OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PEEARAIYOOR

ganesheit July 10, 2021

16 திருப்பேரெயில் – திருக்குறுந்தொகை 

THIRU PEEARAIYOOR

THIS IS RIVER Cauvery southern side temple. Out of 127 temple this temple is 114th temple. Thiru naayukku arasar sang decade here.Those place is called in the name of voogai peearaiyoor and vangaarap peearaiyoor

தல விளக்கம்:

காவிரித் தென்க் கரைத்தலம் 127 இல் 114 ஆவது திருத்தலம் திருநாவுக்கரசர் பாடல் பெற்றது இதனை ஓகைப் பேரையூர் என்பர் வங்காரப் பேரையூர் எனவும் வழங்கப்படும்


திருச்சிற்றம்பலம் –om thiru chitram balam

153 மறையு மோதுவர் மான்மறிக் கையினர் Maraiyum voothuvar MAAN MARI KAIYINAR Lord Siva elaborate form chanting veethaas and then stage carried in the hand place சிவப்பெருமான் தேவர்களை விரித்து ஓதுபவர் மான்கன்றை கையில் ஏந்தியவர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார் KARAI KOL GANDAM YUDAIYA KABAALIYAAR And then throat poison tainted form possessed blue color throat and then in the hand place carried bharma skull கறைப்பதிந்த தன்மையில் நீலகண்டத்தை உடையவர் கையில் பிரம்மகபாலத்தைக் கொண்டுள்ளவர்
துறையும் போகுவர்தூயவெண் ணீற்றினர் THURAIYUM POOGUVAR THOO VENN NEETRINAR And then philanthropist form and then out of eight types of mannerism those one is fully known everything in this world form appearing in this world and then in the pure body place sacred ashes are adorned form appearing யாவற்றிலும் வள்ளர் ஆகி என் குணங்களில் ஒன்றாக விளங்கும் முற்றும் உணர்தலை உடையவர் தூய திரு வெண்ணீறு அணிந்தவர் 
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே. And then adorned curved moon on the hair place and then seatedin the thiru peerai temple place and ruling all ERAIYUM SOODUVAR PEEAR EAYILAARAREEA பிறைச் சந்திரனைச் சூடியவர் ஆவர் திருப்பேரையில் தலத்தில் வீற்றிருந்து அருள் ஆட்சி புரிபவராவார்
5.16.1
154 கணக்கி லாரையுங் கற்றுவல் லாரையும் KANAKKILLAARAIYUM KATRU VALLAARAIYUM Lord Siva cannot be scaled by any measurementthose disciples who  have learnt everything in this world but if that persons are submissive form சிவப்பெருமான் அளவுகோல் கொண்டு அறியப்படாதவர் நூல்கள் பல கற்றவர் ஆனாலும்
வணக்கி லாநெறி கண்டுகொண் டாரையுந் VANAGILLAA NERI KANDUKONDAARAIYUM and that persons will becontrolled by lord Siva and then disciplesarewhateverform of problem trapped and then those disciples are retrieved by lord Siva வணக்கம் இல்லாத நெறியினர் ஆயின் அவர்களை அடக்குவிர்ப்பவர் அன்பர்கள் எத்தகைய துன்பத்தில் சிக்குண்டு இருந்தாலும் அதிலிருந்து மீட்டு அருள்பவர் 
தணக்கு வார்தணிப் பாரெப் பொருளையும் THANNAKU VAAR THANI PAAREM PORULAIYUM One disciple who has garbed a good thing but which is not appropriate to him and then lord Siva இனிய பொருள் ஒன்று கருதிப் பற்றி நின்றாலும் தனது அடியவர்களுக்குப் பொருந்தாது என்றால்
பிணக்கு வாரவர் பேரெயி லாளரே. PENNAKKU VAAR AVER PEER EAYILAAR RAREEA Lord Siva will kept it away from him andthat form of lordSiva seated in the thiru peeariyil temple place and then blessing all அவற்றை விலக்கி வைப்பவர் அப்பெருமான் திருப்பேரையில் தலத்தில் வீற்றிருந்து அருள் ஆட்சி புரிபவராவார்
5.16.2
155 சொரிவிப் பார்மழை சூழ்கதிர்த் திங்களை SORI VPPAAR MALAISOL KATHIR THIGALAI Lord Siva is made to pour rain in this land and then white raysare spread moon சிவப்பெருமான் மழையைப் பொழிவிப்பவர் வெண்கதிர்களை நல்கும் சந்திரனை 
விரிவிப் பார்வெயிற் பட்ட விளங்கொளி VERI VIPPAAR VEYIL PATTA VELANGU OLI Which is adorned in the hair place and then giving light all places and then sun raysare spread over put in proper position in thisworld விளங்கச் செய்பவர் சூரியனை ஒளிரச் செய்பவர் தன்மையை அருள்பவர்
எரிவிப் பார்தணிப் பாரெப் பொருளையும் ERI VIPPAAR THANIPPAAR EAPP PORULAIYUM And then all things in thisworld is put to temporary form எல்லாப் பொருள்களையும் நிலையற்ற தன்மையாய் ஆக்கும்
பிரிவிப் பாரவர் பேரெயி லாளரே. PERAVIPPAAR AVER PEEAR EYIL LAARAREEA Those mighty power possessed lord Siva who is prime lord form seated in the peer reyil temple place and then give grace form of rule to all வல்லமை உடையவர் அப்பரமனார் பேரெயில் என்றும் தலத்தில் மேவி அருள் ஆட்சி புரிபவர்
5.16.3
156 செறுவிப் பார்சிலை யால்மதில் தீர்த்தங்கள் SERI VIPPAAR SELAIYAAL MATHI THEER THANGAL Lord Siva converted meru hills as bowform and then three castles are destroyed by fire arrow and then converted in to ashes form சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவர்
உறுவிப் பார்பல பத்தர்கள் ஊழ்வினை YURUVIPPAAR PALA PATHERGALYOOL VENAI So as to convert his disciples in hollyperson form lord Siva created so many sacred rivers and then giving then opportunity to take dip in to it பத்தர்கள் புனிதம் பெறவேண்டிய நிலையில் தீர்த்தங்களை படைத்து நீராடும் பேற்றினை அருள்பவர்
அறுவிப் பாரது வன்றியும் நல்வினை ARU VIPPAAR ATHU ANRIYUM NAL VENAI And then with previous bad deeds not to be gone in to low graded form thosebad deeds are cut of form reserved them and then good deeds are doing form ஊழ் வினையால் நவியாதவாறு வினையை அறுத்துக் காத்தருள்பவர் நல்வினையைப்
பெறுவிப் பாரவர் பேரெயி லாளரே. PERU VIPPAAR AVER PEEAR EYILAALAREEA And then gave happiness to his disciples those appearance possessed form lord Siva seated in the peereyil temple place புரியுமாறு செய்து அடியவர்களை மகிழச் செய்பவர் அவர் பெரெயிலில் அருளாட்சி புரிபவர்
5.16.4
157 மற்றை யாரறி யார்மழு வாளினார் MATRAI YAAR ARIYAAR MALU VAALINAAR Those intimate disciples alone knowing form lord Siva appearing in this world and other atheists are not knowing form lord Siva dwelling in this world அன்பர்களால் அன்றி மற்றவர்களால் அறியப்படாத இயல் புடையவர்
பற்றி யாட்டியோர் ஐந்தலைப் பாம்பரைச் PATRI AATI YOOR EINTHALAI PAAMBARAI And then five headed snack catch and then make them to dance form tied in the waistplace as belt form ஓர் ஐந்தலைப் பாம்பைப் பற்றி ஆட்டி அறையில் சுற்றியவர்
சுற்றி யாரவர் தூநெறி யால்மிகு SUTRIYAAR AVER THOO NERI YAAL MIGU Lord Siva who gave us mukthi way of life அவா அறுக்கும் முத்தீநெறி
பெற்றி யாரவர் பேரெயி லாளரே. PERTRI YAAR AVER PEEAR EYIL LAALAREEA Those highly regardedform lordSiva seated in the peerail temple and then blessing all மிகுகின்ற பெற்றியும் உடையவர் அவர் பேரெயில் தலத்து இறைவர் ஆவர்
5.16.5
158 திருக்கு வார்குழற் செல்வன சேவடி THIRUKU VAAR KULAI SELVANA SEEAVADI The curved for twisted the long hair possessed lords yumaadevi has been give left art of his body placeand those rich form of lord Siva’s red color feet வளைந்து முறுக்கி முடித்த நீண்ட கூந்தல் உடைய உமையம்மையை பாகம் கொண்ட செல்வனான சிவப்பெருமானுடைய சிவந்த திருவடிகள்
இருக்கு வாய்மொழி யாற்றனை யேத்துவார் ERUKKYU VAAI MOLI AATRANAI EAATHU VAAR And then with his mouth rick veetha and then all other veethaas are chanting form appearing in this world இருக்கு வேதம் முதலிய மெய்ம் மொழிகளால் ஏத்துவார்களின்
சுருக்கு வார்துயர் தோற்றங்க ளாற்றறப் KARUKKU VAARTHUYAR THOOTRANGAL AATRARAP Andthen sorrows are squeezed form and then its pain is relieved form lord Siva blessed them துயரத்தை சுருக்குவார் துயரங்களின் தோற்றங்கள் வலிகெடும்படி நீக்கி அருளை
பெருக்கு வாரவர் பேரெயி லாளரே. PERUKKU VAAR AVER PEEAREYILAARAREA And then punniya form of activities are multiplied form lord Siva converted them into his disciples பெருக்குவார் சிவ புண்ணியச் செயல்களைப் பெருக்கு வித்துத் தமக்கு அன்பராகச் செய்து கொள்வார்
5.16.6
159 முன்னை யார்மயி லூர்தி முருகவேள் MUNNAI YAAR MAYIL YOORTHI MURUGA VEEAL Lord Siva who has appeared in this world beforelord muruga who possessed peacock as his vehicle முன்னே தோன்றியவர் மயிலை ஊர்தியாக உடைய முருகவேளில் தந்தையார்
தன்னை யாரெனிற் றானோர் தலைமகன் THANNAI YAAR ENIL THAAN VOOR THALAIMAGAN And those wonder prime principal form appearing in this world அவர் ஒப்பற்ற முதல்வர்
என்னை யாளும் இறையவ னெம்பிரான் EANNAI AALUM ERAIYAVAN EMM PERAAN And that form of lord Siva ruling me and then who is my primegod என்னை ஆளும் இறைவரும் எம்பிரானுமாவர்
பின்னை யாரவர் பேரெயி லாளரே. PENNAI YAAR AVER PEEAREYILAARAREEA And then novel form seated in the thiru peerail temple place புதியதில் புதியதும் அவரே பேரெயில் தலத்து இறைவர்
5.16.7
160 உழைத்துந் துள்ளியும் உள்ளத்து ளேயுரு YULAITHUM THULLIYUM YULATHU YULLEEA YURU And then body is got pain form doing sacred acts doing in the temple place and then happiness filled form dancing மெய் வருத்தும் படித் திருப்பணிகள் செய்தும் பேரின்ப மேலீட்டால் ஆடியும் உள்ளத்துளே
இழைத்து மெந்தை பிரானென் றிராப்பகல் EALAITHUM ENTHAI PEERAAN EANN ERAPPAGAL And then in the mind place lord Siva’s sacred deity is embedded form daily praying and then day and night praying lord Siva those love filled form இறைவன் திருஉருவைச் செம்மையாக மனத்தில் சிந்தித்தும் எந்தையே பிரானே என்று இரவும் பகலும்
அழைக்கும் அன்பின ராய அடியவர் ALAIKKUM ANBINA RAAI ADIYAVER Disciples are calling lord Siva in intimate form அழைக்கும் அன்பர்கள்
பிழைப்பு நீக்குவர் பேரெயி லாளரே. PELAIPPU NEENGUVAR PEEAR EYIL LAARAREEA Those error effect of pain is relied by lord Siva those appearance possessed form lord Siva seated in the peerrail temple place செய்த பிழையின் பயனாகிய துயர் நீக்குபவர் பேரெயில் தலத்து இறைவர்
5.16.8
161 நீரு லாநிமிர் புன்சடை யாவெனா NEER YULLAAM NIMIR PUNN SADAIYAA ENA Lord Siva you have adorned Ganges in the soft hair place those prime god you are கங்கை தரித்த மென்மையான சடைமுடியை உடைய நாதனே
ஏரு லாவனங் கன்றிறல் வாட்டிய EER YULLAA ANANGAN THIRAL VAATIYA In that way the lust creating god not prayed lord Siva solord Siva fired that manmatha and then converted in to ashes என ஏற்றிப் போற்றாத மன்மதனை எரித்துச் சம்பலாக்கியவர்
வாரு லாவன மென்முலை யாளொடும் VAAR YULLAA VANA MENN MULAI YAALODUM And the lovely bra adorned lords parvathi is given left part of his body அழகிய கச்சு அணிந்த உமாதேவியைத் திருமேனியில் ஒருபாகமாக கொண்டு விளங்குபவர்
பேரு ளாரவர் பேரெயி லாளரே. PEEARYULLAAR AVER PEEAREYI LAARAREEA அவர் அந்த நல்ல பெயர் பெற்ற பேரெயில் என்னும் தலத்தில் அருள் ஆட்சி புரிபவர் Those good name possessed lord Siva dwelling in the perail temple place and then ruling sacred rule
5.16.9
162 பாணி யார்படு தம்பெயர்ந் தாடுவர் PAANIYAAR PADU THAM PEYARNTHU AADUVAAR Lord Siva is dancing padutham dance as per the musical notes are filled form singing is in consonance form lord Siva dancing சிவபெருமான் பருதம் எனப்படும் கூத்தினை இசைப்பாட்டுக்கு ஏற்ப ஆடுபவர்
தூணி யார்விச யற்கருள் செய்தவர் THOONIYAAR VESAIYARKKU ARUL SEITHAVER And then to arjuna lord Siva gave pasupatha battle force and then its preserving amberaa விசயனுக்கு சூத்திரங்களை அளித்தவர்
மாணி யாய்மண் ணளந்தவன் நான்முகன் MAANIYAAI MANALANTHAVAN NAAN MUGAN In the ten avathaars of lord Krishna alias thirumal who has appeared pigmy form and then requested before maavali king three feet of land and the taken gigantic formand then scaled the whole world with two steps and thosethirumal and bharama daily praying under lord Siva’s feet வாமன அவராதரத்தில் பிரமசாரியாய்த் தோற்றம் கொண்டு முன்று அடி மணல் அளந்த திருமாலும் மற்றும் நான்முகனும் ஏத்தி வழிபடப்பெற்றவர்
பேணி யாரவர் பேரெயி லாளரே. PEEANIYAAR AVER PEEAR EYILAARAREEA Those appearance possessed form of lord Siva descended in the peeareyil temple place and then blessing all அப்பெருமான் பேரெயில் என்னும் தலத்தில் மேவி அருளாட்சி புரிபவர்
5.16.10
163 மதத்த வாளரக் கன்மணிப் புட்பகஞ் MATHERTHA VAAL ARAKKAN MANI PUTPAGAM The madness filled ravana who has fly with flower plane மதம் கொண்ட அரக்கனாகிய இராவணன் புட்பக விமானத்தில் வான் வழியாக சென்ற போது
சிதைக்க வேதிரு மாமலைக் கீழ்ப்புக்குப் SEITHA KA VEE THIRU MAAMALAI KEEAL PUKKU But the kaiyilai hills are not allowed to fly high so ravana tried to pluck the kayilai hills கயிலை மலை குறுக்கே தடுத்து அதனைப் பெயர்த்து
பதைத்தங் கார்த்தெடுத் தான்பத்து நீண்முடி PATHAITHU ANGAAR TH THU EDUTHAAN PATHU NEEN MUDI And then lord Siva put high leg big finger and then stamped ravanas ten heads வைக்க முனைந்த அந்த அரக்கனுடைய முடிகளை நெரியுமாறு ஊன்றியவர்
பிதக்க வூன்றிய பேரெயி லாளரே. PETATRA YOONRIYA PEEAR EILLAARAREEA In that way lord Siva descended in the peerail place and then blessing all பேரெயில் மேவி அருளாட்சி நல்கும் ஈசனே ஆவார்.
5.16.11


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: