OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

TIRUVATIKAIVIRATTANAM 04 — PERIYA THIRU THANDAGAM

ganesheit June 30, 2021

04 திருவதிகைவீரட்டானம் –
அடையாளத்திருத்தாண்டகம்
THIRU VATHIGAI VEERATAM
பதிக வரலாறு : PLACE HISTORY
IN THIRU ATHIGAI PLACE thiru naayukku arasar is doing menial service and cleaning sevice who sag so many decades. In this decade lord Siva’s
Symbols are explained
திருஅதிகையில் திரு நாவுக்கரசு சுவாமிகள் பணி செய்திருக்கும் நாட்களில் மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பல பாடியவற்றுள் அமைத்தது இத்திருப்பதிகம். எல்லாப் பாட்டுகளும் இறைவன் அடையாளங்களை எடுத்துக் கூறிப் பாடப்பட்டிருப்பதால் இது அடையாளத் திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றது.
திருச்சிற்றம்பலம்
33 சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
CHANTHIRANAI MAA GANGAI THIRAIYAAL MOOTHI
The moon is lashedby the Ganges’s river waves and those moon is
சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு
சடாமகுடத் திருத்துமே சாம வேதக்
SADAA MAGUDATH THIRUTHU MEEA SAAMA VEETHA
Adorned by lord Siva in his head hair place and then all the time willingly singing the sama veethaa with his tongue
சடை முடியில் வைத்துள்ளான் சாம வேதமாகிய இசையை விரும்புபவன்
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
KANTHARUVAM VERUMBU MEEA KABAALAM EEANTHUM
And then sang it with musical notes are filled form and then carried the human skull in the hand place
மண்டையோட்டை ஏந்திய கையினன்
கையனே மெய்யனே கனக மேனிப்
KAIYANEEA MEIYANEEA KANAGA MEEAANI
Those appearance possessed lord Siva’s body color is golden one
பொன்னார் மேனியில்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
PANTHANAYU MEL VERALAAL BAAGA NAAMEEA
Lords parvathi with her soft finger carrying ball and then playing it to whom lord Siva gave left part of his body
மெல்லிய விரலில் பத்தினை ஏந்திய பார்வதி பாகன்
பசுவேறு மேபரம யோகி யாமே
PASU EERUMEEA PARAMA YOOGI YAAMEEA
And then lord Siva possessed bull as his travelling medium and then highly regarded saint form seated in meditation
காளையை வாகனமாக உடையவன் மேம்பட்ட யோகி
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
INTHU THALAIYA MAASUNAM KONDUARAIYAARKUMM EEA
The five header snake is tightly tied in the waist place
ஐந்து தலை பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVEN AAGIL ATHIGAI VEERATA NAAMEEA
And then those activities and qualities possessed lordSiva seated in thiru athigai veeratam temple place willingness filled form
ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்து அருளி இருக்கின்றான் 6.4.1
34 ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
EEAAR EAARI EAAL YULAGUM YULI THAR VAANEEA
Lord Siva who has ascended on the back of the bull and then encircling the seven worlds
காளை மீது ஏறி ஏழ் உலகமும் சுற்றி வருபவன்
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
EMAIYAVERGAL THOLUTHUEEATHAERUKINRAANAI
And then deevaas are praying and then praising form seated in this temple place
தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன்
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
PAAR EEARU PADU THALAIYIL PALI KOL VAANEEA
The vultures are encircling the human skull place lord Siva accepting begging food
பருந்துகள் படியும் மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன்
படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
PADA ARAVAMTHADA MAARBILPAYIL VIYHAANEEA
In the big and broad bosom place the dancing snake is all the times crawling
தன் பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன்
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
NEEREEAAR SEM PAVALAM KUNRU OPPAANEEA
And then lord Siva adorned sacred ashes all over the coral hilllike redcolor bodyplace
திரு நீறு படிந்த செழுமையான பவள மலையை ஒத்த வடிவினன்
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
NETRI MEEAL VOTRAI KANN NERAI VITHAANEEA
And then in the fore head place one more eye possessed form appearing
நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன்
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
AAR EEAARU SADAI MUDI MEEAL PERAI VAITHAANEEA
And then Ganges are staying in the hair place adorned the curved moon
கங்கை தங்கிய சடை முடி மேல் பிறையைச் சூடியவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGILATHIGAI VEERATA NAAMEEA
Those appearance possessed lordSiva seated in the thiru vathigai veeratam temple place
இத்தகைய பெருமான் அதிகை வீரட்டானாவான் 6.4.2
35 முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
MUNDATHIL POLINTHU ELANGU MEEANI YAANEEA
At the end of every yugas bharma will die so lord Siva collected those bharma skulls and then tied as garland form and then adorned it in the neck place
இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் தருமேனியினர்
முதலாகி நடுவாகி முடிவா னானே
MUTHAL AAGI NADU VAAGI MUDI VAANAANEEA
And then lord Siva is the beginner of this world and then preserver of this world and then at the end of everyyugaas lord Siva put an end to this world
உலகில் தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன்
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
GANDATHIL VENN MARUPPIN KARAI YAANEEA
And then in the neck place the pig teeth is adorned as ornaments form
கழுத்தில் மகாவராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவர்
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
GATHANAAGAM KONDU AADUMKAATCHI YAANEEA
The angry snake is carried in the hand place and then made it to dance
கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்டி வழங்குபவன்
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
PINDATHIN EYARKAIKOOR PETRIYAA NEEA
This physical flesh filled bodyplace all the philosophical concepts form appearing in this world
இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களளுக்குச் சார்பாய் உள்ளவன்
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
PERU NILA NEER THEE VALI AAGAASA MAAGI
And then lord Siva appearing five vast forces those are land water wind fire and space form and then in all the universe place internal and external form appearing there
ஐம்பெரும் பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன்
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
ANDATHUK APPAALAAI EPP PAALAANEEA
And then lord Siva is existing beyond this whole universe
இந்த அண்ட சராசரங்களுக்கு அப்பாலும் இருப்பவனே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL ATHIGAI VEERAT TAANAAMEEA
Those pervasive form of lord Siva seated in thiru vathigai veeratam temple place
அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் 6.4.3
36 செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
SEIYA NEEA KARIYANEEA GANDAM PAING KANN
In body color lord Siva is red one and then throat is blue color one and then the lust green form of eyes
நிறத்தால் சிகப்பானவன் கண்டம் கறுத்தவன் பசிய கண்களையும்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
VELL EYITRU AADU ARAVANEEA VENAIGAL POOGA
And then white color teeth possessed dancing snakes are adorned all over the body place and then his disciples bad deeds are removing form
வெளிய பற்களையும் உடையவராய் படம் எடுத்து ஆடும் பாம்புகளை அணிந்தவன் அடியவர்கள் வினைகள் நீங்குமாறு
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
VEIYANEEA THAN KONRAI MILAITHA SENNI
To those bad deeds lord Siva is enemy form appearing and then cool konrai flower garland adorned form appearing in this world
அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன் குளிர்ந்த கொன்றை மாலை சூடிய
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
SADAIYANEEA VELANGUM MALU SOOLAM EEAANTHUM
Those long pig tail possessed lord Sivawho has carried soolam battle force in the hand place
சடையினன் சூலத்தைத் தாங்கும் கையினன்
கையனே காலங்கள் மூன்றா னானே
KAIYANEEA KALANGAL MOONRU AANAANEEA
And then lord Siva appearing in three time factor form those are past present and future form
முக்காலங்களாகவும் உள்ளவன்
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
KARUMBU VILL THANI KODUM POON KAAMAN KAAINTHA
The sugar canebow which is curved ornament formappearing in thisworld those manmatha is angry filled form converted in to ashes
கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன்
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
IYANEEA PARUNTHU YUARNTHA AAN EEATRAANAI
Those leader who has possessed the big and bulky bull as his travelling medium
அந்தத் தலைவன் உயரமும் பருமையும் உடைய காளை வாகனை
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGILATHIGAI VEERATA NAAMEEA
Those specialties are possessed lord Siva seated in the thiru vathigai temple place
இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமான் 6.4.4
37 பாடுமே யொழியாமே நால்வே தமும்
PAADU MEEA MOLIYAAMEEA NAAL VEETHAMUM
Without any interruption four veethaas are all the time lord Siva chanting and those mannerism possessed lord Siva
இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
PADER SADAIMEEAL OLI THIGALAPANI VENN THINGAL
Whose spread over hair place the cool moon light emanating form lord Siva adorned it
பரவிய சடையின் மீது ஒளி சிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
SOODU MEEA ARAI THIGALA THOOLUM PAAMBUM
In the waist place tiger skin and snake encircle form tied it
தன் இடையில் விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
SUTRU MEEA THONDAI VAAI YUMAIYOOR BAAGAM
The kovai fruit like red color lips are possessed lords Yumaadevi is given left part of his body
சுற்றி இருப்பவன் கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
KOODU MEEA KUDA MULAVAM VEENAI THAALAM
The musical instruments are sound raising form (kuda mulayu veena thallam
குடமுழா வீணை தாளம்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
KURU NADAI SERU BOOTHAM MULAKKA MAAK KOOTHU
And then small steps are possessed small demon forces all the sound raising form five types of work is doing form lord Siva all the time dancing (creation preservation destruction shadowed and blessingwith mukthi)
குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் ஒலிக்குமாறு ஐந்து தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
AADU MEEA ANTH THADAKKAI ANAL EEANTHU MEEA
And then lord Siva in his lovely hand place fire pot carried form all the time dancing
அழகிய நீண்ட கை ஒன்றில் தீயை ஏந்துபவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL ATHIGAI VEERATA NAAMEEA
In that appearance possessed form lord Siva seated in the thiru vathigai temple place
அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனனே 6.4.5
38 ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
Olithidumeea YULGUVAAR YULATHU YULLA
Those disciples who are put lord Siva in meditation place those disciples are not affected form big deceases and enmity with others ad internal enemies are six in number and then with fore head eye
தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில்
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
YURU PINIYUM SERU PAGAIYUM VOTRAI KANAAL

மிக்க நோயையும் அவர்களைத் தாக்கும் உள்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன் தனித்து இருக்கும் நெற்றிக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
VELITHIDUMEEAA KAAMANAIYUM PODIYAA VEELA
Lord Siva fired the lust creating god with his fore head fire
மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன்
வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
VELLA PUNAL GANGAI SEN SADAI MEEAAL
The white color Ganges river water is allowed to stay in his red color hair place
நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செ ந் நிறச் சடையின் மேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
ELITHIDUMEEAA EEAL YULAGUM THAANAA GUMEEAA
Those river is descended from the upper world and those form of lord Siva is the cause and effect form of those seven worlds
இறங்கித் தங்குமாறு செய்தவன் ஏழ் உலகம் இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன்
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
EYANGUM THIRI PURANGAL VOOR AMBINAAL
And then in the space place wandering three castles are destroyed by single arrow
வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
ALITHIDUMAA AATHI MAATHAVATHU YULLAANEEA
And then from good old days the highly regarded penance performing form seated and then in that way showing the way to do meditation by his disciples
பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AGIL ATHIGAI VEERATA NAAMEEA
Those guide form lord Siva seated in the thiru vathigai veeratam temple place
ஆகியவன் இந்த உலகில் அத்தகைய பெருமான் அதிகை வீரட்டானத்தானே 6.4.6
39 குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
KULAL LOODU KOKARAI KAI THAALAM MONTHAI
The small demon forces are turning the musical instruments named flutekokarai monthai and others and then beating the hands form raisingthe sound
குழல், கொக்கரை மொந்தை முதலிய கருவிகளை இயக்கிக் கைத்தாலம் மிட்டுக்
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
KURAL BOOTHAM MUNN PAADA THAAN AADUMEEA
According to the turn demonforces are singing andthen lord Siva dancing
குட்டையான பூதங்கள் பாட அப்பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன்
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
KALAL AADU THIRU VERALAAL KARANAM SEITHU
In the sacred feet place moving fingers are all the time activating the souls and then allowed it to function in this world
திருவடிகளிலே அசைகின்ற திருவிரல்களால் உயிர்களின் நுனி உடம்புகளை அசைத்து செயல்படுத்தி
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
KANAVIN KANN THIRU YURUVAM THAAN KAATU MEEA
And then in the dream time lord Siva showed his real appearance to his disciples
அடியவர்கள் உடைய கனவிலே தன் திரு உருவை அவர்களுக்குக் காட்டுபவன்
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
EALIL AARUM THOOAL VEESI NADAM AADUMEEA
In that way lord Siva fast form moving his solders and then dancing
அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன்
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
EEMA PURAM KAATIL EEAAMAM THOORUM
In the outer hamlet place situated the burial burning ground and then daily in the night time
ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவுதோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
ALAL AADUMEEA ATTA MOORTHI YAAMEEA
In the burning fire place dancing and then appearing in this world eight deity form
நெருப்பின் கண் நின்று ஆடுபவன் எட்டு உரு உடையவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL ATHIGAIVEERATA NAAMEEA
Those appearance possessed lord Siva seated in the thiru vathigai veeratam templeplace
அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனனே 6.4.7
40 மாலாகி மதமிக்க களிறு தன்னை
MAAL AAGI MATHAMIKKA KALIRU THANAI
Because of madness elephant fainting filled those male elephant
மதம் மிகுதியாக ஆதலால் மயக்கம் கொண்ட ஆண் யானையைக்
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
VATHAM SEITHU MATRATHANIL YURUVAI KONDU
Those elephant is killed and the its skin is pealed form
கொன்று அதன் தோலினைத் தனியே உரித்துத்
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
MEEAL AALUM KEEAL AALUM THOONRAA VANNAM
And then adorned it as upper dress form so to cover the whole body
தன் திருமேனியை முழுவதுமாக அது மறைக்குமாறு
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
VEM PULAL KAI KALANTHAMEI POOAR THAANEEA
Ant those blood oozing form of skin is adorned as carpet form
உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன்
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
KOOLAALAM PADA VARAI NAT ARAYU SUTRI
And then emotional filled form manthaara hills are grinding pole form set straight form and the vasugi snake is used as rope to the pole
ஆரவாரம் ஏற்பட மந்தர மலையை மத்தாக நட்டு வாசுகி என்ற பாம்பை கடையும் கயிறாகச் சுற்றி
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
KURAI KADALAI THERAI ALARA KADAINTHU KONDA
And then the waves are emanating sea is grinded with sound raising form
ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால்
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
AALLAAM YUNDU ERUNDA GANDATHAANEEA
So that from it emanated the sea poison is consumed by lord Siva and then got darkened throat
ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGILATHIGAI VEERATA NAAMEEA
Those appearance possessed form lord Siva seated in the thiru vathigai veeratam temple place
அத்தகையப் பெருமான் அதிகை வீரட்டனே 6.4.8
41 செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
AEM PONNAAL SEITHALAGU PEITHAAL POOLUM
The pure gold formand then those lovely form of naturalappearance possessed
செம்பொன்னால் செய்த அதன் கண் அழகினை ஊட்டினால் போல் இயற்கையாக அமைந்த
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
SEN SADAI EMM PERUMAANEEA THEAIVA NAARUM
Those red colorhair possessed lord Siva from him natural form fragrance emanated from the body place
செஞ்சடைப் பெருமான் இயற்கையான தெய்வ மனம் கமழும்
வம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்
VAMBINAAR MALAR KOONTHAL YUMAIYAAL KAATHAL
And then in addition flowers are also adorned those hair possessed lord Yumaadevi whose lover is
தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு
மணவாள னேவலங்கை மழுவா ளனே
MANA VAALANEEA VALAM KAI MALU VAALANEEA
Lord Sivawho has carried malu battle force in his right hand place
இருப்பிடமான கணவன் வலக்கையில் மழப்படையை உடையவன்
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
NAMBANEEA NAAN MARAIGAL THOLA NIRAANEEA
In those twin form lord Siva is liked by us and then four veethaas are all the time praying form of lord Siva
நம்மால் விரும்பப்படுபவன் நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன்
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
NADUNG GAATHAAR PURAM MOONRUMNADUNGA SETRA
And then not shivering form of three castle asuraas are put in to shivering form lord Siva destroyed those three castles with fore arrow
அஞ்சமில்லாத அசுரர்களின் மூன்று மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த
அம்பனே அண்டகோ சரத்து ளானே
APPANEEA ANDA KOOSARATHU YULLAANEEA
Those bow carrier form of lord Siva who has pervaded the whole universe
அம்பினன் எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL VEERATA NAAMEEA
In that appearance possessed form lord Siva seated in the thiru vathigai temple place
அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனனே 6.4.9
42 எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
EALUNTHA THERAI NATHI THUVALAI NANAINTHA THINGAL
From the Ganges place emanated waves droplets which are made wet to moon
கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச்சந்திரன்
இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
ELA NILLAA THIGAL GINRA VALAR SADAIYAANEEA
Those soft light form existing lord Siva who has possessed long hair
மெல்லிய் ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன்
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
KOLUM PAVALA SENG KANI VAAI KAAMA KOOTI
In the kangi puram place lords parvathi seated in the kaama kootam place who has possessed soft form of mouth which is coral like red color one
கச்சியில் காமக்கோட்டத்தில் உள்ள பவளம் போல சிவந்த கனி போன்ற மென்மையை உடைய வாயினன்
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
KONGAIYINAI AMER PORUTHU KOOALAM KONDA
Those lords yumaadevi’s two breasts are waged war with lord Siva so that from it emanated
ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
THALUMBU YULAVEEA VARAI MAARBIL VENN NOOL YUDEEA
Two scars on the rock like bosom place lord Siva also adorned the three knotted thread in his bosom place
தழும்புகள் தாங்கிய மலை போன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
SANTHA MODU SANTHANATHIN ALARU THANGI
Lord Siva also has applied on the bosom place sandal paste and then fragrance filled the materials in slush form adorn all over the body place
சந்தனமும் நறுமணக் கூட்டுக்களும் சேறு போலப் பொருந்திய
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
ALUNTHIYA SEN THIRU YURUVIL VENN NEETRAANEEA
And then sacred ashes are also adorned all over the body place
தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந்துள்ளான்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL ATHIGAI VEERATA NAAMEEA
Those appearance possessed lord Siva seated in the thiru vathigai temple place
அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனனே 6.4.10
43 நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
NEDIYAANUM NAAN MUGANUM NEEADI KAANAA
Thirumal and bharma are searched lord Sivas feet and head and failed to see it those long appearance possessed lord Siva
திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவம் கொண்டவன்
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
NEENDAANEEA NEEORUVA ILLAATHAANEEA
In that way lord Siva has no comparable person in this world
தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான்
கொடியேறு கோலமா மணிகண் டனே
ODI YEEARU KOOLAMAA MANI GANDANEEA
So as to specialty appearing form carried flag on his hand place and those blue color throat possessed lord Siva
தன் சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன்
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
KOL VEENGAI ATHALANEEA KOOVANA VANEEA
Those killer instinct filled cheetah skin is tied on the loin cloth place
கொலைத்தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன்
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
PODI YEERU MEEANIYANEEA EIYAM VEEANDI
And then lord Siva adorned sacred ashes all over the body place and then so as to collect begging food
திரு நீறு பூசிய திருமேனியினன், பிச்சை ஏற்றலைக் கருதி
புவலோகந் திரியுமே புரிநூ லானே
BUVALOOGAM THIRIYU MEEA PURI NOOLAANEEA
Who will wander even in upper lands and those sacred three knotted thread adorned lord Siva in the bosom place
மேல் உலகங்களிலும் திரிபவன் பூணூலை அணிந்த சிவபெருமான்
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
ADIYAARAI AMER YULAGAM AALVIKKUMEEA
And then lord Siva’s disciples are allowed to rule the upper world
தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறு செய்பவன்
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
AVAN AAGIL ATHIGAI VEERATA NAAMEEA
Those appearance possessed lord Siva seated in the thiru athigai temple place and then blessing all
அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனனே 6.4.11

திருச்சிற்றம்பலம் – OM THIRU CHITRAM BALAM

June 30, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: