OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NAAGESWARAM

ganesheit July 16, 2021

52 திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை 

THIRU NAAGESWARAM

தல விளக்கம்:

PLACE HISTORY

THIS IS RIVER Cauvery southern side temple. Out of127 temples this temple is 29th one. Three main saints sang decade here

Here snake named aathi seaden thachan kaar koodan gawthama saint paraa Sara saint nala king bahirathaa nanthi deevan all are conducted poojaas and then prayed here. Here saint seeakilaar conducted temple renewuvation work

காவிரித் தென்கரைத்தலம் 127இல் இது 29 ஆவது மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது.

ஆதிசேடன், தட்சன், கார்க்கோடகன், கெளதமமுனிவர், பராசரமுனிவர், நளச்சக்கரவர்த்தி, பகிரதச்சக்கரவர்த்தி, நந்திதேவர், முதலானோர் பூசித்த வழிபட்ட தலம் சேக்கிழார் சுவாமிகள் திருப்பணி செய்த பெருமையுடையது.


திருச்சிற்றம்பலம் — om thiru chitram balam

521 நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர் Nallar nalathoor naagam kondu aatuvaar Lord Siva all the time doing good to all and then good mannerism filled snakes are carried in the hand place and then mad them to dance சிவபெருமான் யாவர்க்கும் நல்லவற்றையே புரிபவர் நல்ல தன்மை உடைய நாகத்தைக் கையில் பற்றி ஆட்டுபவர்  
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் Valla val venai theerkum marunthugal Lord Siva has possessed infinitive powers and then wild bad deeds are removed form ad then put his grace on his disciples and those medicine form appearing in this world பேராற்றல் உடையவர் தீய கொடிய வினைகளைத் தீர்த்து அருள் புரியும் நல்ல மருந்தாகுபவர்  
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி PALIL VOODU KAI YEEANTHIPALI THIRI And then teeth less skull carried in the handplace and then accepting begging food in to that skull and then wandering everywhere மண்டை ஓட்டைக் கையில் ஏத்திப் பலியேற்றுத் திரிபவர்  
செல்வர் போல்திரு நாகேச் சரவரே. SELVER POOAL THIRU NAGESWAREREEA And that lord Siva possessed grace in rich form and those appearance possessed lord Siva seated in the thiru nageswaram temple place அவர் அருள் செல்வர் அத்தகையவராகிய சிவபெருமான் திருநாகேச்சரத்தில் வீற்றிருப்பவர்
5.52.1
522 நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர் NAAVALAM PERUM THEEVINIL VAAL PAVER And then mount Everest southern side situated baratha nation place lordSiva dwelling இமயத்தின் தென்பகுதியில் உள்ள இந்த பாரதநாட்டில் வாழ்பவர்கள்  
மேவி வந்து வணங்கி வினையொடு MEEAVI VANTHU VANANGI VENAI YOODU And then those disciples who are all the time thinking form praying lord Siva and that disciples bad deeds are சிந்தித்து வணங்கி ஏத்திடவினையும்  
பாவ மாயின பற்றறு வித்திடுந்  PAAVA  MAAINA PATRU ARUVITHIDUM And sins are not affected them and then in that way lord Siva put his grace on them பாவமும் பற்றாதவாறு அருள் புரிபவர்
தேவர் போல்திரு நாகேச் சரவரே. THEEVARPOOAL THIRU NAAGEECH SARAVEERAAEEA And then deevaas leader form lord Siva seated in the nageswaram temple place தேவர் போல திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார்
5.52.2
523 ஓத மார்கட லின்விட முண்டவர் VOOTHA MAAR DADALIL VDAM YUNDAVER In the waves are emanating sea place emanated wildpoison which is collected and then consumed it and then in that way deevaas are saved from destruction சிவபெருமான் கடல் அலைகள் நிரம்பிய கடலில் தோன்றிய விடத்தை உட்கொண்டு தேவர்களைக்  காத்து அருள் புரிபவர்  
ஆதி யார்அய னோடம ரர்க்கெலாம்  AATHIYAAR AYANOODU AMERERKU ELLAAM And then good old prime lord form existing in this world and then bharma and otherdeevaas lord Siva is leader ஆதிப் பொருளாக விளங்குபவர் பிரம்மன் முதலான தேவர்களுக்கு எல்லாம் தலைவர்
மாதோர் கூறர் மழுவல னேந்திய  MAATHOOR KOORAN MALU VALAN EEANTHIYA And then lords yumadevi is carried left part of his body place and then father and mother form existing in this world and then carried malu battle force in the hand place உமாதேவியை திருமேனியில் அங்கமாகக் கொண்டு அம்மையப்பராக விளங்குபவர் மழுப்படை ஏத்தியவர்
நாதர் போல்திரு நாகேச் சரவரே. NAATHER POOAL THIRU NAGECHARAVEEREAA And those appearance possessed lord Siva dwelling in the nageswaram temple place அப்பெருமான் திருநாகேச்சரத்தில் மேவும் நாதர் ஆவார்
5.52.3
524 சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன் SAN THIRANDODU SOORIYANTHAAM YUDAN Moon and sun god together moved this temple place சந்திரன் உடன் சூரியனும் சேர்ந்து  
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்  VANTHU SEER VALIPAADUGAL SITHA PIN And then conducted special poojaas so that lord Siva put his grace on them வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து பூசிக்க அருள் புரிந்த சிவபெருமான்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்  INTHALAI ARAVIN PANI KONDARUL And then five headed snake daily conducted poojaasand then those poojaas are accepted form put his grace on it ஐந்து தலை நாகம் பூசித்து ஏத்த விளங்கிப் பணி கொண்டு அருள் புரிந்தவர்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே. MANTHER POAL MANI NAGEESWARAVEREEA In that way brave leader form lord Siva seated in the thiru nageswaram temple place அவர் திருநாகேச்சரத்தில் மேவும் பெருவீரன் ஆவார்
5.52.4
525 பண்டோ ர் நாளிகழ் வான்பழித் தக்கனார்  PANDOOR NAAL EAGAL VAANN PALITH THAKANAAR Once sin filled thakkan who has conducted yaga fire so as to disregard lordSiva முன்பு ஒருமுறை குற்றங்களை உடைய தக்கன் சிவபிரனை இகழ வேண்டும் என்று
கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத் KONDA VEELVI KUMANDAI ATHU KEDA And those vices filled yagaa fire is destroyed and then amputated the thakan head and then place in the yaga fire pit and then burnt down in to ashes தீய கொள்கையைக் கொண்ட வேள்வியை அழித்து தலையை அறுத்து வேள்வித்தீயில் எரித்தவர்
தண்ட மாவிதா தாவின் றலைகொண்ட  THANDA MAA VETHAATHAA VIN THALAI KONDA And then bharama head is snipped form and then carried in the hand place as begging bowel பிரமனின் தலையைக் கொய்து கையில் கபாலமாக ஏற்றவர்    செண்டர் போல்திரு நாகேச் சரவரே. SENDER POOAL THIRU NAGESWARAVEERAEE And then lord Siva carried sendu battle force in the hand place and those appearance possessed form lord Siva seated in the thiru nageswarm temple place சென்டு என்னும் ஆயுதத்தைப் படையாகக் கொண்டு உள்ளவர் அப்பரமன் திருநாகேச்சரத்தில் மேவும் ஈசனே ஆவார்
5.52.5
526 வம்பு பூங்குழல் மாது மறுகவோர்  VANBU POON KULAL MAATHU MARUGA YOOR Lords Yumadevi who has fragrance filled hair possessed form and those soft hair possessed lords yumaadevi frightening form சிவபெருமான் நறுமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமாதேவி அதிர்ச்சிக் கொள்ளுமாறு
கம்ப யானை யுரித்த கரத்தினர் KAMBA AANAI YURITHA KARATHINAR Those mighty powerful elephant skin is pealed and then adorned it as upper dress அசையும் பேராற்றல் உடைய யானையின் தோலை உரித்தவர்  
செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடை  SEM PONAAR ETHALIM MALAR SEN SADAI And then golden color konrai flowers are adorned in the hair place and then gave visual appearance செம்பொன் போன்ற அழகிய கொன்றை மலரைச் சென்சடையில் சூடி விளங்குபவர்
நம்பர் போல்திரு நாகேச் சரவரே. NAMBER POOAL THIRU NAAGASWARER REEA Those lovable form of lord Siva who has seated in the nageswaram temple place அத்தகைய விரும்பத்தக்க சிவபெருமான் திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார் 
5.52.6
527 மானை யேந்திய கையினர் மையறு MAANAI EEANTHIYA KAIYINAR MAIYARU Lord Siva who has carried stagein the hand place and then in this land living beings sins are removing form  சிவபெருமான் மானைக் கையில் ஏந்தியவர் மன்னுயிரின் குற்றங்களை நீக்குகின்ற
ஞானச் சோதியர் தியர் நாமந்தான்  GAANACH JOOTHIYAR AATIYAAR NAAMATHAAN Those gaana light form existing in this land place and then fire flames form and then good old matter form existing in this world ஞானமாக விளங்குபவர் சோதி வடிவாகவும் ஆதிப் பொருளாகவும் மேவுபவர்
ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந் AANA ANGU ELUTHU VOOTHA VANTHU ANNIKUM Lord Siva’s sacred name of five letter ward which is five types of works are doing form those five letter manthraas are chanting to whom lord Siva is so near to them அப்பெருமானுடைய திருப்பெயராகிய ஐந்து தொழிலை ஆக்குவிக்கும் திரு ஐந்து எழுத்தினை ஒதுபவர்களுக்கு அண்மையாய் இருந்து  
தேனர் போல்திரு நாகேச் சரவரே. THEENAR POOAL THIRU NAGESWAR REEA And that honey form tastier lord Siva seated in the thiru nageswaram temple place தேனாய் இனிக்கச் செய்பவர் அவர் திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் இறைவரே ஆவார்
5.52.7
528 கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர் KAL KOL KAALINARKAALANAI KAAINTHAVER Lord Siva who has adorned brave ankletin the feet place and that feet is used to kick and then killed death god ema சிவபெருமான் திருப்பாதத்தில் வீரக்கழல் அணிந்தவர் காலனை உதைத்து அழித்தவர்  
தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணி  THAL KOL MEEANIYAR SAANTHA VENEER ANI And then fire glow form of red color body possessed lord Siva and then calmness giving form of sacred ashes are past form applied all over the body place நெருப்பின் வண்ணம் போன்ற சிவந்த திருமேனியர் சாந்தத்தை நல்கும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் குலைத்துப் பூசி விளங்குபவர்
அழகர் ஆல்நிழற் கீழற மோதிய ALAGAR AAL NELAL KEEAL ARAM VOOTHIYA Those lovely appearance form seated under the papal tree shadow where preached the rare meanings are four veethaas and then teacher gure form seated அழகிய வடிவத்தை உடையவர் ஆல்நிழலின்கீழ் இருந்து அருமறைப் பொருள்களை உணர்த்தின் குருவடிவாகத் திகழ்பவர்    
குழகர் போல்குளிர் நாகேச் சரவரே. KULAGER POOAL KULIR NAGAS WARAVEREEA and that lord Siva young chap form cool nageswaram temple place seated and then prime god form appearing all அப்பெருமான் இளமையுடன் குளிர்ச்சி பொருந்திய திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் பரமன் ஆவார்
5.52.8
529 வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்  VATTA MAA MATHIL MOONRUDAN VALL ARANN The circle form appearing mighty powerful three castles are giving trouble to deevaas சிவபெருமான் தேவர்களைச் சூழ்ந்து துன்புறுத்திய அசுரர்களின் வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்  SUTTA SEIGAIYAR AAGILLYMSOOLNTHANER So lord Siva shot an fire arrow and then converted into ashes மூன்று வலிமையான கோட்டைகளையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ் KUTTA VAL VENAI THEERKUM KULIR VIKKUM And that form of lord Siva, and then in this land place living beings are put into degradable place those bad deeds are destroyed form those souls are elevated into higher place and those prime lord Siva அப்பெருமான் மன்னுயிர்களை நற்கதிக்கு ஆளாக்காது குறை உடையதாகவும் கீழ்மையில் தள்ளுவதும் ஆகிய  கொடிய வினைகளைத் தீர்த்துக் குளிர்விக்கும் பரமனார்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே. SETTARPOOAL THIRU NAAGESH SARAVEEREEA Who is highly regarded form seated in the nageswaram temple place அவர் உயர்ந்தோர் ஆகி திருநாகேச்சரத்தில் மேவும் ஈசன் ஆவார்
5.52.9
530 தூர்த்தன் றோண்முடி தாளுந் தொலையவே THOORTHAN THOOAL MUDI THAALUM THOLAIYAVEEA The good character not possessed ravana whose shoulders and heads are smashed form நன்னெறி அற்றவனாகிய இராவணனுடைய தோளும் முடியும் தாளும் நெரியுமாறு  
சேர்த்தி னார்திருப் பாதத் தொருவிரல்  SEEARTHINAAN THIRU PAATHATHU ORU VERAL Lord Siva who has put his sacred feet on the top of the kayilai hills and then stamped him திருப்பாத விரலால் அடர்த்திய சிவபெருமான்
ஆர்த்து வந்துல கத்தவ ராடிடுந்  AARTHU VANTHU YULAGATHAVER AADIDUM And then in this world peoples are daily conducted poojaasform praying and then praising lord Siva with prayer songs உலகத்தவர் ஏத்திப் பூசித்து வழிபடப் பெறுபவராகவும்
தீர்த்தர் போல்திரு நாகேச் சரவரே. THEER THAR POOAL THIRU NAGES WARAREEA In that way lord Siva removed bad deeds and then put his grace on them and those appearance possessed form lord Siva seated in the thiru nageswaram temple place திய வினைகளைத் தீர்த்து அருள்பவராகவும் விளங்குபவர் அவர் திருநாகேச்சரத்தில் மேவும் இறைவனே ஆவார்
5.52.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், 
தேவியார் – குன்றமுலைநாயகியம்மை. 

திருச்சிற்றம்பலம் –OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 16, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: