OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VALM SULI

ganesheit July 10, 2021

2.106 திருவலஞ்சுழி   242

THIRU VALM SULI

PLACE HISTORY:- SEE DECADE NO 138

தல விளக்கம் : பதிகம் எண் 138 காண்க.

பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

1147 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே ENNA PUNNIYAM SEITHANAI NENJAMEEA நெஞ்சமே நீ எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய் My dear mind what type of good punniyaa act you have done யிருங்கடல் வையத்து EARUM KADAL VAYYATHU கடல் சூழ்ந்த இந்த உலகத்து The sea covered in this land
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை Munnam neepuri nal venai payan eadai நாம் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயன்கள் We have done in the previous birth good acts and its effects முழுமணித் தரளங்கள் MULU MANI THARALANGAL முழுமையான மணிகளும் முத்துக்களும் நிறைந்த The ruby diamonds and pearls are filled in the
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி MANNU CAUVERI SOOL THIRU VALAM SULI நிலைபெற்ற காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி Place is thiruvalmam suli temple place where river Cauvery encircled form flowing வாணனை வாயாரப் VAANANAI VAAYAARAP இறைவனை வாயார புகழ்ந்து போற்றி So we are praising the lord Siva with mouth sound form praying
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் PANNI AATHARITHU EEATIYUM PAADIYUM அன்பு செய்து பாடியும் வழிபட்டும் With love form singing and praying வழிபடும் அதனாலே. VALI PADUM ATHANAALEEA அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது அதனால் பெருமை கொள்ளலாம் And that benefit of praying lord Siva is got by us so we may geo for that dwelling in this valam suli temple place
01
1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை VINDU WALUNTHANA NAM MUDDAI VAL VENAI நிச்சயம் நம் வினைகள் யாவும் கெட்டு ஒழிந்தன With firm form our bad deeds are perished and then gone away விரிகடல் வருநஞ்சம் VERI KADAL VARU NANJAM விரிந்து பரந்த கடலிடைத் தோன்றிய நஞ்சை And then in the sea place emanated the poison
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய YUNDU ERANJUVAARNAVER THAMAI THAANGIYA உண்டி அமரர்களைக் காத்தருளிய இறை Lord Siva consumed and then devas are saved from destruction and that form of lord Siva இறைவனை உலகத்தில் ERAI VANAI YULAGATHIL இறைவனை இந்த உலக மக்கள் Who is in this world
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை VANDU VAAL KUVALAN MANGAI YOOR PANGANAI மின்னல் கொண்ட நீண்ட கூந்தலில் மொய்க்கும் உமாதேவியை ஒரு பாகமாக உடையவன் The lighting form of long hair hanging form of lords yumaadevi is kept left part of his body and those twin form of lord Siva அப்பெருமான் வலஞ்சுழி யிடமாகக் VALAM SULI EDAMAAGA இந்த உலகில் வலஞ்சுழி இடமாகக் கொண்டு Who has descended in the valam suli temple place
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ KONDA NAATHAN MEI THOLIL PURI THONDARODU விளங்கும் இறைவனை வணங்கி அந்த இறைவனிடம் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி And that form of lord Siva is prayed and then under his feet true menial services are doing with that disciples we are clubbed form டினிதிருந் தமையாலே. ENITHU ERUNTHAMAIYAALEEA உறையும் போது பெற்றதால் நம் வினைகள் கெட்டு ஒழிந்தன We are dwelling so our bad deeds are destroyed in this world
02
1149 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன THIRUNTHA LAAR PURAM THEE EALA SERUVANA பகைவரான அசுரர்களின் மூன்று புரங்களை தீ எழச் செய்து அழித்தன Lord siva who has destroyed the three castle enemies three castles are destroyed by fire arrow விறலின்கண் அடியாரைப் VERALIN KAN ADIYAARAI அத்தகைய பெருமை உடையன அடியவர்களை And those place glory filled disciples
பரிந்து காப்பன பத்தியில் வருவன PARINTHU KAAPANA PATHIYIL VARUVANA அன்புடன் காப்பன  பக்தி செய்வர்கட்குக் காட்சி தருவன With love form protected lord Siva’s disciples and then those disciple who are showing full devotion towards lordSiva to whom lord Siva appeared in visual form மத்தமாம் பிணிநோய்க்கு MATHAMAAM PENI NOOAIKU மயக்கம் தரும் பிணி முதலான நோய்க்கு To give faintings those deceases and other pains
மருந்து மாவன மந்திர மாவன MARUNTHUM AAVANA MANTHIRAM AAVANA மருந்தாகி விளங்குவதும் யாவற்றிற்கும் மந்திரமாக இருந்து பாதுகாப்பதும் lord Siva is medicine and then manthra form protecting his disciples வலஞ்சுழி யிடமாக VALAM SULI EDAMAAGA திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந்தருளிய And that form of lord Siva descended in thiru valam suli temple place
இருந்த நாயகன் இமையவ ரேத்திய ERUNTHA NAAYAGAN EMAIYAVER EEATHIYA அமர்ந்த சிவபெருமான் இமையவர்கள் ஏத்தும் பெருமையாளனும் Those hero form of lord Siva who is prayed and then praised by upper world devas that glory filled lord Siva இணையடித் தலந்தானே. ENAI ADI THALATH THAANEEA ஆகிய பெருமான் திருவடிகள் Whose twin feet are daily praying by us in thisworld
03
1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் KARAI KOL KANDATHAR KAAI KATHI NERATHINAR ஈசன் நீலகண்டத்தை உடையவர் நன்கு ஜொலிக்கும் சூரியனைப் போன்ற செம்மையான நிறத்தை உடையவர் Lord Siva has possessed blue color throat and good form glittering sun form red and white color body possessed lord Siva அறத்திற முனிவர்க்கன் ARATHIRA MUNIVARKU ANRU சனகாதி முனிவர்களுக்கு ஆல் நிழலில் இருந்து And then four saints named sanagaatiees to who lord Siva seated under papal tree shadow
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் ERAIVARAAL EDAI NELALIL ERUNTHU YUGANTHU தட்சணாமூர்த்தி திருக்கோலத்தில் அமர்ந்து இருந்து And then teacher guru thachinaamoorthy form preached the inner meaning of four veethaas தினிதருள் பெருமானார் ENITHU ARUL PERUMAANAAR அறம் பொருள் உணர்த்திய சிவபெருமான் Those dharma form of rules are preached to them by lord Siva
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி MARAIGAL VOOTHUVAR VARU PUNAL VALAM SULI வேதங்கள் விரித்து ஓதுபவர் அப்பெருமான் நீர் சூழ்ந்த வலஞ்சுழி இடத்தில் Lord Siva all the time chanting veethaas in elaborate form and then that guru form of lord Siva seated in thiru valm suli temple place which is covered by water bodies யிடமகிழ்ந் தருங்கானத் EDAM MAGILTHU ERUM GAANATHU மகிழ்ந்து அமர்ந்து பூதகணங்களுடன் And the happily seated with demon forces
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய ARAI KALAL SELAMBU AARKA NINRU AADIYA ஒலிக்கும் கழலும் சிலம்பும் சப்தம் எழுப்ப நின்று ஆடிய And then anklet sound raising form dancing there அற்புதம் அறியோமே. ARPUTHAM ARIYOOMEEA அற்புதத்தை யாரே அறிவார் Thosemagic formof lordSivas act we do not know
04
1151 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம் MANNER NEERAR VINN KAATRINAR AATRALAAM                               ஈசன் நிலம் நீர் காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை Lord Siva is appearing five vast forces form those are land water fire wing and space எரியுரு வொருபாகம் ERI YURU ORU BAAGAM கையில் கனல் நெருப்பு ஏத்தியவராய் உமைய ஒரு பாகமாகக் கொண்டு And then lord Siva carried fire pot in the hand place and then lords yumaadevi is carried left part of body
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர் PENNAR AANEANA THEIR VARUM VADIVINAR பெண்ணும் ஆணும் கலந்த திருவுருவினர் Those male and female twin form appearing in this word those father and mother sacred benevolent form appearing in this world பெருங்கடற் பவளம்போல் PERUM KADAL PAVALLAM POOAL கடல் பவளம் போலும் திருமேனியில் And then lord Siva’s body color is coral like red color one
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் VANNAR AAGILUM VALAM SULI PERIGILLAAR …………….. திருமேனியோடு பவளம் போன்ற செந்நிற வண்ணம் உடையவர் அப்பெருமான் வலஞ்சுழியில் And those red color body possessed form seated in valm suli temple place பரிபவர் மனம்புக்க PARI BAVER MANAM PUKKA பிரியது வீற்றிருப்பார் அன்போடு விளங்கும் அடியார்களின் Ever permanent form and then those disciples who are love filled form praying lord Siva
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர் EANNER AAGILLUM ENAI PALA EYAMBUVAR எண்ணத்தில் புகுந்து இருப்பவராயினும் திருவடியைத் தொழும் பக்தர்கள் Disciples mind place entered and then those disciples who are praying under lord Siva’s feet those disciples door steps place accepting begging food இணையடி தொழுவாரே. ENAI ADI THOLUVAAREEA பலியேற்றி இயம்பும் தன்மை உடையவர் ஆவார் And those beggar form of lord Siva’s feet we may pray with oneness of mind possessed form
05
1152 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் ORUVARAAL YUVAMIP PATHAI ARIYA THOOR யார் ஒருவராலும் ஒப்புமை கூற வேண்டுமாயினும் அவ்வாறுஇயன்ற தன்மையில் அரியதோர் If anybody wanted to compare lord Siva with others there is comparable thing or person available in this world and those rare mannerism மேனியர் மடமாதர் MEEANIYAR MADA MAATHER திருமேனி உடையவர் சிவபெருமான் அவர் கங்கை என்னும் நங்கையினையும் Sacred body possessed lord Siva and then lord Siva concealed ganges in the hair place
இருவ ராதரிப் பார்பல பூதமும் ERUVAR AATHARIPAAR PALA BOOTHAMUM உமாதேவியையும் விழைந்திருப்பவர் பூதரும் And the lords yumadeevi is kept explicitly kept left part of his body பேய்களும் அடையாளம் PEEAIGALUM ADAIYAALAM பேய்க்கூட்டங்களும் அடையாளம் காணுமாறு And then demon forces and ghost forces are finding him out
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் ARAVER ATTHATHOOR VENTHALAI KAI PIDITHU அருவருக்கத்தக்க பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி those averson possessed bharmaa skull carried in the hand place தகந்தொறும் பலிக்கென்று AGAM THORUM PALIKKU EANRU வீடுகள் தோறும் சென்று பலி ஏற்று And then enter into every door step place and accepting begging food
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே VARUVAR EEALAVER VALAM SULI ADIGALLEEA ஒருவர் வருவர் என்றால் அவர் வலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசனே ஆவார் In that form appearing one person is lord Siva only who is seated in thiru valm suli temple place வரிவளை கவர்ந்தாரே. VARI VALAI KAVERN THAAREEA அப்பெருமான் அழகிய வளையலைக் கவர்ந்தவர் ஆவர் And that form of lord Siva who has cornered the stripped form of bangles of ladies
06
1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் KUNRI YOOR KUDA MOOKIDAM VALAM PURAM சிவபெருமான் குன்றியூர் குடமூக்கு வலப்புரம் Lord Siva dwelling in the temple places of kunriyoor kudamooku valm puram குலவிய நெய்த்தானம் KULAVIYA NEI THAANAM நெய்த்தானம் And then humble neithaanam temple place
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர் EANRU IVV VOORGL IL LOOM ENRU EYAMBUVAR போன்ற ஊர்களில் விளங்கும் பெருமான் என்று போற்றித் And then places dwelling lord Siva and in that way pray and then praised lord Siva இமையவர் பணிகேட்பார் EMAIYAVER PANI KEEAT PAAR தேவர்கள் முதலானோரால் வணங்கப் பெறும் ஈசன் By deevaas and others and then requested good position in this world and with that self-benefits are filled form praying lord Siva
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம் ANRI YOOR THAMAKKU YULLANA ARIGILLOOAM அப்பிரான் இல்லாத ஊர் எதுவும் யாம் அறிகிலோம் உமாதேவியார் And that benefit giving lord Siva spread over all over the world and there is no place without lord Siva which is not seen by me and then seated with lords yumaadevi வலஞ்சுழி யரனார்பால் VALAM SULI ARANAAR PAAL திருவலஞ்சுழியில் வீற்றிருக்கும் ஈசன் பால் In thiru valm suli temple place seated lord Siva
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று SENRA VOOR THANIL THALAI PADALAAM EANRU சென்றணைத்தால் அப்பெருமான் விளங்கும் மற்ற தலங்களிலும் மேவுதல் செய்யலாம் என்றும் மாண்பு விரும்பி அடைந்தனர் And in that way lord Siva seated in the other temple places alsomay go and then get all the benefits in life in that way disciples are going every sacred  temple places   சேயிழை தளர்வாமே. SEEAI ELAI THALAR VAAMEEA என்று கூறித் தலைவி தளர்கின்றார் (சிவபிரானை விரும்பும் பெண்) N that way one spinster said and then got tiredness who has loved lord Siva
07
1154 குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக் KUYILIN NEEAR MOLI KODI YEDAL VERU YURA குயில் மொழியும் கொடி இடையும் மயிலின் சாயலும் உடைய உமையம்மை வெருவக் Coco bird like soft wards and tender creeper plant form of waist and peacock like shadow possessed lords Yumadeevi got frightened form குலவரைப் பரப்பாய KULA VARAI PARAPPAAYA பரத்து விளங்கும் And then spread over form existing
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி KAYILAIYAI KAI PIDITHU EDUTHAVAN KATHIR MUDI கயிலை மலையைப் பிடித்து எடுத்த Kailai hills are garbed by hands and then tried To lift it இராவணனுடைய ஒளி விடும் முடிகளும் தோளிரு பதுமூன்றி THOOAL ERUPATHUM VOORI இருபது தோள்களும் நெரியுமாறு விரலால் ஊன்றி By ravana whose twenty shoulders are smashed form put his leg finger on the hills by lord Siva
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் MAYILIN NEEAR ANA SAAYALOODU AMARNTHAVAN தேவியுடன் வீற்றிருக்கும் And then peacock shadow like appearance possessed lords parvathi with her lord Siva seated வலஞ்சுழி யெம்மானைப் VALAM SULI EMM AANAI வலஞ்சுழி நாதனைப் போற்றி In valam suli temple place that form of lord Siva is praised form
பயில வல்லவர் பரகதி காண்பவர் PAYILA VALLAVER PARAGATHI KAANBAVER ஏத்த வல்லவர்கள் பரகதியைப் பெறுவர் Of those disciples will get mukthi in this life itself அல்லவர் காணாரே. ALLAVER KAANAAREEA ஏனையோர் அதனைப் பெறாதவர் And then others are not got mukthi in this life
08
1155 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும் ALAL ATHU VOOM BIYA ALAR MISAI ANNALUM தீ வளர்த்து வேள்வியினை ஓம்பும் பிரம்மனும் The vagaa fire developed in the yagaapit place those bharma அரவணைத் துயின்றானுங் ARAVANAI THUYINRAANUM பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும் And then snake bed place sleeping thirumaal
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் KALALUM SENNIYUM KAAN BARITHAAI AVER முறையே திருமுடியும் திருவடியும் காண்பதற்கு அரிதாகிய Those persons are not seen head and feet respectively and that rare form of lord Siva மாண்பமர் தடக்கையில் MAAN BAMAR THADAKKAIYIL மாண்பினை உடைய ஈசன் கையில் And that sociality filled lord Siva’s hand place
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி MALALAI VEENAIYAR MAGIL THARU VALAM SULI வீணை ஏந்தி விளங்கும் அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவலஞ்சுழியில் Veena musical instrument carried form of lord Siva who has happily seated in the thiru valam suli temple place வலங்கொடு பாதத்தால் VALAM KODU PAATHA THAAL வலம் வந்து வணங்கும் அடியவர்களுக்குச் Those disciples who are encircled form going around the temple and then praying lord Siva
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு SULALUM MAANTHAR GAL THOL VENAI ATHANODU சஞ்சித கன்மம் எனக் கொண்டுள்ள தொல்வினையும் பிராரத்த கன்மத்தினை Sangeetha form of bad deeds and peraaratham form of bad deeds are துன்பங்கள் களைவாரே. THUN BANGAL BALAI VAAREEA தோன்றும் துன்பங்களும் இல்லை ஈசன் களைவார் From the above bad deeds form emanating sorrows are removed by lord Siva
09
1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் ARI VILLAATHAVAN SAMANARGAL SAAKIYAR அறிவில்லாத சமணரும் சாக்கியரும் Ignorance filled samanas and buthaas தவம்புரிந் தவஞ்செய்வார் THAVAM PURINTHU AVAM SEIVAAR தவம் புரிந்து கொண்டே அவலம் பல செய்கின்றனர் While performing penance but simultaneously doing harm to others
நெறிய லாதன கூறுவர் மற்றவை NERI ALLAATHA KOORUVAR MATRAVAI அவர் கூறும் நெறி அல்லாத உரைகளைக் கேளாதீர்கள் Those form of complex persons preaching are not to be heard of தேறன்மின் மாறாநீர் THERAN MIN MAARAA NEEAR அவற்றைக் கைவிடுகமாறாக நீங்கள் Go you my kept away those persons wards and then
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி MARI YULLAAM THERAI KAAVERI VALAM SULI மானைக் கரத்தில் ஏந்தி அலைகள் கொண்டு திகழும் காவிரி வலமாக வரும் வலஞ்சுழியில் Lord Siva who has carried stage in the hand place and then waves are emanated form flowing river Cauvery bank place situated valm suli temple மருவிய பெருமானைப் MARUVIYA PERUMAANAI வீற்றிருக்கும் ஈசனை In that temple place seated lord Siva
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில் PERIVILLAATHAVER PERU GATHI PEEASIDIN மறவாது பயணம் செய்யும் அடியவர்கள் பெறுகின்ற நல்ல கதியைப் பேசுவது என்றால் Who is forgotten form daily praying those disciples those good destiny to be talked அளவறுப் பொண்ணாதே. ALAYU ARUPPATHU VONNAATHEEA அதன் அளவு வரையறுத்துக் கூறவொண்ணாத அந்த பெருகும் செம்மை உடையது ஆகும் Which is not measurable by scale those good ness filled one
10
1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய MAATHOOR KOORANAI VALAM SULI MARUVIYA உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் ஆகிய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் Lord Siva who has carried lords parvathi in his left part of his body in thiru valm suli temple place மருந்தினை வயற்காழி MARUNTHINAI VAYAL KAALI ஈசனை வயல்கள் சூழ்ந்த காழியில் Those medicine form of lord Siva where paddy fields are covered form of seergaali place
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் NAATHAN VEETHIYAN GAANA AMBANTHAN VAAI நாதனாய் வேதத்தில் வல்லவனாய் மேவும் ஞானசம்பந்தர் திருவாயால் That leader form of gaanasambanther who is excelled in veethaas and then with his sacred mouth நவிற்றிய தமிழ்மாலை NAVITRIYA TAMIL MAALAI நவிலப் பெற்ற இத்தமிழ் திருபதிகத்தை With it sang the above Tamil poems
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் AATHARITHU ESAI KATTRU VALLAAR SOLA மனதார ஆதரித்து இசைத்து ஓதுவர் மூர்த்திகள் சொல்லக் Those disciples who are mind oneness form singingand then others who are கேட்டுகந் தவர்தம்மை KEEATU YUGANTHAVER THAMMAI கேட்டு மகிழ்ந்தவர்களுக்கு Hearing form got happy
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் VAATHIYAA VENAI MARUMAIKKUM EMM MAIKUM வினையினால் உண்டாகும் துன்பம் ஏதும் இல்லை இம்மையிலும் மறுமையிலும் Those previous bad deeds form coming sorrows are affected them not only in this life but also in the next birth if there is one வருத்தம்வந் தடையாவே. VARUTHAM VANTHU ADIYAAVEEA வருத்தம் வந்து சேர்வது இல்லை And then sorrows will not enter in their life
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சித்தீசநாதர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: