OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

30 திருவாரூர் – திருத்தாண்டகம்

THIRU VAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 24 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

300 எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் EMM BANTHA VAL VENNAI NOOAI THEER THITTAN KAAN Lord Siva which has been affected by me in cause and effects form of bad deeds are removed சிவபெருமான் என்னைப் பற்றி உள்ள கொடிய வினையாகிய நோயைத் தீர்த்தவர் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண் EEAAL KADALLUMMEEAL YULAGU MAAYI MAAN KAAN And then lord Siva appearing seven seas and seven hills form in this world ஏழ்கடலும் ஏழ் உலகமும் ஆனவர்
வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண் VAM BUNTHU KONRAIYAM THAARMAARAI YAAN  KAAN And then fragrance filled konai flower garland are adorned form appearing நறுமணம் கமழும் கொன்றை மாலையன் வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட VALAR MATHI SEEAR KANNIYAAN KAAN VAANOOR VEEAANDA And then curved moon adorned form head hair crown form tied lord Siva and then deevaas are requesting form பிறையோடு கூடிய முடிமாலையை உடையவன் தேவர்கள்வேண்ட
அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண் AMM PONTHAALMOOEAYILUM ERI SEITHAANKAAN With single arrow three castles are destroyed by lord Siva ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன் அனலாடி யானஞ்சு மாடி னான்காண் ANAL AADI AAN ANJUM AADI NAAN KAAN And then fire place all the time dancing form and then with five types of cow products lord Siva daily taking bath தீயில் கூத்தாடுபவன் பஞ்சகவ்விய அபிசேகம் ஏற்றுக் கொள்பவன்
செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரிற் SEM PON SEI MANI MAADATHUTHIRU VAAROORIL Ad then pure cold studded  form constructed mansions ate filled place is thiru vaaroor செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATHTHAANATHUEM SELVAN THAANEEA In that appearance possessed form lord Siva seated here rich form திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வர் ஆவர்
6.30.1
301 அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்  ANGULAAM ARAIYINAANKAAN ADIYAARKU EANRUM Lord Siva adorned bone garland in the waist place and then to his disciples சிவபெருமான் எலும்புகளை இடையில் அணிந்தவன் அடியவர்களுக்கு எப்பொழுதும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் AAR AMUTHAAI ANNIKUM IYAARAAN KAAN The rare nectar form appearing and then giving taste to them in that way lord Siva dwelling in the thiru vaiyaaru temple place கிட்டுதற்கு அரிய அமுதமாம் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன்
கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலை KONKULLAAM PEELI YODU KONRAI MAALAI Lord Siva adorned the coco bird feathers and then konrai flower garland கொக்கிற்கு கொன்றை மாலை குளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் KULIR MATHIYUM KOOR ARAYUM NEERUM SENNI And then cool stooped moon and then wild poison filled snakes and then river Ganges குளிர்ந்த பிறை கொடுமை மிக்க பாம்பு என்பன கங்கையுடன் தலையில்
தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் சொல்லுந்  THKKULAAM SADAIYINAN KAAN THONDER SOLUM All are clubbed form adorned in the hair place and the disciples are following form ஒரு சேரத் தங்கி இருக்கும் சடையினன் தொண்டர்கள் செல்லும் தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்துந் THOO NERI KAANVAANAVERGALTHUTHI SEITHU EEAATHA the pure dharma form of way is showed and then upper world deevaas praying form தூய வழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு
திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரிற் THIKK ELLAAM NERAINTHA PUGAL THIRU VAAROORIL In that way all the direction glory filled place is thiru vaaroor எல்லா திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூர் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THAANATHU EM SELVAN THAANEEA Where thiru moolatam temple place dwelling and then blessing all திருமூலத்தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்டி விளங்குகின்றார்
6.30.2
302 நீரேறு சடைமுடியெந் நிமலன் றான்காண் NEEAR EEAARU SADAI MDI EMM NIMALAN THAAN KAAN The holly river Ganges adorned in the hair place those pure form of lord Siva சடை முடியில் கங்கையைத் தரித்த தூயவன் நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தான்காண் NETRI MEEAL VOTRAI KANNERAI VITHAAN KAAN And then in the fore head place one more eye possessed form நெற்றியில் ஒரு கண் உடையவர்
வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்  VAAR EEAARU VANA MULAIYAAL KAGATHANN KAAM And then bra adorned lords parvathi is given left part of his body கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன் வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண் VALAR MATHI SEEAR SADAIYAAN KAAN MAATHEEAVAN KAAN The moon adorned in the hair place prime god is lord Siva சந்திரனைச் சடையில் வைத்த மகாதேவன்
காரேறு முகிலனைய கண்டத் தான்காண் KAAR EERU MUGIL ANAIYA GANDATHAAN KAAN And then dark color clouds like blue color throat possessed lord Siva கார்முகில் போன்ற நீலகண்டன் கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண் KAL AALIN KEEAL ARANGAL SOLLINAAN KAAN And then lord Siva seated under the papal tree and then preached the fourveethaas inner meaning to four sangaathi and then taught it by meditation transpired epithet form கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவர்
சீரேறு மணிமாடத் திருவா ரூரிற் SEER EERU MANI MAADTH THIRU VAAROORIL And then specialty filled the lovely mansions are covered place is thiru vaaroor சிறப்புமிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THAANATHU EMM SELVA NAAREEA In the thiru moolatam temple place lord Siva seated in rich form givingbenefits to all திருமூலத்தானத்தில் எம்செல்வனாக அப்பெருமானை உறைகின்றான்
6.30.3
303 கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண் KAAR EEAARU KALITRU YURIVAI POOR VAIYAAN KAAN In the forest place wandering the elephant skin is adorned as upper dress form காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன் கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண் KAR PAGAM KAAN KALANAI ANRU YUTHAI SEITHAAN KAAN  Ever permanent form of death god ema is kicked and then killed him கற்பகம் போன்ற கொடையாளி கூற்றுவனை ஒரு காலத்து உதைத்தவன்
ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண் YOON EEARU MUDAI THALAIYILPALI KOLVAAN KAAN And then flesh stinking skull place accepting begging food புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவர் உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண் YUTHAMAN KAAN VOTI YOOR MEEAVI NAAN KAAN In that pure form of lord Siva seated in the thiru votriyoor temple place உத்தமனாக விளங்குபவர் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவர்
ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண் AAN EEARU VONRU ATHU EEARUM ANNAL THAAN KAAN Lord Siva who has descended in the bull back and then travelling everywhere  இடப வாகனத்தில் எழுந்தருள்பவர் ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண் AATHITHAN PAL ERUTHA AATHI THAANN KAAN Sun god who has taken part in the thakkan yaaga fire whose teeth are smashed those good old prime god is lord Siva தக்கனது யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பல்லை உதிர்த்தவர் ஆதிமூர்த்தி ஆகியவர்
தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரிற் THEEN EEAARU MALAE SOOALAI THIRU VAAROORIL Those prime god, the honey filled plantations are covered place is thiru vaaroor அப்பரமன் தேன் மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THAANATHU EMM SELVAN THAANEEA Temple named moolatam place willingly dwelling those rich person is lord Siva திருமூலட்டானத்து உறையும் எம்செல்வர் ஆவர்
6.30.4
304 பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண் PERAPPOODU ERAPPU ONRUM ILLAATHAAN KAAN Lord Siva who does not have possessed birth and death in this world சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண் PENN YURU VOODU AAN YURUVAM AAYI NAAN KAAN And then half part male and then another half part female form appearing பெண் உருவமும் ஆண் உருவமும் ஆகுபவர்
மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண் MARAPPADUM ENN SINTHAI MARUL NEEKINAAN KAAN In my mind place faintings are removed form அகப்பட்ட என் மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் வானவரு மறியாத நெறிதந் தான்காண் VAANAVARUM ARIYAATHA NERI THANTHAAN KAAN And then not even deevaas are known those mukthi way attaining path showed by lord Siva தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவர்
நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல  NARAM PADU POO MALAR THOOBAM THEEBAM NALLA Daily honey filled flowers who are about to bloom form those flower buds and then perfumes ghee lamp sandal paste தேன் பொருந்திய பூக்கும் நிலையில் உள்ள மலர்கள் தூபம், தீபம் சந்தனம் நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் NARUM SAANTHAM KONDU EEATHI NAALUM VAANOOR With those poojaa articles are collected form of deevaas முதலான பூசைப் பொருள்களால் நாள்தோறும் தேவர்கள்
சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற் SERAP POODU POOSIKKUM THIRU VAAROORIL Those special poojaas are conducted in the thiru vaaroor temple place சிறப்பாக பூசிக்கும் திருவாரூரில் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THAANATHU EMM SELVAN THAANEEA Lord Siva in moolatam place dwelling in rich form திகழும் திருமூலட்டானத்தில் மேவும் எம்செல்வன் ஆவார்
6.30.5
305 சங்கரன்காண் சக்கரமாற் கருள்செய் தான்காண் SANG KARAN KAAN SAKKARM MAALUKKU ARUL SEITHAAN KAAN Lord Siva gave happiness to all living beings and then sub lord Thirumal is given circle battle force by lord Siva சிவபெருமான் உயிர்களுக்கு இன்பத்தை விளைவிப்பவர் திருமாலுக்குச் சக்கரப் படையை அருளியவன் தருணேந்து சேகரன்காண் தலைவன் றான்காண் THARUNN EEAANTHU SEEGARAN KAAN THALIVAN THAAN KAAN The curved moon is adorned in the hair place பிறையைச் சூடிய தலைவன்
அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றை ANG KAMALTHU AYAN SERANGAL EINTHIL ONRAI  And then bharama seated in the lotus flower place with five heads are possessed form and then from it one head தாமரையில் உள்ள பிரம்மன் ஐந்து தலைகளுள் ஒன்றை அறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண் ARUTHAVAN KAAN ANI POLIL SOOAL EIYAATRAN KAAN Cut off by lord Siva and then in that way lord Siva dwelling in the thiru vaiyaaru temple place அறுத்தவன் அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன்
எங்கள்பெரு மான்காணென் னிடர்கள் போக  EM PERUMAAN KAAN EANN EDARGAL POOGA Who is my leader and then our sorrows are removing form put his blessings on us and then upper world deevaas are praying and then praising எங்கள் தலைவன் எங்கள் துன்பங்கள் நீங்குமாறு அருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ் ARUL SEIYUM ERAIVAN KAAN EMAIYOOR EEAATHUM To who lord Siva put his grace on them அருள் செய்யும் இறைவன் தேவர்கள் துதிக்கும்
செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரிற் SENG KAMALA VAYAL PUDAI SOOL THIRU VAAROORIL And then lotus flowers are thick weeds form growing those water bodies are filled place is thiru vaaroor தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் திருவாரூரில் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THAANATHU EMM SELVA NAAREEA Thiru moolatam temple place rich form seating and then blessing all திருமூலஸ்தானத்தில் உள்ள எம் செல்வன்
6.30.6
306 நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண் NANRU ARULI THEE THU AGATRUMNAM BIRAAN KAAN Lord Siva who is goodness blessing form and then vices are removing form of lord Siva is my leader நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன் நான்மறையோ டாறங்க மாயி னான்காண் NAAN MARAIYOODU AARU ANGAM AAYINAAN KAAN And then four veethaas and six angaas form appearing in this world நான்கு மறைகளுடன் ஆறு அங்கம் ஆயினவர்
மின்றிகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண் MIN THIGALLUM JOOTHIYAAN KAAN AATHI THAAN KAAN And then lightning form those prime god form appearing in this world மின்னல் போன்ற ஒளியை உடைய ஆதியாகவும் விளங்குபவர் வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண் VEL EERU NINRU YULLAYU KODIYINAAN KAAN And then bull is used as vehicle and then flag emblem formcarrying in his hands இடபத்தை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவர்
துன்றுபொழிற் கச்சியே கம்பன் றான்காண் THUNRU POLIL KACHI EEAGAMBAN THAAN KAAN And then plantations are covered place is thiru kachi egambam பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த SOOTRUTHURAI YAAN KAANSOOALAI SOOLNTHA And then thiru chotruth thurai temple place lord Siva dwelling சோற்றுத்துறையிலும் உறைபவர்
தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரிற் THENRALAAR MANAM KAMALLUM THIRU VAAROORIL And then breezes are crawling those plantations are covered fragrance filled place is thiru vaaroor தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணம் கமழும் திருவாரூர் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLAT THAANATHU EMM SELVA N THAANEEA Those appearance possessed form lord Siva seated in the thiru moolatam temple place திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன்
6.30.7
307 பொன்னலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண் PON ALANTHA NARUM KONRAI SADAIYINAAN KAAN The golden color konrai flower adorned on the head place பொன் நிறம் கொண்ட கொன்றை சூடிய சடையினர் புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண் PUGALOORUM POO VANAMUM PORUNTHI NAAN KAAN And then thiru pugaloor temple place and thiru povanam place dwelling lord Siva புகலூரிலும் திருப்பூவணத்திலும் உறைபவன்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண் MINN NALATHA NUN IDAIYAAL BAAGATHAAN KAAN The lighting form of waist possessed lords paravathi is given left part of body மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதி பாகன் வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண் VEETIYAN KAAN VENN PURI NOOAL MAARBINAAN KAAN And vethaa chanting bharamin form and white thread adorned in the bosom place வேதியன் பூணூல் அணிந்த மார்பினன்
கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண் KONN NALATHA MOOELAI VEEAL EEANTHI NAAN KAAN And then enemies are got afraid of and disciples are given protection those three leaves soolam battle force carried in the hand place பகைவருக்கு அச்சமும் அடியவருக்கு நன்மையும் தருகின்ற முத்தலை சூலத்தை ஏந்தியவன் கோலமா நீறணிந்த மேனி யான்காண் KOOAMAA NEER ANINTHA MEEANIYINAAN KAAN And then sacred ashes are adorned all over the body place lovely form திரு நீற்றை அழகாக அணிந்த திருமேனியினன்
செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரிற் SENTH NALATHA VAYAL PUDA SOOL THIRU VAAROORIL The best fertile paddy fields are covered place is thiru vaaroor சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLATH THU EMM SELVA NAAREEA Where moolatam temple place lord Siva dwelling திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வர் ஆவர்
6.30.8
308 விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்  VINDAVER THAM PURA MOONRUM ERI SEI THAAN KAAN The opponent three castles are fired form பகை அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர் வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண் VELAI VEDA MUNN ERUNDA GANDATHAAN KAAN And then sea place emanated poison consumed form dark color throat possessed lord Siva கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன்
மண்டலத்தி லொளிவளர விளங்கி னான்காண் MANDALATHIL OLI VALARA VELANGI NAAN KAAN And then in the space place sun and moon light giving form blessed it வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளி வீசுமாறு அருளியவர் வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண் VAAI MOOR MARAI KAADUM MARUVI NAAN KAAN And then thiru vaai moor place and thiru marai kaadu temple place lord Siva dwelling திருவாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்  PNDARIGAK  KANNANUM POOVIN MEEALAI And ten lotus flower like red color eyes are possessed thirumal and then lotus flower placed dwelling bharma செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும் தாமரை மலரில் தங்கும் புத்தேளுங் காண்பரிய புராணன் றான்காண் PUT THEELUM KAAN PARIYA PURAANAN THAAN KAAN Those persons are not seen lord Siva that good old prime god பிரம்மனும் காண முடியாத பழையவன்
தெண்டிரைநீர் வயற்புடைசூழ் திருவா ரூரிற் THRN THERAI SOOL THIRU VAAROORIL And then clear waves are emanating and then water bodies are filled place is thiru vaaroor தெளிந்த அலைகளை உடைய நீர் வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLAT TAANATHU EMM ERAIVA NAAREEA Where lord Siva thiru moolattam temple place dwelling திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வர் ஆவர்
6.30.9
309 செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண் SERU VALARUM SENG KANN MAAL EEATIRI NAAN KAAN To wage war those highly regarded thirumal himself converted as bull form போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன் தென்னானைக் காவன்காண் தீயில் வீழ THENNAANAI KAAVAAN KAAN THEEYIL VEELA And then lovely thiru vaanai kaa place dwelling lord Siva அழகிய திருவானைக்காவில் விளங்குபவர்
மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண் MARU VALAR THAM PURA MOONRUM ERI SEITHAAN KAAN And then three castle asuraas a opposed lord Siva andthen waged war in all the places those assuraas three castles destroyed by fire arrow பகைமை கொண்டு போர் செய்த முப்புர அசுரர்களின் கோட்டைகளை எரித்தவன் வஞ்சகர்பா லணுகாத மைந்தன் றான்காண் VANGER PAAL ANUGAATHA MAINTHAN THAAN KAAN And then cunningness filled persons mind place lord Siva will not approach them வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவர்
அருவரையை எடுத்தவன்றன் சிரங்கள் பத்தும் ARU VARAIYAI EDUTHAVN THAN SERANGAL PATHUM And then once ravana who has tried to excavate kailai hills whose ten heads and twenty shoulders are கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஐந்நான்கு தோளுநெரிந் தலற வன்று INTHU  NAANGU THOOLUM NERINTH ALARA ANRU All are smashed form one upon a time நெரிக்கப்பட்ட அவன் அலறுமாறு முன் ஒரு கால்
திருவிரலா லடர்த்தவன்காண் திருவா ரூரிற் THIRU VERALLAAL ADER THAAN KAAN THIRU VAAROORIL Lord Siva put his leg finger on the kaiyilai hills place திருவிரலால் வருத்தியவன் திருவாரூர்த் றிருமூலத் தானத்தெஞ் செல்வன் றானே. THIRU MOOLAT TAANATHU EMM SELVA NAAREEA And those appearance possessed form lord Siva seated in thiru moolatam temple place திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வர்
6.30.10


திருச்சிற்றம்பலம்- -OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: