OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VAAROOR

ganesheit July 3, 2021

29 திருவாரூர் – திருத்தாண்டகம் 

THIRU VAAROOR

தல விளக்கம் : திருப்பதிகம் எண் 24 காண்க.
திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAMBALAM

290 திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் THIRU MANIYAI THITHIKKUM THEEANAI PAALAI The wealth giving sinthaamani form and then tastier form of honey and milk செல்வம் தரும் சிந்தாமணியாய் இனிக்கும் தேன் பால் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற் THEENG KARUBIN INN SUVAIYAI THELINTHA THEEARAL AND THEN LORD appearing sugar cane juice and nectar form கருப்பஞ்சாறு தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த
குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை  GURU MANIYAI KULAL MONTHAI THAALAM VEENAI And then clear gaana knowledge giving form of teacher gure form and then all the time dancing according to the musical instruments named flute  monthai thaalam veenaa தெளிவு தரும் குருமணியாகவும் ஆசிரியர் விளங்குபவர் குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் KOKARAIYIN SACARIYIN PAANI YAANAI Kokarai sachari and then according to tune lord Siva dancing கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்ப கூத்து நிகழ்த்துவானை பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப் PARU MANIYAI PAVALATHAI PSUM PON MUTHAI And then rare form of ruby diamond coral pearls kelichiraai gold form appearing lord Siva எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய் பருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் PARU PATHATHIL ARUM KALATHAIPAAVAM THEERKUM And those appearance possessed form lord Siva seated in the sri sylamtemple place as rare ruby diamond form ஸ்ரீசைலத்தில் விலைமிக்க அணிகலனாய் பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய்
அருமணியை ஆரூரி லம்மான் றன்னை ARU MANYAI AAROORIL AMAAN THANNAI And then seated in the thiru vaaroor temple place உள்ள ஆரூர்ப் பெருமானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAA ADI NAAYEEAN AYARNTHA VAAREEA Hither to I am not known lord Sivajust dog form forgotten him what wild act it is இது காறும் அறியாது நாய் போன்று அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது
6.29.1
291 பொன்னேபோற் றிருமேனி உடையான் றன்னைப் ONEEA POL THIRU MEEANI YUDAIYAAN THANNAI Gold color body possessed lord Siva பொன்னார் மேனியனை பொங்குவெண் ணூலானைப் புனிதன் றன்னை PONGU VENN NOOLAANAI PUNITHAN THANAI And then holly form sacred thread adorned in the bosom place வெண்ணூல் அணிந்த புனிதனாய்
மின்னானை மின்னிடையாள் பாகன் றன்னை MINAANAI MIN EDAIYAAL BAAGAM THANAI The light glittering form of lord Siva and then lightning like waist possessed lords parvathi ஒளி வீசுவானை மின்னலை ஒத்த இடையினை உடைய பார்வதி பாகனை வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் றன்னைத் VEELATHIN YURI VERUMBI POORTHAAN THANAI The elephant skin willingly adorned as upper dress form யானைத்தோல் போர்வையானை
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத் THANAANAI THAAN VOPPAAR ILLAATHAANAI All are possessed under his control and then there is no comparable person available in this world யாவும் தன் வயம் ஆனவர் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை தத்துவனை உத்தமனைத் தழல்போல் மேனி THATHUVANI YUTHA MANAI THALAL POOAL MEEANI The true benefits are given lord Siva who is highly regarded form appearing in this world and then fire flames form of red color body possessed lord Siva மெய்ப்பயன் தருபவனை மேம்பட்டவனை நெருப்பு போன்ற செ ந் நிற மேனியனை
அன்னானை ஆரூரி லம்மான் றன்னை ANNAANAI AAROORIL AMMAAN THANAAI In that way those who are seated in meditation and that persons internal eye place appearing form seated lord Siva in aaroor temple place இவ்வாறு எல்லாம் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAA THU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA Hither to I have not known lord Siva and what type of bad fellow I am இதுகாறும் அறியாது அடி நாயேன் அயர்ந்தவாறே
6.29.2
292 ஏற்றானை ஏழுலகு மானான் றன்னை EEATRAANAI EEAL YULAGUM AANAAN THANAI lord Siva possessed seven worlds under his control and then bull vehicle possessed to travel everywhere சிவபெருமான் இடப வாகனத்தை உடையவன் ஏழ் உலகும் ஏழ்கடலு மேழ்மலையு மானான் றன்னைக் EEAL KADALLUM EEAL MALAIYUM AANAAN THANNAI And then seven seas and seven mountains form spread over everywhere ஏழ்கடலும் ஏழ் மலையும் ஆகிப் பரந்திருப்பவனாய்க்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் றன்னைக் KOOTRAANAI KOOTRAM YUTHAI THAAN THANAI   And then lord Siva converted himself as death god form and the kicked and killed ema கூற்றுவனாய் மாறி எமனை உதைத்து அழித்தவனாய் கொடுமழுவாள் கொண்டதோர் கையான் றன்னைக் KODU MALU VAAL KONDA THOOR KAIYAAN THANNAI The wild malu battle force carried in the hand place கொடிய மழப்படை ஏந்திய கையனாய்
காற்றானைத் தீயானை நீரு மாகிக் KAAT RAANAI THEEYAANAI NEERUM AAGI And then lord Siva appearing in the form of wind fire water காற்றும் தீயும் நீருமாகி கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள KADI KAMALLUMPUNN SADAI MEEAL GANGAI VELLA And then fragrance filled red color hair place Ganges are adorned form  நறுமணம் கமழும் செஞ்சடை மேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள
ஆற்றானை ஆரூரி லம்மான் றன்னை AATRAANAI AAROORIL AMMAAN THANAI And then arroor temple place dwelling father and mother form ஆரூரில் உள்ள அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADIYEEAN AYARNTHA VAAREEA Hither to not known form got tired in this world அறியாது அடி நாயேன் அயர்ந்தவாறே
6.29.3
293 முந்திய வல்வினைகள் தீர்ப்பான் றன்னை MUNTHIYA VAL VENNAI THEER PAAN THANNAI In the previous birth did bad deeds which are removed by lord Siva முற்பிறப்பில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய் மூவாத மேனிமுக் கண்ணி னானைச் MOOVAATHA MEENI MUKK KANNINAANAI Lord Siva does not possessing aging body and then possessed three eyes மூப்பு அடையாத திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய் சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச் SANTHIRANUM VENG KATIRUM AAYI NAANAI And then moon and sun form functioning in this world சந்திரனும் சூரியனும் ஆகியவனாய் சங்கரனைச் சங்கக் குழையான் றன்னை SANGARANAI SANGAK KULAIYAAN THANNAI And then doing good to all and then conch place made ornament adorned in the ear place எல்லாருக்கும் நன்மை செய்பவனாய் சங்கினால் ஆகிய வெண்மையான காதணியை உடையவனாய்
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை MANTHIRAMUN MARAI PORULLUM AANAAN THANNAI And then manthraa form and then veethaa inner meaning form appearing in this world மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையு மிம்மையு மானான் றன்னை MARU MAIYUM IMMAIYUM AANAAN THANNAI And then lord Siva is this life and then heavenly life giving form மறுமையும் இம்மையுமாய்
அந்திரனை ஆரூரி லம்மான் றன்னை ANNTHIRANAI AAROORIL AMMAAN THANNAI And then lovely form seated thiru vaaroor pace father and mother form அழகு நிலை பெற்றிருக்கும் ஆரூரில் உள்ள அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA I am not known lord Siva and then go in to fast asleep அப்பெருமானை அடியேன் அறியாது மறந்திருந்தேனே
6.29.4
294 பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப் PERA NEERIYAAI PEEDAAGI PINGAGANUUMAAI All the living beings are germinated form and greatness filled form and then hair style decorated form பிறக்கும் வழிகளாகவும் பெருமையாகவும் தலைக்கோலம் அணிந்தவனாகவும் பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே PITHA NAAI PATHER MANATHU YULLEEA And then lunatic form appearing and then in the disciples mind place intimate relative form பித்தனாகவும் அடியவர்கள் உள்ளத்தில் உறவு தரும்
உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில் YURA NERIYAAI VOOMA MAAI EEMAKKKAATIL And then yaagaa fire form and then in the burning burial ground place வழியாகவும் வேள்வியாகவும் அமைந்து சுடுகாட்டில் உள்ள ஓரிபல விடநட்ட மாடி னானைத் ORI PAALA VEDA NATTAM AADI NAANAI And then foxes are running form dancing in the burning pyre place நரிகள் ஓடக் கூத்தாடுபவனாய்த்
துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகி THURA NERIYAAI THUUBA MAAITHOTRA MAAGI And then saintly appearance possessed form and fragrance filled fumes form appearing துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப் நாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற NATTRA MAAI NAN MALAR MEEAL YURAIYAA NINRA And then flower place emanating fragrance form all things are created in this world and then fragrance filled lotus flower place seated பூவின் நறுமணம் போல எப்பொருளுக்கும் தோற்றமாகவும் விளங்குபவர் அப்பெருமான் நறுமணம் கமழும் தாமரை போன்ற பீடத்தில் வீற்றிருக்கும்
அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை ARA NERIYAI AAROORIL AMMAAN THANNAI Those lovely appearance possessed lord Siva seated in the thiru vaaroor temple place அன்புத்தலைவர் ஆவார் திருவாரூரின் அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA Lord Siva forgotten form hitherto dwelling here அவரை அறியாது அடியேன் மறந்தவனாய் இருந்தேனே
6.29.5
295 பழகிய வல்வினைகள் பாற்று வானைப் PALAGIYA VAL VENAIYAI PATRU VAANAI And then habitual form attached the coming bad deeds are destroyed form பழக்கத்தில் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய் பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்குங் PASU PATHIYAI PAAVAGANAI PAAVAM THEER KUM And then leader to all souls and then sins are alleviating form ஆன்மாக்களுக்குத் தலைவனாய் பாவத்தைத் தீர்க்கும் அழகர்
குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக் KULAGANAI KOOAL ARAVAM ONRU AATU VAANAI Those handsome snakes are carried in the hand place and then made it dancing நாகத்தைக் கையில் ஏந்தி ஆட்டுபவர் கொடுகொட்டி கொண்டதோர் கையான் றன்னை KODU KOTTI KONDA THOOR THOOR KAIYAAN THANNAI   And then kodu kotti instrument carried in the hand place கொடு கொட்டி என்னும் வாத்தியக் கருவியைக் கையில் கொண்டவன்
விழவனை வீரட்ட மேவி னானை VELA VANAI VEERATA MEEAVI NAANAI And then all the time festivals are carried out form lord Siva seated in the veeratam temple place திருவிழாக்களை உடையவன் வீரட்டத் தலங்களில் மேவியவன் விண்ணவர்க ளேத்தி விரும்பு வானை VINNAVERGAL EEAATHI VERUMBU VAANAI And then deevaas are willingly praying and then parsing lord Siva’s feet தேவர்களால் விரும்பி ஏத்தப்படுபவன்
அழகனை ஆரூரி லம்மான் றன்னை ALAGANAI AAROORIL AMMAAN THANNAI And then handsome form appearing lovely leader lord Siva my parent form ஆரூரில் மேவும் அன்புத் தலைவராகிய அப்பரமனை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAAN AYARNTHA VAREEA I am forgotten form hitherto dwelling in this world அடியேன் அறியாதவனாய் மறந்து இருந்தேனே
6.29.6
296 சூளா மணிசேர் முடியான் றன்னைச் SOOLA MANI SEEAR MUDIYAAN THANNAI Lord Siva who has adorned soolaamani ornament in the head place சிவபெருமான் சூளாமணியை முடியின் மேல் தரித்துள்ளார் சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக் SUNNA VENEERU ANINTHA JOOTHI YAANAI And then sacred ashes are adorned all over the body place திருவெண்ணீறு பூசி விளங்குபவர்
கோள்வா யரவ மசைத்தான் றன்னைக் KOOAL VAAI ARAVAM ASAINTHAAN THANNAI And then wild snake tied in the waist place as belt form கொடிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவனாய் கொல்புலித்தோ லாடைக் குழகன் றன்னை KOL PULI THOOAL AADAI KULAGAN THANNAI And then all the time killing instinct filled tiger skin adorned as dress form and the appearing young chap form கொல்லும் தன்மை உள்ள புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய் நாள்வாயும் பத்தர் மனத்து ளானை NAAL YAAYUM PATHER ANATHULLAANAI And then all the time dwelling in the disciples meditation mind place and then liking form எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவராய் நம்பனை நக்கனை முக்க ணானை NAMBANAI NAKKANAI MUKK KANA NAANAI And those reliable form of lord Siva who is appearing in necked form and then appearing three eyes are possessed form நம்பக மானவனை ஆடை அற்றவனாய் முக்கண்ணனாய்
ஆள்வானை ஆரூரி லம்மான் றன்னை AAL VAANAI AAROORIL AMMAAN THANAI And then all are ruling form in the arroor temple place seated parent form எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA Who is hitherto not known form forgotten him அடியேன் அறியாதவனாகி மறந்து இருந்தேன்
6.29.7
297 முத்தினை மணிதன்னை மாணிக் கத்தை MUTHINAI MANI THANNAI MAANIKATHAI lord Siva is glittering in the form of pearls ruby diamonds and other diamonds form முத்து மணி மாணிக்கம் ஆகி ஒளிர்பவர் மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக் MOOVAATHA KARPAGATHIN KOLUNTHU THANNAI And then not get old age form and then appearing karpaga tree tender leaves form என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து ஆகுபவர்
கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்து  KOTHINAI VAYIRATHAIKOL EEAAR YOORNTHU And then cluster form ruby diamond garland adorned form and then bull back ascended form travelling everywhere வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையின் மீது பயணம் செய்து கோளரவொன் றாட்டுங் குழகன் றன்னைப் KOLARAYU VONRU AATUM KULAGAN THANNAI And then snakes are made to dance all over the body place and then showing love towards all living beings in this world பாம்பாட்டும் இளையவனாய் எல்லோரிடத்தும் அன்புடையவனாய்
பத்தனைப் பத்தர் மனத்து ளானைப் PATHANAI PATHER MANATHU YULLAANAI And then disciples mind place ever permanent form dwelling பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய் பரிதிபோற் றிருமேனி உடையான் றன்னை PARITHI POOAL THIRU MEEAANI YUDAIYAAN THANNAI The sun light like  light splashing body possessed form சூரியனைப் போல் ஒளி வீசும் திருமேனியை உடையவனாய்
அத்தனை ஆரூரி லம்மான் றன்னை ATHANAI AAROORIL AMMAAN  THANNAI And lord Siva leader to all and those way seated in the thiru vaaroor temple place எல்லாருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAAN AYARNTHA VAAREEA Hitherto not known form tired in this world place அறியாது மறந்தவன் ஆயினேன்
6.29.8
298 பையா டரவங்கை யேந்தி னானைப் PAI YAARU ARAVAM KAI EEANTHI NAANAI Lord Siva who has carried the dancing snake in the hand place படம் எடுத்து ஆடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் பரிதிபோற் றிருமேனிப் பால்நீற் றானை PARUTHI POOAL TIRU MEEAANI PAAL NEETRAANAI And then sun red color body place white ashes are adorned form சூரியனைப் போலச் சிவந்த மேனியின் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய்
நெய்யாடு திருமேனி நிமலன் றன்னை NEI AADU THIRU MEEANINIMALAN THANNAI And then daily taking ghee bath and those pure body possessed form  நெய் அபிசேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய் நெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச் NETRI MEEAL MATRU ORU KAN NERAI VITHAANAI And then in the fore head place yet another eye possessed form நெற்றியில் மேல் மூன்றாவது கண் உடையவனாய்
செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச் SEI YAANAI SEM PAVALATH THERAL OPPAANAI And then rich coral reap form red color body possessed செழும் பவளத்திரள் போன்ற செ ந் நிறத்தினனாய்ச் செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை SEN SADAI MEEAL VEN THINGALSEEAR THI NAANAI And then red color hair place the white moon adorned form சிவந்த சடையில் வெண்பிறை சூடியவனாய்த்
ஐயாறு மேயானை ஆரூ ரானை AYIYAARU MEEAAYANAI AAROOR AANAI And then thiru vaiyaaru temple place willingly seated form திருவையாற்றை உகந்தருளி இருப்பவனாக ஆரூர்  அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARI YAATHU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA I am not known lord Siva and then forgotten him அடியேன் அறியாதவனாகி மறந்து இருந்தேனே
6.29.9
299 சீரார் முடிபத் துடையான் றன்னைத்  SEEAR MUDI PATHU YUDAIYAAN THANNAI The lovely form of ten heads are possessed ravana அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப் THEESU ALIYA THIRU VERALAAL DETHAIYA NOOKI And then his glory perished form lord Siva stamped him under the kaiyilai hills and then given pain to him and then afterwards அவன் புகழ் அழியுமாறு கால் விரலால் உடல் சிதைய வருத்திப் பின்பு அவனுக்கு
பேரார் பெருமை கொடுத்தான் றன்னைப் PEEAR ARR PERUMAI KODUTHAAN THANNAI Those name ravana is given to him so that all others are put in weeping form by ravana அந்த ராவணன் என்ற பெயருக்கு ஏற்ப எல்லோரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய் பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் றன்னைப் PENN ERANDUM AANUMAAI NINRAAN THANAI And then lords parvathi Ganges two ladies are possessed in the body place  and the appearing male form பார்வதி கங்கை என்ற பெண் பாலர் இருவரைக் கொண்ட ஆண் வடிவு உடையவனாய்
போரார் புரங்கள் புரள நூறும்  POOR AAR PURANGAL PURALA NOORUM And then all the time waging war with others those three castles are destroyed and then converted in to ashes form போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பல் ஆக்கிய புண்ணியனை வெண்ணீ றணிந்தான் றன்னை PUNNIYANAI VENN NEERU ANINTHAAN THANNAI Those punniya form appearing in this world and the white ashes are adorned all over the body place புண்ணியனாய் திருவெண்ணீறு அணிந்தானாய்
ஆரானை ஆரூரி லம்மான் றன்னை AARAANAI AAROORIL AMMAAN THANAI To his disciples lord Siva is only tastier person in that appearance possessed form seated in the thiru vaaroor temple place அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ARIYAATHU ADI NAAYEEAN AYARNTHA VAAREEA Those prime god is in my earlier years forgotten form and then entered into samana religion அப்பரமனை அடியேன் அறியாதவனாகி மறந்திருந்தேனே
6.29.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: