THIRU KACHI EEAGAMBAM - WORAIYOOR DISCIPLE

THIRU KACHI EEAGAMBAM

07 திருஏகம்பம் 

தொண்டை நாட்டுத் தலம் 32ல் இது முதலாவது தலம். மூவர் பெருமக்கள் பாடப்பெற்றது. அம்பிகை மணலால் சிவலிங்கம் செய்து வழிபடும் பொழுது வெள்ளப்பெருக்கெடுத்தலைக் கண்டு கட்டித் தழுவ அருள் சுரந்த தலம். அன்னை காமாட்சி முப்பத்திரண்டு அரங்களைப் புரிந்த தலம்.

THIRU KACHI EEAGAMBAM

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAMBALAM

PLACE HISTORY: — THIS IS THONDAI KING DOM TEMPLE. Out of 32 temples in this cluster this temple is firstone. Three main saints sang decade here. Ambigai here made sand Sivalinga and then daily conductedpoojaas. The river floodedand then on seeing it ambigai embraced Siva lingam and her breast embedded on the Siva lingam. Here tharmaa acts are conducted by ambigai.Here 32 types of tharmaa acts are conducted by her.

62 கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் KARAVAADUM VANN NENGERKKU ARI YAANAI KARAVAAR BAAL Lord Siva is concealed and then forgotten formand then enjoying thosematerial  benefits in thisworld those hard minded persons lord Siva is rareform to them and then no vengeance possessed simple and humble minded persons those disciples mind place பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அறியனாய், வஞ்சனை இல்லாத அடியவர் உள்ளத்தில்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை VEERA VAADUM PERU MAANAIVEDAI YEERUM VITHAGANAI lord Siva mingled oneness form and then dancing form of prime god form and then who ascended on the back of bull கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய் காளையை ஏறும் திறன் உடையவனாய்
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி ARAVAADA SADAI THAALA ANGAIYINIL ANAL EEATHI And then snakes are dancing form and then pigtails are hanging form and then in the palm place fire pot carried form பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும் உள்ளங்கையில் தீயினை ஏந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. ERAYU AADUM PERU MAANAI ENN MANATHEEA VAITHEENEEA In the night time dancing form those lord Siva is permanently captured in my mind place இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்தேனே
4.7.1
63 தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந் THEENOOKUM KILI MALALAI YUMAI KEEALVAN SELUM PAVALAM The honey form tastier and the parrot like soft form talking lords parvathi  who is wife to lord Sivaand then rich form of coral like தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையாகிய உமாதேவியின் கணவனாய் செழுமை மிக்க பவளம் போன்ற
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை THAAN NOOKUM THIRUMEEANI THALAL YURUVAAM SANGARANAI Red colorbody possessed form and then fire flames form appearing lord Siva and then doing good to all persons செந்நிற மேனியனாய்த் தழல் உருவனாய் எல்லோருக்கும் நன்மை செய்பவனாய்
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும் VAAN NOOKUM VALAR MATHI SEEAR SADAIYAANAI VAANOORKUM And then evening time red color spacelike red color hairplace the curved moon adorned formand to all deevaas சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. EEA NOORKUMPERU MAANAI ENN MANATHEEA VEITHEENEEA And others lord Siva alone leader who is also my prime god so I kept him permanently in my mind place மற்றவர்களுக்கும் தலைவன் ஆகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துள்ளேன்
4.7.2
64 கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் KAI POOTHU MALAY THOOVI KAATHALITHUVAANOORGAL In the hand place about to bloom thoseflower buds are carried form and other poojaa articles are placed under lord Siva’s feet in dedicated form and then willingness filled form of upper world deevaas கைகளால் அலரும் பருவத்து பொருட்களையும் பூக்களையும் அர்ப்பணித்த விருப்பொடு வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை MUPPOOTHUM MUDISAAITHU THOLA NINRAMUTHAL VANAI All the three times a day ( morning mid-day and evening ) bowed headed form prayed under the feet of lord Siva those prime god he is காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதல் கடவுளாய்
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி APP POOTHU MALAR THOOVI EIM PULANUM AGATHU ADAKKI And then all the times happy form appearing lord Siva and then those disciples who are controlledthe five sense organs எங்கு எப்போதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உலகத்தார் அடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. AEPPOTHUM ENIYAANAI ENN MANATHEEA VAITHEENEEA And then dedicated sacred water and flowers and then place him permanent form in my mind place அபிசேக நீரையும் மலர்களையும் அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
4.7.3
65 அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப் ANDA MAAI AATHIYAAI ARU MARAI YOODU EIM BOOTHAM In the whole universe form and then prime cause form created this world those beginner of thisworld and then rare five vast forces are called in the name of boothaass and then rare veetha form உலகங்களாய் உலகங்களுக்குக் காரணமாய் அரிய வேதங்களால் ஐம்பெரும் பூதங்களின்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத் PINDA MAAI YULAGUKU VOOR PEI PORULLAAM PINGA GANAI And then physical body form and then to the whole world people, concepts form and well decorated head hair possessed form appearing to the wholeworld உடலாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும் தகைக்கோலத்தை உடையவனாய்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற THONDER THAAM MALAR THOOVI SOL MAALAI PUNAI GINRA And then disciples are spraying flowers under his feet and the prayer songs form praising lord Siva அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்து சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே. INDAI SEEAR SADAI YAANAI ENN MANATHEEA VEITHEENEEA And then head garland adorned form of pigtail possessed lord Siva who has been placed permanently in my mind place in lock and key form அணிவிக்கின்ற தலை மாலை அணந்த சடைய உடைய பெருமானுமாகிய என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
4.7.4
66 ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப் AAR EERU SADAI YAANAI AAYIRAM PEEAR AM MAANAI The Ganges arecarried in the head hair place and then thousands of sacred names are possessed lord Siva inleader form appearing கங்கை தங்கிய சடையினாய் ஆயிரம் திரு நாமங்கள் உடைய தலைவனாய்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை PAAR EERU PADU THALAI YIL PALI OLLUM PARM PARANAI The vultures are plucking the flesh from the skull place lord Siva collecting begging food those highly regarded form of lord Siva பருந்துகள் படிகின்ற சிறந்துபட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி NEER EERU THIRU MEEAI NIN MALANAI NEDUM THOOVI Lord Siva whohasadorned sacred ashes all over the body place and then pure form of appearing in this world and then tail possessed form of திரு நீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே. EEAR EAARUM PERU MAANAI ENN MANATHEEA VITHEENEEA Lord Siva who is ascending on the back of bull to travel all the places whom I have kept permantly in my mind place காளையை ஏறும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
4.7.5
67 தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற் THEESANAI THEESANGAL THOLA NINRA THIRU MAALAAL Lord Siva in light form and then all the worlds are praying under the feet of thirumal who is sub lord to preserve all the things in this world ஒளி வடிவினனாய் உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண் POOSANAI POOSANAIGAL  YUGAPPAANAI POOVIN KANN Those thirumal prayed under the lord Siva’s feet so as to get special powers and boons from lord Siva and then his disciples are daily conducting pootaas under his feet and then accepting it willingly by lord Siva வழிபடப்படுபவனாய் அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம் VAASANAI MALAI NILA NEER THEE VALI AAGAASAMAAM And then with in the flower placefragrance form spread over everywhere and all the mountains and five boothaas form existing in this world பூவின் கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய் மலைகளாகவும் ஐந்து பூதங்களாகவும் விளங்குகின்றவனாய்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே. EESANAI EMM MAANAI ENN MANATHEEA VITHEENEEA Who is controlled and then managing everythings in this world and then leader to me and that form of lord Siva I have kept permantly in my mind place எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
4.7.6
68 நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம் NALLAANAI NAL AANA NAAN MARAI YOODU AARU ANGAM That highly regarded form andthen four veethaas and six angaas in it excelled form பெரியோனாய் மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச் VALLAANAI VALLAAR GAL MANATHU YURAIYUM MIN THANAI Those disciples who are in simple and then humble form whose mind place lord Siva dwelling தன்னை உள்ளவாறு உள்ள வல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும் SOLLAANAI SOL AARNTHA PORUL AANAI THUGAL EEATHUM Lord Siva in veetha manthraa form and then in the veetha place embedded prime god form and then naturally there is no cursing on his part வேத வடிவினனாய் வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய் இயல்பாகவே களங்கம் ஏதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. ILLAANAI EM MAANAI ENN MANATHEEA VITHEENEEA Who is leader form existing lord Siva is kept by me permanently in my mind place இல்லாதவனாய் எங்கள் தலைவனாய் உள்ள பெருமானனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்
4.7.7
69 விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் VERITHAANAI NAAL VARKKU VEV VEERU VEETHANGAL Four saints such as sanager sanathener and so on to who veetha meaning is variety form disseminated சனகர் முதலிய நால்வர்க்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத் PURI THAANAI PATHAM SANTHI PORUL YURU VAAM PUNNIYANAI Ad then allthe veethaas are consideredlord Sivaalone is prime lord and then liked by veethaas வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய் சொற்களும் சந்தியால் ஆகிய
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும் THARI THAANAIGAN GAI EER THAAL SADAI MEEAL MATHIL MOONRUM and then lowly hanging hair place Gangesare carriedform and then three castles are தாழ்ந்த சடை மீது கங்கை நீரை ஏற்றவனாய் மும்மதில்களையும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே. ERITHAANAI EMM MAANAI ENN MANATHEEA VAI THEENEEA Fired by lord Siva those powerful lord Siva is kept in my mind place எரித்தவனாய் உள்ள எம்பெருமானை என் மனத்தில் வைத்தேனே
4.7.8
70 ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப் AAGAM BATHTHU ARAYU ANAI YAAN AYAN ARITHARKKU ARI YAANAI Ten formpowerful avathaars are taken by sub lord thirumal and then possessed snake bed to sleep who is not seen lord Siva in visual form பத்து அவதாரங்கள் எடுத்த பாம்புப் படுக்கை உடைய திருமால் அறிய இயலாதவனாய்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை BAAGAM PENN AAN BAAGAMAAI NINRAANAI Lord Siva in his let part of body in female form and thenright part in male form and then ever permanent disciple’sleader form ஒரு பாகம் பெண் பாகமாகவும் மறு பாகம் ஆண் பாகமாகவும் நிலை பெற்ற ஆண் மக்களின் தலைவனாய்
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி MAAGAM BA MARAI YOOTHUM ERAI YAANAI MATHIL KACHI And then big pole form and then everpermanent form of veethaas are chanting leader form and then protection walls are covered form of place is kanchi puram பெரிய தூண் போல அசைக்க முடியாத என்றும் நிலைபெற்ற வேதங்களை ஓதும் தலைவனாய் மதில்கள் உடைய காஞ்சி நகரில்
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே. EEAGAMBAM MEEYAANAIENN MANATHEEA VITHEENEEA Lord Siva who has been dwelling thirueeagambam temple place I am kept him permanently in my mind place ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என் மனத்துள் வைத்தேனே
4.7.9
71 அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங் ADUTHU AANAI YURI THAANAI ARU GUNARKKUPPAASU PATHAM To kill lordSiva in that way coming the mad  yagaa fire place created elephant is killed and then pealed its skin and then adorned it as upper dress and then to arjunaa, whom lord Siva gave him paasubatha battle force தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும் அருச்சுனனுக்கும் பாசுபதப் படை
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு KODU THAANAI KULA VARAIYEEA SELAI YAAGA KOOR AMBU And then meru hills are converted as bow form ad then shot an arrow கொடுத்தவனையும் மேரு மலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம் THODU THAANAI PURAM ERIYA SUNAI MALGU KAILAAYAM So as to destroy three castles and then natural ponds are filled kaiyilai hills are tried by ravana to pluck it மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனும், சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே முற்பட்ட இராவணைனை நசுக்கி செயல்பட முடியாதவாறு தடுத்தவனும் ஆன பெருமானை என் மனத்தே வைத்தேனே.
4.7.10

EDUTHAANAI THADUTH THAANAI ENN MANATHEEA VEITHEENEEA

Those ravana is stopped by lord Siva by stamped him under the hills and that form of lord Siva is kept permanently in my mind place


இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஏகாம்பரநாதர்,
தேவியார் – காமாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்  –OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *