OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVEERATTANAM 05 — PERIYA THIRU THANDAGAM

ganesheit June 30, 2021

05 திருவீரட்டானம் – போற்றித்திருத்தாண்டகம்
Thiru vathigai veeratam
பதிக வரலாறு : place history
this decade issang inthe thiru vathigai veeratam temple place and then thosesentences are finishing by potriform
திரு அதிகை வீரட்டானத்தில் பாடி அருளிய திருப்பதிகம். இதன் பாடல்கள் எல்லாவற்றிலும் போற்றி போற்றி என்று பண் முறையாக அருளப்பெற்றிருத்தலால் இது போற்றித் திருத்தாண்டகம் எனப் பெயர் பெற்றது.
திருச்சிற்றம்பலம் – om thiru chitra balam
44 எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
ELLAAM SEVAN EANNA NINRAAI POTRI
Lord Siva is mingled with all form of matters in this world in that way lord Siva mixed with anything and everything in this world
எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்பு உடையனஎன்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
ERI SUDARAAI NINRA ERIVA POTRI
The fire glow and moon form appearing in this world
தீ கதிர் மதியமும் ஆகி நிற்பவனே
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
KOLAAR MALU VAAL PADAI YAAI POOTRI
The killing act is doing malubattle force carried in the hand place
கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
KOLLUM KOOTRU ONRAI YUTHAI THAAI POOTRI
The death god ema who does the work of separating the body and soulthose ema is kicked and then killed by you
உயிர்களை உடலில் இருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
KALAATHAAR KAATCHIKU ARIYAAI POOTRI
The practical matter form of lord Siva is not heard from the gaana filled persons and then to those mind lord Siva is not appeared those rare form he is

அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் கேட்டு அறியாதவருடைய மனதிற்கும் காட்சிக்கு அரியவனே
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
KATRAAR EDUMBAI KALAI VAAI POOTRI
And then as per proper way get gaana knowledge from the guru teacher those disciples sorrows are removed by lord Siva
முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயர நீக்குபவனே
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
VILLAALVEYAN ARAM EITHAAI POOTRI
And then with bow and arrow lord Siva you have destroyed three castles
வில்லினைக் கொண்டு பெரிய மதில்களை அழித்தவனே
வீரட்டங் காதல் விமலா போற்றி.
VEERATAM KAATHAL VIMALAA POOATRI
And in that way lord Siva you are dwelling in the veeratam temple place in non-polluted form so under your feetI am praying
அதிகை வீரட்டத்தினை உகந்தருளியிருக்கும் களங்கமற்றவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.1
45 பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
PAATUKKUM AATUKKUM PABAA POOTRI
Lord Siva you are all the time singing and then dancing those qualities you are possessing
பாடுதலையும் கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
PAL YOOLI YAAYA PADAITHAAI POOTRI
Lord Siva you have evolved so many yooli time
பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே
ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி
VOOT AGATHEEAA YOONAA YUGANTHAAI POTRI
And then begging skull place accepting begging food those food is willingly eating those humble form of lord you are
மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
YULGUVAAR YULLATHU YURAI VAAI POOATRI
Those who are placing in the meditation place those persons mind place lord Siva you are dwelling
உன்னை தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
KAAT AGATHEEAAADAL MAGILNTHAAI POOATRI
In the burial burning ground place dancing lord Siva you all the time liking it
சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
KAAR MEEAGAM ANNAMIDATRAAI POOATRI
The dark color cloud black color throat possessed lord Siva you are
கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
AATU VATHOOR NAAGAM ASAITHAAI POOATRI
With emotional filled form dancing snake is ted in the waist place as belt form
ஓங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
ALAI KEDILA VEERAT AALVAAI POOATRI
The waves are emanating form flowing the kedilam river bed place seated form all the souls are managed by you so I am praying under your feet
அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்தில் இருந்து உயிர்களை ஆள்பவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.2
46 முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
MULLAI YAM KANNI MUDIYAAI POOATRI
In the hair place mullai flower garland adorned form of lord Siva so I praise you
முடியில் முல்லை மாலை சூடியவனே
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
MULU NEERU POOSIYA MOORTHI POOATRI
And then whole body place sacred ashes are adorned so I praise you
உடல் முழுவதும் திரு நீறு பூசியவனே
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
EALLAI NERAINTHAGUNATHAAI POOATRI
Lord Siva you are infinitive good qualities are filled form appearing in this world so I am praising you
எல்லையற்ற நல்ல பண்புகளை உடையவனே
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
EEAAL NARAMBIN OOSAI PADAITHAAI POOATRI
And then in the musical instrument named yawl place tied seven strings which are emanating seven types of musical notes which is created by you
யாழின் ஏழ் நரம்புகளிலும் எழுவகை ஓசையைப் படைத்தவனே
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
SILLAI SERAI THALAIYIL YOONAA POOATRI
And then round shapedbald headed form of skull place lord Siva you are collecting begging food
உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
SENRU ADAINTHAAR THEEVINAIGAL THEER PAAIPOOATRI
And then those disciples who are praying under your feet those persons baddeeds are removed by you
உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
THILLAI CHITRAM BALAM MEEAYAAI POOATRI
And then chithambaram temple place lord Siva you are willingly dwelling
தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளி இருக்கின்றவனே
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.
THIRU VEERATA THU EMM SELVAA POOATRI
In that way lord Siva you are seated in the thiru vathigai temple place willing those rich person lord Siva you are so I am praying under your feet
அதிகை வீரட்டானத்தில் உகந்தருளி இருக்கும் எம் செல்வனே உன்னை வணங்குகின்றேன் 6.5.3
47 சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி

SAMBAL AGALATHU ANINTHAAI POOATRI
Lord Siva you have adorned sacred ashes on the bosom place
மார்பில் திரு நீறு பூசியவனே
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
THAVA NERIGAL SAATHITHU NINRAAI POOATRI
Those disciples and saints whoare perform meditation to whom lord Siva giving appropriate benefits to them
அடியார்கள் மேற்கொள்ளும் தவ நெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
KOOMBI THOLUVAAR THAM KUTREEAVALAI
The five sense organs are controlledby mind and then those disciples who are praying under your feet and doing small menial services under your feet
ஐம்பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
KURI KONDU ERUKKUM KULAGAA POOATRI
Those acts are kept lord Siva in your mind place and then put your grace on them those young chap form lord Siva you are appearing in this world
உள்ளத்தில் கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
PAAMBUM MATHIYUM PUNALLUM THAM MIL
And then snakes moon and Ganges are among them selves
பாம்பும் பிறையும் கங்கையும் தம்மிடையே
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
PAGAI THEERTHUYUDAN VAITHA PANBAA POOATRI
Without enmity form all are clubbed form adorned in the hair place those mannerism possessed lord Siva
பகை இன்றி ஒரு சேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
AAMBAL MALAR KONDU ANINTHAAI PPOATRI
And then ambal flowers are adorned in the hair place so I praise you
ஆம்பல் பூக்களையும் அணிந்தவனே
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
ALAI KEDILA VEERAT THU AAL VAAI POOATRI
Lord Siva you are seated in the waves are emanating kedilam river bed place and then ruling all so we are praying and then praising under your feet
அலைகளை உடைய கெடில நதிக்கரையிலமைந்த அதிகை வீரட்டானத்தில் இருந்து எல்லோரையும் ஆள்பவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.4
48 நீறேறு நீல மிடற்றாய் போற்றி
NEER EERU NEELA NIDATRAAI POOTRI
திரு நீறு பூசிய நீலகண்டனே
Lord Siva you have adorned sacred ashes all over the body place and called in the name of neela gandan
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
NILAL THIGAL VENN MALU VAALVITHAAI POOATRI
And then light glittering form malu battle force carried in the hand place
ஒளி விளங்கும் வெள்ளிய மழப்படையை ஏந்தியவனே
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
KOOREEA YUMAI ORUPAAL KONDAAI POTRI
And then in the left part lord Siva is carried lords yumaadeevi
தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
KOOAL ARAVAM AATU KULAGAA POOAATRI
The wild snakes are made to dance on all over the body place those young chap you are
கொடிய பாம்புகளை ஆடச் செய்யும் இளையவனே
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
AAR EEAARU SENI SADAI YUDAIYAAI POOATRI
And then Ganges are carried in the head hair place
கங்கை தங்கிய தலையினனே
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ADIYAAR GATKU AAR AMUTHA MAANAAI POOATRI
And then to your disciples lord Siva you are rare nectar form
அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
EEARU EEAARA EANRUM YUGAPPAAI POOATRI
And then ascended on the back of bull and then willingly travelling every where
காளையை வாகனமாக ஏறிச் செலுத்துதலை என்றும் விரும்புபவனே
இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.
ERUM KEDILA VEERATA ENTHAAI POOATRI
In that way lord Siva you are dwelling in the kedilam river bed place established veeratam temple place my dear father I am praying under your feet
கெடில நதிக்கரையில் உள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளி இருக்கும் எந்தையே உன்னை வணங்குகின்றேன் 6.5.5
49 பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
PAADUVAAR PAADAL YUGAPPAAI POOATRI
Lord Siva those disciples who are willingly singing prayer songs those songs are willingness filled form heard by you
உன்னை விரும்பிப்பாடும் அடியவர்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுப்பவனே
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
PALAI YAATRU PATEECHARATH AAI POOATRI
And then palayaaru place situated pateecharam temple place lord Siva you are willingly dwelling
பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சரத்தை உகந்தருளி இருப்பவனே
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
VEEDU VAAR VEEDU ARULA VALLAAI POOATRI
Those disciples who are terminated this world attachments to whom lord Siva you are giving the mukthi state those capacity possessed prime god you are
உலகப்பற்று அறுத்த அடியவர்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
VEEALATHU YURI VERUVA POORTAAI POOATRI
And then lords youmadevi got afraid of you have adorned elephant skin as upper dress form
உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
NADUVAAR NAADARKKU ARIYAAI POOATRI
Those disciples who are with their mighty powers tried to attain you to whom you are rare form to them
தம் முயற்சியால் உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி

NAGAM ARAIKU ASAITHA NAMBAA POOATRI
And then in the waist place snake is tied as belt form
இடையில் பாம்பை இறுகக் கட்டி இருப்பவனே
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
AADUM AAN INTHUM YUGAPPAAI POOATRI
The five types of cow products daily you are willingly taking bath
பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
ALAI KEDILA VEERATATH AALVAAI POOATRI
The waves are emanating form of kedilam river bed place seated form lord Siva you are ruling the whole world so I am praying under your feet
அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.6
50 மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
MANN THULANGA AADAL MAGILNTHAAI POOATRI
This land vibrated form lord Siva you are dancing and then driving happy from it
நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
MAAL KADALLUM MAAL VESUMBUM AANAAI POOATRI
Lord Siva you are appearing big seaand space form
பெரிய கடலும் வானமும் ஆனவனே
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
VINN THULANGA MUM MATHILUM EITHAAI POOATRI
And then world deevaas are got shivering form lord Siva you have shot an arrow and then destroyed it
வான் உலகம் நடுங்கும்படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
VEELATHU YURI MOODUM VEGIRTHAA POOATRI
And then elephant skin pealed and then adorned as upper dress those unique deviated form appearing in this world
யானைத் தோலினால் உடம்பை மூடிக் கொள்ளும் உலகியலுக்கு வேறுபட்டவனே
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
PAN THULANGA PAADAL PAYINRAAI POOATRI
And then mannerism filled form lord Siva you are all the time singing and ten practicing songs
பண்புகள் பொருந்த பாடுதலில் பழகியவனே
பார்முழுது மாய பரமா போற்றி
PAAR MULUTHUM AAYA PARAMAA POOATRI
in that way lord Siva you have been spreading every nook and corner of this world
உலகம் முழுதுமாய் பரவி இருக்கும் மேம்பட்டவனே
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
KANN THULANGA KAAMANAI MUNN KAAINTHAAI POOATRI
And then eye lashes are opened and then at once lord Siva you have destroyed the lust creating god manmatha
கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.
KAAR KEDILAM KONDA KAABAALI POOATRI
Because of deep water the water is running dark color form those kedilam river bed is willingly taken as dwelling place and then carried skull bowel to collect begging food so I pray under your feet
நீரின் ஆழத்தால் கருமை நிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட மண்டை ஓட்டை ஏந்தியவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.7
51 வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
VENG SENA VELL EERU YOORTHI YUDAIYAAI POOTRI
The much angry filled of white bull lord Siva you have taken it as your travelling medium
மிக்க சினத்தை உடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
VERISADAI MEEAL VELLAM PADAITHAAIPOOATRI
And then spread over hair place Ganges water is allowed to stay

விரிந்த சடை மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
THUNGAA PALI THEEARUM THONRAL POOATRI
And then not sleeping form lord Siva you are going for begging food
உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
THOLUTHA KAI THUNBAM THUDAIPAAI POOATRI
Lord Siva those disciples who are praying under your feet those character filled disciples sorrows are lord Siva you are removing
உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
NANGU ODUNGUM GANDATHU NAATHAAPOOATRI
And then poison stagnated throat lord Siva you have possessed
விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
NAAM NARAIYOODU AARU ANGAM AANAAI POOTRI
And then four veethaas and then six angaas form lord Sivayou are appearing in this world
நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
ANG SOLLAAL BAAGAM AMERNTHAAI POOTRI
And good and soft wards are speaking those lords parvathi lord Siva you have given her left part of your body
இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
ALAI KEDILA VEERATATHU AAL VAAI POOTRI
In that way lord Siva you are veerat taanam temple place seated in ruling form so I am praying under your feet
அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் உன்னை வணங்குகின்றேன் 6.5.8
52 சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
SINTHAI YAAI NINRA SEVANEEA POOATRI
Lord Sivayouhave been dwelling in the disciples mind place ever permanent form staying there
அடியவர் உள்ளத்தில் இருப்பிடமாய்க் கொண்ட நிலைபெற்ற சிவபெருமானே
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
SRI PARPATHAM SINTHAI SEITHAAI POOATRI
In the sri parupatham temple place in the lotus form of heart place gana form staying there
இதயத் தாமரையில் ஞானவடிவாகத் தங்கி இருப்பவனே
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
PUNTHIYAAI PUNDARIGATHU YULLAAI POOATRI
In that way mind place staying
புண்ணியமே வடிவானவனே தூயனே
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
PUNNIYA NEEA POOATRI PUNITHAA POOATRI
Lord Siva you are punniya form existing in this world and then pure form existing
தூயனே புனிதமானவனே
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
SANTHIYAAI NINRA SATHURAA POOATRI
lord Siva you are three times a day such as morningmid-day and then evening times those highly regarded form existing in this world
காலை நண்பகல் மாலை என்ற சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
THATHUVANEEA POOATRI ENN THAATHAAI POOATRI
lord Siva you are true matter form existing in this world and then you are my father form existing
உண்மைப் பொருளே என் தந்தையே
அந்தியாய் நின்ற அரனே போற்றி
ANTHIYAAI NINRA ARASEEA POOATRI
And then comparing all the times of day lord Siva you are evening time red color space form appearing in this world as king form
நேரங்களில் சிறந்த அந்திப் பொழுதாக இருக்கும் அரனே
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
ALAI KEDILA VEERATATHU AAL VAAI POOATRI
And then in that way seated in the kedilam river bed place situated veeratam temple place and then ruling the whole world so I am praying under your feet
வீரட்டத்தில் இருந்து உலகை ஆள்பவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.9
53 முக்கணா போற்றி முதல்வா போற்றி
MUKK KANNAA POOATRI MUTHALVAA POOATRI
Lord Siva you have possessed three eyes and then principal form appearing
முக்கண்ணனே முதல்வனே
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
MURUGA VEEAL THANAI PAYANTHAAI POOATRI
lord Siva you are lord Murugaa’s father
முருகனுடைய தந்தையே
தக்கணா போற்றி தருமா போற்றி
THAKKAANAA POOATRI THARUMAA POOATRI
You are south directiongod and then dharma form appearing in this world
தென் திசைக் கடவுளே அறவடிவினனே
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
THATHUVAA POOATRI ENN THAATHAAI POOATRI
Lord Siva you are true matter form existing in this world and then my father form guiding me
மெய்ப்பொருளே என் தந்தையே
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
THOKKANAA ENRU ERUVAR THOOAL KAI KOOPTH
And then thirumal and bharma who are clubbed form calling you as prime god and then elderly person to this world and then folded hand form praying under your feet
திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
THULANGAA ERI SUDARAA NINRAAI POOATRI
And then not moving those light flames form appearing in this world
அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
EKK KANNUM KANNILEEAN ENTHAAI POOTRI
lord Siva I have no otherhold in this worldlord Siva you are the only guiding pole to me so pray under your feet
வேறு எங்கும் பற்றுக்கோடு இல்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகின்றேன்
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
ERI KEDILA VEERAT THU EESAA POOATRI
In that guideform you are seating in the veeratam temple place so I pray under your feet for ever
வீரட்டானத்து இறைவனே உன்னை வணங்குகின்றேன் 6.5.10

திருச்சிற்றம்பலம் –OM THIRU CHITRAM BALAM

June 30, 2021

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: