OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru aalavaai

ganesheit July 10, 2021

2.66 திருஆலவாய் – திருநீற்றுப்பதிகம் 202

Thiru aalavaai — the sacred ashes decade

Place history — this is padiya kingdom temple. Out of 14 temples in this cluster this is first temple. In this temple place thiruganasambanther and thiru naayuku arasar sang decade. Now it is called in the name of mathurai. The other names are naan mada koodal kadambavanam boologa kaiyillaayam Siva raasa thaani and then thuvaatha saantha thalam

Once ganasanbenter entered in the mathurai place at the request of queen mangaiyarku arasiyaar and then minister kulachiraiyaar. At night they are allowed to stay in the inn alias madam. Whole they are sleeping samanaas are wanted to destroy ganasambanther and his followers so the put fire to the mutt. On seeing the fore ganasambanther who has chased that fire to attack the king so the king named goon pandian got heated stomach pain. Those pain is going on in multiplied form while giving all form of treatments. Samanaas also tried to remove the pain with their mantharaas but failed. At that time kulachiraiyaar informed that gaanasambather is in mathurai who may remove this pain and requested be form the king if he wanted to call him here. King got happy and then allowed the minister to bring him here. This matter is informed to gaana sambanther and then he has accepted the kings invitation and then and visited the palace. Where ganasambanther sang the following decade and then removed stomach pain

மதுரையில் அருகர் கூடி தம் திருமடத்தில் இப்பதியை புகலி வேந்தர் இனி அரசன் எய்தும் வெப்பு அகலற்பொருட்டு தீண்டி வெண்ணீறு இடுதற்குரிய பேறு உடையன் ஆதலின் பேரணியினால் பையவே செல்க என்று ஏவிய வெப்பு நோய் தென்னனை மேவிற்று முயன்ற பலராலும் தீர்க்க முடியாதிருந்தது திருஞானசம்பந்தர் பிள்ளையார் கடைக்கண்ணோக்கம் பெற்றால் பிறவி நோயே ஒழியும் எனின் இந்நோய் ஒழிவதில் ஐயமில்லை என்று குலச்சிறையார் கூறினார் ஞானசம்பந்தர் என்ற திருப்பெயரைக் கேட்டதே பாண்டியனுக்கு ஓரளவு இன்பம் உண்டாயிற்று அதனால் அழைத்து வர அவன் வேண்டினான். சென்று வண்ங்கி வேண்டி அழைத்தனர். அமைச்சர் முதலோர் திருவுளம் பற்றிப் பிள்ளையார் எழுந்தருளினார் நோக்கும் புண்ணியனானான் காக்கும் பாண்டியன் அவன் வெப்பு நோயை விலக்கப் பாடியருளிய இத்திருநீற்றுப்பதிகம்

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்  om thiru chitram balam

709 மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு  MANTHIRA MAAVATHU NEERU VAANAVAR MEEAL ATHU NEERU மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது வானவர் தம்மேனி மேல் பூசிக்கொள்ளப்படுவது THE SACRED ASHESES are manthra form those who are thinking it and then it will protect them and then deevaas are on their body place applied and then paste form adorn it
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு SUNTHARA MAAVATHU NEERU THTIKKAP PADUVATHU NEERU  அழகு தருவது நீறு எல்லா நூல்களாலும் புகழப்படுவது Sacred ashes will give you lovely appearance and then all the religious books are praising it
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு THANTIRA MAAVATHU NEERU SAMAYATHIL YULLATHU NEERU  ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது சிவமந்திரத்தில் நிலைத்துள்ளது In the aagamaa place glorified form mentioned this sacred ashes and then siva manthraa place permanent place it has got
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. SEN THUAR VAAI YUMAI PANGAN THIRU AALAVAAYAAN THIRU NEERU சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு The red color mouth possessed lord Siva who gave half part of body to lords yumaadevi and in that twin form lord Siva descended in the thiru aalavaai temple place who’s sacred ashes it is
01
710 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீ று  VEETHATIL YULLATHU NEERU VENTHUYAR THEERPATHU NEERU வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது கொடிய துயர்களைப் போக்குவது In the veetha monthraa place glorified form chanted the sacred ashes which will remove wild sorrows on our part
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு  POTHAM THARUVATHU NEERU PUNMAI THAVRPATHU NEERU சிவஞானத்தைத் தருவது அறியாமை முதலியவற்றைப் போக்குவது The sacred ashes will give siva gaanaa knowledge and then ignorance is removed from our part
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு  VOTHA THAGUVATHU NEERU YUNMAYIL YULLATHU NEERU புகழ்ந்து போற்றத்தக்கது உண்மையாக நிலைபெற்றிருப்பது In glorified form praised those sacred ashes ad then those persons who are speaking truth in their fore head place permanent form daily appearing the sacred ashes
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. SEETHAP PUNAL VAYAL SOOLNTHA THIRU AALAVAAYAAN THIRU NEEREEA குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு The cool paddy fields are filled the cool water and those fields are surrounded temple place is thiru aalavaai where dwelling lord Siva whose sacred form applied the ashes
02
711 முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு  MUTHI THARUVATHU NEERU MUNIVAR ANIVATHU NEERU வீடுபேறு அளிப்பது, முனிவர்களால் அணியப்பெறுவது If you daily adorned sacred ashes on your body place and then ultimately remove your sins and then lead to mukthi state and then saints are in their body place paste form adorned those sacred ashes
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு  SATIYA M AAVATHU NEERU THAKOOR PUGAL VATHU NEERU நிலையாக எப்போதும் உள்ளது தக்கோர்களால் புகழப்படுவது And then ever permanent form available the sacred ashes and those good persons are glorifying the sacred ashes பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு  PATHI THARUVATHU NEERU PARAVA EANIYATHU NEERU இறைவனிடம் பக்தியை விளைப்பது வாழ்த்த இனியது If you daily adorned the sacred ashes it will create devotion towards lord Siva and then ultimately leads fast attachment with lord Siva and then if you bless others it will be distributed to those persons and then pray in the name of god and then be given
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. SITHI THARUVATHU NEERU THORU AALAVAAYAAN THIRU NEEREEA எண்வகைச் சித்திகளையும் தரவல்லது திருஆலவாயான் திருநீறு the eight types of special powers called otherwise as sithiees( anima lagima eesatvam peraapthi and so on) are bringing towards if you adorned sacred ashes daily which is given in the thiru aalavaai temple place to his devotees
03
712 காண இனியது நீறு கவினைத் தருவது நீறு  KAANNA EINIYATHU NEERU KAVINAI THARU VATHU NEERU கண்களுக்கு இனிமை தருவது அழகைக் கொடுப்பது If you adorn sacred ashes it will give attractive appearance and good appearance to all and then it will give handsome and beautiful appearance to all
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு PEENI ANI BAVARKKU EALLAAM PERUMAI KODUPPATHU NEERU  விரும்பி அணிவார்க்கு பெருமை கொடுப்பது So that persons who are appreciative form adorned all over the body it will give grate satisfaction not only to himself but also others
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு  MAANAM THAYATHU NEERU MATHIYAI THARUVATHU NEERU இறப்பைத் தடுப்பது அறிவைத் தருவது The sacred ashes will stop the death and then gaana knowledge to all
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. SEEANAM THARUVATHU NEERU THIRU AALAVAAYAAN THIRU NEEREEA உயர்வு அளிப்பது திருஆலவாயான் திருநீறு The sacred ashes if you adorn it and then it will give highly elevated place in this world and that form of sacred ashes are distributed in the  thiru aalavaai temple place (mathurai)
04
713 பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு  POOSA INIYATHU NEERU PUNNIYA MAAVATHU NEERU பூசுதற்கு இனிமையானது புண்ணியத்தை வளர்ப்பது The sacred ashes are soft dust form so if you apply in the body and then it will give happiness in life and then good people will approach you so it will develop punniya and bharma form of activities in life
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம் PEESA EINIYATHU NEERU PERUM THAVATHOOR GALUKU EALLAAM  பேசுதற்கு இனியது பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு If you talk about the efficacy of sacred ashes it will give satisfaction to mind to all including big meditation performing saints ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு AASAI KEDUPPATHU NEERU ANTHAMATHAAVATHU NEER  ஆசையை அறுப்பது முடிவான பேரின்ப நிலையை அளிப்பது The sacred aches if you adorn daily it will eradicate lust feeling on our part and ultimate happiness of bliss and heavenly mukthi life
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. THEESAM PUGALVATHU NEERU THIRU AALAVAAYAAN THIRU NEEREEAA உலகோரால் புகழப்படுவது திருஆலவாயான் திருநீறு All the world people glorified the sacred ashes so those ashes are distributed all temples including mathurai temple
05
714 அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு  ARUTHAMA THAAVATHU NEERU AVALAM ARUPPATHU NEERU செல்வமாக இருப்பது துன்பம் போக்குவது The sacred ashes are wealth form appearing in this world and then remove sorrow on our part
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு  VARUTHAM THANIPPATHU NEERU VAANAM ALIPPATHU NEERU மனவருத்தத்தைத் தணிப்பது துறக்க இன்பத்தை அளிப்பது The sacred ashes if you adorn it and then it will remove sorrow in our mind and then ultimately will give upper deevaa world
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு  PORUTHAVAMAAVATHU NEERU PUNNIYAR POOSUM VENNEERU எல்லோருக்கும் பொருத்தமாக இருப்பது புண்ணியரால் பூசப்பெறுவது All types of people can adorn the sacred ashes and good and punniyaa doing persons are adorned adorning the sacred ashes
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. THIRU THAGU MAALIGAI SOOLNTHA THIRU ALAVAAYAAN THIRU NEEREEA அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே In that lovely mansions are filed place is mathurai temple place those sacred ashes are being distributed
06
715 எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு DAYIL ATHU ATTATHU NEERU EARUMAIKKUM YULATHU NEERU திரிபுரங்களை எரிக்கச் செய்தது இம்மை மறுமை இன்பம் தர இருப்பது
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு  PAYILA PADUVATHU NEERU BAAKIYA MAAVATHU NEERU பிறரோடு பழகும் பயன் அளிப்பது செல்வமாக விளங்குவது If you adorn the sacred ashes and then other good people are be friend with you and then and then all the good benefits will come at your disposal and then all the wealth it will give you
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு THUYILAI THADUPPATHU NEERU SUTHAMATHU AAVATHU NEERU  உறக்க நிலையை தடுப்பது தூய்மையை அளிப்பது The sacred ashes will if you adorn it after washing face with water then it will remove our sleeping mentality and then it will give purity in life
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே. AYILAI POLI THARU SOOLATHU AALAVAAYAAN THIRU NEEREEA கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய  திருஆலவாயான் திருநீறு And then lord Siva who has carried sharpened soolam battle force on hand and that form lord Siva appearing in the aalavaai temple at Madurai place whose sacred ashes it is
07
716 இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு  ERAAVANAN MEEAL ATU NEERU EANNA THAGU VATHU NEERU இராவணன் பூசிப்பயன் பெற்றது நல்லவர்களால் எண்ணத்தக்கது The srilanga king named ravana who has adorned the sacred ashes and then got all type of boon in life and then good people all the time thinking the sacred ashes which will remove all types of problems in life
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு  PARAAVANAM AAATHU NEERU PAAVAM ARUPPATHU NEERU பராசக்தி வடிவமானது பாவம் போக்குவது Lords parasakthi form of sacred ashes so it will remove all types sins in  life
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு  THARAA VANA MAAVATHU NEERU THATHUVA MAAVATHU NEERU தத்துவங்களாக இருப்பது மெய்ப்பொருளை உணர்த்துவது The sacred ashes are philosophy form existing in this world (anybody got birth in this world however rich or poor they will not take in this world and then go upper world but all are converted as dust form after burning this dead body) and that true matter is revealed to this world so you must be good person form to be act in this world so that after the body left out in this world the soul will surrender under lord Siva’s feet if your good and bad deeds only in balanced and otherwise we will get repeated birth and the death in this world
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே. ARAA VANANGUM THIRU MEEANI AALAVAAYAAN THIRU NEEREEA பாம்புகள் வளைந்து தவழும் திருமேனியனாகிய திருஆலவாயான் திருநீறு And then on lord Siva body snakes are crawling and then bended form moving and those thiru aalavaai temple place giving the sacred ashes will remove all form of defects in life
08
717 மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு  MAALODU AYAN ARIYAATHA VANNAM YULLATHU NEERU திருமால் பிரம்மர்களால் அறியப்பெறாத தன்மையை உடையது Thirumal and then bharmaa are not known the true benefits driving from the sacred ashes ( mukthi)
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு  MEEAL YURAI THEEVARGAL THANGAL MEIYATHU VEN PODI NEERU And then in the upper world place living deevaas are daily adorning the sacred ashes and the conducting the poojas வானுலகில் வாழும் தேவர்கள் தங்கள் மேனிகளில் பூசிக்கொள்வது
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு  EEALA YUDAM BIDAR THEERKUM EINBAM THARUVATHU NEERU பிறவியாகிய இடரைத் தவிர்த்து நிலையான இன்பம் அளிப்பது If you adorn the sacred ashes daily and then it will remove the repeated birth and death in this world and the ultimately give permanent bliss in life
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே. AALAM ATHU YUNDA MIDATRU EMM AALAVAAYAAN  THIRU NEEREEA நஞ்சுண்ட கண்டனாகிய திருஆலவாயான் திருநீறு And then lord Siva who has consumed the poison form seated in the aalavaai temple place whose sacred ashes will remove bad thinking and  acts on our part
09
718 குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட KUNDIGAI KAIYAR GALOODU SAKKIYAR KOOTAMUM KOODA  குண்டிகை ஏந்திய கையர்களாகிய சமணர்கள் சாக்கியர்களின் The begging bowel carried on the hand those buthaas and samanaas
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு  KANN THIGAIPPIPATHU NEERU KARYTHA EINIYATHU NEERU கண்களைத் திகைக்கச் செய்வது தியானிக்க இனியது Those persons eyes are put in astonishment form sacred ashes and the after adoring the sacred ashes it is good to be seated in the meditation
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு  EANN THISAI PATTA PORULLAAR EEAATHUM THAGAIYATHU NEERU எட்டுத் திசைகளிலும் வாழும் மெய்ப்பொருளுணர்வுடையோரால் ஏத்தப் பெறும் தகைமைப் பாடுஉடையது In the eight direction dwelling those disciples who are realized the true matter and that praising lord Siva and who has adorned sacred ashes and those highly regarded thing in this world is sacred ashes
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே. ANDATHAVAR PANINTHU EEATHUM AALAVAAYAAN THIRU NEEREEA மேல் உலகில் வாழ்வோர் பணிந்து போற்றும் திருஆலவாயான் திருநீறு And then upper world deevaas are summited under lord Siva’s feet and those praising place is aalavaai temple place where the sacred ashes are distributed
10
719 ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் AATRAL ADALVEDAI EEAARUM AALAVAAYAAN THIRU NEETRAI ஆற்றலும் பிறரைக் கொல்லும் வலிமையும் உடைய விடையின் மீது ஏறி வரும் திருஆலவாயான் திருநீறு The mighty powerful bull which has capacity to kill others and on it ascended form of lord Siva those lord dwelling place is thiru aalavaai whose sacred ashes are
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்  POOTRI PUGALI NELAAYUM POOSRAN GAANA SAMBANTHAN போற்றி புகலியில்விளங்கும் பூசுரனாகிய ஞான்சம்பந்தன் Praised by gaanasambanther who has descended in the seergaali place
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்  THEEATRI THEANAN YUDAL YUTRA THEE PINIYAAYANA THEERA சைவத்தின் பெருமையைத் தெளிவித்து பாண்டியன் உடலில் பற்றி தீமை விளைந்த பிணி தீருமாறு Who has propagated the greatness of sacred ashes and saiva religion is allowed to known by pandiya king whose stomach pain to be removed form
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. SAATRIYA PAADAL PATHUM VALLAVAR NALLAVER THAAMEEA சாற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் நல்லவராவார் Ganasambanther who has sang the above ten poems and then those disciples who are repeatedly singing it and that disciples good persons in this world
11


திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: