OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VALM SULI MUM MANIKKOOVAI

ganesheit July 22, 2021

11.012 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

THIRU VALM SULI MUM MANIKKOOVAI

  அ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்

திருமுறை : பதினொன்றாம் திருமுறை

  பண் :

நாடு : சோழநாடு காவிரித் தென்கரை

தலம் : வலஞ்சுழி

சிறப்பு:

விளக்கம்:
திருவலஞ்சுழி என்பது சோழ வள நாட்டில் திருக் குடந்தைக்குக் குடபால் உள்ள தேவாரம் பாடப் பெற்ற ஒரு சிவப்பதி அப்பதியில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப் பெற்ற மும்மணிக் கோவையாதலின் இது திருவலஞ்சுழி மும்மணிக் கோவை என்று பெயர் பெற்றது. இப்பதி காவிரி வலமாகச் சூழ்ந்து செல்லும் இடத்தில் அமைந்திருப்பதனால் இவ்வாறு பெயர் பெற்ற தென்பர். வேறு காரணம் கூறுவதாகும் உளர்.

மும்மணிக் கோவை ஆசிரியப்பா, வெண்பா கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைப் பாக்களால் முப்பது செய்யுட்கள் அமையுமாறு பாடப் பெறுவதாகும். ஆனால் இம்மும்மணிக் கோவையில் பதினைந்து செய்யுட்களே அமைந்துள்ளன. ஆயினும் இது முதலும் முடிவும் இயைய நிரலே அந்தாதித் தொடை விடாது அமைந்துள்ளது. அதனால் இது பதினைந்து பாட்டே கொண்டதாகும்.

இந்நூலில் திருவலஞ்சுழியில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபிரானைக் கண்டு அவ் இறைவனது பேரழகில் ஈடுபட்டுக் காதல் கொண்டு வருந்தும் தலைவியின் நீங்கா அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் பாடல்களும், திருவலஞ்சுழி இறைவனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றும் அகத்துறைப் பாடல்களும் உள்ளன.


பதிக வகை: ஆசிரியப்பா


வணங்குதும் வாழி

நெஞ்சே புணர்ந்துடன்

நெஞ்டமே உடன் பொருந்தி

பொருகடல் முகந்து

கருமுகிற் கணம்நற்

அலை மோதும் கடலில் இருந்து நீரை முகந்து கரிய மேகக் கூட்டம்

படவர வொடுங்க

மின்னிக் குடவரைப்

நல்ல படத்தினை உடைய பாம்பு ஒருங்க மின்னி மேற்கு மலையில்

பொழிந்து கொழித்திழி

அருவி குணகடல்

பெய்து கொழித்து இறங்கி வருகின்ற அருவி கீழ்க் கடலில் வந்து

மடுக்குங் காவிரி

மடந்தை வார்புனல்

பொருந்தும் காவிரி மடந்தையின் நீண்ட வெள்ளத்தை

உடுத்த மணிநீர் வலஞ்சுழி

உடுத்த அழகிய நீரை உடைய வலஞ்சுழியில்

அணிநீர்க் கொன்றை

அண்ணல தடியே.  1

உள்ள அணி நீர்க் கொன்றை அணிந்த அண்ணலது அடியை வணங்குங்கள்

  பதிக வகை: வெண்பா

அடிப்போது தந்தலைவைத்

தவ்வடிகள் உன்னிக்

அந்த அண்ணலது அடியாகிய அலரும் பருவத்து அரும்பைத் தம் தலையில் வைத்து அந்த அடிகளைச் சிந்தித்து

கடிப்போது கைக்கொண்டார்

கண்டார் – முடிப்போதா

மணமுள்ள மலரை கைக் கொண்டார் திருமுடியில் பூவாக

வாணாகஞ் சூடும்

வலஞ்சுழியான் வானோரும்

பாம்பைச் சூடும் திருவலஞ்சுழியில் கோயில் கொண்டு உள்ளவனது தேவர்களும்

காணாத செம்பொற் கழல்.  2

காணாத செம்பொன் கழலைக் கண்டார்கள்

  பதிக வகை: கட்டளைக் கலித்துறை

கழல்வண்ண மும்சடைக் கற்றையும்

மற்றவர் காணகில்லார்

கழல் வண்ணத்தையும் சடைக் கற்றையும்

பிறர் காணமாட்டார்கள்

தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார்

இருவரந் தாமரையின்

தீயின் நிறத்தைக் கண்டே தளர்ந்தார்

தாமரையின்

நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிற

வண்ணம் நெடியவண்ணம்

நிழல் வண்ணமும் பொன் வண்ணம் நீர் நிற

வண்ணம் நெடிய வண்ணம்

அழல்வண்ண முந்நீர் வலஞ்சுழி

ஆள்கின்ற அண்ணலையே.  3

அழல் வண்ணம் ஆகிய அவற்றைக் கொண்டவனும் முந்நீர் வலஞ்சுழியை

ஆள்கின்றவனாகிய அண்ணலது

  பதிக வகை: ஆசிரியப்பா

அண்ணலது பெருமை

கண்டனம் கண்ணுதற்

பெருமை பொருந்திய உன் பெருமையைக் கண்டேன் என்று பாங்கன் தலைவனை வியந்தது நெற்றிக் கண்ணை உடைய

கடவுள் மன்னிய

தடமல்கு வலஞ்சுழிப்

சிவபெருமானது நிலை பெற்ற இடம் வளம் மிக்க வலஞ்சுழியாகும்

பனிப்பொருட் பயந்து

பல்லவம் பழிக்கும்

பனிப் பொருள் பயந்து தளிரைப் பயக்கும்

திகழொளி முறுவல்

தேமொழிச் செவ்வாய்த்

திகழ் ஒளி முறுவல் தேமொழியானது செவ்வாய்

திருந்திருங் குழலியைக் கண்டு

திருந்த கரிய குழலியைக் கண்டு

வருந்திஎன் உள்ளம்

வந்தஅப் போதே.  4

வருந்தி என் உள்ளம் வந்த அப்போதே தலைவியைக் கண்டுவந்த பாங்கன் அவளது சிறப்பைத் தலைவனுக்குக் கூறியது என்க

  பதிக வகை: வெண்பா

போதெலாம் பூங்கொன்றை

கொண்டிருந்த பூங்கொன்றைத்

மலர் எல்லாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத்

தாதெலாம் தன்மேனி

தைவருமால் –தீதில்

தாது எல்லாம் திருமேனியைத் தடவிவரும் தீது இல்லாத

மறைக்கண்டன் வானோன்

வலஞ்சுழியான் சென்னிப்

வேதத்தை ஒதுபவன் விண்உலகத்தவன் வலஞ்சுழியில் கோயில் கொண்டு இருப்பவன் தலையில் 

பிறைக்கண்டங் கண்டணைந்த பெண்.  5

பிறைச் சந்திரனை வைத்திருப்பவன் என்று தோழி தலைவிக்குக் கூறுகின்றாள்

  பதிக வகை: கட்டளைக் கலித்துறை

பெண்கொண் டிருந்து வருந்துங்கொ

லாம்பெரு மான்திருமால்

தலைவி விட்டில் இருந்து வருந்துவான திருமால்

வண்கொண்ட சோலை வலஞ்சுழி

யான்மதி சூடிநெற்றிக்

வழிபட்ட திருவலஞ்சுழியில் எழுந்தருளி இருக்கும் பெருமான் பிறைச்சந்திரனை முடியில் குடி இருக்கச் செய்தவன் அவனது நெற்றிக்

கண்கொண்ட கோபம் கலந்தன

போல்மின்னிக் கார்ப்புனத்துப்

கண்ணில் தோன்றிய கோபம் போல் மின்னி மேகங்கள் புனத்தில்

பண்கொண்டு வண்டினம் பாடநின்

றார்த்தன பன்முகிலே.  6

இசை கொண்டு வண்டினம் பாட ஆரவாரித்தன ஆகவே நான் உடனே புறப்பட வேண்டும் என்று தலைவனை கோடைகாலம் வரவு கண்டு தேர்ப்பாகனோடு கூறியாது

  பதிக வகை: ஆசிரியப்பா


முகிற்கணம் முழங்க

முனிந்த வேழம்

மேகக் கூட்டங்கள் ஒலி செய்ய ஆண் யானையின்

எயிற்றிடை அடக்கிய

வெகுளி ஆற்ற

கோபத்தைத் தணிக்க

அணிநடை மடப்பிடி

அருகுவந் தணைதரும்

அழகிய நடையினை உடைய பெண் யானை அருகில் வந்து அணை தரும்

சாரல் தண்பொழில்

அணைந்து சோரும்

சாரல் குளிர்ந்த சோலை சூழ்ந்த

தேனுகு தண்தழை

செறிதரு வனத்தில்

தேன் சிந்தும் குளிந்த தழைகள் செறிந்த வனத்தில்

சருவரி வாரல்எம்

பெருமநீர் மல்கு

இரவில் வர வேண்டாம் எம் தலைவரே கங்கையைச் சடையில் 

சடைமுடி ஒருவன்

மருவிய வலஞ்சுழி

சடையில் வைத்த ஒருவன் பொருந்தி இருக்கும் திருவலஞ்சுழி

அணிதிகழ் தோற்றத்

தங்கயத் தெழுந்த

அணி திகழ் தோற்றத்து அழகிய தடாகத்தில் இருந்து எழுந்த

மணிநீர்க் குவளை அன்ன

மணி நீர் குவளை போன்ற

அணிநீர்க் கருங்கண்

ஆயிழை பொருட்டே.  7

அழகிய கருங்கண்களை உடைய தலைவியின் பொருட்டு வராதே என்பதாகும் இது இரவுக் குறி வரும் தலைவனைத் தோழி வர வேண்டா என விளக்கியது 

  பதிக வகை: வெண்பா

பொருட்டக்கீர் சில்பலிக்கென்

றில்புகுந்தீ ரேனும்

இது தலைவியின் கூற்று நல்ல பொருள் அமைதி உடையவரே சிறுபிச்சை வேண்டி என் வீடு நோக்கி வந்தீரேனும்

அருட்டக்கீர் யாதும்ஊர்

என்றேன் மருட்டக்க

அருள் அமைதி உடையவரே உம்முடைய ஊர் எது என்று கேட்டேன் மருளத் தக்கவாறு

மாமறையம் என்றார்

வலஞ்சுழிநம் வாழ்வென்றார்

பெரிய மறைக்காட்டில் உள்ளோம் என்றார் திருவலஞ்சுழி நம் வாழ்விடம் என்றார்

தாம்மறைந்தார் காணேன்கைச் சங்கு.  8

அவர் மறைந்து சென்றார் என் கை வளையலைக் காணேன்

  பதிக வகை: கட்டளைக் கலித்துறை

சங்கம் புரளத் திரைசுமந்

தேறுங் கழியருகே

சங்குகள் புரண்டு வர அலையைச் சுமந்து ஏறும் கழியருகே

வங்கம் மலியுந் துறையிடைக்

காண்டிர் வலஞ்சுழியா

மரக் கலங்கள் நிறைந்திருக்கும் துறையிடையில் காணுங்கள் திரு வலஞ்சுழியில்

றங்கம் புலன்ஐந்தும் ஆகிய

நான்மறை முக்கணக்கன்

ஆறு அங்கம் புலன் ஐந்துமாகிய நான் மறை மூன்று கண்களை

பங்கன் றிருவர்க் கொருவடி

வாகிய பாவையையே.  9

உடைய இருவருக்கும் பங்கன்று ஒருவடிவாகிய பாவையையே கண்டீர் என முடிக்க

  பதிக வகை: அகவல்

பாவை ஆடிய

துறையும் பாவை

இது தலைவன் கூற்று பாவை நீராடிய துறையும் பாவை

மருவொடு வளர்ந்த

அன்னமும் மருவித்

அன்போடு வளர்ந்த அன்னமும் பொருந்தித் தங்கள்

திருவடி அடியேன்

தீண்டிய திறனும்

பாதங்கள் தொட்டா திறனும்

கொடியேன் உள்ளங்கொண்ட

சூழலும், கள்ளக்

கொடியேன் ஆகிய எனது உள்ளம் கொண்ட சூழலும் கள்ளத் 

கருங்கண் போன்ற

காவியும் நெருங்கி

தன்மை உடைய கரிய கண்கள் போன்ற கருங்குவளையும் நெருங்கி

அவளே போன்ற

தன்றே தவளச்

அவளே போன்றது திரு நீர்ரைச்

சாம்பல் அம்பொடி

சாந்தெனத் தைவந்து

சந்தனம் போலப் பூசி

தேம்பல் வெண்பிறை

சென்னிமிசை வைத்த

பிறைச் சந்திரனைத் தலை மீது அணிந்த

வெள்ளேற் றுழவன்

வீங்குபுனல் வலஞ்சுழி

வெண்மையான காளை ஊர்தியை உடையவனின் நிறைந்த நீர் வளமுள்ள திருவலஞ்சுழி என்னும் தலத்தில்

வண்டினம் பாடுஞ் சோலைக்

வண்டுக் கூட்டங்கள் பாடும் மணம் பொருந்திய சோலையாகும்

கண்ட அம்மஅக்

கடிபொழில் தானே.  10

இந்தச் சோலை தலைவியைப் போன்றது எனத் தலைவன் கூறுவது இப்பாடல்

  பதிக வகை: வெண்பா

தான்ஏறும் ஆனேறு

கைதொழேன் தன்சடைமேல்

சிவபெருமான் ஏறும் காளை ஊர்த்தியை வணங்க மாட்டேன் அவன் சடை மீது உள்ள

தேன்ஏறு கொன்றைத்

திறம்பேசேன் – வான்ஏறு

தேன் பொருந்திய கொன்றை மலரின் சிறப்பைப் புகழ மாட்டேன் விண்ணில் ஏறுகின்ற

மையாருஞ் சோலை

வலஞ்சுழியான் என்கொல்என்

இருள் பொருந்திய சோலைகளை உடைய திருவலஞ்சுழியான் என்

கையார் வளைகவர்ந்த வாறு.  11

கையில் இருந்த வளையைக் கவந்தது ஏன் இது தலைவியின் கூற்று 

  பதிக வகை: கட்டளைக் கலித்துறை

ஆறுகற் றைச்சடைக் கொண்டொரொற்

றைப்பிறை சூடிமற்றைக்

கங்கை ஆற்றை சடையில் கொண்டு பிறைச்சந்திரனைச் சூடி

கூறுபெண் ணாயவன் கண்ணார்

வலஞ்சுழிக் கொங்குதங்கு

உமாதேவியை இடது பாகத்தில் கொண்டவனது திரு வலஞ்சுழி மணம் தங்கும்

நாறுதண் கொம்பரன் னீர்கள்இன்

னேநடந் தேகடந்தார்

பூங்கொம்பைப் போன்றவர்களே அவர்கள் இந்த நேரம் கடந்து சென்று இருப்பார்

சீறுவென் றிச்சிலைக் கானவர்

வாழ்கின்ற சேண்நெறியே.  12

கோபம் கொண்ட வில் ஏந்திய வேடர்கள் வாழ்கின்ற தொலை வழியில் நடந்து சென்றார்கள் தலைவனும் தலைவியும் உடன் போக்கில் சென்றனர் என்க

  பதிக வகை: ஆசிரியப்பா

நெறிதரு குழலி

விறலியொடு புணர்ந்த

நெறிந்த கூந்தலை உடைய விறலியோடு சேர்ந்த

செறிதரு தமிழ்நூல்

சீறியாழ்ப் பாண

செறிவினை உடைய தமிழ் நூல் வல்ல சீறியாழை உடைய பாணனே

பொய்கை யூரன்

புதுமணம் புணர்தர

பொய்கைகளை உடைய ஊரனாகிய தலைவன் புதுமணத்தை நுகர

மூவோம் மூன்று பயன்பெற்

றனவே நீஅவன்

மூன்று பேரும் மூன்று வகையான பயனைப் பெற்றோம் நீ அவனுடைய

புனைதார் மாலை

பொருந்தப் பாடி

புனைந்த தார் மாலையைப் பொருந்தப் பாடி

இல்லதும் உள்ளதும்

சொல்லிக் கள்ள

இல்லாததும் உள்ளதும் சொல்லி கள்ள

வாசகம் வழாமல்

பேச வண்மையில்

வாசகம் வாழாமல் பேசும் திறம் உடைய

வானர மகளிர் வான்பொருள்

பெற்றனை, அவரேல்

பரத்தையரிடமிருந்து மிக்க பொருள் பெற்றனை அவர்கள்

எங்கையர் கொங்கைக்

குங்குமந் தழீஇ

எம் தங்கையராகிய பரத்தையர் கொங்கைகளில் குங்குமக் குழம்பைப் பூசி

விழையா இன்பம்

பெற்றனர் யானேல்

மிக்க இன்பத்தைப் பெற்றனர் என் நிலை யாதோ எனில்

அரன்அமர்ந் துறையும்

அணிநீர் வலஞ்சுழிச்

சிவபெருமான் அமர்ந்து உறையும் அழகிய நீர் வளம் பொருந்திய திரு வலஞ்சுழி வண்டுகள்

சுரும்பிவர் நறவயற்

சூழ்ந்தெழு கரும்பில்

தேன் உண்ணும் வயல் சூழ்ந்து எழுகரும்பில் உள்ள கருப்பஞ் சாறு

தீநீர் அன்ன வாய்நீர் சோரும்

சிலம்புகுரற் சிறுபறை பூண்ட

வாயில் நீர் சோரும் கால் சிலம்பும் சிறு பறையும் உடைய

அலம்புகுரற் கிண்கிணிக்

களிறுபெற் றனனே.  13

கிண்கிணி ஒலிக்கும் புதல்வனைப் பெற்றேன் இது தலைவி பாணனை நோக்கி வெகுண்டு கூறியது

  பதிக வகை: வெண்பா

தனம்ஏறிப் பீர்பொங்கித்

தன்அங்கம் வேறாய்

இது தோழி கூற்று தனங்களின் மீது பசலை பூத்து தன் உடம்பு வேறுபட்டு

மனம்வேறு பட்டொழிந்தாள்

மாதோ – இனம்ஏறிப்

மனம் வேறுபட்டு ஒழிந்தாள் பாதிரி மரத்தில்

பாடாலம் வண்டலம்பும்

பாய்நீர் வலஞ்சுழியான்

வண்டு அலம்பும் நீர் வளம் மிக்க திரு வலஞ்சுழி யான்

கோடாலங் கண்டணைந்த கொம்பு.  14

மாலையில் உலா வந்ததைக் கண்ட பூங்கொம்பு போன்ற தலைவி இந்த நிலையை அடைந்தாள் என்க

  பதிக வகை: கட்டளைக் கலித்துறை

கொம்பார் குளிர்மறைக் காடனை

வானவர் கூடிநின்று

பூங்கொம்பு நிறைந்த குளிர்ந்த சோலைகளை உடைய திருமறைக் காட்டில் உள்ளவனைத்

நம்பா எனவணங் கப்பெறு

வானை நகர்எரிய

தேவர்கள் கூடி நின்று இறைவனே என வணங்கப் பெறுவானை திரிபுரங்கள் எரித்து

அம்பாய்ந் தவனை வலஞ்சுழி

யானைஅண் ணாமலைமேல்

அழியுமாறு அம்பு தொடுத்தவனை திருவலம் சுழியில் வாழும் இறைவனை அண்ணாமலை மேல்

வம்பார் நறுங்கொன்றைத் தாருடை

யானை வணங்குதுமே.  15

மணம் உள்ள நறுங் கொன்றைத் தார் உடையவனை நாம் வணங்குவோமாக


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

July 22, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: