OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KADAYOOR VEERATAM

ganesheit July 10, 2021

37 திருக்கடவூர்வீரட்டம் – திருக்குறுந்தொகை 

THIRU KADAYOOR VEERATAM

தல வரலாறு:

PLACE HISTORY

IN THE RIVER Cauvery southern side there are 127 temples are situated. Out of it this temple is 47th one. Three main saints sang decade here. Once death god ema tried to corner margandaya life but lord Siva kicked and then killed himand those temple place it is this is one of the asta veerata temples. Here margandayer agastiyar pulathiyar vaasugi thurgaatheevi all are prayed in this temple place. In this place kunguliya naaya naar and kaari naya naar got mukthi state. Once to abiramipatterinadvertenly said in the new moon day the full moon will appear and then with ambigai grace the full moon appeared thosegracefilled placeit is

காவிரித் தென்கரைத்தலத்தில் 127 இல் இது 47 ஆவது திருத்தலம் மூவர் பெருமக்கள் பாடல் பெற்றது மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் காலால் உதைத்து அழித்த தலம் அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று மார்க்கண்டேயர் அகத்தியர் புலத்தியர் வாசுகி துர்க்காதேவி ஆகியோர் வழிப்பட்ட தலம் குங்குவியக்கலய நாயனார் காரி நாயனார் முக்தித்தலம் அமாவாசை அன்று அபிராமி பட்டருக்குப் பூரண நிலவைக் காட்டிய அம்பிகையின் அருள் விளங்கும் திருத்தலம்
திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

368 மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை MALAI KOL AANAI MAYAKIYA VAL VENAI In the hilly place living elephant which has mesmerized form of wild bad deeds மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே NELAI KOL LAANAI NINAP PURU NENJAMEEA Those elephant like not controllable form நிலைக்கலனாய் யானை போன்று அடங்காது
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலாற் KOLAI KAI YAANAIYUM KONRIDUM AATHALAAL And then good elephants and other mad elephants are to be destroyed form நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. KALAI KAI YAANAI KANDEER KADA YOORAREEA And then from art effect form and then from it emanated character form of attainable person he is கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர்
5.37.1
369 வெள்ளி மால்வரை போல்வதோ ரானையார் VELLI MAAL VARAI POOAL VATHOOR AANAIYAAR The hill form appearing the white elephant named iraavatham and then bull those unique form வெள்ளி மால்வரை போன்ற ஆயிராவதம் மற்றும் எறுது ஆகிய ஒப்பற்றவற்றை
உள்ள வாறெனை உள்புகு மானையார் YULLA VAARU EANNAI YULL PUGUM AANAIYAAR In that way lord Siva entered into my mind place as elephant form உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆணை போல்வார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார் KOLLAM MAAGIYA  KOYILLUL AANNAIYAAR The lovely form of temple and that small temple place elephant form appearing அழகைக் கொண்டதாகிய சிறிய கோயில் உள்ள ஆணையாய் உள்ளவர்
கள்ள வானைகண் டீர்கட வூரரே. KALLA VAANAI KANDEER KADAYOORAREEA And then in the kadayoor place seated lord Siva the culprit form appearing you may see him ஆதலின் கடவூர்த் தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆணைபோல்வார் காண்பீர்களாக
5.37.2
370 ஞான மாகிய நன்குண ரானையார் GAANAM AAGIYA NAN GUNAM AANAIYAAR In gnaana form good qualities are filled lord Siva ஞானமாகிய நன்கு உரைக்கத்தக்க பெரியர்
ஊனை வேவ வுருக்கிய ஆனையார் YUNNAI VEEAVA YURUKKIYA AANAIYAAR Those disciple’s bulky body is melted form and then inflated internal light and then put his grace on them அடியவர்களின் பருத்த யானைபோன்ற ஊனை உருக்கி உள்ஒளி பெருக்கி அருள்புரிபவர்
வேன லானை யுரித்துமை அஞ்சவே VEENLAL LAANAI YURITHU YUMAI ANJAVEEA And then lords parvathi got afraid of lord Siva pealed the elephant skin ஆணையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர் தலத்து இறைவர்
கான லானைகண் டீர்கட வூரரே. KAANALAANAI KANDEEAR KADAYOORAREEA And then form of lord Siva seated in the kadayoor temple place and then blessing all அப்பெருமான் கடவூரில் விற்றிருந்து அருளும் இறைவர் ஆவார்
5.37.3
371 ஆல முண்டழ காயதோ ரானையார் AALAM YUNDU ALAGAAYA THOOR AANAIYAAR And then sea place emanated poison is consumed form lovely throat possessed lord Siva நஞ்சினை உண்டும் அழகு பெற்ற ஆணையார் (பெரியர்)
நீல மேனி நெடும்பளிங் கானையார் NEELA MEEANI NEDUM PALINGU AANAIYAAR And then blue body color possessed lords yumaadevi is given left part of his body and then marble like நீல வண்ணம் உடைய உமாதேவியை உடனாகக் கொண்டு பளிங்கு போன்ற
கோல மாய கொழுஞ்சுட ரானையார் KOOALA MAAYA KOLUM SUDAR AANAIYAAR White ashes are adorned all over the body place those lovely spark form of body color possessed lord Siva வெண்மையான திருநீற்றுத் திருமேனியராய் விளங்குபவர் சுடர் கொண்டு மேவும் அழகிய வடிவம் உடையவர்
கால வானைகண் டீர்கட வூரரே. KAALA VAANAI KANDEER KADAYOORAREEA Those appearance possessed lord Siva who has destroyed death god ema and then seated in the thiru kadayoor temple place அப்பெருமான் காலனை அளித்தவராய் கடவூரில் மேவும் இறைவன் ஆவார்
5.37.4
372 அளித்த ஆனஞ்சு மாடிய வானையார் ALITHA AAN ANJUM ADIYA VAANAIYAAR And then lovely disciples are submissive form giving five types of cow milk products are accepted as bathing material and then got happy for that act அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியன்களை பூசைப் பொருளாக ஏற்று மகிழ்பவர்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார் VELLUTHA NEEL KODI YEEAR YUDAI AANAIYAAR And then white bull fag carried in the hand place those elderly person is lord Siva வெள்ளை இடபத்தைக் கொடியாகக் கொண்டு திகழும் பெரியர்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார் ELITHA VEEALATHAI EALL KUVITH AANAIYAAR And then to attack form moved the elephant is laughing form pealed its skin இழிந்து வந்த யானையினை எல்லோரும் சிரிக்குமாறு உரித்த பெரியர்
களித்த வானைகண் டீர்கட வூரரே. KALITHA VAANAI KANDEER KADA YOORAREEA In that way lord Siva seated in enjoyment filled form and then mighty elephant strength possessed form seated in the kadayoor temple place so you may go there and then see him கடவூர் தளத்து இறைவர் களிப்புற்ற யானை போல்வர் அவர் கடவூரில் இனிது விற்றிருக்கின்றார் சென்று காணுங்கள்
5.37.5
373 விடுத்த மால்வரை விண்ணுற வானையார் VEDUTHA MAAL VARAI VINN YURA VAANAIYAAR Lord Siva up to sky place elevated kaiyilai kills those hills are owned by him சிவபெருமான் விண்ணளவு உயர்ந்த பெருமை உடைய கயிலைமலைக்கு உரியவர்
தொடுத்த மால்வரை தூயதோ ரானையார் THODUTHA MAAL VARAI THOOYA THOOR AANAIYAAR The golden color meru hills are converted as bow form and then shot an arrow and destroyed three castles பொன் மலையாகிய மேருவைவில்லாகக் கொண்டு அம்பு தொடுத்து முப்புரங்களை அழித்தவர்
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார் KADUTHA KAALANAI KAAINTHATHOOR AANAIYAAR And then angry form approached death god ema is kicked and then killed him சினம் மிகுந்து வந்த காலனை காலால் உதைத்து அழித்தவர்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. KADUTHA VAANAI KANDEEAR KADAYOORAREEA In that angry filled elephant form lord Siva seated in the kadayoor temple place அப்பெருமான் கோபம் உற்ற ஆணைபோல்வர் அவர் கடவூரில் மேவும் இறைவரும் ஆவார்
5.37.6
374 மண்ணு ளாரை மயக்குறு மானையார் MANN YULLAARAI MAYAKKURUM AANAIYAAR Lord Siva whohave been giving life form to living beings andthen and then this land beings are made to attain the ripped form and then matured form in that maturity attain form lord Siva helping them சிவபெருமான் பூ உலகத்தில் பிறவியை உயிர்களுக்கு நல்கி மன்னுயிகள் பக்குவ நிலையை அடைய உதவி செய்பவர்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார் EANN YULLAAR PALAR EEATHIDUM AANAIYAAR And then in the intimate disciples mind place dwelling form and then those disciples are praying and then praising him அன்பர் பெருமக்களின் எண்ணத்தில் குடி கொண்டு ஏத்தி வழிபடப் பெறுபவர்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார் VINNULLAAR PALARUM ARI AANAIYAAR And then in this land people seeing form andthen upper world deevaas are not known form existing in this world விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் பலராலும் அறிய முடியாதவர்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே. KANN YULLAANAI KANDEER KADAYOORAREEA And that appearance possessed lord Siva is seated in our eye lid place and then appearing elephant form and that lord you may see kadayoor temple place அப்பெருமான் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனை போல்வர் திருக்கடவூரில் சென்று காணுங்கள்
5.37.7
375 சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார் SENAKKUM SEMPAVALTH THRAL AANAIYAAR Lord Siva who has red color coral form appearing in this world சிவபெருமான் செம்பவளத்தில் திரட்சி போன்ற செம்மேனி உடையவர்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார் MANNAKKUM VAL VENAI THEER THIDUM AANAIYAAR And the wild bad deeds are dust form appearing in the mindplace those dust is removed form appearing in this world and then blessing all his disciples கொடிய வினைகளால் மனத்தின்கண் எழுகின்ற மாசுக்களைத் தீர்த்து அருள்பவர்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார் ANAIKKUM ANBUDAIYAAR MANATH THAANAIYAAR And then more than mother showing love and above place lord Siva in the mind place filled form appearing அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்தின் கண் நிறைந்து விளங்குபவர்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. KANAIKKUM AANAI KANDEER KADAYOORAREEA And that form lord Siva who has seated in the kadayoor temple place as sound raising elephant form dwelling you may go in kadayoor temple place and then see him கடவூர் தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனை போல்பவர் திருக்கடவூரில் சென்று காணுங்கள்
5.37.8
376 வேத மாகிய வெஞ்சுட ரானையார் VEETHAM AAGIYA VENG SUDAR AANAIYAAR Lord Siva veethaa form appearing in this world and then its chanting sound elephant form appearing சிவபெருமான் வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனை போன்றவர்
நீதி யானில னாகிய வானையார் NEETHI YAAN NILA NAAGIYA AANAIYAAR And then dharma and then ethical rules are establishing form appearing in this world and then five types of vast forces form appearing in this world (land water fire wind and then space form) நீதிமுறை விளங்க நிலத்தின் கண் தோன்றியவர் நிலமும் வானும் ஆகிய பஞ்ச பூதங்களாக விளங்குபவர்
ஓதி யூழி தெரிந்துண ரானையார் VOOTHI YOOLI THERINTHU YUNAR AANAIYAAR Lord Siva veethaas are chanting form vising all the hamlets and that form of lord Siva is chanting form realizing is rare one வேதங்களை ஓதி பல ஊர்களைக் கண்டறிந்தவர் அப்பரமனை ஓதி உணர்தல் அறிது
காத லானைகண் டீர்கட வூரரே. KATHALAANAI KANDEER KADAYOORAREEA Those intimate disciples lord Siva is intimate form appearing and then seated in the kadayoor temple place அன்பார்க்கன்பர்கடவூர் இறைவர் அவர் கடவூரில் விருப்பம் கொண்டு விற்றிருக்கும் இறைவனே ஆவார் 
5.37.9
377 நீண்ட மாலொடு நான்முகன் றானுமாய்க் NEENDA MAALDU NAAN MUGAN THAANUMAAI The big gigantic form appeared thirumal and bharma are not seen நெடியோன் ஆகிய திருமாலும் நான்முகனும் ஆகிய இருவரும்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும் KANDUM ENRUM PUKKAAR GAL ERUVARUM Lord Siva’s feet and head because they are ego filled mind form searched lord Siva காண்போம் என்ற ஆணவத்தால் கருதிப் புகுந்து காண்பதற்கு அறியவராய்
மாண்ட வாரழ லாகிய வானையார் MAANDA AAR ALALAAGIYA VAANAIYAAR The highly regarded form handsomeappearance possessed form seated in this thiru kadayoor temple place as elephant form மாட்சி உடைய பேரழலலாக நிமிர்ந்த ஆனையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே. KAAN DALAANAI KANDEER KADA YOORAREEA Those kadayoor place lord Siva is being seen in elephant form so you may visit thiru kadayoor temple place and then seen him கடவூர் தலத்து இறைவர் காண்பதற்கு உரிய ஆனைபோல்வர் திருக்கடவூரில் கண்பீர்களாக
5.37.10
378 அடுத்து வந்த இலங்கையர் மன்னனை ADUTHU VANTHA ELANGAIYAR MANNANAI Ravana who has approached the kailai hills and then tried to lift it கயிலையை நெருங்கி வந்து எடுப்பேன் என்ற இலங்கை வேந்தனை
எடுத்த தோள்கள் இறநெரித் தானையார் EDUTHA THOOAL GAL ERA NERI THAANAIYAAR Those twenty shouldersare broken form smashed it எடுக்க உதவிய இருபது தோள்களும் இற்றுப் போகும் வண்ணம் நெரித்த
கடுத்த காலனைக் காய்ந்ததோ ரானையார் KADUTHA KAALANAI KAAINTHA THOOR AANAIYAAR And then angry form approached death god ema is kicked and then filled him சினந்து வந்த காலனை காலால் உதைத்து அழித்தவர்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே. KADUKKAI YAANAI KANDEER KADA YOORAREEA Those konrai flower garland adorned form and then elephant form seated in the kadayoor temple place கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் கடவூரில் யானை போன்று விளங்குபவராய்மேவும் இறைவர் ஆவார்
5.37.11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகடேசுவரர், தேவியார் – அபிராமியம்மை.

திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: