OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NAAGESWARAM

ganesheit July 10, 2021

2.119 திருநாகேச்சரம்   255

THIRU NAAGESWARAM

தல விளக்கம் : பதிகம் எண் 160 காண்க.

PLACE HISTORY SEE DECDE NO 160

பண் – செவ்வழி 
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

1289 தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின் THALAI KOL SANTHUM MAGILLUM MAYIL PEELIYUM SAATHIYIN தழைகளோடு கூடிய சந்தன மரங்கள் அகில் மரங்கள் மயில் பீலி With thaalai trees sandal wood trees agil trees and peacocks feathers
பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை PALAMUM YUNTHI PUNAL PAAI PALAM KAAVERI THEN KARAI நல்ல பழங்கள் ஆகியவற்றைப் புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியில் தென்கரையில் And then good fruits are pushing by water and in that way flowing river Cauvery southern side bank
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் NALUVIL VAANOOR THOLA NALGU SEER MALGU NAAGEECHARATHU வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்பு மிக்க நாகேச்சரத்தில் வீற்றிருக்கும் Where upper world deevaas without any deviation daily praying those specialty filled nagesh waram temple place seated
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே. ALAGAR PAATHAM THOLUTHU EEATHA VALLAARKU ALAGAAGUMEEA அழகர் பாதங்களை தொழுது போற்ற வல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும் and those handsome lord Siva’s feet are prayed and then praised form by disciples to whom lovely form living in this world life be approached
01
1290 பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய PENN VOOR BAGAM ADAIYA SADAIYIL PUNAL PEENIYA உமாதேவியை ஒரு பாகத்தில் ஏற்றுச் சடைமுடியில் கங்கை தரித்து And then lords yumaadevi is carried in the left part of the body and then Ganges are adorned in the hair place
வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார் VANNA MAANA PERUMAAN MARUYUM EDAM MANNULLAAR வண்ணப் பொலிவு விளங்கும் ஈசன் மருவும் இடமானது இந்த உலகத்தவர் Those attractive appearance form lord Siva dwelling place it is and then in the world people
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங் NANNI NAALUM THOLUTHU EEATHI NANGU EITHU NAAGEECHARAM நண்ணி நாள்தோறும் தொழுது ஏத்தி நல்லன யாவும் அடையப்பெறும் நாகேச்சரம் ஆகும் Are liking form daily praying and then praising lord Siva and that disciples will get all form of benefits in life
கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே. KANNINAAL KAANA VALAAR AVER KANN YUDAIYAR GALLEEA இதனை தரிசிபவர்கள் கண் பெற்ற பயனை அடைந்தவர் ஆவார்கள் And then those disciples who are prayed here will be good eye possessed form of persons in this world
02
1291 குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர் KURAVE KOLLAI PUNAM KOLLAI KONDUM MANI KULAYUU NEER குறவர்களின் கொல்லைப் புறத்தில் உள்ள கதிர்களை வெள்ளத்தால் கவர்ந்து கொண்டு வரும் தன்மையில் The hunters who are planted corns in the fields place which are carried away by flooded water
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை PARAVAI AALA PARAKKUM PALAM KAAVERI THEN KARAI நீர்ப் பறவைகள் கத்திக் கொண்டு அவற்றைக் கவர வரும் வேட்கையுடன் பறக்கும் தொன்மையான காவிரியின் தென்கரையில் And then on seeing it the birds are cried form tried to carry away those corns and in that intention form playing birds those good old river Cauvery southern side bank
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் NARAVA NAARUM POLIL SOOLNTHU ALAGAAYA NAAGEECHARAM தேன் மணக்கும் பொழில் சூழ்ந்த அழகுடன் விளங்கும் நாகேச்சரத்தின் Where honey fragrance filled flower plantations are covered place is nageshwarm
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே. ERAIVAR PAATHAM THOLUTHU EEATHA VALLAARKU EDAR ILLAIYEEA இறைவன் திருப்பாதத்தைத் தொழுது ஏத்த வல்லார்க்கு எத்தகைய துன்பமும் இல்லை And those place lord Siva’s feet are praying and then praising and that disciples will not affect any form of sorrows
03
1292 கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும் KOOSA NOOKATHU MUNN SONNA POI KEDU VENAI KUTRAMUM ஆராயாமல் பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய் கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் Without any analysis others mind is got hesitation form telling lies and wild form of bad deeds and then sins
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் NAASA MAAKKUM MANATHAARGAL VANTHAADU NAGGECHARAM ஆகியவற்றைச் செய்யாத நன்மணம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சரத்தை Which are not did those good minded disciples are coming and then praying in this temple place and then driven happy from it those temple place is nageswarm
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் NEESA MAAKKUM THIRU KOYILLAAK KONDA SELVAN KALAL ஒளிமயமாக்கி அருள் புரியும் கருணையால் திருக்கோயில் கொண்ட செல்வனாகிய ஈசன் கழலைப் பணிந்து Here light form converted me and then put your grace on me and in that form lord Siva you have descended in this temple place so that rich form of lord Siva I am praising under your feet
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே. NEESAM AAKUM THRATHAAR ARATHAAR NERI PAALAREEA அன்புடன் ஏத்தும் பாங்கு உடையவர்கள் அறத்தின் வழி நிற்பவர்கள் ஆவார்கள். முக்தி நெறியில் செல்லும் தன்மையில் இம்மையில் ஒழுகும் உத்தமர்களாக விளங்குவார்கள் those disciples are love form praying lord Siva and then dharma way following in this world and in this way living in this world in pure form dwelling for evere
04
1293 வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் VAMBU NAARUM MALARUM MALAIP PANDAMUM KONDU NEER நல்ல மணம் கமழும் மலரும் மலைப்பகுதியில் விளையும் பண்டங்களும் கொண்டு நீரின் The fragrance filled flowers and then in the hill place growing things are bringing down by water falls
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை AIM PON VRI KOLIKKUM PALAM KAAVERI THEN KARAI பெருக்கினால் வாரிக் கொழிக்கும் தொன்மையான காவிரியின் தென்கரையில் And then flooded form carried form of fertile place which is good old river Cauvery southern side bank
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் NAMBAN NAALUM AMERGINRA NAAGEECHARAM NANNUVAAR ஈசன் எக்காலத்திலும் வீற்று இருக்கின்ற நாகேச்சரத்தினை நண்ணி வணங்குபவர்கள் And then lord Siva who is permanently staying those nageswaram temple place you may enter and then pray him
உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே. YUMBAR VAANOOR THOLA SENRU YUDAN AAVATHUM YUNMAIYEEA உலக மக்களும் வானவரும் தொழுது நிற்கத் தாமும் உடனாகி விளங்கி வணங்குதலும் மகிழ்தலும் கொள்வார்கள் Where this world people and then upper world deevaas are praying and then besides I am also standing form daily praying so that driving happy from that prayer
05
1294 காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் KAALA MEEGAM NERAK KAALANODU ANTHAGAN GARUDANUM கரிய மேகம் போன்ற நிறம் கொண்ட காலனும் அந்தகனும் கருடனும் the dark color clouds form of body color possessed death god ema and anthagan and vulture
நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் NEELA MAAI NINRU EITHA KAAMANUM PATTANA NENAI YURIN விலகி நின்று கணை எய்திய காமன் அழிந்து பட்டதை நினைவு கொண்டு நோக்குகையில் And then standing in the distance place and then shot flower arrows on lord siva those lust creating god named kaamam which are seen form
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் NAALUM NAATHAN AMERGINRA NAAGEECHARAM NANNUVAAR நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சரத்தை நண்ணி வழிபடுபவர்க்கும் And then daily lord siva dwelling nagaswarm temple place entered and then praying lord siva
கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே. KOOLUM NAALUM THEEYA VEENUM NAN GAAM KURI KON MINEEA கோள்களும் நாள்களும் தீயது ஆனாலும் நல்லனவாக அமையும் அதனை மனத்தில் கொள்மின் Those disciples are not affected by planets and bad days but only they are converted as good one which may be kept in your mind
06
1295 வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய் VEEI YUTHIR MUTHOODU MATHA YAANAI MARUPPUM VERRAAI மூங்கில்களில் இருந்து தெரித்த முத்தும் யானையின் தந்தங்களும் விரவிப் பாயும் From the bamboo tree place emanated seeds and then elephant horns are spread over form flowing
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை PAAI PUNAL VANTHU ALAIKKUM PALAM KAAVERI THEN KARAI நீர் வந்து அலை வீச மேவும் தொன்மை விளங்கும் காவிரியின் தென்கரையில் Where water waves form flowing those good old river Cauvery south side bank
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் GAAYIRUM THINGALLUM KOODI VANTHAADU NAAGEECHARAM சூரியனும் சந்திரனும் சேர்ந்து வந்து வழிபடும் நாகேச்சரத்தில் Where situated nagaswaram temple place moon and sun goods are clubbed form praying place it is
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே. MEEYA VAN THAH ADI POTRI ENN BAAR VENAI VEEDUMEEA வீற்றிருக்கும் ஈசன் திருவடியைப் போற்றித் துதிப்பவர்களின் வினை யாவும் நீங்கி அழியும் So in this place seated lord Siva’s feet are praising form praying and that disciples bad deeds will be removed
07
1296 இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும் ELANGAI VEENTHAN SERAM PATHU ERATTI ELIL THOOLGALLUM இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் Sri langa king ravana whose ten heads and twenty shoulders are
மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய MALANGI VEELUM MALAIYAAL ADAR THAAN EDAM MALGIYA ஆகிய சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய Smashed under the kaiyilai hills those lord Siva dwelling place it is
நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம் NALAM KOL SINTHAIYAVAR NAAL THOORUM NANNUM NAAGESH WARAM நன்மை கெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சரத்தை Where goodness filled minded personsare daily went there and then praying lord Siva those holly place is nagashwaram
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே. VALAM KOL SINTHAI YUDAIYAAR EDAR AAYINA MAAYUMEEA வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும் Where the temple is encircling form praying disciples those persons impediments will be removed
08
1297 கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா KARIYA MAALUM AYANUM MADIYUM MUDI KAAN BONAA கருமை நிறம் உடைய திருமாலும் பிரமனும் அடி, முடி காண இயலாதவாறு The dark color body possessed thirumal and barmaa are not seen feet and head of lord Siva
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா ERI YATHA GAAGI NIMIRNTHAAN AMARUM EDAM MEENDU KAA தீப்பிழம்பாகி ஓங்கி உயர்ந்த ஈசன் அமர்ந்து அருள் செய்யும் இடம் ஆவது And in that way lord Siva appeared in fire pole form in that highly regarded lord Siva dwelling place it is
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் VERIYIN NEER VANTHU ALAIKKUM KARAI MEEYU NAGESH WARAM காவிரியின் நீர் அலைகள் பொருந்தும் கரையில் அமைந்த நாகேச்சரம் ஆகும் Where river Cauvery water waves are lashing river bank place situated temple pace is nagaswaram
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே. PERI VILLAATHA AVV ADIYAR GAL VAANIL PERIYAAR GALLEEA அத்திருக்கோயிலைப் பிரியாது வணங்குகின்ற அடியவர்களை வான் உலகில் வாழ்கின்ற சிறப்பில் இருந்து பிரியாதவர்கள் ஆவார்கள் In that temple place without separated form praying disciples are ultimately live in the upper world without fail
09
1298 தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர் THATTI EDUKKI YURI THOOKIYA KAIYINAR SAAK KIYAR தட்டைக் கக்கத்தில் இடுக்கி உரி தூக்கிய கையினர் ஆய்த் திரியும் சமணர் புத்தர்கள் The bat is kept tight form in the lap place and the begging bowel tied on one side of stick and then carried in the shoulder place and then wandering everywhere those samanaas and buthaas
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை KATRUAI KKUM MOLI KOLLAALUM VELLI ELAM KAATIDAI புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது இடுகாட்டில் நன் இருளில் Those persons are fabricated form preaching their doctrines are not to be followed and then lord Siva who is in the mid night time
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் NTTU ERUL KANN NADAM AADIYA NAATHAN NAAGESHWARAM நடனமாடும் நாகேச்சரத்து இறைவனைத் தேன் நிறைந்த Dancing and those appearance possessed lord Siva is dwelling in nageswaram temple place
மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே. MATTU ERUKKUM MALAR ITTU ADI VEELVATHU VAAI MAIYEEA தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்குவது உண்மைப் பயனைத் தரும் Where those disciples who are flowers are sprayed form and then fallen down form praying lord Siva which will give real benefits in life
10
1299 கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல் GANTHA NAARUM PUNAL KAAVERI THEN KARAI KANNUTHAL மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென்கரையில் கண்ணுதல் The fragrance filled water flowing river Cauvery south bank place situated temple place lord Siva dwelling in three eyes are possessed form
நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் NANTHI SEERUM THIRU NAAGEECHARATHIN MEEAL GAANA SAM கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச்சரத்தின் மேல் ஞானசம்பந்தன் Where lord Siva called in the name of nanthi whose has descended innageswarm temple place and in this place ganasambanther
பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் PANTHAN NAAVILL PANUVAL EVAI PATHUM VALLAAR GAL POOAI நாவினால் போற்றிய இந்தப் பாடல்கள் பத்தையும் வல்லவர்கள் மறுமையில் Ganasambanther who has sang the above ten poems and then those disciples who are repeatedly singing it before lord Siva
எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே. ENTHAI EESAN ERUKKUM YULAGU EITHA VALLAAR GALLEA எந்தை ஈசன் இருக்கும் சிவலோகம் அடைவார்கள் Those disciples will enter siva logam in future
11


திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: