OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PALANAM

ganesheit July 3, 2021

36 திருப்பழனம் – திருத்தாண்டகம்

THIRU PALANAM

PLACE HISTORY:– this is river Cauvery northern side temple. Out of63 temples in this cluster this temple is 50th one. Here thiru naayukku arasea and thiru ganna sambather sang decade. In and around OD thiru vaiyaaru there are there are seven sabtha vedanga temple this temple is one among them. Here moon god prayed

தல விளக்கம் : காவிரி வடகரைத் தலம் 63ல் இது 50ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர், திரு நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்றது. திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்த ஸ்தானத்தலங்களுள் ஒன்று சந்திரன் வழிபட்ட தலம்.

திருச்சிற்றம்பலம் – om thiru chitram balam

360 அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே ALAIYAAR KADAL NANTAM YUNDAAR THAAMEEA THE WAVES ARE emanating sea place appeared wildpoison lordSiva you have consumed அலைகள் பொருந்திய கடலின் நஞ்சினை உண்டவர் அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமே AMERERKKU ARUL SEIYUM AATHI THAAMEEA lord Siva you have put your grace on deevaas those prime first god form appearing in this world தேவர்களுக்கு அருள் செய்யும் முதல் பொருள்
கொலையாய கூற்ற முதைத்தார் தாமே KOLAIYAAYA KOOTRAM YUTHAIR THAR THAAMEEA The death god ema who is daily cornering so many lives those ema is  kicked and then killed him உயிர்களைக் கவரும் கூற்றினை உதைத்தவர் கொல்வேங்கைத் தோலொன் றசைத்தார் தாமே KOL VEENGAI THOOAL ONRU ASAITHAAR THAAMEEA And thenlord Siva who has killed the cheetahand then its skin is pealed form adorned தம்மால் கொல்லப்பட்ட வேங்கைப் புலியின் தோலை உடுத்தவர்
சிலையாற் புரமூன் றெரித்தார் தாமே SELAIYAAL PURAM MOONRU ERITHAAR THAAMEEA And then with bow and arrow lord Siva fired the three castlesand then destroyed it வில்லால் திரிபுரத்தை எரித்தவர் தீநோய் களைந்தென்னை யாண்டார் தாமே THEE NOOAI KALINTHU EANNAI AANDAAR THAAMEEA The wild stomach pain relived form lord Siva has taken me as his slave கொடிய சூலை நோயைப் போக்கி என்னை ஆட்கொண்டவர்
பலிதேர்ந் தழகாய பண்பர் தாமே PALI THEEARTHU ALAGAAYA PANBER THAAMEEA Even in accepting the begging food lord Siva possessed good mannerism பிச்சை எடுக்கும் நிலையிலும் அழகான பண்புடையவர் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA In that way lord Siva willingly dwelling in the thiru palanam temple place திருப்பழனத்தில் உகந்தருளி உறையும் எம் பெருமான்
6.36.1
361 வெள்ள மொருசடைமே லேற்றார் தாமே VELLAM ORU SADAIMEEAL EEATRAAR THAAMEEA Lord Siva who has adorned the Ganges on the head hair place சிவபெருமான் ஒற்றைச் சடையில் கங்கை வெள்ளத்தை ஏற்றவர் மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே MEEALAAR KANN MEAALLAR KANN MEALAR THAAMEEA Lord Siva is highly regarded person comparing all other persons மேம்பட்ட எல்லோருக்கும் மேம்பட்டவர்
கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே KALLAM KADINTHU EMMAI AANDAAR THAAMEEA Lord Siva removedcunningness on my part and then who has taken me as his slave வஞ்சத்தைப் போக்கி என்னை ஆட்கொண்டவர் கருத்துடைய பூதப் படையார் தாமே KARUTHUDAIYA BOOTHAP PADAIYAAR THAAMEEA Gnaana got demon forces are taken as lord Siva’s battle force ஞானம் பெற்ற பூதங்கலைப் படையாக உடையவர்
உள்ளத் துவகை தருவார் தாமே YULLATHU YUVAGAI THARUVAAR THAAMEEA Those disciples who are thinking lord Siva to who lord Siva gave happiness தம்மை நினைக்கும் மனத்திற்கு மகிழ்ச்சி தருபவர் உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே YURU NOOAI SERU PENIGAL THEER PAAR THAAMEEA Not to be curable thosebig deceases are cured and then also at times removed small deceases தீராத பெரிய நோய்களையும் சிறிய நோய்களையும் தீர்ப்பவர்
பள்ளப் பரவைநஞ் சுண்டார் தாமே PALLAP PARAVAI NANJU YUNDAAR THAAMEEA And then in the deep sea place emanated poison is consumed by lord Siva ஆழமான கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர் பழன நகரெம் பிரானார் தாமே. PALANAM NAGER EMM PERAANAAR THAAMEEA In those appearance possessed form lord Siva seated in thiru palanam temple place பழன நகரில் மேவும் எம்பெருமான் ஆவார்
6.36.2
362 இரவும் பகலுமாய் நின்றார் தாமே EARAYUM PAGALLUM NINRAAR THAAMEEA Lord Siva who is day and night all the time functioning in this world ஈசன் இரவும் பகலுமாக விளங்குபவர் எப்போது மென்னெஞ்சத் துள்ளார் தாமே EAPPOTHUM ENN NENJATHU YULLAAR THAAMEEA And then lord Siva all the time dwelling in my mind place என்னுடைய நெஞ்சில் எக்காலத்திலும் உறைபவர்
அரவ மரையி லசைத்தார் தாமே ARAVAM ARAIYIL ASAITHAAR THAAMEEA And then snake is tied in the waist place as belt form நாகத்தை அரையில் கட்டியவர் அனலாடி யங்கை மறித்தார் தாமே ANAL AADI ANGAI MARITHAAR THAAMEEA And then in the hand place fire pot carried form all the time dancing கையில் நெருப்பை ஏந்தி ஆடியவர்
குரவங் கமழுங்குற் றாலர் தாமே KURAVALM KAMALLUM KUTRAALAR THAAMEEA The kuraa flower fragrance surrounded thiru kalukunram temple place lord Siva dwelling குரவ மலரின் மணம் கமழும் திருக்குற்றாலத்தில் வீற்றிருப்பவர் கோலங்கள் மேன்மே லுகப்பார் தாமே KOOLANG GAL MEAN MEEAL YUGAPAAR THAAMEEA Lord Siva has taken so many appearances in this world பல்வேறு திருவேடங்களை உகந்து மேவுபவர்
பரவு மடியார்க்குப் பாங்கர் தாமே PARAYUM ADIYAARKU PANGER THAAMEEA And then all the time praying and then praising lord Siva to those disciples lord Siva with good minded form blessed them பரவியேத்தும் அடியவர்களுக்கு நல்ல பாங்குடன் அருள் புரிபவர் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA And that form of lord Siva dwelling in the thiru palanam temple place அப்பெருமான் பழனத்தில் மேவும் தலைவர் ஆவார்
6.36.3
363 மாறின் மதின்மூன்று மெய்தார் தாமே MAARIL MATHIL MOONRUM EITHAAR THAAMEEA Those three castleswhich are daily killing lord Siva’s disciples and those people are saving form lord Siva destroyed three castles தமக்கு நிகரில்லாத மதில்கள் மூன்றனையும் அழித்தவராய் வரியரவங் கச்சாக ஆர்த்தார் தாமே VARI ARAVAM KACHAAGA AARTHAAR THAAMEEA The stripped form of snake is tied as belt form கோகெளை உடைய பாம்பினைக் கச்சாக அணிந்தவராய்
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே NEERU SEEAR THIRU MEEANI NIMALAR THAAMEEA And then sacred ashes are adorned those pure form appearing in this world திரு நீறு அணிந்த தூயவராய் நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே NETRI NERUPPUKKANN VITHAAR THAAMEEA And then in the fore head place fire spitting eye possessed form appearing நெற்றியில் அக்கினியாகிய கண்ணை உடையவராய்க்
ஏறு கொடுஞ்சூலக் கையார் தாமே EEAARU KODUM SOOLAK KAIYAAR THAAMEEA And then wild battle force carried in the hand place கொடிய சூலத்தை ஏந்தியவராய் என்பா பரண மணிந்தார் தாமே NBU AABARANAM ANINTHAAR THAAMEEA And then bone garlandadorned form appearing எலும்புகளை அணிகலன்களாக அணிந்தவராய்
பாறுண் தலையிற் பலியார் தாமே PAARUM THALAIYIL PALIYAAR THAAMEEA And then vultures are encircling the flesh filled human skull those skull carried in the hand place and then going for begging food பருந்துகள் புலால் நாற்றம் அறிந்து வட்டமிடும் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவராய் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA In those appearance possessed form lord Siva seated in the thiru palanam temple place who is also my leader அவர் திருப்பழனத்தில் மேவும் எம் தலைவர் ஆவார்
6.364
364 சீரால் வணங்கப் படுவார் தாமே SEEARAAL  VANAGAPP PADUVAAR THAAMEEA Lord Siva who is special form all are praying in this world சிவபெருமான் யாவராலும் சிறப்புடன் வணங்கப்படுபவன் திசைக்கெல்லாந் தேவாகி நின்றார் தாமே THESAIKKU EALLAAM THEEVAAGI NINRAAR THAAMEEA And then all the ten directions are guarding form lord Siva standing in this world
ஆரா வமுதமு மானார் தாமே AARAAR AMUTHAMUM ANAAR THAAMEEA And then all the time tastier nectar form lord Siva dwelling in this world தெவிட்டாத அமுதம் ஆவாராய் அளவில் பெருமை யுடையார் தாமே ALAVIL PERUMAI YUDAIYAAR THAAMEEA And then infinitive glory filled form lord Siva appearing in this world எல்லையற்ற பெருமை உடையவராய்
நீரார் நியம முடையார் தாமே NEER AAR NIYAMAM YUDAIYAAR THAAMEEA The water bodies filled the neyamam place lord Siva dwelling நீர் வளம் பொருந்திய நியமம் என்ற திருத்தலத்தை உடையவராய் நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே NEEL VARAI VILLAAGA VALAITHAAR THAAMEEA And then meru hills are bended as bow form மேரு மலையை வில்லாக வளைத்தவராய்
பாரார் பரவப் படுவார் தாமே PAAR AAR PARAVAP PADUVAAR THAAMEEA And then all the world people are standing before lord Siva and the singing prayer songs எல்லா உலகத்தாராலும் முன் நின்று துதிக்கப்படுபவர் ஆவர் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA Those appearance possessed form lord Siva seated in the thiru palanam temple place அவர் திருப்பழன நகரில் மேவும் எமது எம்பிரானார்
6.36.5
365 கால னுயிர்வௌவ வல்லார் தாமே KAALAN YUIR VAVA VALLAAR THAAMEEA To give death to death god ema those prime power possessed lord Siva காலன் உயிரைப் போக்க வல்லமை படைத்தவர் கடிதோடும் வெள்ளை விடையார் தாமே KADITHOODUM VELLAI VEDAIYAAR THAAMEEA And then fast form running bull possessed as lord Siva’s travelling medium விரைந்து ஓடும் வெள்ளை நிறக் காளையை உடையவராய்
கோலம் பலவு முகப்பார் தாமே KOLAM PALAYUM YUGAPPAAR THAAMEEA And then so many appearances are possessing form appearing பல வேடங்களை விரும்புபவராய் கோள்நாக நாணாகப் பூண்டார் தாமே KOOAL NAAGAM NAAGAP POONDAAR THAAMEEA And then wild snake is tiedas rope to bow கொடிய பாம்பினை தம் வில்லின் நாணாக இணைத்தவராய்
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே NEELAM POLINTHA MEDATRAAR THAAMEEA And then blue color throat form appearing in this world நீலகண்டராய் நீள்வரையி னுச்சி யிருப்பார் தாமே NEEL VARAIYIN TYCHI ERUPPAAR THAAMEEA And then kaiyilai hills top place lord Siva dwelling கயிலாய உச்சியில் உள்ளாராய்
பால விருத்தரு மானார் தாமே BALA VERUTHARUM AANAAR THAAMEEA Lord Siva has possessed all the stages of human life from toddler to teen age and then good old age possessed form பாலன் மூத்தோர் ஆகிய எல்லாப் பருவங்களையும் உடையவராய் உள்ளார் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA And that prime lord form lord Siva seatedin the thiru palanam temple place அவர் பரமன் பழனத்தில் மேவும் எம்பிரான் ஆவார்
6.36.6
366 ஏய்ந்த வுமைநங்கை பங்கர் தாமே EEAAINTHAYUMAI NANGAI PANGER THAAMEEA The good qualities are possessed lords parvathi is given left part of his body தமக்குப் பொருந்திய பார்வதி பாகராய் உமாதேவியை ஏற்றவர் ஏழூழிக் கப்புறமாய் நின்றார் தாமே EEAAL YOOLIKU APPURA MAAI NINRAAR THAAMEEA And then lord Siva standing above ten yooli time periods ஏழ் ஊழிக்காலங்களுக்கும் அப்பால் பட்டவராய்
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே AAIN THU MALAR THOOVA NINRAAR THAMEEA And thengood flowers are selected and then purified flowers are constructed as garland form which is happily adorned by lord Siva அடியவர்கள் மலர்களைத் தூய்மை செய்து அணிவிக்க அவற்றை ஏற்று நிற்பவராய் அளவில் பெருமை யுடையார் தாமே ALAVIL PERUMAI YUDAIYAAR THAAMEEA And the all the frontiers are crossed form those glory possessed lord Siva எல்லை கடந்த பெருமை உடையவராய்
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே THEEAINTHA PERAI SADAI MEEAL VAITHAAR THAAEEA And then in small form of third day curved moon adorned in the hair place உருவில் சிறிய பிறையைச் சடையில் அணிந்தவராய் தீவா யரவதனை யார்த்தார் தாமே THEE VAAI ARAYU ATHANAI AARTHAAR THAAMEEA And then poison spitting snake tied as belt form in the waist place விடம் கக்கும் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவராய்
பாய்ந்த படர்கங்கை யேற்றார் தாமே PAAINTHA PADER GANGAI EEATRAAR THAMEEA And then from the deeva land descended the Ganges river is carried in the hair place தேவர் உலகத்தில் இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்த கங்கையைச் சடையில் ஏற்றவராய் உள்ளார் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA Those appearance possessed form lord Siva seated in the thiru palanam temple place திருப்பழன நகர் எம்பிரான்
6.36.7
367 ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே VOORAATHAAR YULLATHIL NILLAAR THAAEEA Those who are not thinking lord Siva in their mind place lord Siva not permanent form existing தம்மை நினையாதார் உள்ளத்தில் நிலையாக இல்லாதவராய் உள்ளூறு மன்பர் மனத்தார் தாமே YULL YOORUM ANBER MANATHAAR THAAMEEA And those disciples mind place oasis form love oozing out in those mind place lord Siva all the timedwelling form உள்ளத்தில் அன்பு சுரந்து பெருகுகின்ற அன்பர்கள் உள்ளத்தில் நிலையாக உள்ளவராய்
பேராதென் சிந்தை யிருந்தார் தாமே PEEARAATHAAR SINTHAI ERUPPAAR THAAMEEA And then in the mind place all the time dwelling form என் உள்ளத்தை விட்டு அகலாது இருப்பவராய் பிறர்க்கென்றுங் காட்சிக் கரியார் தாமே PERARKKU ENRUM KAATCHIKKU ARIYAAR THAAMEEA Ad then other than his disciples who are rare form seeing lord Siva தம் அடியவர் அல்லாத பிறருக்குக் காண்பதற்கு அரியவராய்
ஊராரு மூவுலகத் துள்ளார் தாமே YOOR AARU MOOYULAGATHU YULLAAR THAAMEEA And then all the places are filled form spread over everywhere ஊர்கள் நிறைந்த மூவுலகத்தும் பரவி இருப்பவராய் உலகை நடுங்காமற் காப்பார் தாமே YULAGAI NADUNGAAMAL KAAPPAAR THAAMEEA And then this world not to be in  shivering form all the time preserving it உலகம் துயரால் நடுங்காத படி காப்பவராய்
பாரார் முழவத் திடையார் தாமே PAARAAR MUAVATHU EADAIYAAR THAAMEEA And then all the land place is covered by sea those sea place also spread over form appearingin this world இந்த உலகம் சூழ்ந்த கடல்களிலும் பரவி இருப்பவராய் உள்ளவர் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA Those appearance possessed form lord Siva seated in the thiru palanam templeplace பழன நகரில் வீற்றிருக்கும் எம்பிரானார்
6.36.8
368 நீண்டவர்க்கோர் நெருப்புருவ மானார் தாமே NEENDA VERKOOR NERUPPU YURUVAM AANAAR THAAMEEA Once thirumaal taken gigantic appearance and then scaled the world with three steps those mighty power possessed thirumal not in a position to see lordSiva’s feet and then afterwards lord Siva appeared fire flames form சிவபெருமான் மூன்று உலகங்களையும் அளப்பதற்காக நெடிது உயர்ந்த திருமால் காணுதற்கு அரிய தன்மையில் நெருப்பு உருவத்தில் ஓங்கி உயர்ந்தவர் நேரிழையை யொருபாகம் வைத்தார் தாமே NEEAR ELAIYAI ORU BAAGAM VITHAAR THAAMEEA And then lords yumaadevi is kept left part of his body உமாதேவியைத் திருமேனியில் பாகம் கொண்டவர்
பூண்டரவைப் புலித்தோல்மே லார்த்தார் தாமே POOND ARAVAI PULITHOOAL MEEAAL AARTHAAR THAMEEA And then tiger skin adorned form and then on it snake is tied as belt form புலித்தோலை உடையாகக் கொண்டு அதன் மேல் நாகத்தைக் கட்டியவர் பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே PONN NERATHU VELLA SADAIYAAR THAAMEEA And then golden color hair place ganges are adorned form பொன் போன்ற சடையில் கங்கையைத் தரித்துள்ளவர்
ஆண்டுலகே ழனைத்தினையும் வைத்தார் தாமே AANDU YULAGU EEAL ANAITHINAIYUM VITHAAR POOLUM And then seven worlds are ruling form lord Siva appearing in this world ஏழ் உலகங்களையும் ஆட்கொண்டு விளங்குபவர் அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே ANGANGEEA SEVAM AAGI NINRAAR THAAMEEA So as to get upliftment lord Siva appearing guru teacher form and Siva lingam form and then all the places spread over and abstract Sivam form appearing மன்னுயிர்கள் உய்தல் பொருட்டு குரு லிங்க சங்கமத் திருமேனி கண் கொண்டு எல்லா இடத்திலும் சிவமாகத் திகழ்பவர்
பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே PAANDAVERIL PAARTHANUKKUP PARINTHAAR THAAMEEA Out of five kings named panga paandavaas out of them one is arjuna to whom pasupatha battle force is given and then blessed him ஐந்து பாண்டவரில் ஒருவன் ஆன அருச்சுனனுக்கு இரங்கிப் படைகள் வழங்கி அருள் புரிந்தவராய் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAANAAR THAAMEEA Those appearance possessed form lord Siva seated in thiru palanamtempleplace who is also by god திருப்பழன நகரில் அப்பெருமான் மேவும் எம்பிரான் ஆவார்
6.36.9
369 விடையேறி வேண்டுலகத் திருப்பார் தாமே VEDAI YEEARI VEEANDU YULAGATHU ERUPPAAR THAAMEEA Lord Siva who has descended in the bull chariot and then all world places existing சிவபெருமான் இடப வாகனத்தில் மேவி தில்லை உலகங்களிலும் விளங்குபவர் விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே VERI KATHIROON SOOTRUTHURAI YAAR THAAMEEA And then sun god praying form thiru chotruthurai temple place dwelling சூரியன் வழிபடும் சோற்றுத்துறையில் உறைபவராய்த்
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே PUDAI SOOLA THEEVAR KULATHAAR THAAMEEA And then deevaa clusters all the four sides coveredform appearing தேவர் கூட்டத்தால் நான்கு பக்கமும் சூழப்பட்டவராய் பூந்துருத்தி நெய்த்தான மேயார் தாமே POON THURUTHI NEITHAANAM MEEAAYAAR THAAMEEA And then liked poonthuruthi and neithaanam temple places திருப்பூந்துருத்தியையும் நெய்தல் தானத்தையும் விரும்பியவராய்
அடைவே புனல்சூழ்ஐ யாற்றார் தாமே ADAI VEEAL  PUNAL SOOAL EIYAATRAAR THAAMEEA And then thiru vaiyaaru temple place willingly seated form அடுத்துப் புனல் சூழம் திருவையாற்றை உகந்தருளி உறைபவராய் அரக்கனையு மாற்ற லழித்தார் தாமே ARAKKANAIYUM AATRAL ALITHAAR POOLUM And then ravana’s mighty powers are destroyed form இராவணனுடைய ஆற்றலை அழித்தவராய்ப்
படையாப் பல்பூத முடையார் தாமே PADAIYAAP PAL BOOTHAM UDAIYAAR THAMEEA And then demon forces are possessed form appearing in this world பூதங்களைப் படையாக உடையவராய் உள்ளார் பழன நகரெம் பிரானார் தாமே. PALANA NAGER EMM PERAA NAAR THAMEEA Those appearance possessed lord Siva seated in thiru palanam temple place அப்பெருமான் திருப்பழனத்தில் மேவும் எம்பிரானார் ஆவார்
6.36.10


திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

July 3, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: