OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru paingeeli

ganesheit July 10, 2021

41 திருப்பைஞ்ஞீலி – திருக்குறுந்தொகை

Thiru paingeeli

தல விளக்கம்:

Place history

This is river Cauvery northern side temple. Out of 63 templesin this cluster this temple is 61st one. Three main saints sang decade here. Lords yumaadevi conducted poojaas here. Other names are geevi vanam kathali vanam arambai vanam vimalaaranyam thalara geri swatha geri viyakra puri and mealai chithambaram. Here lord Siva gave prepared food to thirunaayukku arasar

காவிரி வடகரைத் தலம் 63 இல் இது 61 ஆவது திருத்தலம். மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது    உமாதேவி பூசித்த தலம் ஜீவிவனம் கதலிவனம், அரம்பை வனம், விமலாரண்யம், தரளகிரி, சுவேதகிரி, வியாக்கிரபுரி, மேலைச்சிதம்பரம் என்பன வேறு பெயர்கள் திருநாவுக்கரசருக்கு ஈசன் பொதிச்சோறு அளித்த பதி.


திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

407 உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் YUDAIYAAR KOVANAM ONRUM KURAI VILLAR Lord Siva adorned loin cloths in the waist place. And then without any deficiency full-fledged form appearing in this world சிவபெருமான் கோவணத்தை உடுத்தி இருப்பவர் எத்தகை குறைபாடும் இன்றி நிறைவு உடையவராக விளங்குபவர்
படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார் PADAI KOL PAAR EDAM SOOLNTHA PING GEELIYAAR The battle forces are carried form of demon forces are all the time covered form seated in the thiru paigeeli temple place படைக் கலன்களுடன் விளங்கும் பூதகணங்கள் சூழப் பைஞ்ஞீலியில் வீற்றிருப்பவர்
சடையிற் கங்கை தரித்த சதுரரை SADAI MUDI GANGAI THARITHA SATHURARAI And then in the hair place Ganges are adorned form and omnipotent and omnipresent form appearing in this world சடைமுடியில் கங்கையை தரித்தவர் எல்லா வல்லமையும் கொண்ட சதுரப்பாடு உடையவர்
அடைய வல்லவர்க் கில்லை அவலமே. ADAYA VALLAARKU ILLAI AVALAMEEA And then those disciples who are surrender under lord Siva’s feet and that disciples will not entertain any form of sorrows in this world அப்பரமனை சரணம் அடையும் அடியவர்களுக்கு இந்த பூ உலகில் எவ்விதமான துன்பமும் இல்லை
5.41.1
408 மத்த மாமலர் சூடிய மைந்தனார் MATHA MAAMALAR SOODIYA MAINTHA NAAR Lord Siva who has adorned the glory filled yoomathai flowers and then handsome form appearing in this world சிவபெருமான் பெருமை உடைய ஊமத்தை மலரைச் சூடிய அழகர் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் SITHARAAI THIRI VAAR VENAI THEERPARAAL And then lord Siva is appearing sithar saint form. And then those disciples who are in the sitha form wandering in this world and those saints bad deeds are eliminated form lord Siva appearing in this world சிவபெருமான் சித்தர் வடிவம் கொண்டவர், சித்தராய் திரியும் யோகியர்களுக்கு வினையாவும் இன்மை ஆக்குபவர்
பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம் PATHAR THAAM THOLUTHU EEATHU PAINGEELI EMM And those disciples who are love form praying in the paingeeli temple place to whom lord Siva is intimate leader form existing in this world பக்தர்கள் தொழுது ஏத்தும்பைஞ்ஞீலியில் மேவும் அன்புக்கு உரியவர் அவர் பக்தர்களின் தலைவர்
அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. ATHANAI THOLA VALLAVER NALLAVAREEA And then those disciples who are praying lord Siva will attain all benefits in life and then appearing good mannerism filled form in this world அப்பெருமானைத் தொழ வல்லவர்கள் நன்மையாவும் அடைபவர்கள் ஆகி நல்ல பாங்கினைக் கொள்பவர்கள்
5.41.2
409 விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் VELUTHU SOOLATHAN VENN MALU VAAT PADAI Lord Siva the fate tainted soolam battle force carried in the hand place and then carried malu battle force in the hand place சிவபெருமான் கொழுப்பு தடவப்பட்ட சூலத்தை கையில் ஏந்தியவர் மழுப்படையை உடையவர்
கழுது துஞ்சிருட் காட்டகத் தாடலான் KALUTHU THUNGU ERUL KAATAGATHU AADALAAN The ghost forces are sleeping in the mid night time lord Siva dancing in the burial ground place பேய்கள் தூங்குகின்ற நடு இரவில் சுடுகாட்டில் நடனம் ஆடுபவர்
பழுதொன் றின்றிப்பைஞ் ஞீலிப் பரமனைத் PALUTHU ONRU INRI PAINGEELI PARAMANAI And that form of lord Siva is seating in the paingeeli temple place and then those disciples who are without any dirty minded form அப்பெருமான் பைஞ்ஞீலியில் வீற்றிருக்க மாசு இல்லாத தூய மனத்தினராய்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே. THOLUTHU SELBAVER THAM VENAI THOOLIYEEA And that praying disciples bad deeds will be converted in to dust form and then perished தொழுபவர்கள் வினையாவும் பொடியாகி அழியும்
5.41.3
410 ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே VONRI MAALUM BHARAMANUM THAMILLEEA Thirumal and bharma who are oneness form searched lordSiva’s head and feet but lord Siva is rare form and those appearance possessed form lord Siva seated place is திருமாலும் பிரம்மனும் தம் உள்ளே ஒன்றித் தேட காண்பதற்கு அரியவராகிய சிவபெருமான் மேவும் இடமானது
நின்ற சூழ லறிவரி யானிடஞ் NINRA SOOLAL ARI VARIVAARI YAAN EDAM Those rare form lord Siva seated place is நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம்
சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள் SENRU PAAR EDAM EEATHU PINGEELIYUL Where demon forces are going and then praying and praising place is thiru paingeeli temple place பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும்
என்றும் மேவி யிருந்த அடிகளே. ENRUM MEEAVI ERUNTHA ADIGALLEEA And that form lord Siva all the time seated in this temple place அப்பெருமான் எக்காலத்திலும் துதிக்கப்படுபவராய் இந்த தலத்தில் எழுந்தருளி உள்ளவர்
5.41.4
411 வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார் VEELATHIN YURI POORTHA VEGIRTHA NAAR LordSiva who haspealed the elephant skin andthen adorned it as upper dress form and that unique form appearing in this world சிவபெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்திய விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர் THAALACH SEN SADAI MEEAL PERAI VITHAVER And then long color red color hair possessed and then on it curved moon adorned form appearing in this world நீண்டு விளங்குகின்ற செஞ்சடை உடையவராய் அதன் மீது பிறைச்சந்திரனைச் சூடியவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார் THAALAI THANN POLIL SOOLNTHA PING GEELIYAAR Where the thaalai plantations are covered, those cool place is paingeeli and that place lord Siva seated தழைகள் நிறைந்த குளிர்ந்து பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவர்
யாழின் பாட்டை யுகந்த அடிகளே. YAWLIN PAATAIYUGANTHA ADIGALEEA And that form of lord Siva who is hearing the prayer songs with yawl musical instrument tuning form அப்பெருமான் யாழின் இசையுடன் பாடும் பாடல்களை விரும்பிக் கேட்கும் அடிகள் ஆவார்
5.41.5
412 குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் GUNDU PATTU KURI ARIYAACH SAMAN The bulky body possessed samanaas who have any aims in life உடல் பெருக்கிக் குறிக்கோளை அறியாச் சமணர்கள்
மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான் MINDER ROODUPADUTHU YUIYA POONTHU NAAN With whom once I have clubbed form tried to get mukthi in that samana religion but failed in that mission புத்தர்கள் பொருத்தி உய்யப் போந்து நான்
கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் GANDAM KAAR VAYAL SOOLNTHA PAIG GEELIEMM And then entered into paingeeli temple place and that place is covered with sugar cane fields கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து
அண்ட வாணன் அடியடைந் துய்ந்தனே. ANDA VAANAN ADI ADAINTHU YUINTHANEEA Where lord Siva is deevaas leader whose sacred feet approached form I have attained upiftment in life தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்
5.41.6
413 வரிப்பை யாடர வாட்டி மதகரி VARI PAI AADARAYU VAATI MATHA GARI The stripped skin possessed dancing snake is allowed to dance all over the body place and then madness and ego filled the elephant வரிகளை உடைய படத்தினை பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின்
உரிப்பை மூடிய வுத்தம னாருறை YURI PAI MOODIYA YUTHAMANAAR YURAI And that elephant skin is pealed form and then adorned it as upper dress form and then dwelling place is தோலை உரித்துப் போர்த்திய உத்தமராகிய சிவபெருமான் உறையும் இடமானது
திருப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள்போய் THIRU PAING GEELI THESAI THOLUVAAR GAL POOAI And then those disciples who are seeing the direction of thiru paingeeli temple place and then prying lord Siva திருப் பைஞ்ஞீலித் தலத்தை நோக்கித் தொழுபவர்கள்
இருப்பர் வானவ ரோடினி தாகவே. ERUPPAR VAANAVER ROODU ENITHAAGAVEEA They will ultimately happily seated with upper world deevaas வானவர்களோடு இனிது மகிழ்ந்து இருப்பார்கள்
5.41.7
414 கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் KOOADAL KOOANGAMPURAVANI MULLAI MEEAL In the hilly area place growing red color kodaltrees and white color kodal trees from it bloomed flowers aregiving lovely appearance to this place செங்கோடல், வெண்கோடல் கோங்கும் ஆகிய பூக்கள் புறவு நிலமாகிய முல்லை நிலத்தை அணி செய்தலால்
பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார் PAADALVANDU ESAI KEEATKUM PAINGEELI YAAR Where flower plantations are covered place honey bees are singing humming songs those plantations are covered place is paingeeli where dwelling lord Siva சோலைகளில் வண்டுகள் இசைக்கும் எழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில்மேவும் இறைவர்
பேடு மாணும் பிறரறி யாததோர் PEEADUM AANUM PERER ARIYATHA THOOR LordSiva who is neither man nor female nor ali form those chanting form of lord Siva is rare appearance possessed form not known byall பெண் எனவும் ஆண் எனவும் ஓதுதற்கு அரிதானவர் அவர் பிறர் அறியாத இயல்பினர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே. AADUM NAGAM ASAITHA ADI GALLEEA And then dancing snake is tied in the waist place as belt form ஆடும் பாம்பை இடையில் கட்டிய அடிகள் ஆவார்
5.41.8
415 காரு லாமலர்க் கொன்றையந் தாரினான் KAAR YULLAAM KONRAYAN THAAR RINAAN In the rainy season time bloomed konrai flower garlands areadorned form appearing in thisworld கார் களத்தில் பொருந்திய கொன்றை மலர்களாகிய தார் மாலையை அணிந்தவர்
வாரு லாமுலை மங்கையோர் பங்கினன் VAAR YULLAA MULAI MANGAI YOOR PAN GINAN The bra adornedlords yumaa devi is kept left part of his body place கச்சுபொருந்திய தனங்களை உடைய உமைமன்கையை ஒரு பக்கத்தில் வைத்தவர்
தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் THEER YULAAM POLIL SOOLTHA PAINGEELI EMM Those disciples who are enjoying the fragrance of flower smell and chariot place seated form approachingdisciples  are entering the paigeeli templeplace பொழில்கள் நுகரவருவோர்கள் தேரில் ஏறி வந்தவர்கள் பூம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில்எழுந்தருளி இருக்கின்றார்
ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே. AAR GILLAA AMUTHAI ADAINTHU YUIMINEEA Where lord Siva nectar form dwelling and that form of lord Siva is prayed and then get upliftment in life எம் ஆரா அமுதாக விளங்குபவர் அப்பெருமானை அடைந்து உய்தி பெறுவீராக
5.41.9
416 தருக்கிச் சென்று தடவரை பற்றலும் THARUKI SENRU THADA VARAI PATRALLUM The asuraa named ravana with ego filled form approach the kailai hills and then tried to grab it அரக்கனாகிய இராவணன் செருக்குடன்  தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும் நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே NERUKKI YOONRA NINAINTHU SENANAIYEEA And then lord Siva put his leg finger on the kayilai hills and then stamped him and then ravana realized his sin and then thinking lord Siva நெருக்கித் திருவிரலால் ஊன்ற சிவனையே நினைத்து
அரக்கன் பாட அருளுமெம் மானிடம் ARAKKAN PAADA ARULLUM EMM MAANIDAM And then sang sama veethaa to appease lord Siva so lord Siva got happy and then poured his grace on him அரக்கன் பாட அவனுக்கு அருள் புரியும் எம்மான்
இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. ERUKKAI SEELI EANBAARKU DAR ILLAI YEEA And that form of lord Siva seated in the paingeeli temple place in that way those disciples who are praying lord Siva and that disciples will not get any problems in life இடம் பைஞ்ஞீலி என்று உரைப்பவர்களுக்கு இடர்கள் இல்லை
5.41.10


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நீலகண்டேசுவரர்,
தேவியார் – விசாலாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: