OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru keel veeloor

ganesheit July 10, 2021

2.105 திருக்கீழ்வேளூர்241

Thiru keel veeloor

Place history:– this River Cauvery southern side temple. This is 84th temple in this cluster. Here thirugaanasambanther and thiru naatukku arasar sang decade. Now  it is called in the name of keevaloor. Here lord muruga prayed. In that temple place lord Showed visual appearance to saint agasthiyar. This is storied building. Ganasambanther called this temple in the name of big temple and then big sacred temple

தல விளக்கம் : காவிரித் தென்கரைத் தலம். 84ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர் பாடல் பெற்றது. கீவளூர் என வழங்கப்பெறுகிறது. முருகப் பெருமான் வழிபட்ட தலம். அகத்திய முனிவருக்கு நடராசப் பெருமான் காட்சி தந்தது. இது மாடக் கோயில், பெரிய கோயில், பெருந்திருக் கோயில் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு.

பண் – நட்டராகம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

1136 மின்னு லாவிய சடையினர் விடையினர் MINN YULLAA VIYA SADAIYINAR VEDAIYINAR மின்னலைப் போன்று சிறந்த ஒளிமயமான சடை உடைய சிவபெருமான் இடப வாகனத்தை உடையவராய் The lightning form of lord Siva possessed glittering hair and then possessed the bull vehicle to travel மிளிர்தரும் அரவோடும் MILIR THARUM ARAVODUM ஒளி மிளிரும் அரவமானது திருமேனியில் திகழ The glittering form of snakes are adorned on the sacred body place
பன்னு லாவிய மறைஒலி நாவினர் PANN YULLAAVIYA MARAI VOLI NAAVINAR இசை அமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும் With musical notes are filed form of tongue possessed lord Siva கறையணி கண்டத்தர் KARAI ANI GANDATHER நீலகண்டரும் And then possessed blue color throat
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் PON YULLAAVIYA KONRAIYAM THAARINAR பொன்னிவ நிகாந்த கொன்றை மாலை உடையார் புகழ்மிகு கீழ்வேளூர் PUGAL MIGU KEEAL VEELOOR அவர் வீற்றிருக்கும் புகழ் மிக்க கீழ்வேளூர் என்னும் திருத்தலத்தினை In that form lord Siva seated in the keeal veeloor temple place
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை YUNN YULLAAVIYA SINTHAIYAR MEEAL VENAI உள்ளத்தால் ஒன்றி நினைத்துப் பணியும் அடியவர்களுக்கு வினை யாவும் நீங்கும் Those disciples who are with oneness minded form praying lord siva and that disciples bad deeds will be eliminated யோடிட வீடாமே. VOODIDA VEEDAAMEEA அது நம்மை விட்டு ஓட வீடுபேறு உண்டாகும் And those previous bad deeds are run away from us and then mukti will be attained
01
1137 நீரு லாவிய சடையிடை யரவொடு NEER YULLAAVIYA SADAI YIDAI ARAVODU கங்கை சூடிய சடையின் இடத்து அரவமும் Lord Siva adorned in the hair place ganges and snakes மதிசிர நிரைமாலை MATHI SERA NERAI MAALAI சந்திரனும் தரித்து வரிசையாகக் கோத்த தலைமாலையையும் கொண்டு விளங்கும் ஈசன் And then moon and head skull garland row form tied and then adorned and in that form appearing lord Siva
வாரு லாவிய வனமுலை யவளொடு VAAR YULLAAVIYA VANA MULAI AVALODU கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு வனமுலை நாயகி என்ற பெயருடன் Where lords yumaadevi adorned the bra and then called here in the name of vana mulai naayagi மணிசிலம் பவையார்க்க MANI SELAMBU AVAI AARKKA நவமணிகளால் ஆன சிலம்பு ஒலிக்கப் பெருமையுடன் And then ruby diamond are filled anklets are raised sound form and greatness filled form
ஏரு லாவிய இறைவன துறைவிடம் EEAR YULLAAVIYA ERAIVANATHU YURAI VIDAM பெருமை உடன் வீற்றிருக்கும் Lord Siva seated place is keeal veealoor எழில்திகழ் கீழ்வேளூர் ELIL THIGAL KEEAL VEELOOR எழில் திகழும் கீழ்வேளூர் என்னும் தலத்தினைச் And that keeal veeloor temple place
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் SEER YULLAAVIYA SINTHAI SEI THANAI BAVER சிறப்புடன் கருதிச் சார்பவர்கள் And there those disciples who are specialty filled form approached lord Siva and prayed பிணியொடு வினைபோமே. PINIYODU VENAI POOMEEA பிணியும் வினையும் அற்றவர்கள் ஆவார்கள் And that disciples will get relief from deceases and bad deeds
02
1138 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு VENNAA MIGU VERI SADAI ARAVODU வெண்மையான பிறைச் சந்திரனும் விரிந்த சடை முடியும் அரவமும் The white moon and curved moon and the spread over hair and snakes வெள்ளெருக் கலர்மத்தம் VELL ERUKKU ALAR MATHAM வெள்ளெருக்க மலரும் ஊமத்தம் மலரும் கொண்டு And then white erukku and yoomathai flowers are adorned form
பண்ணி லாவிய பாடலோ டாடலர் PANN NILLAAVIYA PADALODU AADALAR இசைப் பாடல்களைப் பாடியும் ஆடியும் And then musical notes are filled form singing and then dancing பயில்வுறு கீழ்வேளூர்ப் PAYIL YURU KEEAL VEELOOR மகிழ்தலும் மக்கள் நிறைந்த கீழ்வேளூரில் பெருந்திருக்கோயில் And then got happy filled people are living in keeal veeloor temple place
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் PENN NILLAAVIYA BAAGANAI PERUM THIRU உமா தேவியை பாகமாகப் பொருந்தப் பெருந்திருக்கோயிலில் And then lords yumaadevi is taken left part of his body and that twin form appearing in this big sacred temple place கோயிலெம் பெருமானை KOYIL EMM PERUMAANAI வீற்றிருக்கும் ஈசனை Where lord Siva seated உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார் YUNNI NILLAAVI NINRU YULGIYA SINTHAIYAAR உள்ளத்தால் ஒன்றி நினைப்பவர் உலகில் And those disciples in the mind place thinking in this land place உலகினில் உள்ளாரே. YULA GINIL YULLAAREEA மனிதராக உள்ள சிறப்புடன் திகழ்வார்கள் And that disciples are good human being form appearing in this world
03
1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் SEEDU YULLAAVIYA GANGAIYAI SADAIYIDAI பெருமை மிக்க கங்கையை முடியில் சூடி திகழ வைத்து And the greatness filled ganges river adorned in the hair place and then all are seen form தொங்கவைத் தழகாக THONGA VAIYTHU ALAGAAGA சடைமுடி நீண்டு தொங்க விடப்பட்டு, மிக அழகான And that hair is falling in the back place and then much lovely form
நாடு லாவிய பலிகொளும் நாதனார் NAADU YULLAAVIYA PALI KULLUM NAATHA NAAR நாடு முழுவதும் சென்று பலியேற்கும் நாதரும் Lord Siva travelling all over the world and the accepting begging food and that leader form of lord Siva நலமிகு கீழ்வேளூர்ப் NALA MIGU KEEAL VEELOOR நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயில் Who has descended in good ness filled keeal veeloor temple place named perum thiruk koil
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் PEEDU YULLAAVIYA PERUMAIYAR PERUM THIRU வலிமை மிக்க பெருமையோடு திகழ்பவருமாகிய Where mighty powerful and glory filled form appearing lord Siva கோயிலுட் பிரியாது KOIL YUL PERIYAATHU சிவபெருமானை இடைவிடாது பிரியாது Where lord Siva is not separated by disciples
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் NEEDU YULLAAVIYA NEMALANAI PANIBAVER முதலும் முடிவுமற்ற பரம்பொருள் குற்றமற்ற சிவபெருமானை பணிந்து போற்றுபவர்கள் And that form of lord Siva has no begging and end in this universe and that prime lord Siva is pray and the praised form of disciples நிலைமிகப் பெறுவாரே. NELAI MIGA PERUVAAREEA நிலைத்த பேரின்ப வாழ்வு பெறுவர் And those disciples will get ever permanent bliss in this world
04
1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை Thunru vaar sadai sudar mathi nagu thalai நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையிங்கண் சுடர் விடும் சந்திரன் சிரிக்கும் கபாலம் ஏந்தி The thick form grown in the hair place adorned light glittering hair place adorned moon and laughing appearance possessed skull are carried in the hand place and then வடமணி சிரமாலை VADA MANI SERA MAALAI தலை மாலைகளை வரிசையாக கோத்து அணிந்து Skull garland serial form tied and then adorned it as neck garland form
மன்று லாவிய மாதவ ரினிதியன் MANRU YULLAVIYA MAATHAVARENITHIYAL மனதுள் ஆடும் பெருமானாய் இனிய இயல்பினில் And then in the mind place dancing lord Siva and the good happy mannerism filled form seated in மணமிகு கீழ்வேளூர் MANA MIGU KEEAL VEELOOR நல்ல மணம் கமழும் கீழ்வேளூரில் விளங்கும் பெருந்திருக்கோயிலில் The good fragrance filled place is keeal veeloor big sacred temple place
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் NINRU NEEDIYA PERUM THIRU KOIYILIN எப்பொழுதும் நிலைபெற்று நீண்டு உயர்ந்த பெருந்திருக்கோயில் And ever permanent form existing temple place நிமலனை நினைவோடுஞ் NEMALANAI NINAI VOODUM வீற்றிருக்கும் நிமலனை ஒரு நிலைப்படுத்திய நெஞ்சினராய்ச் Where lordSiva seated in pure form and then disciples are in oneness of mind possessed form
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை SENRU YULLAI VI NINRU EEATHA VALLAAR VENAI சென்று அடைந்து ஏத்த வல்லவர்கள் வினை யாவும் Entered in to the temple and that disciples bad deeds are completly தேய்வது திணமாமே. THEEI VATHU THINA MAAMEEA தேய்ந்து அழிவது திண்ணம் Erased which is certain one
05
1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் KOTHU YULLAAVIYA KULAL THIGAL SADAIYANAI பூங்கொத்துகள் அணிந்துள்ள சடைமுடியனும் The flower bunches are adorned in the hair place கூத்தனை மகிழ்ந்துள்கித் KOOTHANAI MAGILNTHU YULGI கூத்தனும் ஆடல் புரிபவனும் And that dancer form of lord Siva dancing all the times
தொத்து லாவிய நூலணி மார்பினர் THOTHU ALLAAVIYA NOOL ANI MAARBINAN கொத்தாக பூணூல் அணிந்த மார்பினர் And then bunch form sacred three knotted thread adorned in the bosom place தொழுதெழு கீழ்வேளூர்ப் THOLUTHU EALU KEEAL VEELLOOR தொழுது போற்றும் கீழ்வேளூரில் பெருந்திருக்கோயிலில் விளங்குபவரும் And that form of lord siva is prayed and then praised by disciples in that big sacred temple place appearing lord Siva
பித்து லாவிய பத்தர்கள் பேணிய PITHU YULLAAVIYA PATHARGAL PEEANIYA திருவடியும் பற்று மிக்க பக்தர்கள் தொழுது போற்றும் Those fast lunatic form of attachment filled disciples praying and then praising பெருந்திருக் கோயில்மன்னும் PERUM THIRU KOIL MANNUM பெருந்திருக்கோயிலில் நிலையாக வீற்றிருக்கும் And that form of lord Siva permanently seated in this big sacred temple place
முத்து லாவிய வித்தினை யேத்துமின் MUTHU YULLAAVIYA VITHINAI EEATHUMIN முத்து போன்ற அப்பரமனை ஏத்தி வணங்குமின் Those pearls form of prime lord Siva is praised form praying the disciples முடுகிய இடர்போமே. MUDUGIYA EDAR POOMEEA முனைந்து வந்து துன்புறுதல் இடரானது விலகிப் போகும் Those persuasive form entered the impediments will be gone away
06
1142 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் PERAI NELLAAVIYA SADAI EDAI PINNALLUM பிறை அணிந்த சடை முடியில் கங்கை பின்னிய வகையால் The moon adorned in the air place ganges and then வன்னியுந் துன்னாரும் VANNIYUM THUNN NAARUM வன்னியும் கொண்டு Vanni leaves are also adorned
கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர் KARAI NILLAAVIYA GANDER ENN THOOLINAR நீலகண்டமும் உடையவராய் எட்டுத் தோள்களுடன் விளங்குபவர் And then blue throat possessed form and then eight shoulders are possessed form காதல்செய் கீழ்வேளூர் KAATHAL SEI KEEL VEELOOR அவர் விரும்புவது கீழ்வேளூர் Willingly dwelling place is keealveeloor temple place
மறைநி லாவிய அந்தணர் மலிதரு MARAI NILLAAVIYA ANTHANAR MALI THARU மறையில் வல்ல அந்தணர் நிறைந்ததும் குறைவு இல்லாத Where veethaa excelled bharamins are living happily without any deficiency in life பெருந்திருக் கோயில்மன்னும் PERUM THIRU KOIL MANNUM பெரும் திருக்கோயில் நிறைவினராய் விளங்கும் In that place temple named big sacred temple place in full-fledged appearing lord Siva
நிறைநி லாவிய ஈசனை நேசத்தால் NERAI NILLAAVIYA EESANAI NEESATHAAL ஈசனை அன்போடு With love filled form நினைபவர் வினைபோமே. NENAI BAVER VENAI POOMEEA நினைப்பவர்கள் வினைகள் போகும் தூரமாகவே Thinking disciples bad deeds are gone away
07
1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை MARAI NILLAAVYA MAINTHANAM MALAI YINAI மலை போன்று உயர்ந்து விளங்கும் சிறப்புடைய பரமனின் கயிலை மலை The hill form appearing lord Siva’s kaiyilai hills யெடுத்தலும் அரக்கன்றன் EADUTHALLUM ARAKKAN THANN அதனை எடுத்த இராவணனுடைய Which is tried to lift by eravanan
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் THALAI ELLAAM NERINTHU ALARIDA YOONRINAAN தலைகளை நெரித்து அலறுமாறு ஊன்றிய ஈசன் Whose heads are smashed form and then cried by ravana in pain filled form and those way lord Siva put hid sacred thump finger on the hill place உறைதரு கீழ்வேளூர்க் YURAI THARU KEEAL VEELOOR உறைவது கீழ்வேளூர் ஆகும் N that form lord Siva descended place is keeal veeloor temple place
கலைநி லாவிய நாவினர் காதல்செய் KALAI NILLAAVIYA NAAVINAN KAATHAL SEI அங்கு வேதம் வல்ல அந்தணர்கள் மறைகளை நன்கு ஓதி மேவும் அப்பரமனை பக்தியுடன் Inthis temple place bharmins are four veethas in good form chanting those prime god lord Siva and then disciples are in devotion filled form பெருந்திருக் கோயிலுள் PERUM THIRU KOYIL YUL பெருந்திருக்கோயிலில் Entered in the big temple place
நிலைநி லாவிய ஈசனை நேசத்தால் NERAI NILLAAVIYA EESANAI NEESATHAAL வணங்கும் அடியவர்களுக்குக் And then prayed with lord Siva in love filled form நினையவல் வினைபோமே. NINAIYA VALL VENAI POOMEEA கொடிய வினையானது இல்லை அது தானாகவே விட்டு நீங்கும் And those disciples bad deeds are automatically will gone away
08
1144 மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு MANJU YULLAAVIYA KADAL KIDANTHU AVAN NODU மேகங்கள் உலாவும் கடலில் துயில் கொள்ளும் திருமாலும் The clouds are wandering in the sea place sleeping thirumal மலரவன் காண்பொண்ணாப் MALAR AVAN KAAN BOMNNAAP தாமரை மலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும் And then lotus flower place dwelling bharma who are not seen lord Siva in visual form
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி PANJU YULLAAVIYA MEL ADI PAARPATHI பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி And then cotton like soft feet are possessed lords parvathi பாகனைப் பரிவோடுஞ் BAAGANAI  PARI VODUM பாகனும் பரிவோடு Is given half part of lord Siva’s body and then in humble form
செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ் SENG SOLLAAR PALAR PARAVIYA THOL PUGAL செம்மையான சொல்லாகிய வேதத்தால் பரவிய புகழ்மிக்க And then pure wards are used form sand veethaas those glory spread over மல்கிய கீழ்வேளூர் MALGIYA KEEAL VEELOOR கீழ்வேளூரில் Place is keeal veeloor
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் NANGU YULLAAVIYA GANDANI NANUGUMIN நீலகண்டராக மேவி வீற்றிருப்பவன் அவனை நண்ணி வணங்குமின் Lord Siva seated in keeal veeloor temple place so you may go near to him and then pray with oneness of mind நடலைகள் நணுகாவே. NADALAI GAL NANNUGAVEEA துன்பம் …………….. நண்ணாது So that sorrows will not approach you
09
1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா AEER YULLAAVIYA THALAI YINAR NELAI ILLAA மழித்த தலையினரும் நிலையற்ற சொல் செயல் The bald headed samanaas are not firm form of arguments and acts அமணர்கள் சீவரத்தார் AMANARGAL SEEVARATHAAR உடைய சமணர்கள் துவர் ஊட்டிய ஆடையினரும் Possessed persons and then saffron tainted dress adorned buthaas
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் VEER ILLAATHA VENG SOL PALA VERUPPAN MIN ஆகிய சமண புத்தர்களின் பெருமை அற்ற சொற்களை விரும்பாதீர் Those samanas and buthaas unglory filled wards you need not like it சுரும்பமர் கீழ்வேளூர் SURUM BAMAR KEEAL VEELOOR வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர் the good words are raising and plantations are covered place is keeal veeloor
ஏறு லாவிய கொடியனை யேதமில் EEAR YULLAAVIYA KODIYANAI EEATHA MIL விடைக்கொடியனாய் விளங்குபவனும் Where lord Siva bull flag carried form appearing in this world பெருந்திருக் கோயில்மன்னு PERUM THIRU KIYIL MANNU பெருந்திருக்கோயிலில் நிலைபெற்று இருக்கும் And then descended in this big temple place in ever permanent form
பேறு லாவிய பெருமையன் திருவடி EEAR YULLAAVIYA PERUMAIYAN THIRU VADI அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை And then ever ending form of happiness giving lord Siva’s sacred feet பேணுமின் தவமாமே. PEANU MIN THAVA MAAMEEA வழிபடுங்கள் அதுவே சிறந்த தலமாகும் You may pray and this is only the best penance in this world
10
1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை GUNDA VAAR KULAL SADAI YUDAI KULAGANAI கடை சுருண்ட சடையினனும் இளைஞனும் The curling form of hair possessed lordSiva and then young chap form appearing lord Siva அழகமர் கீழ்வேளூர்த்                    ALAGAMAR KEEAL VEELOOR அழகிய கீழ்வேளூர்ப் Who has descended in the keeal veeloor temple place
திரண்ட மாமறை யவர்தொழும் THIRANDA MAAMARAIYAVER THOLLUM PERUM பெருந்திருக் பெரும் The veethaas are singing form of lord Siva THERANDA MAA MARAI AVER THOLUM கோயிலெம் பெருமானை THIRU KOILEM PERUMAAN கோயிலில் விளங்குபவனும் Who is dwelling in the temple place
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு ERUNDA MEETIYIN ENA MIGU VAUAL MALGU கரிய எருமைகள் மிக்கதும் வயல்கள் நிறைந்ததுமாகிய the dark color buffaloes are filled place and the paddy fields are filled place புகலிமன் சம்பந்தன் PUGALIMAN SAMBANTHAN புகலியின் மன்னன் ஞானசம்பந்தன் Where king and glory filled form descended ganasambanther
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி THERUNDA PAADAL VALLAAR AVER SIVA GATHI அருளிய தெளிந்த பாடல்களை ஓதுபவர் சிவகதி Who has blessed form sang the clear devotional songs will ultimately enter in sivalogam பெறுவது திடமாமே. PERU VATHU  THIDA MAAMEEA பெறுதல் உறுதி This is firm statement
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அட்சயலிங்கநாதர், தேவியார் – வனமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: