OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NAA

ganesheit July 10, 2021

2.72 திருநணா  208

THIRU NAA

THIS IS KONGU KINGDOM TEMPLE. OUT OF 7 TEMPLES IN THIS CLUSTER THIS TEMPLE IS 3RD ONE . NOW IT IS CALLED IN THE NAME OF BAVAANI. THIRUGAANA SAMBANTHER SANG DECADE HERE.HERE GUBERAN VISUVAAMITHIRAN PARAASARA SAINT AND OTHERS ARE PRAYED

ஆளுடைய பிள்ளையார் கொங்கிற்குடபுலம் சென்று பல சிவதலங்களை வணங்கிக் கொடிமாடச் செங்குன்னூர்க்கு அடியவரும் ஏனையவரும் சிறப்புற வரவேற்கச் சென்றடைந்து வழிபட்டு இனிதிருந்தார் அதன் புறத்துள்ள சிவதலங்களை வணங்குங்கால் திருநணாவினை இறைஞ்சிப் பரவிப் பாடியருளியது கொங்கு நாட்டு தலங்கள் ஏழனுள் 3ஆவது திருத்தலம். பவானி என்று அழைக்கப்படுவது திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது குபேரன், விசுவாமித்திரர், பராசர முனிவர் வழிபட்ட தலம்.

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM

776 பந்தார் விரல்மடவாள் பாகமா  நாகம்பூண் டேற தேறி  PANTHAAR VIRAL MADAVAAL BAAGAMAA NAGAM POONDU EARUTHU EEARI பந்தாடும் விரலை உடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க பாம்பை அணிகலனாகப் பூண்டு எருது ஏறி
அந்தார் அரவணிந்த அம்மா  னிடம்போலும் அந்தண் சாரல்  ANTHAAR ARAYU ANINTHA AMMAN EADAM POOALUM ANTHAN SAARREAL அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானுடைய இடம் அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே and THE LOVELY FORM OF snake garland adorned lord Siva’s dwelling place and that attractive cool mountain shadow place and then near by
வந்தார் மடமந்தி கூத்தாட  வார்பொழிலில் வண்டு பாடச்  VANTHAAR MADA MANTHI KOOTHAADA VAAR POLIN VANDU PAADA மந்திகள் நடனமாடவும் பூம்பொழிலில் வண்டுகள் பாடவும் Monkeys are dancing and then flower plantations place honey bees are singing form
செந்தேன் தெளியொளிரத் தேமாக்  கனியுதிர்க்குந் திருந ணாவே. SEN THEEAN THELI OLIRA THEEMAANG KANI YUTIRKUM THIRU NAAVEEA செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும் And then red color honey place dipped  mango fruits shedding those fertile place is thiru nana
01
777 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்  மற்றொருகை வீணை யேந்தி  Naatam polinthu ealangu netriyinaan matru voru kai veenai eeathi அழகியதொரு கண் பொலிந்து விளங்கும் நெற்றியினரும் ஒரு கையில் வீணை ஏந்தியவரும் One more lovely eye lord Siva possessed in the fore head place and then one hand carried veenaa instrument
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா  னிடம்போலு மிலைசூழ் கானில்  Eeatun thuyar arukkum eammaan EADAM POOALUM EALAI SOOL KAANOL பழவினைத் தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம் இலைகள் அடர்ந்த காட்டில் The good old bad deeds are removed form and those lord dwelling place where the leaves are thick form of forest place
ஓட்டந் தருமருவி வீழும்  விசைகாட்ட முந்தூ ழோசைச் VOOTAM THARUM ARUVI VEELUM VESAI KAATA  MUN THOOL VOOSAI மலை அருவி இசை காட்ட மூங்கில்கள் உராய்ந்து ஓசை Where the forest water falls raising songs and then bamboos are rubbed with one another
சேட்டார் மணிகள் அணியுந்  திரைசேர்க்குந் திருந ணாவே. SEEADER MANIGAL ANIYUM THESAI SEEARKUM THIRU NAAVEEA எழுப்ப உயர்ந்த மணிகளை வாரி அலைகள் கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும் And then raised sound and then high water waves are carried away the diamonds and then placed in the banks place and that place is thiru nana
02
778 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்  பாகமாய் ஞால மேத்த  NANRU AANGU EASAI MOLINTHU NANUTHALLAAL BAAGA MAAI GAALAM EEATHA திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி உமையொரு பாகராய் Withclear form of veethaas are musical notes arefilled form given to this world and then lord Yumadevi is given left part of body
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்  கிடம்போலும் விரைசூழ் வெற்பில்  MINN THANGU SENG SADAI EMM  VIGIRTARKU EADAM POOLUM VERAI SOOL VERPIL மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும் சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம் மணம் கமழும் And then lighting form of red color hair possessed lord Siva who has in this world praying form dwelling place is fragrance filled form
குன்றோங்கி வன்றிரைகள் மோத  மயிலாலுஞ் சாரற் செவ்வி  KUNRU VOOMGI VAN  THERAIGAL MOOTHA MAYIL AALUM SAARAL SEVIEE மலையகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத மயில்கள் ஆட Hilly area place where waterfalls are lashed on the place and the peacocks are dancing form
சென்றோங்கி வானவர்க ளேத்தி  அடிபணியுந் திருந ணாவே. SENRU VOONGI VAANAVARGAL EEATHI ADI PANIYUM THIRU NAAVEEA வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும் சிறப்பினதாகிய திருநணாவாகும்where upper world deevaas are approached the valley place and then prayed lord Siva in thiru nana place
03
779 கையில் மழுவேந்திக் காலிற்  சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு  KAIYILMALU EEANTHI KAALIL  SELAMBU ANINTHU KARI THOL KONDU கையில் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து யானையின் தோலைப் போர்த்து விளங்கும் lord Siva who has carried malu battle force and then in the leg place anklets are adorned form and then elephant skin is adorned as upper dress form
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்  கிடம்போலு மிடைந்து வானோர்  MEIYIL MULUTHU ANINTHA VEGIRTHARKU EADAM POOLUM MIDAITHU VAANOOR போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம் தேவர்கள் கூடி நின்று and that form of lord Siva who is unique form where devas are clubbed form standing
ஐய ரவரெம் பெருமா  னருளென்றென் றாத ரிக்கச்  Eiya araneea EAM PERUMAAN ARUL EANRU AATHARIKA ஐயனே, அரனே பெருமானே அருள் புரிக என்று விரும்பிப் போற்றுவதும் praying and then begging before lord Siva you army farther and you are my god so please put your grace on us and that form willingly praising lord Siva
செய்ய கமலம் பொழிதே  னளித்தியலுந் திருந ணாவே. SEIYA KAMALAM POLI THEEN ALITHU EAYALUM THIRU NAAVEEA செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய திருநணாவாகும் Where the red color lotus flowers are honey giving place is thiru nana
04
780 முத்தேர் நகையா ளிடமாகத்  தம்மார்பில் வெண்ணூல் பூண்டு  MUTHEEAR NAGAIYAAL EADAMAAGA THAM MAARBIL VENN NOOL POONDU முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்கத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு The pearls form of teeth possessed lords yumaadevi is given left part of body and then lord Siva in his bosom place white three knotted thread adorned form of
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா  THOTHEER MALAR SADAIYIL VAITHAAR EADAM POOLUM SOOAI SOOL ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த  பூங்கொத்துக்களைச் சடைமிசைச் சூடியுள்ள சிவபிரானது இடம் சோலைகளில் சூழ்ந்த And then lord Siva who has adorned flower bunches on the hair place and that lord Siva dwelling place where the plantations are covered form of
அத்தேன் அளியுண் களியா  லிசைமுரல ஆலத் தும்பி  ATH THEEAN ALI YUN KALIYAAL ESAI MURALA AALATH THUMBI வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசை பாடி ஆட தும்பிகள் Where honey bees are try to consume with that willingness singing songs and then dancing form and then thumbees are
தெத்தே யெனமுரலக் கேட்டார்  வினைகெடுக்குந் திருந ணாவே. THETHEEA EANA MURALAK KEEATAAR VENAI KEDUKKUM THIRU NAAVEEA தெத்தே என்ற ஒலிக்குறிப்போடு முரல விளங்கும் அழகுடையதும் பெயர் சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும் Thetheea form raising sounds those lovely place and our bad deeds are removing place is thirunaa
05
781 வில்லார் வரையாக மாநாகம்  நாணாக வேடங் கொண்டு  VILLAAR VARAI YAAGA MAA NAAGAM NAANAAGA VEEDAM KONDU மேரு மலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும் பெரிய பாம்பு நாணாக அமைய தான் பெருவீரனாக வேடம் புனைந்து The meru hills are converted as bow form and then snake named vasigi is rope form tied and then lord Siva big brave  warier form converted himself
புல்லார் புரமூன் றெரித்தார்க்  கிடம்போலும் புலியு மானும்  PULLAAR PURA MOONRU EARITHAARKU EADAM POOLUM PULIYUM MAANUM அவுணர் தம் முப்புரங்களையும் எரித்தவனிடம் புலி, மான் இவையும் And then destroyed three castles by fire and lord Siva possessed tiger and stage
அல்லாத சாதிகளு மங்கழல்மேற்  கைகூப்ப அடியார் கூடிச்  ALLAATHA GAATHIKALUM ANG KALAL MEEAL KAAI KOOPA ADIYAAR KOODI அல்லாத பிற விலங்கினங்கள் யாவும் திருவடிகளை கைகூப்பி வணங்க அடியவர் கூடி வழிபடுவதும் And then other animals are clubbed form praying and then disciples are also praying place
செல்லா வருநெறிக்கே செல்ல  அருள்புரியுந் திருந ணாவே. SELLAA ARUL NERIKEEA SELLA ARULPURIYUM THIRU NAAVEEA யாரும் செல்ல இயலாத வீட்டு நெறிக்குச் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும் And then not approachable those heavenly life is to be attained form lord Siva put his grace on them and that temple place is thiru nana
06
782 கானார் களிற்றுரிவை மேல்மூடி  ஆடரவொன் றரைமேற் சாத்தி  KAANAAR KALITRU YURIVAI NEEAL MOODI AADU ARAYU ONRU ARAIMEEAL SAATHI காட்டில் வாழும் யானையின் தோலால் உடலை மூடி ஆடும் பாம்பினை அரைமேல் கட்டி In the forest place living elephant skin with it body is covered form and then dancing snakeis tied in the waist place
ஊனார் தலையோட்டி லூணுகந்தான்  றானுகந்த கோயி லெங்கும்  YOON AAR THALAI YOOTIL YOON YUGAHNTHAAN  THAAN YUGANTHA KOIL EANGUM ஊன் பொருந்திய தலையோட்டில் பலி ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில்  தவ விரதிகள் எங்கும் He skin filled human skull lord Siva collecting the begging food those form of lord Siva dwelling place
நானா விதத்தால் விரதிகள்நன்  னாமமே யேத்தி வாழ்த்தத்  NAANAA VETHATHAAL VERATHIGAL NAL NAAMAMEEA YEEATHI VAALTHA பல்வேறு வகைகளில் திருப்பெயர்களை சொல்லி வாழ்த்த அடியவர் And then lord Siva’s disciples are chanting so many names of lord Siva and then praised form
தேனார் மலர்கொண் டடியார்  அடிவணங்குந் திருந ணாவே. THEENAAR MALAR KONDU ADIYAAR ADI VANANGUM THIRU NANA VEEA தேன் சிறந்த மலர்களைக் கொண்டு மகிழ்ந்து அடிவணங்குவதாகிய திருநணாவாகும் Where the honey filled best flowers are used to conduct poojaas and the prayed lord Siva’s feet and that temple place is thiru nana
07
783 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்  வலிதொலைய விரலா லூன்றி  MANN NEER ELANGAIYAR THAM KOOAMAAN  VALI THOLAYA VERAL YOONRI பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவனும் Ravanaa’s mighty power is destroyed form lord Siva put his leg big finger on the kayilai hills
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்  கிடம்போலும் முனைசேர் சீயம்  MUNN NEER KADAL NANGAI YUNDAAR KU EADAM POOLUM MUNAI SEEAR SEEYAM கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம் மலை குகையில் வாழும் சிங்கம் In the sea place emanated poison is consumed by lord Siva and then wherein the hill caves place living lion
அன்னீர் மைகுன்றி அழலால்  விழிகுறைய வழியு முன்றில்  ANN NEERMAI KUNRI ALALAAL VELI KURAIYA VALIYU MONRIL தன் தன்மை குன்றி அழல் பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த அதனது Which has loses its mighty powers and then its wye sight is reduced form and then wage war with the elephant and the in the entrance placeshed the blood and then on seeing it the elephant got  ego and the got glory of its mighty power
செந்நீர் பரப்பச் சிறந்து  கரியொளிக்குந் திருந ணாவே. SEN NEER PARAPPA SERANTHU KARI OLIKKUM THIRU NANAAVEEA குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும் And then those elephant vanished in the forest place those place is thiru nana
08
784 மையார் மணிமிடறன் மங்கையோர்  பங்குடையான் மனைக டோ றும்  MAIYAAR MANI MIDARAN MANGAIYOOR PANGU YUDAIYAAN MANAIGAL THOORUM கரிய நீலமணி போன்ற மிடற்றினனும் உமைபாகனும் வீடுகள் தோறும் The dark color ruby diamond form of throat possessed lord Siva and then gave left part of his body to lords parvathi and then every door steps
கையார் பலியேற்ற கள்வன்  இடம்போலுங் கழல்கள் நேடிப்  KAIYAAL PALI EEATRA KALVAN EADER POOLUM KALALGAL NEEDIP பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்கைகளைக் கவரும் கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவடி திருமுடிகளைத் தேடி Collecting begging food and then who are putting food those ladies mind is attracted form of lord Siva and then lord Siva’s feet and leg is searched
பொய்யா மறையானும் பூமி  யளந்தானும் போற்ற மன்னிச்  POIYAA MARAI YAANUM BOOMI ALANTHAANUM POTRA MANNI வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற நிலைபேறுடைய By veetha chanting bharma and then this land is scaled by three steps by thirumal but failed and then the realized their true power and the prayed and begged under lord Siva’s feet and ever permanent form of lord Siva
செய்யார் எரியாம் உருவ  முறவணங்குந் திருந ணாவே. SEIYAAR EARIYAAM YURUVA MURA VANANGUM THIRU NANAAVEEA செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும் அப்பெருமானது அடி முடி காணல் ஆற்றாது வந்து வழிபடும் திருநணாவாகும் Who has appeared before them in fire pole form and in that way bharma and thirumal come and prayed pace is thiru nanna
09
785 ஆடை யொழித்தங் கமணே  திரிந்துண்பார் அல்லல் பேசி  AADAI OLINTHU ANGU AMANEEA THIRINTHU YUNBAAR ALLAL PEESI ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி With naked form wandering and then collecting begging foodand then ate it and then sorrowful wards are all the time talking form
மூடு உருவம் உகந்தார்  உரையகற்றும் மூர்த்தி கோயில் MOODUM YURUVAM YUGANTHAAR YURAI AGATRUM MOORTHI KOIL  உடலைப் போர்த்தித் திரிபவரும் ஆகிய சமணர் புத்தர்களின் உரைகளைச் செவிமடுக்காத சிவமூர்த்தியின் கோயில் Buthaas who are covered their boy by saffron color tainted cloth those samanaas and buthaas wards are not heeded form and then going in to lord Siva dwelling dwelling place
ஓடு நதிசேரும் நித்திலமும்  மொய்த்தகிலுங் கரையில் சாரச்  VOODUM NATHI SEEARUM NITHILAMUM MOITHAGILLUM KARAIYIL SAARAA பெருகி ஓடும் நதி முத்து, அகில் முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும் The flooded form of river carried the  pearls and agil wood all are placed in the bank place
சேடர் சிறந்தேத்தத் தோன்றி  யொளிபெருகுந் திருந ணாவே. SEEADER SERANTHU EEAATHA THOONRI OLI PERUGUM THIRU NANAAVEEA பெரியோர் சிறப்புடன் வந்து வழிபடுவதும் கட்புலனாய் ஒளி பெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும் And then those elderly people special form come over here and then prayed lord Siva and those light filled place is thiru nana
10
786 கல்வித் தகத்தால் திரைசூழ்  கடற்காழிக் கவுணி சீரார்  KALVI THAGATHAAR THERAI SOOL KADAL KAALI GWYUNI SEERAAR கரையை அகழும் வர்த்தகத்தோடு அலைகள் சூழும் கடலை அடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி The sea shore is excavated form of waves and then merchant ships are filled form of sea covered place is seergaali where gwyuniya sect descended
நல்வித் தகத்தால் இனிதுணரும்  ஞானசம் பந்தன் எண்ணுஞ்  NAL VITHAGATHAAL EANITHU YUNARUM GAANA SAMBANTHAN EANNUM நல்ல ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் With good gaanaa knowledge all are realized beforehandthose gaana sambanther
சொல்வித் தகத்தால் இறைவன்  திருநணா ஏத்து பாடல்  SOLVITH THAGATHAAL ERAIVAN THIRU NANAA EAATHU PAADAL சொல் வார்த்தைகளுடன்இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப் பாடல்களை Who has praised formsang the above poems in thiru nana temple place
வல்வித் தகத்தான் மொழிவார்  பழியிலரிம் மண்ணின் மேலே. VAL VITH THAGATHAAN MOLIVAAR PALI EALAR IMM MANIN MEEALLEEA மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில் பழியிலராவர் Those disciples who are with musical notes are well form learnt and then singing before lord Siva and that people are in this world curse less and sinless people in this world
11

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி 
காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப் 
பெயர் வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் – சங்கமுகநாதேசுவரர்,
தேவியார் – வேதமங்கையம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: