OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PUGALI

ganesheit July 10, 2021

2.122 திருப்புகலி  258

THIRU PUGALI

PLACE HISTORY:– SEE DECADE NO 137

தல விளக்கம் : பதிகம் எண் 137 காண்க.

பண் – செவ்வழி 
திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார் VEDAIYATHU EEARI VERIYAKK KARA VAARTHA VIMALANAAR விடை மீது ஏறி முடை நாறும் எலும்பு பாம்பு இவற்றை மாலையாக அணிந்தவரும் விமலரும் Lord Siva who has ascended on the back of bull and then stinking form of bones and snakes all are garland form adorned those pure form appearing lord Siva in this world
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது PADAIYATHU AAGA PARISU THARITHAARKKU EDAM AAVATHU மழுவைப் படைக்கலனாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம் And the malu battle force carried in the hand those lord Siva dwelling place it is
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம் KODAIYIL VOOVAR KULAMUM YUARNTHAM MARAIYOORGAL THAAM கொடைவன்மை குன்றா மரபினரும் ஆகிய உயரிய வேதங்களில் வல்ல அந்தணர்கள் The philanthropistform hereditary is not reduced form those highly regarded the veethaas are exceled formof bharmins
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. PUDAI KOL VEELVIP PUGAIYUM YUMBAR YULLAAYUM PUGALIYEEA வேட்கும் வேள்விப்புகை சூழ அது ஆகாயத்தில் சென்று உலவும் பெருமை உடையதும் ஆகிய புகலியே ஆகும் Who has been daily conducting yaga fire and from it emanated fumes are wandering in the space place those glory filled place is pugali
01
1323 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார் VEELAI THANNIL IGU NANGINAI YUNDU RUL GANDANAAR பார் கடலில் தோன்றிய மரணத்தை உண்டாக்கும் கொடிய நஞ்சினை உட்கொண்டு இருண்ட கண்டத்தினரும் In the milk sea place killing power possessed the wild poison which is consumed by lord Siva and then got darkened throat
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது GAALAM EANGUM PALI KONDU YULAL VAAR NAGER AAVATHU உலகம் எங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்கு உரிய நகர் And then in the whole world place wandering and then collecting begging food those place is lord Siva dwelling one
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச் SAALA NALLAAR PAYILLUM MARAI KEETU PATHANGALAI மிகவும் நல்லவர் பயிலும் வேதபதங்களைக் கேட்டு The good people are daily veethaa wards
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. SOOLAI MEEYUM KILI THAAN SOL PAYILUM PUGALIYEEA சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும் Are hearing the parrots which are repeated for chanting it those plantations are covered place is pugali
02
1324 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித் VANDU VAALUM KULAL MANGAI YOOR KOORU YUGANTHAAR MATHI வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தம் திருமேனியில் ஒரு பகுதியாக உகந்து ஏற்றுக் கொண்டவரும் The honey bees are encircling the hair of lords Parvathi who has been given leftpart of lord Siva’s body and then which is accepted lords by lords parvathi happily
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது THUNDAM MEEYUM SUDER THOL SADAIYAARKU EDAM AAVATHU பிறைமதி அணிந்த ஒளிமயமான தொல்சடை முடியினரும் ஆகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது The cut form of moon adorned on the good old hair place those appearance possessed lord Siva’s dwelling place it is
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி KENDAI PAAYA MADUVIL YUAR KOOTHAGAI MAATHAVI கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும் தாழை மாதவி மரங்களையும் The kendai fishes are jump and then leaf forward form of deep water bodies and thaalaai maathavi trees
புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. PUNDARIGAM MALAR POIGAI NILLAAYUM PUGALIYEEA தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட புகலியாகும் Where lotus flowers are boomed natural ponds are filled place is seergali place
03
1325 திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க் THIRIYUM MOONRU PURAMUM ERITHU THIGAL VAANAVER ஆங்காங்கு திரிந்து சென்று தேவர்களையும் மக்களையும் சாகடித்த உலோகத்தால் ஆன மூன்று புரங்களையும் எரித்து சாம்பல் ஆகுமாறு செய்து பெருமை மிக்க வானவர்களுக்கும் Three castles are made with iron bronze and silver and they are flying form killing the deevaas and asuraas so as per the request of deevaas lord Siva destroyed it with single fire arrow and those glory filled deevaas
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது ARIYA PEMM MAAN ARAVAK KULAIYAARKU EDAM AAVATHU அரியவனாகிய ஈசன் அரவத்தைக் காதில் குழையாக அணிந்தவன் அப்பெருமானுக்கு இடமாவது To whom lord Siva is rare person and then small snakes are in the ear hole place as kulai ornament form and that form of lord Siva’s dwelling place it is
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற் Periya maadathu YUARUM KODIYIN EADAI VAAL VAYIL பெரிய மாடங்களில் உயர்ந்து மேவும் கொடியின் நெருக்கத்தால் வெயிலின் And then on the high raised mansions place flogs are hoisted in thick form so that the sun rays are
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. PURVILLAATHA THADAM POOM POLIL SOOL THANN PUGALIYEEA வெம்மை தோன்றாதவாறு பெரிய பூம்பொழில் சூழ்ந்த குளிர்ச்சி மிக்க புகலியாகும் Not emanated heat form where flower plantations are covered place is seergali
04
1326 ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர் EEA VILLAARUM SELAI PAARTHANUKKU INN ARUL SEITHAVER கணை பொருந்திய வில்லில் வன்மை பெற்ற அருச்சுனனுக்கு அருள் செய்தவர் The mighty powerful bow and arrow carrier named arjuna is blessed with pasupatha battle force by lord Siva
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது NAAVINAAL MOOKU ARU VITHU NAMBERKKU EDAM AAVATHU கலை மகளின் மூக்கை அரிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு உரிய இடம் And the lord siva who has cut off the nose of education god those lord siva dwelling place it is
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப் MAAVILLAARUM KANI VAAI KEDANGIL VILA VAALA POOAI மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளை மீன்கள் The mango fruits are fallen in the big and deep water bodies and then on seeing it the vaalai fishes are
பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. POO VILLAARUM PUNAL POIGAI YIL VAIGUM UGALIYEEA பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்று அடையும் புகலிப்பதியாகும் Where the flowers are filled natural ponds are filled place is pugali temple place
05
1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் THAKKAN VEELI THAGERTHA THALAI VAN THAYALLAAL VODUM தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும் எம் உரவோனும் ஆகிய சிவபிரான் உமாதேவியோடு Thakken yaga fire is blasted form and my intimate relative is lord Siva seated with lords parvathi in twin form
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது VOKKA VEEA EMM MURAVOON YURAIYUM EDAM AAVATHU உறையும் இடம் அவள் பாகம் கொண்டு விளங்கும் வல்லமை உடைய பெருமான் அப்பெருமான் உறையும் இடம் ஆவது Those twin form of dwelling place is seergaali
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள் KOKKU VAALAI PALAVIN KOLUNTHANN KANI KONRAIGAL மா வாழை பலா என்னும் முக்கனிகளும் செழித்து ஓங்கவும் கொன்றை மற்றும் Where mango banana jack fruits are rich form growing place and then konrai flowers
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. PUKKA VAASA PUNNAI PON THERAL KAATUM PUGALIYEEA புன்னை மரங்களின் மலர்கள் பொன் வண்ணத்தில் பொலியவும் மேவும் புகலியாகும் And then punnai tree flowers are golden color form shedding place is seergaali
06
இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன் THOLAI VILLAATHA ARAKKAN YURATHAI THOLAI VITHAVAN எத்தன்மையிலும் தோல்வியும் இழப்பும் இன்றி விளங்கிய இராவணனுடைய வலிமை மிகுந்த தேகத்தை நலியுமாறு செய்வித்து In whatever way the king ravana is not defeated and those mighty powerful bosom is smashed form
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது THALAI YUM THOOLUM NERITHU SATHRERKUEDAM AAVATHU முடிகளையும் தோள்களையும் நெரித்தவராகிய ஈசன் வீற்றிருக்கும் இடமானது Whose shoulders and heads are stamped form lord siva seated temple place it is
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார் KARAIYIN MEEYUM MANATHOOR ERAA POOKKU KARAP PILLAAR வேதம் முதலான கல்வியில் சிறந்து சிவஞானம்கொண்ட நல்ல மனத்தை  உடைய சீலத்தவர்கள் Veethaas and other form of educations are learned and then excelled in to it and then got siva gaana those good persons are living place வேண்டுபவர்களுக்கு வரையாது வழங்கும் And then who are requested alms which are given limitless form
பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. POLIYUM ATHAN POLIL SOOLTH ALAGAARU PUGALIYEEA பொழில் சூழ்ந்த அழகுடன் மிளிரும் புகலியாகும் Those place is plantations are covered place is seergaali
08
1329 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க் KEENDU PUKKAARPARANTHAAR YUARNTHAAR KEELAL ANNAMAAI பூமியைக் கிளறும் பன்றியின் வடிவம் தாங்கிய திருமாலும் மேலே உயர்ந்து பறக்கும் அன்னப்பறவையின் வடிவம் தாங்கிய பிரமனும் In the land place excavating pig form of appearance taken thirumal and then in the space place flying anna bird form taken bharma
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது KAANDUMEANN RAAR KALAL PANIYA NINRAARKU EDAM AAVATHU கண்டு வணங்க வேண்டும் என்று போற்றித் தொழ பேரழல் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் இடமாவது Who are liked to see feat and head and then liked to pray it but failed in their mission and then lord Siva appeared before them in fire pole form those place is
நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற் NEENDA NAARAI ERAI YAARAL VAARA NERAI SERUVINIL நீண்ட அலகுகளை உடைய நாரை தனக்கு இரையாகிய ஆரல் மீன் வார Where the long mouth possessed lark birds are eating abundant form aaral fishes
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. POONDU MIKKAV VAYAL KAATUM ANTHAN PUGALI YEEA நிறைந்த சேறு கொண்டுள்ள வயல்களை உடைய அழகு மிளிரும் குளிர்ச்சியுடன் திகழும் புகலியாகும் Where the water bodies are filled with slush and those lovely and cool form of place it is
09
1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர் THADUKKU YUDUTHU THALAIYAI PARIPPAARODU SAAKIYAR ஓலையால் வேய்ந்த தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும் சாக்கியர்களும் The palm leaves with it oven mats are tied in the waist place and then head hair is plucked form bald headed samanaas and buthaas
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது EDUKKAN YUIPPAAR ERAINGAATHA EMM MAARKKU EDAM AAVATHU இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது Who are got problems and then not preaching their doctrines those place is lord Siva dwelling place
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர் ADUPPADUKKUM SURUTHIP PORUL VALAVAR VAAN YULLOOR காலைப் பொழுதில்நீர் மடுவில் குளிக்கும் வேத அர்த்தம் வல்லவர்வல்ல அந்தணர்கள், வான் உலகில் வாழும் தேவர்களும் In the early morning time moving deep water bodies place taking bath those bharamins who are excelled in veethas and then in the upper world place dwelling deevaas
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. ADUTHU ADUTHU PUGUM THEENDUM ANTHAN PUGAI ATHEEA அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும் Who are one after another formpraying seergaali temple place it is
10
1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக் EITHA VONNAA ERAIVAN YURAI GINRA PUGALIYAI உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை This life form and then five sense form and material wealth form not knowing lord Siva and those lord siva dwelling place is seergaali
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர் KAI THAVAM ELLAA GAWNIYAN GAANA SAMBANTHAN SEER வஞ்சனையற்ற கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தச் சிறப்புடன் Without any ill will form composed the above ten poems by gaana sambanther who has descended in the gownier sect
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில் SEITHA PATHUM EVAI SEPPA VALLAAR SIVA LOOGATHIL பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை பாடவல்லவர்கள் சிவலோகத்தை Those ten poems are singing before lord Siva and those disciples are
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. EITHI NALLA EMAIYOOR GAL EEATHA ERUP PAAR GALLEEA அடைத்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர் Entering into Siva logam and then deevaas are praising form living their happily
11


திருச்சிற்றம்பலம் OM THIRU  CHITRAM BALAM
உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: