OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU EALU KOOTRU ERUKKAI

ganesheit July 22, 2021

11.013 திருஎழுகூற்றிருக்கை (நக்கீரதேவ நாயனார்)

THIRU EALU KOOTRU ERUKKAI

  அ௫ளியவர் : நக்கீரதேவ நாயனார்

திருமுறை : பதினொன்றாம் திருமுறை

விளக்கம்:

திரு எழுகூற்றிருக்கை என்பது மிறைக் கவி, (ஓவியப் பாட்டு) வகைகளில் ஒன்று. ஒன்று என்னும் எண்ணை முதலாகக் கொண்டு தொடங்கிப் படிப்படியே ஒவ்வோர் எண்ணாகக் கூட்டியும் அவ்வாறே ஒன்று ஒன்றாக ஒன்று முடியக் குறைத்தும் இவ்வாறு ஒன்று ஒன்றாக ஒன்று முடியக் குறைத்தும் இவ்வாறு ஒன்று முதல் ஏழ் ஈறாக எண்ணும் நிலையில் அமைந்த செய்யுள் எழு கூற்றிருக்கை என்று பெயர் பெறும்

எழுகூற்றிருக்கை என்னும் ஓவியப் பாட்டை முதன் முதலாகப் பாடியவர் திரு ஞான சம்பந்தரே அதனை அடியொற்றிப் பாடப் பட்டதேயாகும். இப்பாட்டு உமையொடு பாகனாகிய சிவபெருமானுடைய அருளுருவத் தோற்றத் தினையும் அவ்விறைவன் உயிர்களின் பொருட்டுச் செய்தருளிய அருட் செயல்களையும் நக்கீர தேவ நாமனார் இத்திரு எழுகூற்றிருக்கையில் இனிய முறையில் இயம்புகின்றார்.

ஓருடம்பு ஈருரு

ஆயினை ஒன்றுபுரிந்

ஓர் உடம்பில் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு உருவம் உடையவன் ஆனாய், ஒன்றைச் செய்து

தொன்றி னீரிதழ்க்

கொன்றை சூடினை

அதில் இருந்து ஈரிதழ்க் கொன்றை சூடினை

மூவிலைச் சூலம் ஏந்தினை

மூன்று இலைகளாகப் பிரிந்துள்ள சூலத்தைக் கையில் ஏந்தினை

சுடருஞ் சென்னி மீமிசை

ஒளிவிடும் தலையின் மேல்

இருகோட் டொருமதி

எழில்பெற மிலைச்சினை  (5)

இரு முனைகளும் உயர்ந்து காணப்படும் பிறைச் சந்திரனை அழகு பெறச் சூடினாய்

ஒருகணை இருதோள்

செவியுற வாங்கி

ஒப்பற்ற அம்மை இரு தோள் செவியோடு பொருந்த இழுத்துத்

மூவெயில் நாற்றிசை

முரண்அரண் செகுத்தனை

திரிபுரங்களை நான்கு திசைகளிலும் கெடுமாறு அழித்தாப்

ஆற்ற முன்னெறி பயந்தனை

பொருந்த முன் மாதிரியாக செய்தனை

செறிய இரண்டு நீக்கி

நல்வினை தீவினையாகிய இரண்டையும் நீக்கி

ஒன்று நினைவோர்க்

குறுதி யாயினை    (10)

ஒன்றாகிய தெய்வத்தை நினைப்பவர்களுக்குப் பற்றுக் கோடாக இருக்கின்றார்

அந்நெறி ஒன்று

அந்த நெறி ஒன்றே யாம்

மனம்வைத் திரண்டும்

நினைவி லோர்க்கு

இரண்டு நினைவு இல்லோர்க்கு அதாவது மன ஒருமைப்பாடு

முன்னெறி உலகங்

காட்டினை அந்நெறி

உடையவர்க்கு வீடு பேற்றினைக் காட்டினை அறநெறி 

நான்கென ஊழி தோற்றினை

நான்கென நான்குயுகங்கள் உண்டாக்கினாய்

சொல்லும் ஐந்தலை

அரவசைத் தசைந்தனை    (15)

சிறப்பாகச் சொல்லப்படும் ஐந்தலை நாகத்தைக் கொண்டு ஆடினாய்

நான்முகன் மேன்முகம்

கபாலம் ஏந்தினை

பிரம்மனது மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக ஏந்தினை

நூன்முக முப்புரி மார்பில்

மார்பில் முப்புரி நூலை அணிந்தனை

இருவர் அங்கம்

ஒருங்குடன் ஏந்திய

நான் முகன் திருமால் ஆகிய இருவர் அங்கத்தினையும் ஒருங்கே ஏந்தினாய் அதற்குக் காயாரோகணத் திருக் கோலம் என்று பெயர்

ஒருவநின் ஆதி

காணா திருவர்

உன்னுடைய ஆதியைக் காணாமால் பிரமனும் திருமாலும்

மூவுல குழன்று

நாற்றிசை உழிதர   (20)

மூன்று உலகங்களிலும் சுற்றி நான்கு திசைகளிலும் அலைய

ஐம்பெருங் குன்றத்

தழலாய்த் தோன்றினை

அழகிய பெருமலையில் தீயாய்த் தோன்றினை இது நடை பெற்றது திருவண்ணாமலையில்

ஆறுநின் சடையது

ஐந்துநின் நிலையது

கங்கையாறு உன் சடையில் உள்ளது திரு ஐந்து எழுத்து பஞ்சாட்சர மந்திரம் உன் நிலையாகும்

நான்குநின் வாய்மொழி

மூன்றுநின் கண்ணே

உன் வாய்மொழி நான்கு வேதங்களாகும் முன்றாக உள்ளவை உன் கண்களே

இரண்டு நின் குழையே

ஒன்றுநின் ஏறே

இரண்டு நின் குழைகளே ஒன்றாக உள்ளது நின் வாகனம் ஆகிய காளையே

ஒன்றிய காட்சி

உமையவள் நடுங்க (25)

உன் ஒன்றிய காட்சியைக் கண்டு உமையவள் நடுங்க

இருங்களிற் றுரிவை

போர்த்தனை நெருங்கி

பெரிய யானைத் தோலைப் போர்த்திக் கொண்டாய் நெருங்கி

முத்தீ நான்மறை

ஐம்புலன் அடக்கிய

முத்தீயை வளர்த்து நான்மறை ஓதி ஐந்து புலன்களை அடக்கிய

அறுதொழி லாளர்க்

குறுதி பயந்தனை

அறு தோழிலாளர்களுக்கு உறுதியாக நன்மைகளைச் செய்யும்

ஏழில் இன்னரம் பிசைத்தனை

ஏழாகிய இனிய நரம்புகளை இசைத்தாய்

ஆறில் அமுதம்

பயந்தனை ஐந்தில்  (30)

ஆறு சுவையில் ஆறில் அமுதத்தைக் கொடுத்தாய் ஐந்தில்

விறலியர் கொட்டு

மழுத்த வேந்தினை

விறலியர் கொட்டும் அழுத்த ஏந்தினை (ஐந்து வகையான இசைக் கருவிகள் தோல் துளை நரம்பு கஞ்சம் மிடறு)

ஆல நீழல்

அன்றிருந் தறநெறி

கல்லால மரத்தின் நிழலில் தட்சினா மூர்த்தியாக எழுந்தருளி அறநெறி

நால்வர் கேட்க

நன்கினி துரைத்தனை

நால்வர் கேட்க நன்கு இனிது உரைத்தனை

நன்றி இல்லா

முந்நீர்ச் சூர்மாக்

கடலில் நன்றி இல்லாத சூரபதுமன் மாமரம் வடிவாக நின்ற பொழுது

கொன்றங் கிருவரை

எறிந்த ஒருவன்     (35)

அவனைக் கொன்று அங்கிருந்த இருவரையும் அழித்த முருகக் கடவுளின்

தாதை ஒருமிடற்று

இருவடி வாயினை

தந்தையே ஒப்பற்ற கண்டத்தை உடைய இரு வடிவு ஆயினை (கழுத்து கருமை உடல் செந்நிறம்)

தருமம் மூவகை

உலகம் உணரக்

மூன்று வகை தருமத்தையும் உலகம் உணரக்

கூறுவை நால்வகை

கூறுபவை நால்வகை

இலக்கண இலக்கியம்

நலத்தக மொழிந்தனை

இலக்கண இலக்கியங்களை நலம்தர வல்லவாறு மொழிந்தனை

ஐங்கணை அவனொடு

காலனை அடர்த்தனை     (40)

காமனோடு எமனையும் அழித்தனை

அறுவகைச் சமயமும்

நெறிமையில் வகுத்தனை

அறுவகைச் சமயமும் முறையாக வகுத்தனை

ஏழின் ஓசை

இராவணன் பாடத்

ஏழ் இசையோடு இராவணன் பாட

தாழ்வாய்க் கேட்டவன்

தலையளி பொருத்தினை

அமைதியாக இருந்து கேட்டு அவனது வேண்டு கோளைப் பூர்த்தி செய்தனை

ஆறிய சிந்தை

யாகி ஐங்கதித்

மனம் சாந்தம் அடைந்து ஐந்து கதியில் செல்லும்

தேரொடு திசைசெல விடுத்தோன் (45)

தேரோடு எல்லாத் திக்குகளிலும் விஜயம் செய்ய அனுப்பியது

நாற்றோள் நலனே

நந்தியிங் கிருடியென்

நான்கு தோள்களை உடைய உனது நலனாகும் நந்தி பிருங்கி முனிவர் என்று 

றேற்ற பூதம்

மூன்றுடன் பாட

ஏற்ற பூதம் மூன்றுடன் பாட

இருகண் மொந்தை

ஒருகணங் கொட்ட

இரு கண் மொந்தை என்ற தோல் கருவி ஒரு கணம் கொட்டவும்

மட்டுவிரி அலங்கல்

மலைமகள் காண

தேன் பிலிற்றும் மாலையை அணிந்த உமையவள் காண

நட்டம் ஆடிய

நம்ப அதனால்     (50)

நடனம் ஆடிய நம்பி அதனால்

சிறியேன் சொன்ன

அறிவில் வாசகம்

சிறியேன் சொன்ன பொருள் அறிவு வாசகம்

வறிதெனக் கொள்ளா

யாகல் வேண்டும்

சிறப்பில்லாதது என்று விட்டு விடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்

வெறிகமழ் கொன்றையொடு

வெண்ணில வணிந்து

மணம் வீசும் கொன்றை யொடு வெண்ணிலவு அணிந்து

கீதம் பாடிய அண்ணல்

கீதம் பாடிய அண்ணலே

பாதஞ் சென்னியிற்

பரவுவன் பணிந்தே. (55)  1

உன் பாதங்களைப் பணிந்து துதிக்கின்றேன்

  பதிக வகை: வெண்பா

பணிந்தேன்நின் பாதம்

பரமேட்டீ பால்நீ

பர மேட்டி உன் பாதங்களைப் பணிந்தேன் பால் போன்ற திருநீறு

றணிந்தால வாயில்

அமர்ந்தாய் – தணிந்தென்மேல்

அணிந்த மதுரையில் அமர்ந்தாய் கோபம் தணிந்து என்மேல்

மெய்யெரிவு தீரப்

பணித்தருளு வேதியனே

நெற்றிக் கண் பார்வையினால் உடம்பு முழுவதும் உண்டாகிய எரிச்சல் தீரப் பணிந்து அருள்வாய் வேதியனே

ஐயுறவொன் றின்றி அமர்ந்து.  2

சந்தேகம் ஏதும் இன்றி அமர்ந்து அருள் செய்வாய் என்ற படி


திருச்சிற்றம்பலம்—omthiruchitrambalam

July 22, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: