OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU THANDALAI NEE NERI

ganesheit September 10, 2020

50 திருத்தண்டலைநீணெறி
THIRU THANDALAI NEE NERI


பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

தல வரலாறு – காவிரித் தென்கரைத் தலங்கள் 127 -இல், இது 110 ஆவது திருத்தலம். தண்டலைச் சேரி என வழங்கப் படுகிறது. கோயிலின் பெயர் நீள்நெறி. கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில். அரிவாட்டாய நாயனார் முத்தித்தலம், தண்டலையார் சதகம் என்னும் அரிய நூலை உடைய தலம்.


531 விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
VERUMBUM THINGALLUM GANGAIYUM VIMMAVEEA

All are liking moon and River Ganges are adorned on the hair place if lord Siva


சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடங்
SURUMBUM THUMBIYUM SOOL SADAYAARKU EADAM

And then honey bees and thumbiees are raising humming sound in the flowers are adorned hair place
Where lord Siva seated in this temple place


கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
KARUMBUM SEN NRLLUM KAAI KAMUGIN VALAM

The sugar cane paddy fields and bettle nut trees are filled place is


நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே.
NERUNGUM THANDALAI NEE NERI KAAN MINEEA

Thiru thandalai neel neri temple place where you may go and then pray lord Siva
விரும்பப் படுகின்ற சந்திரனையும் கங்கையும் தாங்கி, சுரும்பி, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடைமுடியை உடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகும். செந்நெல்லும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத்தண்டலை நீள் நெறியாகும். இத் திருத்தலத்தைத் தரி;சித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
01


532. இகழுங் காலன் இதயத்தும் என்னுளுந்
EAGALUM KAALANAI EATHAYATHUM ENN YULLUM

The lord Siva’s disciple named margandaya who is cursed and then teased by death god ema who’s mind and then my mind place


திகழுஞ் சேவடி யான்திருந் தும்மிடம்
THIGALLUM SEEVADI YAAN THIRUNTHUM EADAM

Existing lord Siva whose red color feet are praying place it is


புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
PUGALLUM POOMAGALLUM PUNAR POOSURER

The glory filled wealth god Lakshmi and veethaa chanting bharmins are dwelling place is thiru thandalai neel neri temple


நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே.
NEGALLUM THADALAI NEE NERI KAAN MINEEA

In that temple place prayed and then got all benefits in life


சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புகழுடைய திருமகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அந்தத் திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.
02


533. பரந்த நீலப் படரெரி வல்விடங்
PARANTHA NEELAP PADER EARI VAL VEDAM

In the sea place spread over the wild heated poison is


கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடஞ்
KARANTHA KANDATHINAAN KARUTHUM EADAM

Conserved in the throat place and that got the name neela gandan whose dwelling place it is

சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
SURANTHA MEETHI THURAI PADINTHU VOODAIYIL

In the pond place buffalos are entered and then milking there


நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.
NEERANTHA THANDALAI NEENERI KAAN MINEEA

That place is thiru thandalai neel neri where you may go and then pray lord Siva there


விரிந்து பரந்;த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி , நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை நீள் நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.
03


534. தவந்த என்புந் தவளப் பொடியுமே
THAVANTHA EANBUM THAVALAP PODIYUM

The burnt down bones and sacred ashes are


உவந்த மேனியி னானுறை யும்மிடஞ்
YUVANTHA MEENIYINAAN YURAIYUM EADAAM

Which are willingly adorned by lord siva whose dwelling place it is


சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
SEVANTHA PONNUM SELUM THALARANGALLUM

The pure red color gold and pearls abundantly available place is thiru thanalai neel neri temple place where you may pray lord Siva and then praised him


நிவந்த தண்டலை நீணெறி காண்மினே.
NEERANTHA THANDALAI NEE NERI KAAM MINEEA

வெந்த எலும்பும், திரு வெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீ;றறிருந்தருளும் இடமாவது, சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை நீள் நெறியாகும். இத்திருத்தலத்தைத்; தரி;சித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

04

இப்பதிகத்தில் 5, 6, 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
05-07


535. இலங்கை வேந்தன் இருபது தோளிற
EALANGAI VAANTHAN EARUPATHU THOL EARA

The srilanka king ravana whose twenty shoulders are smashed form


விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடஞ்
VELANGALIL ADARTHAAN VERUMBUM EADAM

Lord siva stamped him under kaiyilai hills that form of lord Siva willingly dwelling place it is

சலங்கொள் இப்பி தரளமுஞ் சங்கமும்
SALAM KOL EAPPIYUM THALARAMUM SAGAMUM

In the water place living chippes and pearls and then kanches are fleshed in to sea shore place


நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே.
NELAM KOL THANDALAI NEE NERI KAAN MINEEA

Which is wealth filled one where situated thiru thandalai neel neri temple place you may go and then pray there


இலங்கை மன்னனான இராவணின் இருபது தோள்களும் நெரியுமாறு கயிலை மலையின் கீழ் அடர்த்த இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்து வரப்பட்டுச், செல்வ வளம் மிகுந்த திருத்தண்டலை நீள் நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
08


536. கருவ ருந்தியின் நான்முகன் கண்ணனென்
KARU ARU YUNTHIYIN NAAN MUGAN KANNAN EANN

The creation work is carried by bharama who is given birth by thirumal from his umbilical card place


றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடஞ்
EARUVARUM THERIYAA VORU VAN EADAM

Those two persons are not seen form of lord Siva whose dwelling place it is


செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
SERU VARUNTHIYA SEMBIYAN KOOCHIGAN

To wage war and own over is those king mamed cochengan constructed temple is


நிருபர் தண்டலை நீணெறி காண்மினே.
NEERU BAR THANDALAI NEE NERI KAAN MINEEA

Thiru thandalai temple place neel neri where you may go and then pray him


சிருட்டி செய்யும் பிரமன், திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றியவன் ஆவான். அவனும் திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய திருத்தண்டலை நீள் நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
09


537. கலவு சீவரத் தார்கையில் உண்பவர்
KALAYU SEEVARATHAA KAIYIL YUNBAVAR

The saffron color dress adorned bythaasn and then samanaas who are taking begging food in ball form and then engulfed it


குலவ மாட்டாக் குழகன் உறைவிடஞ்
KULAVA MAATTAA K KULAGAN YURAI VIDAM

Whose love is not reached up to lord Siva those lord Siva dwelling place it is


சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
SULAYUU MAA MATHILLUM SUTHAI MAADAMUM

In curved form constructed big protection walls and lime paste with it constructed big mansions filled place is


நிலவு தண்டலை நீணெறி காண்மினே.
NELAYUU THANDALAI NEENERI KAAN MINEEA

Thiru thandalai neel neri temple place where you may pray lord Siva


சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் , அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்த மாமதில்களும், சுண்ணச் சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற, திருத்தண்டலை நீள் நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
10


538. நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
NEETRAAR THANDALAI NEEL NERI NAATHANAI

The sacred ashes are adorned disciples are living place thiru thandalaai neel neri temple place where dwelling lord Siva


தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
YHOORU MEN MAIYAR THONI PURATHU EARAI

And that glory filled sacred ashes are gana sunbather whose has descended in seergali place


சாற்று ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்
SAATRU GAANA SAMBANTHAN TAMOL VALLAAR

Who has sung the above poems before lord Siva


மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.
MAATRIL SELVAR MARAPPAR PERAPPAIYEEA

Who will get big wealth in this world and then ultimately left out from repeated birth and then death And then enter in to mukthi state


திருநீறு அணியப் பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும், ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.
11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நீணெறிநாதேசுவரர், தேவியார் – ஞானாம்பிகையம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

September 10, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: