OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PAALAI THURAI

ganesheit July 16, 2021

51 திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை

THIRU PAALAI THURAI

தல விளக்கம்:

PLACE HISTORY

This is river Cauvery southern side temple. Out of 127 temples in this cluster this temple is 19th one. Here thiru naayuku arasar sangdecade. Here thirmaal bharaman deevaas vasister thikku balagers all prayed and then conducted poojaas. Tharugaa vanam saints bad yaaga fire conducted and then tiger is created from the yaaga fire and then chashed it to kill lord Siva but lord Siva pealed its skin and then adorned it as dress form those temple place it is. The other name is bharma vanam arasa vanam punnagaaa vanam

காவிரித் தென்கரைத்தலம் 127 இல் இது 19வது திருத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்றது திருமால்,பிரம்மன், தேவர்கள், வசிட்டர், திக்குப் பாலகர்கள் வழிப்பட்டதலம்  தாருகாவனத்து முனிவர்கள் தீய வேள்வி செய்து புலியை வரச் செய்து ஏவ ஈசன் அதைக்கொன்று தோலை உரித்து ஆடையாக உடுத்திக் கொண்ட தலம் இதன் வேறுபெயர்கள் பிரமவனம், அரசவனம்,புன்னாகவனம் முதலானவை.

திருச்சிற்றம்பலம்- om  thiru chitram balam

510 நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்  NEELA MANI GANDATHAAR NEEAL SADAI The dark color blue ruby diamond form of throat possessed lordSiva and then in the long hair place நீல மாமணி போலும் திருக்கழுத்தினர் நீண்ட சடையில்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார் KOLA MAA MATHI GANGAIYUM SOODINAAR Where the big moon and then Ganges are adorned together form அழகு மிக்க பெரிய மதியையும் கங்கையையும் கூட வைத்தவர்  
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப் SOOLAM MAAN MALU EEANTHI SUDER MUDI Lord Siva who has carried in the hand place soolam stage malu battle form and then in the glittering hair place சூலம், மான் மழு ஏந்தித் தம் ஒளி முடியில்  
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே. PAAL NEI AADU VAR PAALAI THURAI YAAREEA Daily taking bath with milk ghee and in that way lord Siva seated in the thiru kalippaalai temple place பாலும் நெய்யும் திரு அபிசேகம் கொள்பவர் திருப்பாலைத் துறையில் வீற்றிருக்கும் இறைவர் சிவபெருமான்
5.51.1
511 கவள மால்களிற் றின்னுரி போர்த்தவர் KAVALA MAAL KALITRIN YURI POORTHAVER The food balls are daily engulfing the elephant which has ego filledmind form and then those elephant skin is pealed and then adorned it as upper dress சோற்றுக் கவளம் ஆகிய உணவைக் சாப்பிடும் ஆணவமாகிய மயக்கத்தை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர்  
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர் THAVALA VENN NAGAI MANGAIYOOR PANGINAR The white teeth with it soft form of laughter possessed lords yumadevi is given left part of his body வெள்ளிய நகைப்பை உடைய உமையம்மையை ஒரு பங்கில் கொண்டவர்  
திவள வானவர் போற்றித் திசைதொழும்  THIVALA VAANAVER POOTRITH THESAI THOLLUM All the benefits are enjoying devas are daily praying in the northern side யாவற்றிலும் திளைத்து மேவும் தேவர்களால் திசை நோக்கிப் போற்றித் தொழப் பெறுபவர்
பவள மேனியர் பாலைத் துறையரே. PAVALA MEEANIYAR PAALAI THURAIYAREEA And then coral like red color body possessed lord Siva who has seated in the thiru paalai thurai temple place பவளம் போன்ற செம்மேனியராகி அப்பெருமான் பாலைத் துறையில் வீற்றிருப்பவர் ஆவார்
5.51.2
512 மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும் MINNIN NUNN EDAI KANNIYARMIKKU EANGUM The glittering lighting form of waist possessed ladies and those spinsters are clubbed form appearing மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய கன்னிப் பெண்கள் திரளாகக் கூடிப் 
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி யடிதொழ  PONNI NEER MOOLGI POOATRI ADI THOLA Daily they are taking bath in the river Cauvery place and then praying lordSiva and then praising with prayer songs காவிரியில் முழ்கி நீராடி சிவபெருமானைத் தொழுது போற்றுகின்றவர்
மன்னி நான்மறை யோடுபல் கீதமும் MANNI NAAN MARAI YOODU PAL GEETHAMUM And then ever permanent form of four veethaas and then so many prayer songs நிலைபெற்ற பெருமையுடன் திகழும் நான்கு வேதங்களுடன் பலவகையான இசைப் பாடல்கள்  
பன்னி னாரவர் பாலைத் துறையரே. PANNI NAAR AVER PAALAI THURAIYAREEA All the time singing form those leader form of lord Siva seated in thiru paalai thurai temple place பாடுபவர் ஆயினர் அத்தகைய தலைவர் பாலைத்துரையில் மேவும் பரமன் ஆவார்
5.51.3
513 நீடு காடிட மாய்நின்ற பேய்க்கணங்  NEEDU KAADU EDAMAAI NINRA PEEAI GANAM In the long burial ground place is accepted as lordSiva’s dwelling place and then where demon forces நெடிய சுடுகாட்டை இடமாகக் கொண்டு பேய்க்கணங்களும்
கூடு பூதங் குழுமிநின் றார்க்கவே  KOODU BOOTHAM KULMI NINRU AARKAVEEA Are clubbed form and then raised emotional sound and then enjoyed சேர்ந்து குழுமி இருந்து ஆரவாரம் செய்து களித்து மகிழ
ஆடி னாரழ காகிய நான்மறை AADI NAAR ALAGAAGIYA NAAN MARAI Form lord Siva daily dancing and four veethaas are சிவபெருமான் நடனம் ஆடுபவர் நான்கு வேதங்கள்
பாடி னாரவர் பாலைத் துறையரே. PAADI NAAR AVAR PAALAI THURAIYAREEA Lovely form singing those prime god lord Siva who has seated in the thiru paalaithurai temple place அழகுடன் ஓதும் அப்பரமன் பாலைத்துரையில் வீற்றிருப்பவர் ஆவார்
5.51.4
514 சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் SITHAR KANNIYAR THEEVAR THAANN AVER And then sithaas sabtha kannimaars deevaas asuraas சித்தர்கள் சப்த கன்னியர்கள் தேவர்கள், அசுரர்கள்  
பித்தர் நான்மறை வேதியர் பேணிய  PITHAR  NAAN MARAI VEETHIYAR PEEANIYA And then lunatic persons and then four veethaas  and are chanting bharamins and then in that way பித்தர்கள் நான்கு மறைகளை ஓதும் வேதியர்கள் என
அத்த னேநமை யாளுடை யாயெனும் ATHANEEA NAMAIAALUDAI YAAI EANNUM All are ruled by lord Siva and those persons are put lord Siva in meditation place and then pray and praise him யாவரும் தம்மை ஆளும் பெருமானாகத் தியானித்துச் சிவபெருமானை ஏத்துகின்றனர்  
பத்தர் கட்கன்பர் பாலைத் துறையரே. PATHER GATKU ANBER PAALAI THURAIYAREEA And those devotion filled form of disciples lord Siva put his grace on them and in that appearance possessed form lordSiva seated in the thiru kali paalai templeplace அத்தகைய பக்தி செய்யும் அன்பர்களுக்கு அருள் புரிபவர் திருப்பாலைத்துரையில் மேவும் பரமன் ஆவார்
5.51.5
515 விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும் VINNINAAR PANITHU EEATHA VEYAPPURAM Deevaas are encircling form standing and then praying and then praising him and then submitted under his feet சிவபெருமானைத் தேவர்கள் கூடி நின்று ஏத்திப் பணிகின்றனர்  
மண்ணி னார்மற வாதுசி வாயவென்  MANNINAAR MARA VAATHU SEVAAYA VENN And then in this world people who are not forgetting form the good intricate form of manthraa called as sivaya is chanting form இப்பூஉலக மாந்தர்கள் மறத்தல் இல்லாத தன்மையால் ஆதி சூக்குமபஞ்சாட்சரமந்திரமாகிய சிவாய என்று
றெண்ணி னார்க்கிட மாவெழின் வானகம் EANNINAAR KU EDA MAA EALIL VAANAGAM And then thinking form put in meditation place and those those persons are dwelling form the space place is created by lord Siva and then blessed them எண்ணித் தியானம் செய்கின்றனர் அவர்களுக்கு இடமாக எழில் மிகும் வானத்தைப் படைத்து அருளினார்  
பண்ணி னாரவர் பாலைத் துறையரே. PANNI NAAR AVAR PAALAI THURAIYAREEA And those form praying intimate disciples lord Siva gave them good boons those appearance possessed form lord Siva seated in the kaippaalai templeplace அவ்வாறு ஏத்தும் அன்பர்களுக்குப் பெரும் சிறப்பினை அருளிகின்றவர் பாலைத்துரையில் மேவும் பரமனே ஆவார்
5.51.6
516 குரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை KURA VANAAR KODU KOTTIYUM KOKARAI Lord Siva who has teacher guru form seated under papal tree shadow and then four saints preached veethaas inner meanings and musical instruments are kodu kooti kokkarai all areraising sound form சிவபெருமான் குருவாக விளங்கிச் சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கு உபதேசம் செய்தவர் கொடுகொட்டி, கொக்கரை முதலான வாத்தியங்கள் முழங்க  
விரவி னார்பண் கெழுமிய வீணையும் VERA VINAAR PANN  KELUMIYA VEENAIYUM And then music filled form singing and then tuning veena musical instruments பண்ணின் இசை விளங்கும் வீணையை வாசிப்பவர்  
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம் MARUYUU NAAN MALAR MALIGAI SEN BAGAM And then those appearance possessed lord Siva kaily blooming flowers are jasmine sanbagam அப்பெருமான் நாள்தோறும் பூத்து மலரும் மல்லிகை செண்பகம் ஆகிய  
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. PARAYU NEER PONNI PAALAI THURAIYAREEA All the flowers are washed away by river water thoseriver bed placesituated thiru kalippaalai where lord Siva dwelling in prime god form மலர்கள் விளங்கக் காவிரி நீர் பரவி விளங்கும் பாலைத்துரையில் மேவும் பரமன் ஆவார்
5.51.7
517 தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந் THODARUM THONDARAI THOOKAM THODARNTHU VANTHU Lord Siva is daily praying and then praising by disciples and then those disciples are affected by sorrows சிவபெருமான் தன்னைத் துதித்து ஏத்தும் அடியவர்கள் துயரால்  
தடரும் போதர னாயருள் செய்பவர்  ADARUM POOTHU ARANAAI ARUL SEI BAVER And then got deteriorated state those sorrows are removed form and then ruthraa deity form appeared and then blessed his disciples வருந்தி நலிகின்ற போது அத்துன்பத்தை அழிக்கும் உருத்திர மூர்த்தியாய் மேவி அருள் புரிபவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்  KADALIN NANGU ANI GANDERKADI PUNAL And then sea place emanated poisonisconserved in the throat place and then ornament form possessed it கடலில் தோன்றிய நன்சினைக் கண்டத்தில் தேக்கி அணிந்து மேவும் ஆபரணம் போன்று செய்தவர்
படருஞ் செஞ்சடைப் பாலைத் துறையரே. PADARUM SEN SADAI PAALAI THURAIYAREEA And then that form of lord Siva who has in his spread over hair place Ganges are adorned form seated in thiru kalippaalai temple place அப்பெருமான் படர்ந்து விளங்கும் சிவந்த சடையின் மீது கங்கையைத் தரித்தவர் அவர் பாலைத்துரையில் மேவும் இறைவன் ஆவார்
5.51.8
518 மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை  MEEAGAM THOOAI PERAI SOODUVAR MEEAGALAI In theclouds place crawling moon is adorned in the hair place சிவபெருமான் மேகத்தில் தோய்ந்து விளங்கும் பிறைச் சந்திரனைச் சூடியவர் 
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற்  NAAGAM THOOAINTHA ARAIYINAR NAL EIYAL And then five headed snake as dress form adorned in the waist place ஐந்து தலை நாகத்தை உடுத்தும் ஆடையாக அறையில் கட்டி இருப்பவர்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் POOGAM THOINTHA PUNAR MULAI MANGAI YOOR And then to all souls are doing goodform those lords yumaadeevi is kept உயிர்களுக்கு நன்மை புரியும் இயல்புடைய உமாதேவியைத் திருமேனியில்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே. BAAGAM THOOINTHAVER PAALAI THURAIYAREEA left part of his body place and then father and mother form appearing in this world and those twin form lord Siva seated in the kaipaalai temple place பாகமாகக் கொண்டு அம்மையப்பராகத் திகழ்பவர் அப்பெருமான் பாலைத்துரையில் மேவும் இறைவர் ஆவார்
5.51.9
519 வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்  VENG KANN VAAL ARAYU AATI VERUTTUVAR Lord Siva catches snakes and then made them to dance and then gives fear to all சிவபெருமான் சீற்றம் கொண்ட அரவத்தைப் பற்றி அச்சுருத்துபவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர் ANGANAAR ADIYAARKU ARUL NALGUVER And then lovely ripped form appearing lord Siva put his grace on his disciples அழகிய கனிந்த நோக்குடையவராகி அடியவர்களுக்கு அருள் புரிபவர்  
செங்கண் மாலயன் தேடற் கரியவர் SENGAN MAAL AYAN THEEADARKKU ARIYAVER And then bharama and thirumal searched lord Sivas feet and head but failed to see it திருமாலும் பிரமனும் தேடியும் காண்பதற்கு அரியவராகியவர்  
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே. PAING KAN EEAATRINAR PAALAI THURAIYAREEA And then lust green eyesare possessed bull is acceptedashis vehicle to travel those appearancepossessed form lordSiva seated in the kalippaalai temple place பசிய கண்களை உடைய இடபத்தை வாகனமாக உடையவர் திருப்பாலைத்துறை இறைவர்
5.51.10
520 உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை  YURATHINAAL ARAKKAN YUAR MAA MALAI Ravana with his mighty physical powers tried to excavate the kaiyilai hills தனது வலிமையால் கயிலையைப் பெயர்த்த போது
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும் NERUKKINAANAI NERITHAVEN PAADALLUM And then lord Siva stamped under the hills and then praised lordSiva with samaveethaa songs இராவணனை நெருக்கிப் பின் அவ்வரக்கன் ஏத்திப்பாட  
இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக் ERAKA MAA ARUL SEITHA PAALAI THURAI And the melted form lord Siva put his grace on him those appearance possessed form seated in the kalipaalai temple place இரக்கம் கொண்டு இன்னருள் செய்த பெருமான் பாலைத்துரையில் மேவும் ஈசன் ஆவார்  
கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே. KARUTHI NAAL THOLUVAAR VENAI VOOYU MEEA And those lord Siva is in folded hands form praying disciple’s bad deeds are gone away அப்பரமனைக் கரம் கூப்பித் தொழும் அடியவர்களின் வினையானது நீங்கிச் செல்லும்
5.51.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – பாலைவனநாதர், தேவியார் – தவளவெண்ணகையம்மை. 

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 16, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: