OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru agathiyaan palli

ganesheit July 10, 2021

2.76 திருஅகத்தியான்பள்ளி  212

Thiru agathiyaan palli

This is River Cauvery southern side temple. This is 126th temple. In this temple place gaana sambather sand decade. In the place saint agastiya conducted poojaas and then seated in meditation form. Here death god ema prayed’ in this place death god ema got geevan mukthi

Those disciples who are praying and others who are thinking and that disciples bad deeds will be removed

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருமறைக்காட்டினின்றும் சிவிகை மீதேறி முடியிற் கொண்டு வணங்கி அடியவர் கூட்டம் கடலொலி போல அரகர முழக்கஞ்செய்யவும் மங்கல தூரியம் தழைக்கவும் மறைமுழங்கவும் சங்க படகம் முதலிய வாத்தியங்கள் எங்கும் இயம்பவும், மலர் மாரி பொழியவும் மங்கல வாழ்த்திசைக்கவும் பூரண கும்பம் முதலியவை பொலியவும் அடியார் எதிர்கொள்ளவும் சென்று பல தலங்களை வணங்கித் தெண்டிரை சூழ்கடற் கானற்றிருவகத்தியான் பள்ளியில் அண்டர்பிரான் கழல் வணங்கிப் பாடிய அருந்தமிழ் மாமறை இத்திருப்பதிகம்.

காவிரித் தென்கரைத் தலம் 126ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது அகத்தியர் பூசித்துத் தவம் செய்தது எமன் வழிபட்ட தலம் எமதரும ராசன் சிவன் முக்தி பெற்ற தலம்.

சுவாமி : அகஸ்தீஸ்வரர் அம்பிகை : மங்கை நாயகி

தலமரம் : வன்னி  தீர்த்தம் : அகத்திய தீர்த்தம் அக்கினி தீர்த்தம்

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் om thiru chiram balam

822 வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள் NEEDUYAR KOLLIVAADIYA VEN THALAI MAALAI SOODI VAYANG EARUL  தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில் The flesh dried white skull garland adorned and then in the utter darkness midnight
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி  NEEDU YUAR KOLLI VELLUKU MAAGA NEVANTHERI பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் Where in the burning burial ground the lit up pyre fire is lamp form giving light
ஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்  AADIYA PERUMAAN AGATIYAAN PALLIYAI நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை Where lord Siva standing form dancing those place is agatiyaan palli
பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே. PAADIYA SENTHAIYINAARKU EALLAIYAAM PAVAMEEA மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை Those disciples who are in oneness form singing lord Siva and that disciples will not attract any kind of sins in life
01
823 துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான் THUNNAM KONDA YUDAIYINAAN THTHAINTHA VENN NEETRINAN  தைத்த உடையை அணிந்தவன் வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன் Lord Siva who has soiled tornoutstitched cloths adorned form and then white ashes are adorned all over the body
மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்  MANNUM KONRAI MATHAMATHAM SOODINAAN MAANAGER பொருந்திய கொன்றை ஊமத்தை மலர்களைச் சூடியவன் அப்பெருமான் எழுந்தருளியதும் And then appropriate form the yoomathai flowers are adorned firm of lord Siva who has descended place
அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியை  ANNAM THANGUM POLIL SOOL AGATHIYAAN PALLIYAI அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான் பள்ளியை WhereAnna birds are living water bodies and then plantations are filled place is agastiyaan palli
உன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே. YUNAAM SEIHA MANATHAARGAL THAM VENAI YOODU MEEA நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும் Those disciples thinking this temple whose bad deeds will be removed
02
824 உடுத்ததுவும் புலித்தோல் பலிதிரிந் துண்பதுங்  YUDUTHATHUYUM PULI THOOAL  PALI THIRINTHU YUNBATHUM உடுத்துள்ளது புலித்தோல் உண்பது பலியேற்றுத் திரிந்து கொன்றது And then lord Siva adorned the tiger skin and then consuming begging food and then
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்  KADUTHU VANTHA KALAL KAALAN THANNAYUM KAALINAAL சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால் Killed the death god ema by kicking with his leg அடுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  ADUTHATHUYUM POLIL SOOL AGATHIYAAN PALLIYAAN அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி சரம் And that form of lord Siva dwelling place is plantations are covered place is agastiyaan palli
தொடுத்தது வுஞ்சரம் முப்புரந் துகளாகவே. THODUTHATHUYUM SARAM MUPPURAM THUGAL AAGAVEEA தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை Andthen shot an arrow so as to destroy three castles
03
825 காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்  KAAINTHATHUYUM ANRU KAAMANAI NETRI KANNINAAL அன்று நெற்றிக் கண்ணால் சினந்தது காமனை பாய்ந்து கொன்றது And then once with forehead eye fire lord Siva angry form killed
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை PAAIN THATHUYUM KALAL KAALANAI PANNINAAN MARAI பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை And then leap forward form with anklet adorned feet the death god ema is killed and then with musical notes are filled form analyzed veethaas
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  AAINTHATHYUM POLIL SOOL AGATHIYAAN PALLI YAAN விரிந்து ஓதியவன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியில் உள்ள And then elaborate form lord Siva preached to four sanagaathi saints and in that form lord Siva in agastiyaan palli place
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. EEANTHATHYUM EAMAVAAN MAGAL ORU BAAGAMEEA இமவான் மகளை ஒரு பாகத்தைக் கொண்ட இறைவன் The rock king daughter named parvathi has been taken left part of his body
04
826 போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை POORTATHUYUM KARIYIN YURI PULI THOOAL YUDAI  போர்த்துள்ளது யானை தோல் உடுத்துள்ளது புலித்தோல் And then elephant skin is adorned as upper dress and then lower dressis tiger skin
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்  KOORTHA THOOR VEN MALU EEANTHI LOOAL ARAVAM ARAIKKU ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு அரையில் கட்டியுள்ளது பாம்பு And then carried sharpened form of malu battle force in the hand place and then in the waist place tied the snake as belt form
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் AAR THATHUYUM POLIL SOOL AGASTIYAAN PALLIYAAN  மேகம் அடர்ந்து திகழும் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான் பள்ளி இறைவன் And in that agastiyaan pali place clouds are thick form covered on the plantations these temple place lord Siva dwelling
பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே. PAARTHATHUYUM MARANAM PADAR EARI MOOLGAVEEA பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம் ஆகும் And then in thefire place dipped form three castles are destroyed by lord Siva
05
827 தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன் THERIN THATHUYUM KANAI VONRU MUPPURAM SENRU YUDAN  தெரிவு செய்தது கணை ஒன்று அக்கணை சென்று உடன் எரியச் செய்தது முப்புரங்களை Lord Siva selected single arrow but it has gone and then destroyed thee castles
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை  EARITHATHUYUM MUN EALIL AAR MALAR YURAI VAAN THALAI முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலையை And then once up on a time lord Siva amputated one head of bharma who has at that time possessed five heads and that bharma all the time dwelling in the lotus flower place
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  ARINTHATHUYUM POLIL SOOL AGASTIYAAN LPALLIYAAN பிரமனின் தலையை அரிந்தனன் பொழில் சூழ்ந்த அகத்தியான் பள்ளி இறைவன் Once bharama got ego that lord Siva and bharma have five heads so they have equalpower inthis world so he is younger and mighty powerful one in this world so he is superior to lord Siva. So lord Siva to destroy his ego lord Siva employed a dog to snip one head with nails so in that form lord Siva seated in the plantations covered agastiyaan palli temple place
புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே. PURINTHATHYUM YUMAI YAAL YOOR BAAGAM PUNAI THALLEEA விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை Lord Siva willingly gave left part of his body to lords parvathi
06
828 ஓதியெல்லாம் உலகுக்கோர் ஒண்பொரு ளாகிமெய்ச்  VOOTHI EALLAAM YULAGUKKU VOOR VONN PORUL AAGI MEI வேதங்களை ஓதியவனே உலகுக்கெல்லாம் ஒண் பொருளாகி விளங்குபவனே Lord Siva you have chanted veethaas with your own tongue so you are to all wards prime god form existing in this temple place
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்  JOOTHI EANRU THOLUVAAR AVER THUYAR THEER THIDUM நிலையான சோதி வடிவினனே என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் Lord Siva you are ever permanent form prime light form and in that way chantingdisciple’s sorrow will be eliminated
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை AATHI EANGAL PERUMAAN AGATHIYAAN PALLIYAI முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான் பள்ளியை And in that principal form lord Siva is appearing as our leader in Agastiyaam palli temple place
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே. NEETHIYAAL  THOLUVAAR AVAR VENAI NEENGUMEEA ஆதியாகிய பெருமானது பள்ளியைத் தொழுவார் வினை நீங்கும் என்க And that good old form of lord Siva seated in the agastiyaan palli temple place where those disciples are praying whose bad deeds will be vanished from this world
07
829 செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்  SERUTHATHUYUM THAKKAN VEEAL VIYAI THIRUNTHAAR PURAM சினந்து அழித்தது தக்கண் வேள்வியை எரித்தது பகைவர் தம் திரிபுரங்களை With angry form destroyed thakkan yaaga fire and then fired opponent three castles
ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்  ORUTHATHUYUM VOLI MAA MALAR YURAIVAAN SERAM ஒளி பொருந்திய சிறந்த தாமரை மலர் மேலுறையும் பிரமனின் தலையை The red light glittering form of lotus flower place seated bharma’s head
அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்  ARUTHATHU YUM POLIL SOOL AGATHIYAAN PALLI YAAN அறுத்தது அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான் Cut off in the agastiyaan palli temple place which is covered by flower plantations
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. EARUTHATHUYUM ARAKKAN THAN THOOAL GAL EARUBATHEEA நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை And then lord Siva smashed ravana’s twenty shoulders
08
830 சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்  SERAMUM NALLA MATHI MATHAMUM THIGAL KONRAIYUM தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும் விளங்கும் கொன்றை மலரையும் And then lord Siva adorned head garland curved moon yoomathai flower and the ever active form of konrai flowers
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்  ARAYU MALGU SADAIYAAN AGATHIYAAN PALLIYAI பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான் பள்ளியில் And then snakes are adorned in the head place and then in that form appearing lord Siva in agastiyaan palli temple place
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை  BHARAMANODU THIRU MAALUM THEEDIYA PETRIMAI பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத Where bharma and thirumal are searched and then not seen lord Sivaas head and feet
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. PARAVA VALLAAR AVAR THANGAL MEEAL VENAI PAARUMEEA தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள் மேல் வரும் வினைகள் அழியும் And that form of lord Siva’s mannerism is praising disciples whose bad deeds will be removed
09
831 செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரி  SENTHUVAR AADAIYINAARUM VETRU ARAIYEEA THREE சிவந்த துவராடையை அணிந்து ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் The red color saffron color dress adorned buthaas and then without drees form wandering samanaas
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி PUNTHI EALLAAR GALLUM PEEASUM PEEACHU AVAI POIM MOLI  அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய் மொழிகளாகும் Who are ignorance filled form of talking wards are untrue one
அந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்  ANTHANAN EANGAL PERAAN AGATHIYAAN PALLIYAI அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள்  தலைவனும் ஆகிய அகத்தியான் பள்ளி இறைவனை So kept away their preaching’s and lovely grace filled lord Siva who is our leader seated in the agestiyaan palli temple place
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. SINTHIMIN NUM VENAI AANAVAI SETHAINTHU VOODU MEEA சிந்தியுங்கள் வினைகள் சிதைந்து ஓடும் You may thinkover him so that our bad deeds are smashed form gone away
10
832 ஞால மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்  GAALAM MALGUM TAMIL GAANA SAMBANTHAN MAA MAYIL உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் The whole world renowned form of glory spread over ganasambanther where the peacocks are
ஆலுஞ் சோலைபுடை சூழ்அகத்தியான் பள்ளியுள்  AALUM SOOALAI PUDAI SOOL AGATHIYAAN PALLIYUL சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியிள் விளங்கும் Best form dancing plantations are covered place is agastiyaan plalli place dwelling
சூல நல்லபடை யான்அடிதொழு தேத்திய  SOOLA MALLA PADAIYAAN ADI THOLUTHY EEATHIYA நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய Lord Siva who has carried soolam battle force in the hand place and that form of praising form sang the above songs
மாலை வல்லாரவர் தங்கள்மேல்வினை மாயுமே. MAALAI VALLAAR AVAR THANGAL MEEAL VENAI MAAYUMEEA இத்தமிழ் மாலையை ஓத வல்லவர்கள் மேல் வரும் வினைகள் மாயும் And then those disciples who are singing the above songs who are here afterapproaching the bad deeds will be perished
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அகத்தீசுவரர்,
தேவியார் – மங்கைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: