாற்றை மையமாகக் கொண்ட தலங்களில் ஒன்று ஏனையவை : திரு நெய்த்தானம், திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருவேதிகுடி திருக்கண்டியூர் திருமழபாடி. இது சந்திரன் வழிபட்ட தலம்.

திரு நாவுக்கரசர் திங்களூர் சென்று முன் காணாதிருந்தும் கலந்த உணர்வுடனிருந்த அப்பூதியடிகலது பெரும் கேண்மையை உணர்ந்து விருந்து கொள இசைந்தார். திரு நாவுக்கரசர் என்னும் தமது திருப்பெயரைப் பூண்ட செல்வன் உற்ற நஞ்சு நீக்கினார். அனைவரது துயரும் நீக்கினார். அவர் வீசு புக்ந்து விருந்தமுது செய்தருளி விருப்புடன் மேவியிருந்த நாளில், செப்பருஞ்சீர் அப்பூதி பின் செல்லத் திருப்பழனப்பதி புகுந்தார்.

THIRU PALANAM

PLACE HISTORY: –THIS IS river Cauvery northern side temple. Out of 63 temples in this cluster this temple is50th temple. Here gnana sambanther naayukku arasar sand decade. In thiu vaiyaaru is encircling form seven temples are available. This one of those seven temples. Other six temples are thiru nei thaanam thiru seeraiyoor thiru poon thuruthi thiru veethi kudi thiru kandiyoor thiru mala baadi

Here moon god conducted prayers.

பண் – பழந்தக்கராகம் 
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM

114 சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே SOL  MAALAI PAYIL GINRA KUYIL ENANGAAL SOLLEEREA The talking wards are repeated form chanting by coco birds and those birds you are soplease tell me சொல்வரிசையைத் தவறாமல் கூவுகின்ற குயில் இனங்களே நீங்கள் சொல்வீர்களாக
பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் PANN MAALAI VARI VANDU PANN MILATRUM PALANATHAAN So many lines form of stripes possessed honey bees which are singing humming sound those thiru palanam temple place lord Siva you have been willingly seated பல வரிசையாக உள்ள கோடுகள் பொருந்திய வண்டுகள் பண் பாடும் திருப்பழனத்தை உகந்து அருளி இருப்பவராய்
முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் MUNN MAALAI NAGU THINGAL  MUGIL VELANGU MUDI SENNI In the evening time before light flashing form of moon adorned on the hair place மாலையின் முற்பகுதியில் ஒளி வீசும் பிறை விளங்கும் சடை முடியைத் தலையில் உடையவனாய்
பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ. PON MAALAI MAARBAN ENN PUTHU NALAM YUNDU EAGAL VAANOO The golden form of konrai flower garland adorned my lord Siva will corner my modesty and then enjoyed and then kept away from me and my dear bees you may diplomat form visit lord Siva’s place and then my mental thinking may be informed to him பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் அணிந்த எம் பெருமான் என்னுடைய களவி இளமை தவத்தை நுகர்ந்து பின் என்னை இகழ்ந்து புறக்கணிப்பானோ தூது சென்று எம் பெருமானிடம் என் நிலையைச் சொல்லுங்கள்
4.12.1
115 கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் KANDAGAN GAAL MUNDAM KAAL KAITHAI KAAL NEITHAL GAAL The water mulli flowers sea mulli flowers and then thaalai trees and then neithal place trees நீர் முள்ளிகளே கடல் முள்ளிகளே தாழைகளே நெய்தல்களே
பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான் PANDARANGA VEEDATHAAN PAATOO VAAL PALANATHAAN To dance according to padarangam form and in that appropriate who has decorated and those singing and dancing are all the time performing place is thiru palanam where lord Siva dwelling பண்டரங்கத்து கூத்திற்கு உரிய வேட்தானாய் பாட்டுகள் நீங்காத திருப்பழனத்தில் உறையும் எம்பெருமான்
வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங் VANDU YULLAAM THADA MOOLGI MATRA VAN ENN THALIR VANNAM The bees are wandering water pond place where I am dipped accidently and then to save me from water he will also jump in to water and then embraced form saved me வண்டுகள் உலாவுகின்ற குளத்தில் யான் மூழ்க என்னைக் காப்பதற்காகத் தானும்
கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ. KONDA NAAL THAAN ARIVAAN KURI KOLAATHU OLI VAANOO And those enjoyment day who will all the time remembering it sowho will take me as his disciple so he will not left out me alone in this world அனுபவித்த அந்நாளை தன் நினைவில் வைத்திருப்பவர் ஆதலின் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்ளுமாறு என்னைத் தனித்து வருந்துமாறு விட்டு விடுபவன் அல்லன்
4.12.2
116 *மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த MALAI KAANGI ELAM KURUGEEA MARANTHAAYOO MATHA MUGATHA In the house behindplace plantations where seatedin kaanchi tree those young lark birds you are and will you forgotten it where saliva oozing out form of face possessed வீட்டுக் கொல்லையில் வளர்க்கப்பட்ட காஞ்சி மரத்தில் தங்கி இருக்கும் இளைய நாரையே மறந்தனையோ பிரகாசிக்கின்ற மதம் பொழியும் முகத்தை உடையதாய்
பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் PANAM KAI MAAYURI POORTHAAN PALAR PAADUM PALANATHAAN The palm tree form of long trunkpossessed elephant pealedand then adorned it as upper dress form and then all are singing form of place is thiru palanam பனை போலும் திரண்டு உருண்ட பருத்த துதிக்கையை உடைய யானை தோலை மேலே போர்த்தவனாய் பலரும் பாடும் திருப்பழனத்தை
நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே NINAI KINRANINAPPU ELLAAM YURAIYAAYOO NIGAL VANDEEA Where my lord Siva dwelling and then whose mental thinking you may know it and then inform the same to me எம்பெருமான் நினைக்கின்ற நினைவை எல்லாம் அறிந்து வந்து என்னிடம் கூற மாட்டாயா
சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.  SUNAIKKU VALAI MALAR KANNAAL SOTRUTHAI SOORVAALOO In my diplomat form went my friend who has also loved him so that shall she not informmy materto him என் தூதாகச் சென்று என் தோழி அவன் பால் தான் கொண்ட காதலால் தூது செல்ல வேண்டிய செய்தியை நெகிழ விட்டு விட்டாயோ
* மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.
4.12.3
117 புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு PUTHIYAI YAAI ENIMAYIYAAM POON THENRAL PURAM KAADU The new flower breezes are carried form flowing you are my dear lord Siva in the burial ground place புதிய இனிய பூமணம் கமழும் தென்றல் காற்றே சுடுகாட்டை
பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான் PATHIYAAVATHU ETHU ENRU PALAR PAADUM PALANATHAAN Place is accepted as his dwelling place form and then so many persons are praising with prayer songs தன் இருப்பிடமாகக் கொண்டு பலரும் புகழும் பழனத்தானாய்
மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை MATHIYAAATHAAR  VEELI THANAI MATHI THITA MATHI MANGAI Thakkan father in law of lord Siva who has not invited to yagafire and then disregarded lord Siva so lord Siva destroyed it through veera bathiraa தன்னை மதியாத தக்கனும் மற்றவரும் செய்த வேள்வியை ஒரு பொருளாகக் கொண்டு அழித்த
விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ. VETHI YAANAAL ENN YUIR MEEAL VELAI YAADAL VIDUTHAANOO Lord Siva who is destiny to all acts in this world and then ruling this world and that form of lord Siva will play with my life விதியைத் தன் இட்ட வழக்காக ஆள்கின்ற பெருமான் என் உயிருடன் விளையாடுகின்றானோ
4.12.4
118 மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் MANN PORUNTHI VAAL BAVERKUM MAA THEERTHA VEETHIYARKUM In this land place has taken birth and then enjoying all the material things in this world and then highly regarded pure form living bharamins இம்மண்ணுலகில் பொருந்தி இம்மை இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும் மேம்பட்ட தூய்மையை உடைய வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் VINN PORUNTHU VEETHI YARKKUM VEEDU PEERAAI NINRAANAI In the upper world place living deevaas those mukthi giver form lord Siva existing in this world வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும் துன்ப வீடும் இன்பப் பேறுமாய் நிற்பவனாய்
பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் PANN PORUNTHA ESAI PAADUM PALANAM SEEAR APPANAI ENN The elderly people are with musical notes are filled form singing prayer songs thoselord Siva dwelling in thiru palanam temple place as leader form சான்றோர் பண்ணொடு பொருந்த இசை பாடும் திருப்பழனத்தில் உறையும் என் தலைவனை
கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ. KANN PORUNTHUM POOLNTHATHUM KAI VIDA NAAN KADAVEENOO While  I am last lap of life and then closing my eyes even those fag end time will he left away from me யான் உயிர் போய்க் கண் மூடும் நேரத்திலும் கைவிடக் கூடியவனோ
4.12.5
119 பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ் PONGU VOOTHAM MAAL KADAL LIL PURAM POOI ERAI THEEDUM In the much salt water possessed in the big sea place where moving behind the waves and then searched prey form fishes மிக்க வெள்ளத்தை உடைய பெரிய கடலின் அலைகள் பின்னே பின்னே சென்று இறையாகிய மீன்களை ஆராயும்
செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான் SENGAAL VENN MADA NAARAAI SEYAL PADUVATHU ARIYEEAN NAAN The red color legs and then white color feathers are possessed lark birds you are so I am not known what  I will do hereafter I do not know it சிவந்த கால்களையும் வெண்ணிறத்தையும் உடைய இளைய நாரையே அடியேன் நான் இனி செய்யும் திறன் அறியேன்
அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான் ANG KOOLA VALAI KAVERNTHAAN ANI POLIL SOOL PALANATHAAN My lovely bangles are cornered by lord Siva who has seated in the plantations are covered thiru palanam temple place என்னுடைய அழகிய திரண்ட வளையல்களைக் கவர்ந்தவனாகிய அழகிய சோலைகள் சூழப்பட்ட திருப்பழனத்தில்
தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ. THAM KOLA NARUM KONRAI THAARATHLAATHU OLI VANOO Where lord Siva will not give me the fragrance fill konrai flower garland or disregarded my lovetowards him உறையும் எம்பெருமான் தன்னுடைய அழகிய நறிய கொன்றைப் பூமாலையை அருளாது அடியேனைக் கை விடுவானோ
4.12.6
120 துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய் THUNAI AAR MUYANGI POOI THURAI SEEARUM MADA NAARAAI With male lark bird is embraced form and then enter in to water bodies those female lark bird you are துணையான ஆண் பேட்டினைத் தழுவிச் சென்று நீர்த்துறையை அடையும் இளைய நாரையே
பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான் PANAI YAARA VAARAA THAAN PAATU VOOVAA PALANATHAAN The drum beats and prayer songs are not stopped form lord Siva you are dwelling in thiru palanam templeplace முரசங்களின் ஆரவாரமும் பாடல்களின் ஒலியும் நீங்காத திருப்பழனத்தில் உறைபவனாய்
கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த KANAI AARA ERU VESUMBIL KADI ARANAM PODI SEITHA With fire arrow shot form in the space place wandering three protection filled castles are destroyed and then converted in to ashes அம்பினால் வானத்தில் இயங்கிய காவலை உடைய மும்மதில்களையும் அடியோடு பொடியாக்கியவனும்
இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ. ENAI YAARA MARBAN ENN ELIL NALAM YUNDU EGAL VAANOO The long garland hanging on two sides of lord Siva’s bosom place who will enjoy my modesty and then will he be disregarded me முடிக்கப்படாத இரு பக்கமும் தொங்க விடப்படும் மாலையை அணிந்த மார்பினை உடையவனுமாகிய எம்பெருமான் என் அழகையும் இனிமையையும் உகர்ந்து பின் என்னை அலட்சியம் செய்வானோ
4.12.7
121 *கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடும் காவிரிபூம் KOOVAI VAAI MANI VARANRIK KOLITHU VOODUM KAAVIRI POOM Thecluster form of ruby diamonds are flushed form placein the river Cauvery banks place திரளாக உள்ள மணிகளை வாரிக் கரையில் சேர்த்துப் பெருகி ஓடிக்கொண்டு இருக்கும் காவிரிப்
பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான் PAAVAI VAAI MUTHU ELANGA P PAAINTHAADUM PALA NATHAAN The spinsters pearls form of eyes are possessed ladies where in swimming form taking bath those thiru palanam place lord Siva you are dwelling பாவையின் கண் முத்துக்கள் விளங்குமாறு மகளிர் பாய்ந்து நீராடும் திருப்பழனத்தை உடையவனாய்
கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப் KOOVAI VAAI MALAI MAGAL KOON KOL EETRIN KODI AADAI The koovai fruit like red color lips are possessed lords parvathi whose husband is lord Siva who has carried bull emblem studded flag கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயை உடைய பார்வதியின் கேள்வனாய் உள்ள எம் பெருமானின் காளை எழுதிய கொடியின் மேலே உள்ள
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.  POOVAI GAAL PALANANG GAAL POO GAATHA POLUTHU YULATHEEA Those bull back seated those birds you are , I am not bearing the separation of lord Siva so my time hard yooli form moving so I am every minutes toiling and then moiling form hardly moving மழலை போல் இனிமையாகப் பேசும் பூவைகளே எம்பெருமானுடைய பிரிவு ஆற்றாமல் அடியேனுக்கு பொழுது ஒவ்வொரு கணமும் ஓர் ஊழியாக நீண்டு கழியாது துன்புறுத்துகின்றது

*கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் 
பொருந்திய முத்துக்கள் அவையாவன
யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், 
மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள 
மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு 
முத்துக்களாம்.
** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து 
எனக்கொள்க. சங்கு, இப்பி, மீன், தாமரைமலர் 
என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை 
“சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த” எனத் 
திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 
2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.
4.12.8
122 புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப் PULLI MAAN PORI ARAVAM PULL YUARNTHAAN MANI NAAGAM The doted skin possessed stage and then then the doted skin possessed the snakes and then anna bird emblem studded the  flag carrier bharma and then five headed snake is used as bed form by thirumal புள்ளிகளை உடைய மானே மடப் புள்ளிகளை உடைய பாம்பே அன்னப் பறவையின் உருவத்தை எழுதிய கொடியை உயர்த்திய பிரமனும் ஐந்து தலைகளை உடைய பாம்பை தலையணையாக உடைய திருமாலும்
பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான் PALLI YAAN THOLUTHU EEATHA ERUKINRA PALANATHAAN And all the praying form lord Siva seated in thiru palanam temple place தொழுது துதிக்குமாறு பழனத்தில் உறையும் எம்பெருமான்
உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங் YULLU VAAR VENAI THEERKUM ENRU YURAI PAAR YULLAGU ELLAAM Those who are put lord Siva in meditation place and that disciples bad deeds are removed form and then lord Siva give them happiness in that way world people propagating தன்னைத் தியானிப்பவர்கள் உடைய வினைகளைப் போக்கி இன்பம் அருளுவான் என்று உலகோர் கூறுகின்றனர்
கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ. KALLI YEEAN NAAN EVERKU  ENN KANA VALAI YUM KADAVEENOO In the mind place culprit form of existing lord Siva’s disciple I am and then my bad deeds are not removed and then my heavybangles are lost form of stage will I attain உள்ளத்தில் கள்ளத் தன்மையை உடைய அடியேன் வினை தீரப் பொறாமையே அன்றி இத்தலைவனுக்கு என் கனமான வளையல்களையும் இழக்கும் நிலையேன் ஆவேனோ
4.12.9
123 வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் VANGITHEEA ENN VALAI KAVERNTHAAN VAARAANEEA AAYIDINUM In magic form mesmerized me and then lost my balance of mind who will not come here to put his grace on me என் வளைகளை வஞ்சித்துக் கவர்ந்த அடியேனுக்கு அருள் செய்ய வாரானே என்றாலும்
பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் PANGIN KAAL SERAGU ANNAM PARAN THAARKUM PALA NATHAAN The white cotton form soft and then red colorlegs are possessed and then white colorfeathersare possessed anna birds raising emotionalsound those temple place is thiru palanam where dwelling lord Siva செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்சிறகுகளையும் உடைய அன்னப்பறவை ஆரவாரிக்கும் பழனத்து எம்பெருமான்
அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி ANGI POOI KALI MEIYA ALAL VOOMBUM APPOOTHI And then got afraid of the poverty sorrow removed form three types of yagaa fire developing bharamins அஞ்சிப்போய் கலியின் துயரம் நீங்குமாறு முத்தீயை ஓம்பும் அப்பூதியின்
குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே. KUNGI POO VAAI NINRA SEVADIYAAI KOODIYAYAIYEEA Where the protection form of sea god will you connect my round shaped form of circle and then allow me to mingle with my better half குடுமிக்குத் தாமரைப் பூவாக இருக்கும் சிவந்த அடிகளை உடைய கடல் தெய்வமே கூடல் கழியின் இரண்டு முனைகளும் இணைந்து ஒன்று சேருமாறு செய்வாயாக.
4.12.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *