OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Kaaraikaalammaiyaar

ganesheit July 22, 2021

காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த

Kaaraikaalammaiyaar

அற்புதத் திருவந்தாதி (பாசுரங்கள் 44- 144)

Arputhathiruanthaathee

The true ganaaknowedge attained by karaikaalammaiyaar who has sang this wonderful anthaathi. Thisaruputhathiruanthaathi is novelty filled one.  Because of its specialty those elderly people gave the name aruputhathiruanthaathi. This poems are easier and then mind melting form composed. The rare Siva gaana nature is clear form explained. Those disciples with true love filled form singing and that poems will meltdown the heart

மெய்யறிவு கைவரப் பெற்ற காரைக்கால் அம்மையார் முதன்முதலாகப் பாடி அருளியது இந்த அற்புதத் திரு அந்தாதியே என்பார் அற்புதத் திருவந்தாதி புதுமையான போக்குடையது இவ்அந்தாதியின் சிறப்பை நோக்கியே சான்றோர் இந்த அந்தாதிக்கு அற்புதத்திருவந்தாதீ என்று பெயர் கொடுத்து அருளினர் இந்த அந்தாதி ஓதுவதற்கு இனிமையும் எளிமையும் உடையது அறிதற்கு அரிய சிவஞானத்தின் இயல்பை தெளிவாக விளக்குவது மெய்யன்போடு ஓதுவோர் உள்ளத்தை இந்த அந்தாதி உருக்கும் இயல்பு உடையது

Karaikaalamaiyaar who has got sacred grace from lord Siva and those knowledge isfirst person place and then to instruct this world people and thoseway following songs have sung. Here lord Siva’s grace acts are thinking form place in the second person place and then in that way gave happiness to mind

அம்மையார் தாம் பெற்ற திருஅருள் மெய் அறிவினைத் தன்மை நிலையில் வைத்து உலகத்தார்க்கு அறிஉறுத்துப் பாடல்களும் சிவபெருமான் உடைய அருள் கோலங்களையும் திருஅருள் செயல் களையும் எண்ணிச் சிவபிரானை முன்னிலைப் படுத்தி அழைத்து உரையாடி மகிழும் பாடல்களும் அனைவருக்கும் இன்பத்தை அளிப்பன

44. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் PEARANTHU MOLI PAYINRA PIN EALLAAN KATHAL நான் இந்த உலகத்தில் தோன்றி மொழிபயின்ற பின் எல்லாம் உன்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகளும் SERANTHU NIN SEEVADIYEEA SEERTHEEAAN NERAM THIGALLUM
திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நான் சிவந்த பாதங்களை அடைந்தேன் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எம்பெருமானே தேவர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்த கருமைநிறம் பொருந்திய கண்டத்துவானோர் பெருமானாக நிற்கும் நீ
எஞ்ஞான்று தீர்ப்ப திடர். என்பிறவித் தும்பத்தை எப்போது தீர்க்கப் போகின்றாய்
1
45 இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் சிவபெருமான் எம்முடைய இடரைக் கலையமாட்டார் என்றாலும் எம்மிடம் இறங்காமல் இருந்தார் என்றாலும்
படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில்
எம்பால் நாங்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டாராயினும் ஜோதிவடிவம் உள்ள தம் திருமேனியில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் எலும்புமாலை எப்போதும் நீங்காமல் இருக்கும் கோலத்தோடு தீயைத் திருக் கையில் ஏந்தி ஆடுகின்ற எம் தலைவருக்கு
கன்பறா தென்னெஞ் சவர்க்கு. என் அன்பு என்னும் அறாது என் நெஞ்சு அவருக்கே உரியது
2
46 அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் எங்களுடைய ஏழு வகையான பிறப்புகளிலும் அவருக்கே அடிமைத் தொண்டு செய்வோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் – படர் சடைமேல்
சிவபெருமானுக்கே அன்பு காட்டுவோம் கொடி போன்ற சடையின் மீது பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் துண்டாகச் சந்திரன் பிளவைச் சூடுகின்ற அந்தப் பெருமானுக்கு அல்லாமல் வேறு ஒருவருக்கு ஆளாவது இனி எந்தக் காலத்தும் இல்லை
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள் எந்த நாளும் அவருக்கே ஆளாகக் கழியும் அன்றி வேறுயாவருக்கும் அடிமை ஆகாமலே எங்கள் நாட்கள் போகும்.
3
47 ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் இறைவனுக்கு நாங்கள் அடிமை ஆனோம் எங்கள் அல்லலைத் (துன்பத்தை) தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க 
கேளாத தென்கொலோ கேளாமை- நீளா ஆகம்
நான் பலமுறை முறையிட்டுக் கேளாமல் இருக்கின்றான் ஆமை ஓட்டை நீண்ட மார்பில் ஆபரணமாக அணிந்தவன் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் அவன் திருமேனி சிவப்பாகத் தோன்றி அணுகியபோது திருமிடறு வேறு நிறமாக இருப்பதைப் போலவே
எம்மைஆட் கொண்ட இறை. பெரும் கருணை உடையவனைப் போல வலிய வந்து ஆண்டு கொண்டவன்
4
48. இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி சிவபெருமானே எல்லா உயிர்களை தோற்றுவிப்பவர் அவ்வாறு தோன்றிய உயிர்கள் 
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – இறைவனே
அந்த இறைவனே கால இறுதியில் அழிக்கவும் செய்வான் ஈசா இறைவர் எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் எம் தாயே தந்தையே என கூவி அழைக்கும் எங்களை எங்கள் மேல் உள்ள வினைகளின் துன்பத்தை விடுவித்து
வந்தால் அது மாற்றுவான். நலம் அருளுவான்
5
49 வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் கயிலாயத்தில் வாழ்பவர் என்பவரும் தேவர்களின் தலைவன் என்பவரும்
தானத்தான் என்பாரும் தாமென்க – ஞானத்தான்
தேவலோகம் செல்ல வேண்டாம் என் நெஞ்சமாகிய இடத்திலேயேஅவனை எப்போதும் ஞானத்தால் தரிசிக்கின்றேன் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் முன்பு நஞ்சை உண்டு அதனால் இருள் கப்பியத்தை போல் கருமை நிறம் பெற்ற மொய்த்த ஒளியை உடைய கண்டம் உடையவனாகவே நான் பார்க்கின்றேன்
என்நெஞ்சத் தானென்பன் யான். மற்றவர்கள் என்ன சொன்னால் எனக்கு என்ன, நான் பார்ப்பதையே சொல்கின்றேன்
6
50. யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் யான் தவம் உடையவன் என் நெஞ்சே நல்ல நெஞ்சு
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – யானே அக்
யான் பிறப்பு அறுக்க எண்ணினேன் யான் அந்த கஜாஸ்வரன் ஆகிய கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற யானையின் தோலைப் போர்த்த நெற்றிக் கண்ணனும் வெண்ணீற்றை அணிந்த
அம்மானுக் காளாயி னேன். பெருமானுமாகிய சிவ பெருமானுக்கு ஆளாகிவிட்டேன்
7
51 ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் இறைவனுக்கு நான் அடிமை ஆனேன் அடிமையான பொழுதே யாராலும் மகவாக பெறுதற்கு அரியேன்
ஆயினேன் அஃதன்றே யாமாறு – தூய
ஆகிப் பிறவித் துயரைக் கடந்து விட்டேன் அஃது அல்லவா புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் புனிதமான புனலை உடைய கங்கையைத் திருமுடியிலே தாங்கியவனும் ஒப்பற்ற பொன்மலையாகிய மேருவைப் போன்ற தோற்ற முடையவனும்
அனற்கங்கை ஏற்றான் அருள். அனலை உள்ளங்கையில் தாங்கியவனும் ஆகிய ஆண்டவன் அருள் இருக்கும் வண்ணம்
8
52 அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் பிறருக்கு எல்லாம் சிறந்த பதவிகளைக் கொடுத்துப் பலவகை உலகங்களை ஆள்விப்பது இறைவன் அருளே
அருளே பிறப்பறுப்ப தானால் – அருளாலே
அந்த அருளே பிறப்பை அறுத்து முத்திதருவது ஆனால் நானோ அவன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் உண்மையான பொருளைக் காணும் நியமத்தை உடையவன் ஆதலால் அவன் அருளே எனக்கு எல்லாகாலத்தும்
எப்பொருளு மாவ தெனக்கு. எல்லாப் பொருளும் ஆவது
9
53 எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் என் உயிருக்கு இனிமை தனம் எம் பெருமானாகிய ஈசனை யான் என்றைக்கும்
மனிக்கினிய வைப்பாக வைத்தேன்- எனக்கவனைக்
மனத்துக்கு இனிய பெரும் செல்லமாகப் பொதிந்து வைத்தேன் அவனையே எனக்கு உரிய பிரானாகக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் கொண்டேன் அப்படிபிரானாகக் கொண்டவுடன் நான் மாறாத இன்பத்தை அடைந்தேன்
உண்டே யெனக்கரிய தொன்று. இனிமேல் எனக்குக் கிடைப்பதற்கு அரியதாகிய பொருள் ஒன்று உண்டோ
10
54. ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றையே எப்போதும் நினைந்து வாழ்ந்தேன் அந்த ஒன்றையே துணிவாக உறுதி செய்து பிறவற்றில் இருந்தும் நீங்கினேன்
ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்– ஒன்றேக் கான்
அந்த ஒன்றையே என் அந்தரங்கத்திலுள்ளே பொன்னைப் போலப் பொதிந்து இன்பம் அடைந்தேன் அந்த ஒன்று கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் கங்கையைத் தரித்தவனும் சந்திரனை அணிந்து ஒளி வீசும் ஜடாமுடியை உடையவனும் கொழுந்துவிட்டு ஒளியை உடைய
அங்கையாற் காளாம் அது. கனலை உடைய உள்ளங்கையைப் பெற்றவனும் ஆகிய சிவபெருமானுக்கு ஆளாகும் இந்த இன்பம்
11
55. அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அவர் மேல் உலகு எல்லாம் தலைவராகும் வண்ணம் அதுதான்
அதுவே இனியறிந்தோ மானால் – அதுவே
இந்த உண்மையை இப்போது அறிந்தோம் ஆனால் பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் பனிக்கு வாடும் கொன்றை மாலையை அணிந்தவரும் விளக்கமான நெற்றியின் மேல் ஒப்பற்ற ஒற்றைக் கண்ணைப்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. படைத்தவருமாகிய சிவபெருமானுடைய பெருமை இது மட்டுமா
12
56. தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் தகவுடையவர் இல்லையா அம்மையின் மேல் பாம்பு ஊராமல் இருக்க வேண்டுமானால் இறைவன் மார்பிலேயே அதுபுகும்படி செய்யக் கூடாது அவனுக்கும் அம்மைக்கும் நெடும் தூரமோ
புகவிடுதல் பொல்லாது கண்டீர் – மிகவடர
அவன் மார்பில் ஆபரணம் என்று சொல்கிறார்களே அங்கேதான் நீண்டமாலை இருக்கின்றதே அதுபோதுமே இந்தப் பாம்பு எதற்கு ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் இது வரை இருப்பது போலவே அது இருக்கும் என்பது என்ன நிச்சயம் என்றேனும் ஒரு நாள் மலைமகளைச் சாரலாம்
சார்ந்திடுமே லேபாவந் தான். அந்தச் சார்ப்பை நினைத்தாலே பயமாக இருக்கின்றது இப்படி ஆகிவிட்டால் இதைப் போன்ற மகாபாவம் வேறு இல்லை
13
57. தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் என்னுடைய நெஞ்சம் தானே தனியாக வேறு துணையின்றி இருக்கும் நெஞ்சம்
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால்– தானேயோர்
அது தன்னைத் தானே உய்யக் கொள்ளும் பொருட்டு அவனைத் தனக்குள்ளே பெரிய சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளும் ஒப்பற்ற தன்னைப் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் பூணும் திருமேனியால் பொலிவு பெற்றுக் கொழுந்து பொங்கும் அழலின் வெம்மையைச் சேர்ந்த நஞ்சை உமிழும்
நீணாகத் தானை நினைந்து. நீண்ட நாகத்தை உடைய வனைத் தியானம் செய்து
14
58. நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் தேவர்கள் தம் நலத்தையும் இறைவனை வழிபட்டால் அவை மிகும் என்பதையும் நினைந்து சிலகாலம் தாழ்ந்திருந்து பிறகு நிண்ட மாலைகளால் இறைவனுடைய பாதத்தை
புனைந்தும் அடிபொருந்த மாட்டார்– நினைந்திருந்து
அலங்காரம் செய்தும் அந்தத் திருவடியில் மனம் பொருந்தமாட்டார் எப்போதும் இடைவிடாது அவனையே நினைத்திருந்து மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் மின்னலைப் போன்ற பெரிய செம்மை உடைய சடையை உடையவனே மறையை எப்போதும் ஓதிக் கொண்டு இருப்பவனே என்று வாழ்த்துகின்ற எனக்கு
கென்செய்வான் கொல்லோ இனி. அவன் இனிமேல் என்ன செய்து அருளுவானோ
15
59. இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் என் நெஞ்சே இப்போது நாம் உய்த்து போகின்றோம் இறைவன் திருத்தாளைச் சேர்த்துவிட்டோம்
இனியோ ரிடரில்லோம் நெஞ்சே–இனியோர்
ஆகையால் இனி ஒரு துன்பமும் நமக்கு இல்லை இதை இப்பொழுது சிந்தித்துப்பார் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கன்மங்களுக்கு உரிய வலிமையை உண்டாக்குவதும் தன்பால் விழுந்தவர் மீளாமல் இருக்கப் பண்ணுவதும்
கனைக்கடலை நீந்தினோம் காண். ஆகிய பிறவியாகிய ஒழித்தலை உடைய கடலை நாம் நீங்கிவிட்டோம்
16
60. காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது பழைமையான உலகத்துக்கு மூலகாரணமாக நின்ற சிவபெருமான் வடிவத்தை மட்டும் காண்பவர்களுக்கும் காணத்தக்க இயல்பு உடையவன் அந்த முதல் நிலையில் உள்ளவர் பொதுமக்கள்
காண்பார்க்குங் காணலாங் காதலாற்– காண்பார்க்கு
அன்புனால் இவன் நம் இறைவன் என்று எண்ணிக் கை தொழுது காணும் பக்தர்களுக்கும் காணுதல் கூடும் அந்த நிலையில் பக்தர் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் உள்ளே நிறைந்த பேரன்பால் கானுகின்றவர்களுக்கும் அவர்களுடைய சித்தத்துக்கு உள்ளே ஜோதிமயமாகக் காட்சி அளிப்பவன் இந்த கடைசி நிலையில் வருகின்றவர் அனு பூதிமான் 
காதியாய் நின்ற அரன். பழமையான உலகத்துக்கு முல காரணமாக நின்ற சிவபெருமான்
17
61 அரனென்கோ நான்முகன் என்கோ அரிய உருத்திரன் என்பேனோ படைப்புக்கடவுள் நான்முகன் என்பேனோ
பரனென்கோ பண்புணர மாட்டேன்– முரண் அழியத்
வைகுண்டமான பரமபதத்தில் (பரன்) இருக்கும் மாயோன் என்பேனோ வலிமை அழியும்படி இருந்தயாவர்க்கும் அரிய சால சூட்சுமப் பொருளான பரம்பெருள் என்போரை தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை இராவணனைத் தன்னுடைய திருவடியில் உள்ள கட்டை விரலால் அடர்த்தவனை
யானவனை எம்மானை இன்று. இறைவனாகிய அவனை எம் தலைவனை இன்று அடியேன் அவன் பண்பை உணரமாட்டேன்
18
62 இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் சிவனைக் காணும் அனுபவம் இன்று நமக்கு எளிதாக இருக்கின்றதே ஆனால் திருமாலுக்கும் நான்முகனாகிய பிரமதேவனுக்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை– என்றும் ஓர்
இன்றுபோல் அன்றும் அளப்பதற்கு அரியவனாக நின்றவனும் என்றைக்கும் மூவா மதியானை மூவே ழுலகங்கள் முதுமை அடையாமல் உள்ள ஒப்பற்ற சந்திரனைத் தலையில் அணியாக உடையவனும் ஒருபத்தொடு உலகங்களுமாக
ஆவானைக் காணும் அறிவு. உள்ள வனும் ஆகிய சிவபெருமானை உள்முகத்தே கண்டு அனுபவிக்கும் அனுபவம் நமக்குக்கிட்டியது
19
63 அறிவானுந் தானே அறிவிப்பான் தானே இறைவன் எல்லாவற்றையும் அறிபவனும் தானாக இருக்கின்றான் உயிர்களுக்கு அறிவிப்பவனும் அவனாகவே இருக்கின்றான்
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற அவனே அறிவாகவும் அறிவித்த பின் அவ்வாற்றால் உயிர்கள் அறியும் பொழுது தானும் அவற்றது அறிவோடு உடன் நின்று அறிகின்றான் மேலும் அறியப்படுகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் விரிசுடர், கதிரும் மதியும் தீயும் அப்பொருளாக உள்ளான் அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே விரிந்த சுடராகவும் (சூரியன்) மதியும் தீயும் உலகமும் ஆகாயமும்
அப்பொருளுந் தானே அவன். ஆகிய அப் பொருள்களும் அவனே ஆவான்
20
64. அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் சிவபெருமானே சந்திரன் சூரியன் தீ ஆகாயம் வடிவம் ஆனவன்
அவனே புவிபுனல்காற் றாவான்– அவனே
அந்த சிவபெருமானே பூமி, நீர் காற்றாகவும் இருக்கின்றான் அவனே இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான ஆகாயமாகவும் எட்டு வகையான காணும் மூர்த்திகளாக உள்ளான்
மயனாகி நின்றானும் வந்து. வீட்டு உயிர்களுக்கு ஞானமயனாகி வந்து நின்றானும் ஆவான்
21
65. வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின் சிவபெருமானே இந்த கொலைகாரப் பாம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் அது உம்மிடம் புகலிடம் அடைந்து பிறையை விழுங்கினாலும் விழங்கி விடும் 
சிந்தை யதுதெரிந்து காண்மினோ– வந்தோர்
அது போன்ற பாம்பின் செயலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அம்மையார் கூறுகின்றார் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் தேடி வந்து ஓர் இரவு ஆனது தன் இயல்பு பின்னும் இருண்டாற்போலக் கருத்திருக்கும் கண்டத்தை உடையவரே எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை. தலைவரே உம்முடைய திருமுடியில் உள்ள பிறை ஆகிய சந்திரன் பாதுகாப்பாக இருக்க உதவவும்
22
     
66. பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் பிறையையும் கங்கையையும் சீறுகின்ற பாம்பும் தம் திருமுடிமேல் அணிந்த சிவபெருமான்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங்– கறைமிடற்ற
எமக்கு இறங்காமல் இருப்பார் எனினும் நஞ்சை மிடற்றில் வைத்த எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எம் தந்தையாருக்கு நாம் ஆளாகி விட்டோம் என்று பலகாலம் எண்ணி இரைவோடு அமைதி பெற்று இருக்கும்
எந்தையா உள்ள மிது. என்னுடைய புண்படாத நெஞ்சமாகிய இது அவ்வாறு என்னும் பத்தி நிலை எல்லாவற்றிலும் உயர்ந்தது
23
67 இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா இந்தச் சோதி வடிவம் அல்லவா இறைவனுடைய திரு உருவம் ஆகும் வண்ணம்?
றிதுவன்றே என்றனக்கோர் சேமம்– இது அன்றே
இது அல்லவா எனக்கு ஒரு பாதுகாப்பான இடம் இது அல்லவா மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே அனுபவத்தை மீண்டும் எண்ணிப் பார்க்கின்ற என் சிந்தனையில் மின்னுகின்ற ஜோதிவடிவாகிய
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு. இன்னும் இந்த விழிப்பு நிலையினும் சுழன்று கொண்டு இருக்கின்றது
24
68 இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கள் பெருமான் எங்கும் சென்று பிச்சை ஏற்றுக் கொள்வதையும் இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும் இங்கே அவனைக் காணாமல் இருந்து கொண்டு அவனைப் பற்றிக் குறை கூறுவது ஏன்
எங்கும் பலிதிரியும் எத்திறமும்– பொங்கிரவில்
எம் பெருமானே உன்னுடைய பெருமையையும் மற்றவர்கள் கூறும் பழியையும் எண்ணாமல் எந்த இடத்திலும் பிச்சைக்காகத் திரியும் இந்தக் கோலமும் மிக்க இரவில்  ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் சுடுகாட்டில் ஆடுவதும் தெற்காக என்று கேட்போம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று. நாம் அவனை நேரில் காணும் அன்று
25
69 ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன தொங்கும் குழல் போன்ற புரிசடைகள் பொன்மலையின் மேல் மின்னும் மின்னல்களையும் போல உள்ள
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின்– ஞான்றெங்கும்
அவன் நீல கண்டப் பெருமான் கருப்பான கழுத்தை உடையவர் [பொன் மேனியில் அது சிறிது மாறுபாடாகத் தோன்றும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அவனுடைய பொன்னிறம் பெற்ற திருமார்பில்
அக்கயலே வைத்த அரவு. எலும்பு மாலையும் பாம்புகளும் விளங்கிப் புரண்டு தோன்றும்
26
70. அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் இறைவா உன் திருமேனியில் ஒரு பாம்பையும் நீ விரும்பி அணிந்து கொள்ளாதே
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் – முரணழிய
பாம்போடு பழகின் தீமையாகவே முடியும் என்று பல நாட்கள் இறங்குகின்றோம் ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே வலிமை உடைய பகைவர்கள் மூன்று அசுரர்களின் வலிமையும் அழியும் படி மூன்று மதில்களாகிய திருபுரங்களையும் ஓர் அம்பால் எய்தவனே
பொன்னாரம் மற்றொன்று பூண். வேறு ஒரு பொன் ஆரத்தைப் பூண்பாயாக நீ விரும்பி அணிகின்றாய் நான் பயந்து நடுங்குகின்றேன்
27
71. பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் இறைவர் ஆகிய இவர் கொலை புரிவதாகிய நாகப் பாம்பு ஒன்றை மார்பில் ஆபரணமாக அணிந்து மற்றொரு பாம்பை சிறந்து தோன்றும் புலித்தோல்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் – கோள்நாகம்
ஆடையாக கயிராக இறுகக் கட்டும் அரை நாணாக மேலே விளங்கும்படி நன்றாக செறித்துக் கொண்டு மற்றொரு பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் அழகிய திருமுடியின் மேல் அணிந்து இருப்பது மாகிய இந்தச் செயல் எல்லாம் அறிவில்லாத எனக்கு
கென்முடிவ தாக இவர். என்ன முடிவு உண்டாவதற்காக அறிவுடையவர்க்கே இவர் செயல் விளங்கும் என் போன்ற போலிகளுக்கு விளங்காது
28
72. இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் சிவபெருமானை மெய் பொருள் உண்மையை உணரும் அறிவு வன்மையும் அருள் வன்மையும் இல்லாதவர்கள் எல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர் – இவர் தமது அவர்கள் யாவரும் அப்பெருமானை இழிந்து பேசுவதையே பாருங்கள் என்ன அறியாமை இது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த இந்தச் சிவபெருமானுடைய தாமரைப் பூவில் அழகை உடைய சிவந்த திருமேனியில் சுடுகாட்டுத் திருநீற்றைப் பூசி எலும்பை ஆபரணமாக அணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர். பேய் போன்ற வடிவத்தைப் பார்த்தவர்கள் ஆகிய அன்பர் அல்லாத பிறர் வெளிக் கோலத்தை மட்டுமே காண்பவர்கள் ஆவார்கள்
29
73. பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறர் அறிவதற்கு இயலாத பெருமை உடையவன் ஆவார்
பிறரறியும் பேருணர்வுந் தாமே– பிறருடைய
பிறர் தம்மை அறிவதற்கு உரிய பெரிய அனுபவ ஞானமாக இருப்பவரும் தாம் ஒருவரே ஆவார்  என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் மற்ற தேவர்கள் உடைய எலும்பைப் புனைந்து கொண்டு மயானத்தில் தீயில் கூத்தாரும் எம் பெருமானார் தாம் ஒருவரே அன்பர்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து. வன்மை உடைய பேய்களும் தாமும் கூடி மகிழ்ந்து எனவே இவர் (சத்து+சித்து+ஆனந்தம்)சச்சிதானந்த மூர்த்தி என்று கொள்ளவாறு ஆயிற்று
30
74. மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் அறியாமையை உடைமையாகக் கொண்டு இருக்கின்ற மட நெஞ்டமே முன்பு துன்புற்ற நீ இப்போது மகிழ்கின்றாய்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் – இகழாதே
பேயாகி விட்டோமே இனித் தாழ்ந்த நிலை வருமே என்று அஞ்சிய நீயும் மானிடரைப் போன்ற சிறப்பைப் பெற்று விளங்குகின்றாய் இதற்குக்காரணம் நீ பெரிய பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து விட்டாய் யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட யார் உடைய எலும்பாக இருந்தாலும் அது தொடுவதற்கு உரியது அன்று ஊர்தோறும் பிச்சைக்காகத் திரிகின்ற இறைவனுக்கு ஆளாகப் புகுந்ததற்கு
பேரன்பே இன்னும் பெருக்கு. காரணமான பெரிய அன்பையே இன்னும் பெருகச் செய்வாயாக
31
75. பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் பெருகும் ஒளியை உடைய செம்மையான சடையின் மேல் உள்ள இளம் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் – தெரியின்
ஒரு கதிர் கீழே வந்து ஒழுகியதை ஒக்கும் என்பது இதன் பொருள் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா எல்லாப் பொருளுக்கும் முதலிலே உள்ளவனும் என் உயிருக்குக் கண்ணைப் போன்றவனும் மூன்று புரங்களையும் முன்னோரு காலத்தில் எரித்தவனும் அழியாதவனும்
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல். நெற்றியிலே கண்ணை உடையவனுமாகிய சிவபெருமான் உடைய திருமார்பில் உள்ள முப்புரி நூலானது ஆராய்ந்துயிர்த்தால்
32
76. நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக புத்த நூலைச் கற்று அதனால் வந்த அறிவையே பெரிதாக எண்ணி வீண்பேச்சு பேசி நுட்பமான வாலறிவு உலகத்தில் புகாதவர்கள் ஒரு பயனும் பெறாமல் திரிந்து கொண்டே இருக்கட்டும்
நீல மணிமிடற்றான் நீர்மையே– மேலு வந்தது
நீல மணி போன்ற திருக்கழுத்தை உடைய பெருமான் உடைய அனந்த கல்யான குணங்களின் தொகுதியே நான் மேலாக உவந்து ஏற்று வழிபடுவது தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் இறைவனை எந்தக் கோலத்தில் எந்த வடிவத்தில் எண்ணி எத்தகைய தவம் செய்தாலும்
அக்கோலத் தவ்வுருவே ஆம். அவன் அந்தக் கோலத்தில் அந்த வடிவு உடையவனாகவே வந்து அருள் புரிவான்
33
77. ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நன்மைகள் உண்டாகும் வழியைத் தீவினைகள் அறியாது
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும்– வேமாறு
நாம் இறைவனுக்கு அடிமைகள் என்பதை உணர்ந்து அவனைத் துதித்து வணங்காத மூன்று அசுரர்களுக்கு உரியவன் ஆகிய ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி வானத்தில் பிறந்த மூன்று நகரங்கள் வெந்து எரியும் படியாக ஓர் அம்பினால் அழித்தவனை மனத்தினால் தியானிந்து
அருகணையா தாரை அடும். அவனை நெருங்கிப் பக்தி செய்யாதவர்களை அந்த வினைகள் துன்புறுத்தும்
34
78 அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந் இந்த வெண்மதி நம்மை அழித்துவிடும் என்று பயந்து இருளானது இங்கே வந்து
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும்– படங்கொள்
இந்த இடத்தை பற்றிக் கொண்டு இங்கேயே தங்கி இருப்பதைப் போல் இருக்கும் பெரிய படத்தை உடைய பாம்பு அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல படத்தைக் கொண்டனவும் அழகிய கழுத்தை உடையவனவும் ஆழமான வாயை உடையனவுமாகிய நாகப்பாம்புகளை அணிகலனாகக் கட்டியவன் உடைய அழகை உடைய
மணிமிடற்றின் உள்ள மறு. நீல மணிபோன்ற கழுத்தில் உள்ள நஞ்சின் கருப்பான அடையாளமானது
35
79. மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் ஆலகால நஞ்சாகிய மறுவை அளித்த திருக்கழுத்தை உடைய பெருமானே இளமையை உடைய பிறை உம்முடைய நீண்ட சடையின் மேல் அணிந்துள்ள நாகப்பாம்பு 
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ– உறுவான்
தன்னை வருத்தும் என அஞ்சி தேய்ந்து மனம் மறுகும் ஐயோ பாவம் தான் வளர்ந்து முழுத் திங்களாகி விடும் போது மேலே உள்ள வானத்தில் உள்ளோர் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி தளரும் படியாக அந்தப் பாம்பு மேலே தன்னைக் கொல்ல ஒடுமானால்
வளருமோ பிள்ளை மதி. அந்த சந்திரன் நையுமே அன்றி வளருமா வளராது
36
80. மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட தன்னை மதிக்காத வலிமை உடைய அசுரர்களின் பெயரில் மதில்கள் மூன்றை அழித்த
மதியார் வளர்சடையி னானை– மதியாலே சந்திரன் தங்கி வளரும் சடையை உடைய சிவபெருமானை என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் அவன் அணிந்த எலும்புச் சட்டத்தை அறியாமையால் இகழாமல் அறிவுத் திறத்தால் உண்மையைத் தெரிந்து புகழ்ந்து இந்த உலகத்தில் வழிபடுவர்கள்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு. ஆனால் அவர்கள் எலும்போடு கூடிய உடம்புடன் இங்கே மீண்டும் பிறக்க மாட்டார்கள்
37
81 ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம் நெருங்கிய ஒளி சேர்ந்த வானத்தில் எழுந்த சந்திரனை விஷத்தை உடைய பாம்பு
தீண்டச் சிறுகியதே போலாதே– பூண்டதோர்
தீண்டி விழங்க அது சிறுத்தது போல இருக்கின்றது அல்லவா தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு அணிந்த ஒப்பற்ற மாலையின் தன்மையை உடைய பாம்பை உடைய சிவபெருமான் உடைய திருமார்பில் நன்றாகச் சிறந்து விளங்கும்
கூரேறு காரேனக் கொம்பு. கூர்மையை உடைய கருமையான பன்றியின் வெண்மையான கொம்பு சிவபிரான் திருமார்பில் அணிந்துள்ளார்
38
82 கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன் பூங்கொம்பு போன்ற அம்பிகையைத் தன் ஒரு பாகமாகிய இடது பகுதியில் ஏற்றுக் கொண்ட இளமை எழிலை உடைய சிவபெருமானுடைய
அம்பவள மேனி அதுமுன்னஞ்– செம்பொன்
அழகிய பவளம் போன்ற திருமேனி முதலில் செம்பொன்னாலான அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி அழகையும் மேருமளையைப் போல இருக்கும் வெண் பொடியாகிய திரு நீற்றை அணிந்து கொண்டால் மறுபடியும் அந்தத் திருமேனி அழகைப் பெற்ற
மணிவரையே போலும் மறித்து. வெள்ளி மலையாகிய கைலாயத்தைப் போல இருக்கும்
39
83 மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் அறியாமை உடைய நெஞ்சே வாயினாலும் புகழ் பாடி தியானித்து
குறித்துத் தொழுதொண்டர் பாதம் – குறித்தொருவர்
அவருடைய தொண்டர்களின் திருவடிகளைத் தொழுவாயாக கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட் இவனைப் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி யாரும் ஏற்றுக் கொள்ளாத சந்திரனைக் குறுங் கண்ணியாக திருமுடியில் வைத்துக் கொண்டவரை மீண்டும்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு. அவரை எண்ணாதவர்களின் கூட்டத்தில் இருந்து நீ விலகி ஒழுகுவாயாக
40
84 ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை இறைவனே உன்னுடைய ஒரு பாகத்தில் இருப்பவன் உலகத்தைத் தன் திருவடியால் அளந்த திருமாலாம் மற்று ஒரு
ஒருபால் உமையவளாம் என்றால்– இடுபாறும்
பக்கத்தில் இருப்பவள் உமையவளாம் இவ்வாறு சொன்னால் அடியோங்கள் இரண்டு பக்கத்திலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின் திரு உருவமாக இது தான் நிறம் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லோம்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து. இன்னும் அணுகிப் பார்த்து நான் உருவமோ அல்லது மின்னலைப் போன்ற உமையவளின் உருவமோ என்று அறிய மாட்டோம்
41
85 நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை எம் பெருமானே நீ அணித்திருக்கும் பாம்பு பற்றிக் கொள்ள நைந்து சிறியது ஆயிற்றோ
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ– பேர்ந்து
நீயே அதை அறிந்து உனக்கு வேண்டும் அளவில் கொண்டு உன் திருமுடியில் பொருந்தும் படி வைத்தாயோ வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளமையை உடையதாய் அதன் வளப்பம் மறுபடியும் வாலராதோ என்ன காரணம்
இளங்குழவித் திங்கள் இது. எம் பெருமானே இளைய குழந்தை போன்ற சந்திரனாகிய இது
42
86 திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் இந்தச் சந்திரனைத் தலையில் அணிந்து கொண்டு சிறிது பிச்சைக்காக ஊர் தோறும் திரியாதே
எங்கள் பெருமானே என்றிரந்து– பொங்கொளிய
எங்கள் பெருமானே கெஞ்சின் கேட்டுக் கொண்டு மிக்க ஒளியை உடைய தேவர்கள் வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே சிவபெருமான் பிச்சை எடுப்பதை விலக்காமல்இருப்பாரானால் ஒன்றுக்கும் பற்றாத யாம் விலக்கும் வன்மையை உடையேமா
தானே அறிவான் தனக்கு. தனக்கு உரியதை தானே அறிவான் எம் பெருமான்
43
87 தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் வேறு யாரையும் அணுகாமல் தனக்கே அடிமைப் பட்டேனாய்த் தன்னை அடைந்து வாழும்
எனக்கே அருளாவா றென்கொல்– மனக்கினிய
அடியேனுக்கே அருளாமல் இருக்கும் இயல்பு ஏன் அதற்கு என்ன காரணம் மனத்துக்கு இனியனவாக உள்ள சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் கல்யாண குணங்களை உடையவனும் கங்கா தேவியின் மனவாளனும் செம்மையான திருமேனியை உடைய
பேராளன் வானோர் பிரான். பெரியவனும் தேவர்களுக்கு எல்லாம் உபகாரியாக இருக்கின்ற சிவபெருமான்
44
88. பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரம உபகாரியாகிய ஆண்டவனை நோக்கி ஒழுகும் பெரு நெறியைக் கைப்பிடித்து
பிரானவன்தன் பேரருளே வேண்டிப்–பிரானவனை
பிரானாகிய அவனுடைய பேரருளைப் பெருவதை லட்சியமாக அதனை  எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் அந்தப்பிரான் எங்கே இருக்கின்றான் என்று கேட்கின்றிர்கள் அவன் இங்கே என் போல்வார் உள்ளத்தில் இருக்கின்றான்
இங்குற்றான் காண்பார்க் கெளிது. ஆர்வத்தோடு உள்ளே காண்போர்க்கு அவருடைய காட்சி எளிதாக அமையும்
45
89 எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அருள் செல்வம் பெறாத வறியவர்களே சிறிதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ– ஒளி கொள்மிடற்று
பிறருக்குக் கொடுக்காதவர்களே அறிவில்லாதவர்களே அந்தோ மணியின் ஒளியைக் கொண்ட திருக்கழுத்தை உடைய றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த எந்தையும் அராவை அணிகலனாகப் பூண்டு அன்பர்களைத் தேடித் திரியும் எம்மானுமாகிய பரமேஸ்வரனை அந்தரங்கத்தில் நினைக்கும்
சிந்தையராய் வாழுந் திறம். உள்ளம் உடையவர்களாக வாழும் திறமையாகிய இது எளிது அல்லவா
46
90 திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் இயல்பாகவே மடமையை உடைய நெஞ்சே சொன்னாலும் புரிந்து
பெறத்தானும் ஆதியோ பேதாய்– நிறத்த
கொள்ளாத பேதமையை உடைய மனமே நல்ல வண்ணம் உடைய இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் இரண்டு மாவடுவின் பிளப்பைப் போன்ற திரு விழிகளை உடைய பெண்ணாகிய அம்பிகைக்குத் தான் ஒருபாகமாகிய இடது பாகத்தை வழங்கியவன் ஆகிய இறைவன் உடைய
திருவடிக்கட் சேருந் திரு. திருவடியைச் சேர்த்து இன்புறும் வளவாழ்வு அதற்கு உரிய தகுதியோடு அதனைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தோடு எல்லாவற்றையும் விட்டொழிந்து அதனையே நாடிச் சென்று அடைவதல்லாமல் இருந்த இடத்தில் இருந்தபடியே பெறுவதற்கு ஆவாயோ
47
91 திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் இறைவன் அழகிய மார்பில் உள்ள பன்றியின் வளமாக கொம்பை முதலில் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும்– ஒரு நாள் பிறகு இறைவன் முடிமேல் அணிந்துள்ள இளம்பிறையைப் பார்க்கும் அந்த நாள்வரைக்கும் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா ஏதேனும் ஒரு நாளில் இதுதான் சந்திரன் என்று ஒரு முடிவாகத் தெரியாது
ததுமதியொன் றில்லா அரா. ஆராய்ந்து பார்க்கும் அறிவு சிறிதும் இல்லாத சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு
48
92 அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் அரத்தால் வெள்ளித் தகட்டை ராவி வளைத்தால் போன்ற தோற்றத்தினை உடைய அழகிய இளம் பிறையில் இருந்து
விராவு கதிர்விரியஓடி– விராவுதலால்
வெளியே பரவுகின்ற கதிர்கள் விரிவாக ஓடி இடையிடையே விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தனக்குத்தானே ஒப்பாகிய இறைவன் உடைய சடைகள் பொன்னால் ஆன புலிகளோடு வெள்ளிப் புலிகள்
தன்னோடே யொப்பான் சடை. கலந்து அமைத்தால் போலுள்ளன அல்லவா எனவே இறைவன் தனக்குதானே ஒப்பானவன்
49
93 சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து இறைவன் சடைமேல் குடியிருக்கும் அந்தக் கொன்றை மலர்கள் முதிர்ந்து உண்டாக்கிய கனிகள் உருவாகி வந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும்– முடிமேல்
பக்கத்தில் சாரிந்து கீழே தொங்குவான போலத் தோன்றும் தன் திருமுடிமேல் வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின் வலப்பக்கத்தில் அந்த அழகிய பிறையை வைத்த சிவபெருமானுடைய ஒரு பாதியில் எழுந்தருளி இருக்கும்
குலப்பாவை நீலக் குழல். உயர் குலப் பெண்ணாகிய உமாதேவியின் கருமையான கூந்தல் கற்றைகள் கொன்றைக் கனிகள் கரியனவாய் நீண்டு தொங்குபவை உமாதேவியின் குழல் சடை போன்றன என்பதாம்
50
94. குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் கூந்தல் புறளுகின்ற சிறிய முதுகை உடைய திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவி
தெழிலாக வைத்தேக வேண்டா– கழலார்ப்பப்
அழகுக்காக நீ அவளை ஆடும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு செல்ல வேண்டா காலில் அணிந்த பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும் வீரக் கண்டை ஒலிக்க பெரிய நல் இரவில் ஈமம் ஆகிய சுடுகாட்டில் பெய்கலோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு. வெப்பம் தாங்குவதற்கு அரிய நெருப்பில் நீ தாண்டவம் ஆடும் அந்த இடத்திற்கு உமையை அழைத்துச் செல்ல வேண்டா
51
95 அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் அழகிய இடத்தை உடைய பூரான சந்திரன் கண் செம்மை நிறம் உடைய அகன்ற வானத்தில்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே – செங்கண்
எங்கும் இனிதாக உதயமானவர் போல உள்ளது அது அல்லவா திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிவந்த கண்களை உடைய திருமாலைத் தன் பங்கில் உடையவனாகிய சிவபிரானுடைய செம்மையான ஜடாபாரத்தின் மேல் அணிகலனாக வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர். தலைமாலை தோற்றம் அளிக்கின்ற ஒப்பற்ற அழகு
52
96. சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி சிறப்பு நிரம்பிய கொன்றைப் பூவானது தளதள என்று மலர்ந்து விளங்க
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப்– போரார்ந்த
வான் உலகத்தில் ஓடி நீர் நிரம்பிய பெரிய ஆறாகிய கங்கையாரை வெள்ளமாக இங்கே தங்கி இருக்க போர் செய்யும் இயல்பு நிறைந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் கயிற்றைப் போன்ற பாம்பைக் கொண்டு கட்டிய நம் ஈசனாகிய சிவபெருமான் உடைய பொன்நிறம் பெற்ற திருமுடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார். காண்பவர்களுக்கு நன்றாக கார்காலப் பருவத்தின் வடிவே ஆகும்
53
97 காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் மேகத்தைப் போன்ற நிறத்தை உடைய திருக் கழுத்தையும் நெற்றியில் கண்ணையும் உடைய எம் பெருமானே
ஓருருவாய் நின்னோ டுழிதருவான்–நீர் உருவ
ஒரே வடிவமாக நின்னோடு எங்கும் உலவுகின்றவனும் நீரை உடைய அழகிய மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய மேகத்தினால் செய்தமைத்தால் போன்ற திருமேனியை உடையவனும் நின் உடைய இடது 
பாகத்தான் காணாமே பண்டு. பாகத்தில் இணைந்திருப்பவனுமாகிய திருமால் பழங்காலத்தில் (அடிமுடி தேடிய காலத்தில்) நின்னைக் காண முடியாமல் நீ எங்கே மறைந்தாய்
54
98 பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு பழம் காலத்தில் தேவர்கள் அமுதம் வேண்டுமென்று கடலைக் கடைந்த போது அவர்கள் அஞ்சும் படி பாற்கடலின் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு
கண்டங் கறுத்ததுவு மன்றியே– உண்டு
இறைவனுடைய கண்டம் கறுப்பு நிறத்தை அடைந்தது அல்லாமல் பாம்புகள் இருக்கும் பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே நீண்ட செம்மையான் சடையின் மேல் பாலைப் போல வெளுப்பாக சந்திரனுக்கு உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு. நீல மணியின் நிறத்தைப் பெற்ற மறு வென்ற வடிவில் தோன்றும் வடுவும் உண்டு
55
99 வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் அந்த பிச்சை உணவைப் பெறுவதைப் பழியன்று என எண்ணி நீ அதைச் சிறப்பாக எண்ணிக் கொண்டு இருக்கின்றாய்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் – படுவெண்
அட்ட வெண்மையான திருநீற்றின் நிறத்தை உடைய திருமேனிப் பெருமானே உயிரின்றிப் பட்டுப்போன புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ புலால் நாற்றம் கமழும் கபாலத்தினுள் பிச்சை உணவைப் பெறுவதைப் பழி என்று என எண்ணி பழி கூறுவதைக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ நிலாவை உடைய சந்திரனை நீ தலையில் சூடிக் கொண்டு இருக்கின்றாய் நீ அதன் காரணத்தைச் சொல்
56
100 நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய இறைவனே நீ உலகம் எல்லாம் திரிந்து பிச்சை எடுத்தானும் குற்றம் இல்லை
தீய அரவொழியச் செல்கண்டாய்– தூய
ஆபரணமாகப் பூண்டு இருக்கும் உங்களுடைய தீங்கை கொடுக்கும் கெட்ட பாம்பு ஒழிந்து நிற்கப் போவாயாக மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி ஏன் எனில் உனக்கு பிச்சையிடும் தூய மனம் உள்ள பெண்கள்
விடஅரவம் மேலாட மிக்கு. விடம் பொருந்திய பாம்பு உன் மேலே ஆட அதைக் கண்டு அஞ்சி உன் அருகில் வந்து பிச்சை போடமாட்டார்கள்
57
101 மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் மிகவும் அதிகமாகப் பொங்கி முழுங்கும் நெருப்புக் கொழுந்தும் மிகுதியாக அடர்ந்துள்ள இருளும்
ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே– செக்கர் போல்
உடன் இருந்தால் எப்படியோ அப்படி ஒத்திராதோ அந்தி செவ்வானத்தைப் போல் உள்ள ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் திருமேனியை உடைய சிவபெருமானுடைய செந்நிறமான சடையும் அங்கே அவனுடைய பொலிவு பெற்ற திரு உருவத்தில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு. இடது பாகத்தில் உள்ள அம்பிகையின் பூவை அணிந்த கருங்குழலும் தோற்றுவிக்கும் இயல்பு
58
102 பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் உன்னுடைய இயல்பு முழுவதையும் உணரும் ஆற்றல் இல்லாதவன் நான் ஆகவே நீயே என் ஐயம் நீங்கப் பணிந்தருளர் வேண்டும்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா– பெண்டிணரும்
கண் சேர்ந்த நெற்றியையும் நஞ்சுக் கருப்பை உடைய கண்டத்தையும் கொண்ட எம் பெருமானே நின்னுடைய பலவகைத் திரு கோலங்களுக்குள் உமாதேவியாகிய அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ பெண்ணின் நல்லாள் சேர்ந்த அந்தத் திரு உருவமோ திரு மாலோடு இணைந்து போது அந்தத் திருமாலின் பத்தியோ
தெவ்வுருவோ நின்னுருவ மேல். எந்த உருவம் திருநிற்ற அணிவது
59
103 மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் மேலே படர்ந்த கரிய மேகங்கள் ஒன்றாகக் கூடி ஒரு பொன்மலையில் வீசிய
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே – மாலாய
மிக்க ஒளியை மறைத்தால் அமையும் காட்சியை ஒத்து இருக்காதோ மயக்கமே தன் உருவாக கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ வந்து துதிக்கையை உடைய விலங்காக மதம் மிக்க யானையாக வந்து கஜாஸ்வரனை சங்காரம் செய்து அந்த யானையின் கரிய தோலை அந்தப் பழங்காலத்து இறைவன் போர்த்துக் கொண்டபோது
தம்மான் திருமேனி அன்று. அவன் திருமேனி பொன்னிரமாகக் காட்சி அளித்தது
60
104 அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் எம் பெருமானே உன்னை வழிபடத் தொடங்கிய அந்த காலத்திலும் உன்னுடைய இயல்பான திருஉருவத்தைக் காணாமலே உனக்கு அடிமை ஆனேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்– என்றும் தான்
உன்னுடைய திரு அருளால் உன் அருள் அனுபவத்தைப் பெற்று நிற்கும் இப்போதும் உன் திருஉருவத்தையே நான் காணவில்லை எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் உம்முடைய கடவுள் என்றைக்கும் எந்த உருவத்தை உடையவர் என்று கேட்கின்றவர்கட்கு நான் எந்த விடையைச் சொல்வேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது. எந்த உருவத்தைச் சொல்லாது உன் உருவம் எது
61
105 ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா இறைவன் வடிவத்திற்கு எது ஒப்பாகும் எது ஒவ்வாது எது சொல்லத்தகாது
தேதொக்கும் என்பதனை யாரறிவார்– பூதப்பால்
எது சொல்லித்தரும் எது உலமானமாகும் என்பதனை யார் அறிவார்கள் இந்த நில உலகில் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் பழங்காலத்தில் வில்லைக் கையில் ஏந்திய வேடனாக வந்த விசயனோடு எதிர்த்துப் போரிட்டகாலத்தில்
வல்வேட னான வடிவு. வலிமை உடைய வேடத்தை உடையவன் ஆன அந்த இறைவன்
62
106 வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே வடிவ அழகுடைய செந்நிற முள்ள சூரியனுக்கு எதிராகப் பகலில்
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ– வடியுலவு
நீண்டு உலவி நின்று ஒளி வீசுமா இதைச் சொல்வாயாக சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் புதுமை சேர்ந்த சொல்லுக்கு முடிவு ஒன்றும் இல்லாத ஜோதியாக நிற்கும் எம் பெருமானே
நின்முடிமேல் திங்கள் நிலா. உம்முடைய திருமுடி மேல் உள்ள திங்களின் ஒளியானது
63
107 நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் வெண்ணிறமுள்ள சந்திரனை காலை நேரத்தில் தேடுவதைப் போன்று எதைத் தேடிப் பற்றிக் கொள்வதைப் போல்
உலாவி உழிதருமா கொல்லோ– நிலாவிருந்த
உலாவித் திரியும் வண்ணமோ பாம்பானது நில இருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே அந்தச் சிவப்பான அந்திவானத்தை ஏத்து விளங்கும் சிவபெருமானின் அழகிய முடியிலே
புக்கரவங் காலையே போன்று. புகுந்து நிலா விளங்குகின்ற
64
108 காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் சிவபெருமானுக்கு சூரிய உதைய வேளையாகிய காலை நேரத்தைப் போலச் சிவப்பாகத் திருமேனி விளங்கும் கடும் பகலாகிய
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு– மாலையின்
நண்பகல் வேலையைப் போல அவன் திருமேனியில் அணிந்துள்ள வெண்மையான திருநீறு விளங்கும் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு மாலை நேரத்தில் வானம் தாங்கும் சிவப்பு உருவம் போல அவன் சடைத் தொகுதி தோன்றும்
வீங்கிருளே போலும் மிடறு. மிக்க இருளைப் போல அவனுடைய நீல கண்டம் தோன்றும்
65
109 மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி திருக்கழுத்தில் ஆலகால நஞ்சை உடைய எம் பெருமானே உம்முடைய திருக்கழுத்தை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ– மிகற்றகத்து
அங்குள்ள விடத்தைத் தன் கழுத்திலும் கொண்ட வண்ணமோ இது தம் கழுத்தில் மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ கருமை பொருந்திய இருள் போல் நிறம் கரியதாக இருக்கின்றது
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு. உம்முடைய திருமார்பில் படம் எடுத்தாடும் பாம்பு
66
110 பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் அணிகலன் ஆகிய பாம்பும் சந்திரனும் மென்மையான மானும் பாய்கின்ற புலியும்
தாம்பயின்று தாழருவி தூங்குதலால்– ஆம் பொன்
தாம் அவனிடத்தில் பலகாலம் இருந்து பயின்று கீழே அருவியாக விழுகின்ற கங்கையாகிய அருவி ஒழுகுவதால் பொன்னான உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் நிறத்தை உடைய திருஉருவத்தில் சிறந்து நிற்கின்ற ஒளியைச் சேர்ந்தவனும் நெற்றிக் கண்ணை உடையவனுமாகிய சிவபெருமான் தன்னுடைய அழகிய
திருவடியின் மேய சிலம்பு. தெய்வத் திருவடியினால் அன்பர்கள் விரும்பிய மாலையாக உள்ளான்
67
111 சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச் சிலம்பு அணிந்த திருமுடியை உடைய அம்பிகையின் ஊடலைத் தானே போக்குவதற்கு விரும்பி
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி– நலம் பெற்று
அப் பெருமாட்டியின் சிவம்படியின் கீழ் உள்ள செம்பஞ்சுக் குழம்பைப் படச்செய்து அழகு பெற்று றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முன்பு ஒப்பாக உள்ள செவ்வானத்தை விடச் சிவப்பாக உள்ள இக் கோலத்தைத் திருமுடிக்குச் செய்தான் முதிரா மதியான் முடி முதிராத இளம் பிறையை அணிந்த இறைவன்
68
112 முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல தன்னுடைய திருமுடியின் மேல் வளைந்த பிறையை அணிந்தவனும் மூன்று கண்களை உடையவனும் ஆகிய சிவபெருமானுடைய பிறப்பு இறப்பை
அடிமேற் கொடுமதியோங் கூற்றைப்– படிமேல்
நீக்கும் நல்ல அடியை வணங்கித் தலையின் மேல் கொண்டு அந்தப் பாவத்தால் யமனை ஒரு பொருளாக மதிக்க மாட்டோம் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இந்த உலகத்தில் ஒருவரை வணங்குவதற்காக உள்ளோம் அல்லோம் எங்களுக்கு ஆகிய அடியாரான தன்மையைப் பெரியோர்கள் கொண்டாடும் பேறு பெற்றோம்
இனிஅவலம் உண்டோ எமக்கு. இப்போது எமக்கு ஏதேனும் துயரம் உண்டோ
69
113 எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா எமக்கு இது ஒரு போராசை இது எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறது
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய்– அமைக்கவே
எமக்கு ஒரு நாள் காட்டுவாயோ நீங்கள் இருள்ஒளிகளை விம்மித்ததும்பும் இரவில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் எம் தந்தையே மற்ற போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் அடக்கும் பொருட்டு நெருப்பானது வந்து பரந்தது போலத் தோன்றும் புலிசடை உடைய ஜடாபாரத்தை உடையவனே
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம். நெருப்பில் திருநடனம் ஆடும் இடத்தை
70
114 இடப்பால வானத் தெழுமதியை நீயோர் எமக்கு ஒருநாள் காட்டுவாயோ எம் பெருமானே இடப் பகுதிகளைத் தன்னிடத்தே கொண்ட வானத்தில் தோன்றும் பிறையை நீ ஒரு
மடப்பாவை தன்னருகே வைத்தால்–இடப்பாகம்
ஒப்பற்ற இளமையை உடைய சித்திரப்பாவை போன்ற உமாதேவியின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டார் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் அப்போது உன் இடப்பாகத்தைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொண்டு மலை மடந்தை யாகிய பார்வதி தேவியின் கூற்றைச் சிறிதும் யாம் கண்டிலோம்
கண்டாயே முக்கண்ணாய் கண். மூன்று கண்களை உடையாய் இதை நீ அறிந்தாயோ இல்லை எனில் இப்போதாவது எண்ணிப்பார்
71
115 கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் உன்னைத் தரிசித்து எம் தந்தையே என்று உன்னை வணங்கி உன்னுடைய திருத்தொண்டை அடியேன் செய்யாமல் இருப்பேனாயின்
அண்டம் பெறினும் அதுவேண்டேன்– துண்டஞ்சேர்
அண்டத்தைப் பெற்றாலும் அந்தப் பதவியை அடியேன் வேண்டேன் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் துண்டமாகச் சேர்ந்ததும் வானிலே ஆட்சி புரிந்ததுமாகிய பிறையைத் திருமுடியில் புனைந்துள்ள பெருமானே ஏழ் உலகங்களுக்கும் மேலாக நிற்கும்
கண்ணாளா ஈதென் கருத்து. கண்ணாக உள்ளவனே இதுவே அடியேனுடைய கருத்து
72
116 கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே  என் நெஞ்சமே நீ உன் கருத்துக்கு உள்ளே எதனை வேண்டும் என்று கருதுகிறாயோ அதை எல்லாம் உடனே
திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன்– பருத்தரங்க பெற்று நுகரலாம் இதை உறுதியாக நான் சொன்னேன் அதற்கு இதுதான் வழி பெரிய அலைகளை உடையதாய் வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி வெள்ளமாகப் பரந்து வந்த கங்கை நீரை அடக்கித் தன் தலைப்பாரத்தில் ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உடைய திருவடித் தாமரையை நீ விரும்பி 
உள்ளமே எப்போதும் ஓது. எப்போதும் அவன் திருநாமத்தையும் புகழையும் ஓதிக் கொண்டே இரு
73
117 ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட அலைப் பெருக்கை உடைய ஆழமான கடல்கள் எத்துணையைப் பெய்து இட
ஏது நிறைந்தில்லை என்பரால்– பேதையர்கள்
சிறிதும் நிறைவு பெற வில்லை என்று சொல்கின்றார்கள் ஆனால் ஒன்றும் அறியாத பேதையர்களாகிய தாருகாவனத்து முனிவரின் மனைவிமார் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா பிச்சைப் பாத்திரத்தின் அளவையும் பிறவற்றையும் இட்ட பிச்சையால் நினைந்தவாறு என்ன வியப்பு
கண்ணார் கபாலக் கமலம். இடம் நிரம்பி உள்ளதும் இறைவன் திருக்கரத்தில் உள்ளதுமாகிய பிரம்ம கபாலமாகிய பிச்சைப் பாத்திரம் ஆனது
74
118 கலங்கு புனல்கங்கை ஊடால லாலும் கலங்கிய புனலை உடைய ஆகாச கங்கை ஊடே அசைத்தாலும்
இலங்கு மதிஇயங்க லாலும்– தலங்கொள் விளங்கும் பிறையானது இயங்குவதாலும் பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும் பாம்புகள் உலாவுவதாலும் அவனுடைய
விரிசடையாங் காணில் விசும்பு. விரித்த சடையை யாம் காணும்போது வானமாகத் தோற்றம் அளிக்கின்றது
75
119 விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து வானத்தில் வாழும் நியமனத்தை உடைய தேவர்கள் கீழே விழுந்து
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப– முசிந்து எங்கும் தம்முடைய தூய பொன்னும் மணியும் கொண்டும் உருவாக்கிய கீரிடங்களைப் உங்கள் பாதத்தில் பாம்படி தேய்ப்பதனால் எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம் திருவடிகள் நலிவு பெற்று எங்கும் தழம்பு ஏறிக் காண்பதற்கு அழகற்றனவாக இருக்கிறனலே அந்தோ பாவம் 
அந்தா மரைபோல் அடி. உம்முடைய அழகிய தாமரையைப் போலத் தோற்றம் அளிக்கும் திருவடிவம்
76
120 அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் சுவாமி நீங்கள் தாண்டவம் புரியும் போது தங்கள் திருவடி வேகமாகப் பெயர்ந்து கதி மிகுத்தால் கீழே உள்ள பாதாள உலகம் நிலைபெயரும்
முடிபேரின் மாமுகடு பேரும்– கடகம்
தேவரீர் திருமுடி பெயர்ந்து வேகமாக ஆடினால் பெரிய வானத்தின் உச்சியில் அது முட்டி அந்த வானம் பெயர்ந்துவிடும் மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும் வளையல்கள் மாறி மாறி சூடும் திருக்கரங்களை வீசி ஆடினால் பெரிய திசையே தம் நிலையிலும் குழைத்து மாறிவிடும்
அறிந்தாடும் ஆற்றா தரங்கு. ஆகவே இவற்றை எல்லாம் அறிந்து நடனம் புரிந்து அருள்வீர்களாக இந்தச் சிறிய நடன அரங்கு தேவரீர் உடைய ஆனந்த தாண்டவத்தைத் தங்காது நிலை குலைந்து போகும்
77
121 அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா பேய்களை உடைய சுடுகாட்டில் அதையே அரங்கமாகக் கொண்டு நடனமாடும் சிவபெருமான் தராதரம் பார்க்காமல்
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்– இரங்குமேல்
எல்லா உயிர்களுக்கும் வாளா இரங்குவானோ அறிவற்ற நெஞ்சமே மாட்டான் சிவன் என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான் அவ்வாறு இரங்குவானாயின் அவன் நம்மை எந்தப் பதவியில் உள்ளவராகத்தான் வைக்க மாட்டான் எந்த உலகத்தைத்தான் வழங்கிக் காப்பாற்ற மாட்டான்
பன்னாள் இரந்தாற் பணிந்து. அவனைப் பலகாலம் வணங்கி வழிபட்டு விண்ணப்பித்துக் கொண்டால் இரங்குவான்
78
122 பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் படர்ந்த சடையை உடையவன் பாதங்களைப் பணிந்தும் பிறகு அந்தத் திருவடிகளை அலரும் பருவத்தில் உள்ள 
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத்– தூணித்தெங்கும்
மலர்களால் அலங்கரித்து அப்பால் அவ்வாறு அலங்கரித்த அன்பர்களை ஏத்துவதே நல்ல நெறி என்று பணிந்து நின்றோம் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ அப்பால் என்றும் பிறழாமல் எம் தந்தையார் ஆகிய சிவபெருமானுக்கு ஆளாகி தொண்டு செய்யப் பெற்றோம் இவ்வாறு பெற்ற இந்த நிலை தானோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. எம்முடைய சிந்தையார்க்கு உள்ள செருக்குக்குக் காரணம்
79
123 செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள் நம்மை விடவலியவர் இல்லை என்று கர்வத்தால் கைலாச மலையைத் தூக்கிய பல திண்ணிய தோள்களை உடைய
அரக்கனையும் முன்னின் றடர்த்த– திருத்தக்க
அரக்கன் ஆகிய இராவணனையும் முன்பே நின்று அரத்தின் அவன் திருவினால் தகுதி பெற்ற மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் திருமாலும் நான் முகனும் காணாமல் அரற்றி பின்பு இறைவன் அருள் செய்ததனால் மகிழ்ந்து துதிபாட
காலனையும் வென்றுதைத்த கால். யாராலும் வல்லார்க்கு அறிய காலனையும் உதைத்து வென்ற திருவடிகள்
80
124 காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் கடுமையாக நாக அனுபவத்திணனும் விலகி நிற்கின்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் – கோல
முன்பு உள்ள சஞ்சித வினையையும் இப்போது சேரும் ஆகாமிய வினையையும் வேறொடு அறுத்து விட்டோம் பார்பதற்கு அழகாக அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் இருந்த கோட்டைகளாகிய திருபுரங்களை உடைய அசுரர்கள் தம் ஊக்கம் குலைந்து இரங்கும் படியாக அந்தப் புரங்களை வெல்லிய தீயைக் கக்கும் ஓர் அம்பினால் எய்து அழித்த
சரணார விந்தங்கள் சார்ந்து. சிவபெருமான் உடைய திருவடிகளைப் பற்றாகப் பற்றி யாம் கால ஜெயம் பெற்றோம்
81
125 சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது இறைவனை அணுகி அன்பு செய்பவர்களுக்கும் பொன்னின் கொழுந்தை போலத் தோன்றி அவ்வாறு அவனைச் சாராமல்
பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம்– தேர்ந்துணரில் விலகிச் செல்பவர்களுக்கு நெருப்புக் கொடியான தன்மையை உடையனவாகும் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் பொருந்தி உணர்வதால் கிரணங்கள் தங்கும் சூரியனுடைய சிவந்த கதிர்களும் மழுங்கிச் சாய்வதற்கு உரிய தழல் போன்ற வண்ணம் உடைய சிவபெருமான் உடைய
வீழ்சடையே என்றுரைக்கும் மின். தொங்கும் சடையும் என்றும் மின்னலைப் போல் பிரகாசிக்கும்
82
126 மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் மின்னலைப் போன்ற செம்மையை உடைய சடையை உடைய சிவபெருமான் திருமாலோடு பிரிந்து நில்லாமல் மீண்டும் ஒன்று இணைந்து நின்றால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல்– தன் போலும்
அக்கோலம் தரிசிப்பவர்களுக்கு எதைப் போல இருக்கும் என்று கேட்பீர்களானால் பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே சிவபிரானை போன்றுள்ள பொன் மலையும் நீல மணிக் குன்றும் உடன் ஒன்றி
நிற்கின்ற போலும் நெடிது. உயர்ந்து நிற்கின்றதைப் போல இருக்கும்
83
127 நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே சிவபெருமான் உடைய கண்கள் உயர்ந்ததாகிய கொழுந்து விடும் தீயையும் குளிர்ச்சியையும் உடைய சந்திரனையும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும்– கொடிதாக
கடுமையாக உள்ள வெய்ய கதிரவனையும் போல இருக்கும் கொடுமை உண்டாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக் மற்றவர்களினின்று பிரிந்து சென்று பகைவர்களாக இருந்து திரிபுரத் தலைவர்கள் உடைய மூன்று மதில்களும் வெம்மையான தீயினால் அழியும் படிப் பார்த்த
கண்டாலும் முக்கணான் கண். அவை அழிந்த பிறகு மகிழ்ந்த முக்கண்ணன் ஆகிய சிவபெருமான் ஆவார்
84
128 கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் சிவபெருமானை என் கண்கள் நிரம்பும் படியாகப் பார்த்தும் என் கைகள் நிரம்பக் கும்பிட்டும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும்– விண்ணோன்
மனம் நிரம்பும் படியாக அவனைப் பற்றிய எண்ணங்களை எண்ணியும் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ மகாதேவனே எரியாடியா என்று பலகால் சொல்லியும் இன்பம் அடைவேன்
பெரியானைக் காணப் பெறின். எல்லோரிலும் பெரியவனாகிய சிவபெருமானைத் தரிசிக்கும் பேறு பெற்றால்
85
129 பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ சிவபிரானுடைய பேயாகிய நல்ல களத்தில் ஒரு பேயாகிய நாம் இந்த நிலையில் எப்போது தங்கினாலும் தங்காமல் போய் விட்டாலும்
துறினும் உறாதொழியு மேனும்– சிறிதுணர்த்தி இதனினும் சிறந்த தென்று பிறர் சொல்லும் பிறநிலை எதனையும் வேண்டோம் இயல்பாக இரண்டு கண்களையும் மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய மற்று ஒரு கண்ணையும் நெற்றிமேல் வைத்த சிவபெருமான் பேயாகிய
நற்கணத்தி லொன்றாய நாம். நல்ல கணங்கள் ஒரு பேயாகியே நாம் அடைந்தோம் விருப்பத்துடனேயே
86
130 நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே என்னுடைய நெஞ்சமே நாம் நமக்கு உறவாகிய சிவபெருமான் உடைய பொன் வண்ணத் திருவடிகளுக்கே நாவினால் அன்பால் பாமாலை சூடியும்
பூமாலை கொண்டு புனைந்தன்பாய்– நாமோர்
பூ மாலையைக் கொண்டு அலங்கரித்து அவனை நினைக்கும் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே அறிவினையே பற்ற வாழ்ந்தால் பிறறை போதித் துன்புறுத்தும்
எறிவினையே என்னும் இருள். தீவினையாகிய இருள் நம்மை எவ்வாறு எதற்காக வந்து அடும்
87
131 என்று+எது+அடும் = ஏற்றேதடும் இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ இருளின் உருவம் என்று சொல்லேரை கரிய மேகம் என்று சொல்லேரை
மருளின் மணிநீலம் என்கோ– அருள் எமக்கு
மயக்கம் இன்றித் தெளிவாக வண்ணம் தெரியும் நீல மணி என்று சொல்லட்டுமா எது ஏறி என்பதை நீயே எமக்குச் சொல்லி அருளவேண்டும் நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் நல்லவற்றை எல்லாம் உடையவனே செந்நிறம் வெண்ணிறம் பெற்ற ஒன்று
ஒன்றுடையாய் கண்டத் தொளி. உடையவனே உன்னுடைய திருக் கழுத்தில் நஞ்சினால் உண்டான ஒளியை இருளின்
88
132 ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித் எம் பெருமானே ஒளியை உடைய கரும்பு வில்லை உடைய வன்மையான மன்மதனைச் சாம்பல் ஆகும்படி திருவிழியால் பார்த்து
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய்– ஒளி நஞ்சம்
ஞானத்தினால் தெளிவு பெற்ற அன்பர்களின் சித்தத்தில் தங்கி வடிவத்தைக் காட்டும் ஐயனே ஒளியை உடைய ஆலகால விடத்தை உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள் உண்டாய் வாய்முலம் தன் நிறம் மாறாமல் இருக்க உன்னுடைய திருக் கழுத்து மட்டும் கரிய நிறத்தை
கொண்டவா றென்இதனைக் கூறு. அடைந்த வண்ணம் ஏன் இதை எனக்குத் தெளிவாகச் சொல்வாயாக
89
133 கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட் என் அப்பனே இந்தக் கேள்வியை விடுக்கும் எமக்கு விடையைச் சொல் கங்கையின் தாம் தங்கி இருக்கும் நின்னுடைய குளிர்ந்த சடையை மேலே அவிழ்த்துவிட்டு
டேற மிகப்பெருகின் என்செய்தி– சீறி
வெள்ளம் ஏறும் படியாக மிகப் பெருகினால் நீ என்ன செய்வாய் விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் சிறிய கோபத்தோடு விழித்து ஊர்ந்து செல்லும் ஒளியை உடைய பாம்பையும் வெண்மையான பிறையையும் இழுத்துக் கொண்டு
தெழித்தோடுங் கங்கைத் திரை. சப்தம் எழுப்பி ஓடும் கங்கையின் அலைகள்
90
134 திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் கங்கை பொருந்திய செம்மையான சடையை உடைய சிவபெருமான் உடைய செம்மையான திருவடிக்கே ஆளாகி
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர்–தெரிமினோ
அவனைப் பற்றிய உடைகளையே உரைத்து அவனையாம் உணர்ந்தோம் இதைப் பாருங்கள் இந்த நிலையை அறிந்து கொள்ளுங்கள் இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே இந்த உலக வாழ்வுக்கும் அடுத்த உலக வாழ்வுக்கும் உரிய எல்லா நலக்களும் அமையப் பெற்றோம் அப்படி இருக்க
எம்மைப் புறம்உரைப்ப தென். உலகியலின் ஈடுபட்டு எம்மைப் பற்றிப் பழி கூருகின்றவர்களே
91
135 என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் என்னை உடைமையாக உடைய சுவாமியும் தானே தனித் தலைவனாக நின்றவனும்
தன்னை அறியாத தன்மையனும் – பொன்னைச்
தன்னையே தான் அறியாத இயல்பு உள்ளவனும் செம் பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க் சுருளாகச் செய்தார் போன்ற தூய சடையவன் ஆகிய தேவர்களுக்கு
கருளாக வைத்த அவன். அருள் உண்டாகும் படியாக அந்தச் சிவபெருமான் உள்ளான் என்க உடையானும் நின்றானும் தன்மையானும் சடையாக அவன் என்று முடிக்க
92
136 அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் என்னுடைய நல்ல நெஞ்சமே சிவபெருமானே எல்லாக் காலத்தும் வானோர்களுக்குத் தலைவனாய் அவர்கள் வேண்டியவற்றை வழங்கும் பிரம உபகாரியாக இருப்பவன் அதனை நீ தெரிந்து கொள்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன்– அவன் கண்டாய்
அவனே அழகிய பவள வண்ணத் திருமேனியை உடையவன் அதையும் அறிந்து கொள் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே அவனே மைநிறம் பெற்றுப் பொருந்திய திருக்கழுத்தை உடையவன் அதனையும் நீ உணர்ந்து கொள்
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு. அவனிடம் உண்மையாகத் தங்கி அன்பாக இருந்து அவனை விரும்புவாயாக
93
137 விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா நீ பார்வதியிடம் கொண்ட பெரும் காதலால் அவளைப் பிரியும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றாயோ
இருப்பிடமற் றில்லையோ என்னோ –பொருப்பன்மகள் அன்றி உன்னைவிட்டு வேறாக இருக்கும் இடம் பிறிது அவருக்கு இல்லையோ என்ன காரணம்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க மேகம் போன்ற நிறத்தை உடைய திருமாலை விடையாகக் கொண்டவனே
அஞ்சுமோ சொல்லாய் அவள். அந்தப் பார்வதி உன்னைப் பிரிந்து வேறாக இருக்க அஞ்சுவளோ இதை எனக்குச் சொல்வாயாக
94
138 அவளோர் குலமங்கை பாகத் தகலாள் அங்கே இருக்கும் ஒப்பற்ற அவள் நல்ல குலத்தில் தோன்றிய மங்கையாகிய பார்வதி இந்த இரண்டு தேவிமாரையும் நீர் என்றும் பிரிந்தறிய மாட்டீர்
இவளோர் சலமகளும் ஈதே– தவளநீறு
இங்கே இருக்கும் இந்த நீர் வடிவத்தில் உள்ள கங்கா தேவியும் இந்தத் திருமுடியில் இருக்கின்றாள் வெண்மையான திரு நீற்றையும் றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் எலும்பையும் அணியும் பெருமானே இவ்வாறு உம்மோடு ஏட்டி நிற்கும் இந்த இரு தேவிமார்களுக்குள் உம்முடைய
அன்பணியார் சொல்லுமின்இங் கார். அன்புக்கு அணிமையை உடைய நெருக்கமானவர் யார் இதை யானாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை நீரே சொல்லும்
95
139 ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் ஆகையால் (மறைத்து வைத்த காரணத்தால் நெஞ்சத்தில்) அவனை ஆர்கானா வல்லார்
போர்வை அதனாலே போர்த்தமைத்துச்– சீர் வல்ல
அரனை அன்பு என்னும் முடு துணியினால் போர்த்து உள்ளே அமையச் செய்து சிறப்பு மிக்க தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து உரிமையால் நாம் வேறாதுவும் தன்னிடம் இல்லாத எம்முடைய தனி நெஞ்சில் அந்தரத்தில் அமைத்துப்
மாயத்தால் வைத்தோம் மறைத்து. பிறருக்குத் தெரியாத மாயமான முறையினால் மறைத்து வைத்து விட்டோம்
96
140 மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் மற்ற காலங்களில் இந்த உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ அல்லாமல்
உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ– நிறைத்திட்டு
அதனை அதன் வெம்மையோடும் நின் திருகரத்தில் பாதுகாத்து வைத்தாயோ இதனை நீ சொல்லி அருளவேண்டும் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் எம் பெருமானே சர்வ பிரளயகாலத்தில் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து நின்று சீறி எழுந்து நீ எரிப்பதனால் மூன்று உலகங்களிலும் கலந்து பொங்கி எழுந்த பிரளய காலாக்கினியாகிய
களைந்தெழுந்த செந்தீ யழல். செம்மை யாகிய தீயின் கொழுந்துகளை மறைத்து வைத்தாயோ 
97
141 அழலாட அங்கை சிவந்ததோ அங்கை இறைவா உன்னுடைய உள்ளங்கை அதில் ஏந்தி இருக்கும் தீயானது சூடி எரிய அதனால் சிவந்ததோ
அழகால் அழல்சிவந்த வாறோ– கழலாடப்
அன்றி உன்னுடைய உள்ளங்கையில் அழகிய செவ்வண்ணத்தால் அந்த அழல் சிவந்த படியோ இந்த வினாவுக்கு உரிய விடையைச் சொல்லி அருள் வாயாக காலில் கட்டிய வீரக் கண்டை ஆடி ஒலிக்க பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் சுடுகாட்டில் பேயோடு உன் கோலம் நன்றாக விளங்கும் படி தழலை ஏந்திக் கொண்டு
தீயாடு வாயிதனைக் செப்பு. தீயில் நடனம் புரியும் எம் பெருமானே
98
142 செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் தங்கச் செப்பின் தன்மையை ஏந்திய இளமையின் அடையாள மாகிய தனங்களை உடைய அன்னை கண்டு களிக்கவோ அல்லது தீ உண்டாகும் சுடுகாட்டில்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ– செம்பெனக்கொன்று உள்ள அந்தப் பேய்க் கணங்கள் கண்டு மகிழவோ இந்த இரண்டில் இன்னதுதான் காரணம் என்று ஒன்றாக எனக்குச் சொல் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய வாயைத் திறந்து அனலைக்கக்கும் ஐந்து வாய்களை உடைய நாகத்தை அணிந்த எம் பெருமானே
நாகத்தா யாடுன் நடம். நீ ஆடுகின்ற உன் நடனமானது
99
143 நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம் உம்முடைய வாகனமாகிய இடபம் நடந்தால் இந்த உலகமே நடுங்கும் கோபத்தோடு பார்த்தால் திசைகளில் உள்ளவை வெந்துபோகும்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும்– அடுக்கல்
இடிபோல முழங்கினால் உலகில் உள்ள உயிர்கள் யாவும் அச்சத்தால் துன்பம் கொண்டு என்ன ஆகுமோ என்று ஏக்கத்தை அடையும் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே ஆதலால் அது மலைகளோடு மோதி உடைக்கும் ஆண் சிங்கமோ ஆண் ஏறுதானோ பொன்னை ஒத்தி நிறமுடையவளே
றுருமேறோ ஒன்றா உரை. இடிதானோ ஏதேனும் என் வினாவிற்குரிய விடையை ஒன்றாகச் சொல்
100
144 உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் இந்த வெண்பா அந்தாதி மாலையாகிய அந்தாதியின் முதல் பாட்டின் முதலில் பிறந்து மொழி பயின்று என்று வந்திருக்கின்றது
கரைவினாற் காரைக்காற் பேய்சொல்– பரவுவார்
அந்த அந்தாதி மாலையாகிய காரைக்கால் பேயிச் சொல்லைத் தம்முடைய வாக்கினால் மனக் கசிவோடு சொல்லி இறைவனைத் துதிக்கும் அன்பர்கள் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் என்றும் அடங்காத அன்போடு ஏற்றும் அன்பர்கள் இறைவனிடம் சென்று துதித்திக் கொண்டே இருப்பார்கள்
பேராத காதல் பிறந்து. நீங்காத பக்தி பிறந்து இறைவனிடம் ஒன்றாக இணைந்து இருப்பார்
101


திருச்சிற்றம்பலம்
உள்ளுறை அட்டவணைக்குச் செல்ல


July 22, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: