OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

SEERGALI

ganesheit July 10, 2021

2.75 சீகாழி –211

SEERGALI

SEE EXPLANATION– 137

பண் – காந்தாரம் 
திருச்சிற்றம்பலம்   OM THIRUCHITRAM BALAM

811 விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப் VINNIYANGU MATHIK KANNIYAAN VIRIYUM SADAI  விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன் விரியும் சடையொடு In the space place wandering curved moon adorned on the hair place as flower form and then spread over hair possessed form
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற் PENNIYAM KOL THIRU MEENIYAAN PERUMAAN ANAL  பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன் பெரியோன் அனல்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள் KANN NAYAM KO THIRU NETRIYAAN KALI KAALIYUL  விழியைக் கொண்ட நெற்றியின் ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. MANNANG KOL MARAIYAALAR EEATHUM MALAR PAATHAMEEA உலகம் நலம் பெற மறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர் போன்ற திருவடிகளை உடைய இறைவன் To give benefits to whole world those form bharamins are singing the sacred veethaas and then praying and praising lord Siva’s feet
01
812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்  VALIYA KAALAN YUIR VEETINAAN MADAVALLODUM வலிய காலன் உயிரைப் போக்கியவன் உமையம்மையோடு கூடியிருப்பவன் With those feet the mighty powerful death god emalife is destroyed form and then lord Siva seated with lords parvathi
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்  PALI VERUMBIYATHOOR KAIYINAAN PARA MEETIYAAN பலியேற்கும் கையினை உடையவன் மேலானவன் And then accepting begging food with hands and then highly regarded form
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்  KALIYAI VENRA MARAIYAALAR THAM KALI KAALIYUL வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் And then poverty and other evils are devoided form yaaga fire is conducting by bharamins who are dwelling in seergali place
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. NALIYA VA NTHA VENAI THEERTHU TUGANTHA EAMM NAMBANEEA நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன் Those evils which will give degraded life those bad deeds are removed by lord Siva that reliable person lord Siva
02
813 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்  SUTRALLAA NAL PULITHOOAL ASAITHU AYAN VEN THALAI தோலை இடையிற் சுற்றிப் பிரமனது தலையோட்டில் And then tiger skin adorned encircle form in the waist place and then with the bharmaa skull
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்  THUTRA LAAYA THORU KOLGAIYAAN SUDU NEETRINAAN உண் பலி தேரும் இயல்பினன் திருவெண்ணீரை திருமேனியில் நன்கு பூசியவன் Lord Siva collecting begging food and those mannerism filled form and then sacred ashes are adorned on the whole body place paste form
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்  KATRAL KEEATAL YUDAIYAAR GAL KALI KAALIYUL கல்வி கேள்வி வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் Where good learning and hearing elderly people are living in the seer gaali place
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. MATRU AYANGU THIRAL THOOL EAMM MAINTHAN AVAN ALLANEEA மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லவன் Where lord Siva who has possessed hillock like shoulders those mighty powerful lord Siva is good person
03
814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை  PALL AYANGU THALAI EEANTHINAAN PADU KAAN EADAI பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன் பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில் The teeth filledform of human skull which is carried on the hand place and then so many people are after death  burnt down in the burial ground
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்  MALL AYANGU THIRAL THOOAL AARA NADAMAADIYUM மற்போர் செய்யவல்ல திரண்ட தோள்களைஉடைய நடனம் ஆடுபவன் Where lord Siva who is to do boxing with others and those big shoulders are possessed lord Siva who is dancing in the burial ground place hands are swaying form
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்  KALL AYANGU THERAI SOOL NEELKALI KAALIYUL கற்களையும் அசையச் செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் The rocks are excavated form of sea waves those sea covered place is aeer gaali temple place
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. THOL AYANGU PUGAL PEENA NINRA SUDAR VANAANEEA பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச் சேர்தற்கு உரிய ஒளிவண்ணனாகிய சிவபிரான் Where lord Siva good old glory filled form of lord Siva appearing in light filled form
04
815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்  THUU NAYANG KOL THIRUMANIYIL PODI POOSIPOOAI தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன் And then lord Siva in his pure body place sacred ashes are adorned form
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக் NAA NAYAM KOL MARAIYOOTHI MAATHORU BAAGAMAA நா நயம் பெற வேதங்களை அருளியவன் மாதொரு பாகனாய் Lord Siva with his tongue excellent musical notes are filled form veethaas are singing form and then blessed form gave to this world and then seated lords Parvathi in his left part of his body
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்  KAA NAYAM KOL PUNAL VAASA MAAR KALI KAALIYUL காடுகளில் படிந்து வரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் And then forest place dipped form flowing fragrance filled the water in the seergaali place
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. THEEN AYAM KOL MUDIYAAN INTHU AADIYA SELVANEEA தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபெருமான் And then honey fragrance emanated the sacred hair place lord Siva daily taking bath with five types of cow products and that teen age appearance form of lord Siva
05
816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே  SULI EALANGUM PUNAL GANGAIYAAL SADAI YAAGAVEEA சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ள Those high currents are filled form moving river Ganges is carried in the head hair place
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன் MOLI EALANGUM MADA MANGAI BAAGAM YUGANTHAVAN  தன் மேலும் இனிய மொழியினனாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன் Besides lords Parvathi is taken left part of his body those parvathi is all the time talking soft form and then got happy for those twin appearance in this world
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்  KALI EALANGUM KADAL SOOLUM THAN KAALI KAALIYUL உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் The salt fields are filled form sea covered cool seergaali temple place
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. PALI EALANGUM THUYAR ONRILLAAP PARAMEETIYEEA பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான் Others are not cursing form of sorrows are not available that highly regarded lord Siva
06
817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ MUDI EALANGUM YUAR SINTHAIYAAN MUNIVAR THOLA  முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ In the hair place thinking saints are praying form
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்  ADIEALANGUM KALALAAR ARRKAVEEA ANAL EEANTHI YUM நன்றாக அணியப்பட்டு பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி In good way and then in the leg place adorned anklets are raising sound and then fire is carried on the hand place
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்  KADI EALANGUM POLIL SOOLNTHA THANN KAALIYUL ஆடும் இறைவன் மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் And those form dancing lord Siva in the plantation fragrance filled place is seergaali temple place
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. KODI EALANGUM EADAIYAALODUM KUDI KONDATHEEA கொடி போலும் இடையினளாகிய பார்வதியோடு குடி கொண்டுள்ளான் The lean tender creeper plant form of waist possessed lords parvathi with her lord Siva dwelling
07
818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி VALL ARAKKAN VARAI PEERHA VANTHAVAN THOOL MUDI  கயிலை மலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள்முடி ஆகியவற்றை The kaiyila hills are tried to excavate in those form approaching ravana whose shoulders and heads are
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்  KALL ARAKKI EVV VERAL  VAATINAAN KALI KAALIYUL அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான் Trapped under the hills and then destroyed his mighty powers and those form of lord Siva
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே  NALL YORUKKIYA THOOR SINTHAIYAAR MALAR THOOVAVEEA ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர் தூவிப் And then those disciples who are good oneness of mind possessed form flowers are sprayed under the feet and then
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. THOL ERUKKU MARAI EEATHUM YUGANTHU YUDAN VAALUMEEA போற்றவும் தொன்மையான இருக்கு வேத மொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான் Praying and praising form and then good old rick veethaas are singing form lord Siva seated with lords parvathi
08
819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்  MARUYUU NAAN MARAIYOONUM MAA MANI VANNA NUM பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன் நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய With oneness form four veethaas are daily chanting bharma and the dark color ruby diamond form appearing thirumal and those two persons are
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்  EARUVAR KOODI EASAINTHU EEATHA VEE EARRIYAAN THAN YOOR இருவரும் கூடி ஏத்த எரிஉரு உருவாய் நின்ற சிவபிரானது ஊர் Clubbed form praising lord Siva alone prime god in this world and then lord Siva appeared before them in fire glow form whose dwelling place this is
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை VEERUVA NINRA THERAI YOOTHAM VAAR VIYAN MUTHUU AVAI  அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் நீரையும் பெரிய முத்துக்கள் சங்குகள் சேரும் To emanate fear in the mind place and those sea waves are flooded form bringing big pearls and conches
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. KARU VAIYAAR VAYAL SANGU SEEAR KALI KAALIYEEA கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும் And then place them in the dark color hay filled paddy fields are covered place is seer kaali
09
820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்  NANRI VONRUM YUNARAATHA VANN SAMAN SAAKIYAR நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் Goodness is not even known in grain amount those mighty powerful samanaas and buthaas
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்  ANRIYANGU  AVAR SONNA SOL AVAI KOL GILAAN தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன் Who are all the time contradictory way form talking those wards are disregarded by lord Siva
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்  KANRU MEETIYUM KAANAL VAAL KALI KAALIYUL கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலின் வாழும் காழிப்பதியுள் In the seergaali place calf and buffaloes are living in the forest place
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. VENRI SEER VEYAN KOIL KONDA VEDAI YAALANEEA வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் Which is surrounded form the big temple considered as lord Siva’s dwelling place and the bull chariots possessed lord Siva
10
821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்  KANNU MOONRUM YUDAI AATHI VAAL KALI KAALIYUL மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் The three eyes are possessed prime form of lord Siva who are living in the seergaali temple place
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல் ANNALANTH THAN ARUL PEEANI GAANA SAMBANTHAN SOL  அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய Those form of lord Siva’s cool grace is requested form of gaana sambanther who has sang the above
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்  VANNA MOONRUM THAMILIL NERIN THISAI PAADU VAAR இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் Songs with are singing with proper musical notes are filled form
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. VINNUM MANNUM VERI GINRA THIL PUGALLAALAREEA விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழானார் ஆவர் And those disciples are spread over glory filled in this besides upper land
11


திருச்சிற்றம்பலம்  OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 10, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: