OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru kadayoor mayaanam

ganesheit July 10, 2021

2.80 திருக்கடவூர்மயானம்  216

Thiru kadayoor mayaanam

This is river Cauvery 48th southern side temple. Three main saint sang decade here. This temple is called in the name of thiruMeigaanam, thirumayaanam. Herebharma and margandeeya prayed

காவிரித் தென்கரை 48ஆம் திருத்தலம். மூவர் பாடல் பெற்ற தலம். திருமெய்ஞ்ஞானம் திருமயானம் என அழைக்கப்படுகிறது. பிரமன் மார்க்கண்டேயர் வழிபட்டது. காழியார் வாழ வந்தருளிய மறைவேந்தர் திருநாவுக்கரசு நாயனாரொடு திருஅம்பர் மாகாளம் முதலியவற்றை வழிபட்டுத் தொண்டர்களோடு திருக்கடவூரை அடைந்து காலனையுதைத்த கால் மலர் வணங்கி சடையுடையான் எனத் தொடங்கிப் பாடிப்பரவி அரிதிற்போந்து நண்புடைய் குங்கிலிக்கலய நாயனார் திருமனையடைந்து விருந்தமர்ந்த நாளில் திரு மயானத்தையும் பணிந்து பாடியருளியது.

சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்

அம்பிகை : மலர்குழல் மின்னம்மை

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

866 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி VARIYA MARAIYAAR PERAIYAAR MALAI YOOR SELAIYAA VANAKKI  இசைப் பாடல்களாக அமைந்த வேதங்களைஅருளியவர் பிறையணிந்தவர் மலையை ஒரு வில்லாக வளைத்து The songs form veethaas are given to this world by lord Siva and then adorned curved moon on the hair place and then meru hill is converted as bow form
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்  Eariya MATHILGALEAITHAAR ERIYUM YUSALAM YUDAIYYAAR முப்புரங்கள் எரியுமாறு கணை தொடுத்தவர் பகைவரை அழிப்பதற்கு எறியப்படும். உலக்கை ஆயுதத்தை உடையவர் And then shot an arrow to destroy opponents three castles and then to destroy opponent those long pole weapon in the hand place
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  KRIYA MIDARUM YUDAIYAAR KADAYOOR MAYAANAMAMARNTHAAR கரிய மிடற்றை உடையவர் கமயானத்தில் எழுந்தருளியிருப்பவர் Lord Siva who has possessed thedark color throat and in that form lord Siva descended in the thiru kadayoor mayaanam temple
பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. RERIYA VEDAI MEEAL VARU VAAR AVAR EMM PERUMAAN ADIGALLEEA பெரிய விடை மீது ஏறி வருபவர் அவர். எம்பிரானாராகிய அடிகள் ஆவார் and then lord Siva ascended on the back of the bull who is my dear lord Siva
01
867 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக்  MANGAI MANTHA MARBAR MALU VAAL VALAN ONRU EEANTHI EEAANTHI உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட மார்பினர் மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர் Lords yumaadevi is taken left part of his body and then malu battle force carried in the right hand
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்  GANGAI SADAIYIL KARANTHAAR KADAYOOR MAYAANAM AMARNTHAAR கங்கையைச் சடையில் மீது மறைத்து உள்ளவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் And then Ganges is concealed in the hair place and in that form lord Siva descended in the kadayoor mayaanam temple place
செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்  SENGAN VELLEERU EAARI SELVAM SEIYAA VARU VAAR சிவந்த கண்களை உடைய வெள்ளேற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர் In the red eyes are possessed white bull on it ascended form lord Siva gave sacred appearance to all
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. ANGAI EEARIYA MARIYAAR AVER EMMPERUMAAN ADIGALLEEA அழகிய கையில் மானை ஏந்தியவர் அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார் And then in the lovely hand place stage is carried form appearing to this world who is my prime lord Siva
02
868 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்  EEADAL EADABAM ESAIYA EEARI MALU ONRU EEANTHI ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி மழு ஒன்றை ஏந்தி The unique form of bull on it ascended form and then malu battle force carried in the hand place
காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  KAADATHU EADAMAA YUDAIYAR KADAYOOR MAYAANAM AMARNTHAAR சுடுகாட்டை இடமாகக் கொண்டவர் அவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார் And then burial ground is taken as dwelling place and that form lord Siva descended in the kadayoor mayaanam temple place
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்  PAADAL EASAI KOL KARUVI PADUTHAM PALAYUM PYILVAAR பாடல் இசைக் கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர் And the singing form musical instruments are carried and then turning form lord Siva dancing
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. AADAL ARAVAM YUDAIYAAR AVER EMM PERUMAAN ADIGALLEEA ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர் அவர் எம்பெருமான் அடிகள் ஆவார் And then dancing snakes are adorned as ornament form who is my primelord Siva
03
869 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார் ERAI NINRU EALNAGU VALAIYAAL EALAIYAAL ORU PAAL YUDAIYAAR  முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவர் The young form of forehand place bangles are adorned lords yumadeevi is taken left part of his body
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்  MARAI NINRU EALANGU MOLIYAAR MALAIYAAR MANATHIN MISAIYAAR வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர் தெளிந்த ஞானிகளின் மனத்தின் கண் வந்து தங்குபவர் The veethaa form of talking wards are speaking form lord Siva is staying in the clear minded saints place
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார் KARAI NINRU ELANGU POLIL SOOL KADAYOOR MAYAANAM AMARNTHAAR  கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர் The darkness filled the plantations are covered place is kadayoor mayaanam where lord Siva dwelling
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. PERAI NINRU EALNGU SADAIYAAR AVER EMM PERUMAAN ADIGALLEEA பிறை விளங்கும் சடைமுடியினர் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் Lord Siva adorned the moon in the hair place who is my prime lord Siva
04
870 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்  VELLAI EARUTHIN MISAIYAAR VERITHOODU ORU KAATHU EALANGA வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர் ஒளி விரியும் தோடு ஒரு காதில் விளக்க The white bull on it travelling form moving and light glittering form of ear ornament name thoodu adorned
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக் THULLUM EALA MAAN MARIYAAR SUDAR PON SADAIGAL THULANGA  துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர் ஒளி விடும் பொன்னிறமான சடை விளங்க And then ever active form of young stage carried on the hand place and then light emanating golden color hair possessed form and then
கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்  KALLA NAGU VENN THALAIYAAR KADAYOOR MAYAANAM AMARNTHAAR அதன் மிசை கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் And then culprit form laughing the white skull garland adorned in the head hair place and those appearance form lord Siva dwelling in the kadayoor mayaanam temple place
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. PILAI MATHIYAM YUDAIYAAR AVER EMM PERUMAAN ADIGALLEEA இளம் பிறையை சூடியவர் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் And then young moon adorned in the hair place who is my principal form of prime lord Siva
05
871 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை  புனைந்தார்  PON THAATHU THIRUMANAM KOL PUNAI POONKONRAI PUNAINTHAAR பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றை மாலையை அணிந்தவர் The golden color pollen are shedding those fragrance filled lovely konrai garland adorned form
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார் VONNRAA VEL EERU YSRNTHSTHU YUDAIYAAR ATHVEE YOOR VAAR  சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உடையவர் அதனையே ஊர்தியாகவும் கொண்டவர் The specialty filled the bull emblem studded flag carried on the hand placeand then those original bull is using vehicle form to travel
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார் KANRAA VINAM SOOL PURAVIL KADAYOR MAYANAM AMARNTHAAR  கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் And then cow and calf are gracing forest place of kadayoor mayaanam where lord Siva dwelling
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. PERAI THAAL SADAIYAAR ORUVAR AVER EMM PERUMAAN ADIGALLEEA பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர் ஒப்பற்றவர் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் And then back place lowly hanging hair possessed form of appearing those unique form of lord Siva who is my prime god
06
872 பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்  PAASA MAANA KALAI VAAR PARIVAARKU AMUTHAM ANAIYAAR பாசங்களைப் போக்குவார் அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர் Relationship attachment is relieved form lord Siva to his disciples nectar form tastier one
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்  AASAI THEERA KODUPAAR ALANGAL VEDAI MEEAL VARU VAAR ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர் மாலையணிந்த விடை மீது வருபவர் And then willingness and likings are removed form lord Siva put hid grace on them and then garland adorned form ascended on the back of the bull and then moving all the places
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார் KAASAI MALAR POL MIDATRAAR KADAYOOR MAYAANAM AMANTHAAR  காயாம்பு மலர் போலும் மிடற்றினை உடையவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் And then dark color kaayaambu flower like throat possessed form lord Siva descended in the kadavoor temple place
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. PEESA VARUVAAR ORUVAR AVER EMM PERUMAAN ADIGALLEEA அவரது புகழைப் பலரும் பேசி வணங்க வரும் ஒப்பற்றவர் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் And whose glory is talked by all and then praying under his feet those unique form lord Siva appearing and who is my prime god
07
873 செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற்  SETRA ARAKKAN ALAR  THIGAL SEEVADI MEL VERALLAAL சினம் மிக்க இராவணன் அலறுமாறு விளங்கும் தம் சேவடி விரலால் The angry filled ravana cried with pain form lord Siva stamped him under  the hills
கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்  KAL KUNRU ADARTHA PERYMAAN KADAYOOR MAYAANAM AMARNTHAAR கயிலை மலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளி இருப்பவர் And then smashed him and that form of lord Siva dwelling in the kadayoor mayaanam temple place
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் MATRU VONRU ENAIYIL VALIYA MAASIL VELLI MALAI POOAL  உவமையாகச் சொல்வதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற There is no comparable thing available in this world and those flawless form of white hills
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. PETRM ONRU EEAARI VARUVAAR AVER EMM PERUMAN ADIGALEEA விடை மீது ஏறி வருவார் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் And then ascended on the back of the bull and then moving who is my prime lord Siva
08
874 வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்  VARUMAA KARIYIN YURIYAAR VALAR PUNN SADAIYAAR VEDAIYAAR தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர் விடை ஊர்தியை உடையவர் The mad elephant which is tried to kill lord Siva whose skin pealed form and then adorned as upper dress and long soft hair grown form appearing and then possessed bull as his vehicle
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார் KARU MAAN YURI THOOAL YUDAIYAAR KADAYOOR MAYAANAM AMERNTHAAR  கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் And the black color sage skin adorned as lower dress and that form descended in the kadayoor mayaanam temple place
திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்  THIRU MAAL LODU NAAN MUGANUM THEERNTHUM KAANA MUNN VONNAA திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் And then lord Siva is searched by bharma and then thirumaal but failed to see him
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. PERUMAAN EANAYUM VARU VAAR AVER EMM PERUMAAN ADIGALLEEA பெருமான் எனவும் பேசுமாறு வருபவர் அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார் And then all are considered as prime god form coming to this world who is mu lord siva
09
875 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் THOOYA VEDAI MEEAL VARUVAAR THUNAAR YUDAIYA MATHIL GAL  தூய விடை மீது வருபவர் பகைவர் தம் முப்புரங்களும் The pure bull place ascending form moving and then opponent three castles are
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்  KAAYA VEEVA SETRAAR KADAYOOR MAYAANAM AMARNTHAAR காய்ந்து வேகுமாறு சினந்தவர் கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர் Fired and then burnt down form got angry and that form of lord Siva descended in the kadayoor mayaanam temple place
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்  THEEYA KARUMAM SOLLUM SERU PUNN THEEAARAR AMANAR தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் சமணர்கள் The bad low graded acts are motivating buthaas and samanaas who are ignanimus persons
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே PEEAI PEEAI EANNA VARUVAAR AVER EMM PERUMAAN ADIGALLEEA. தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர் அவர் எம் பெருமான் அடிகள் ஆவார் And they are considered as ghost so move away from them who is my lord Siva
10
876 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த MARAYAM POLIL SOOL KADAYOOR MANNU MAYAANAM AMERNTHA  குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும் Kumkum trees are filled those plantations are filled place is kadayoor mayaanam where existing
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் ARAVAM ASAITHA PERUMAAN AGALAM ARIYA LAAGAA  அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயண்றவரை கூறி Those snakes are adorned lord Siva’s glory is not to be fully known but as per my capacity which is explained
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை  PARAYUM MURAIYEEA PAILUM PANTHAN SEN SOL MAALAI பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை The above songs are sung by ganasambanther by garland form
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. EARAYUM PAGALLUM PARAVI NENAIVAAR VENAIGAL ELAREEA இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர் And those disciples who are day and night singing  and that disciples will get relief from bad deeds
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரீசுவரர், தேவியார் – மலர்க்குழல்மின்னம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: