OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

NAMASIVAYA THIRUPPATHIGAM

ganesheit September 10, 2020

49 நமச்சிவாயத் திருப்பதிகம்
NAMACHIVAYA THIRUPPATHIGAM

Namasivaya sacred decade
பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam

பதிகக் குறிப்பு – திருஞான சம்பந்தர், நம்பியாண்டார் நம்பி என்னும் அருந்தவத்தினரின் புதல்வியைத் திருமணம் புரிய இசைவு நல்கி நடந்தேற, திருமணம் காணவந்தோர் அனைவருக்கும் செம்பொருள் ஒதலை அருளியது இத்திருப்பதிகம்.


520 காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
KAATHALAAGI KASITHU KANEER MALGI

With internal mind place love emanated form and then the eye tears are flooded form shedding


ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
VOOTHUVAAR THAMAI NAN NERIKKU YUIPATHU

Those disciples who are chanted lord Siva and that disciples are allowed to enter into mukthi way of life

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
VEETHAMNAAN GINUM MEI PORUL AAVATHU

In the four veethaas the true matter form existing lord Siva


நாதன் நாமம் நமச்சி வாயவே.
NAATHAN NAAMAM NAMACHIVAAYA VEEA

And then lord Siva is leader to all whose sacred name is na ma si va ya that five letter manthraa ward if you chant it and then it will bring all the benefits in life


உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகித் தன்னை ஓதுபவர்களை, முத்தி நெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குவனும் அனைவருக்கும் தலைவனாக சிவபெருமானின் திருநாமம் நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும். ந – திருவடி, ம – உதரம், சி – தோல், வா– முகம், யா – முடி.
01


521. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
NAMBU VAAR AVAR NAAVIN NAVITRINAAL

Lord Siva’s sacred feet are considered as guiding one
And which is firmly believed by disciples and then five letter manthraa ward is all the time chanting with tongue


வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
VAMBU NAAN MALAR VAAR MATHU VOPPATHU

Which will give happiness just like the fragrance filled the flower plantations emanating honey form taste in life


செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
SEM PONAAR THILAGAM YULAGUKKU EALLAAM

To all the worlds the red color fore head place adorned thilak form of lord Siva


நம்பன் நாமம் நமச்சி வாயவே.
NAMBAN NAAMAM NAMASIVAAYAVEEA

The sacred name of lord Siva is namasivaya that five letter world ward alone solve all the problems in life


சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள், திருவைந்ழுத்தைத் தங்கன் நாவினால் உச்சரித்தால், நறுமணம் கமழும் நன் மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது. எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான ‘நமச்சிவாய” என்னும் ;திருவைந்தெழுத்தே ஆகும்.
02


522. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
NEKKUL AARVAM MIGA PERUGI NINAINTHU

The mind melted form lord Siva is all the time thinking


தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
AKKU MAALAI KONDU ANG KAIYIL EANNUVAAR

And then lovely hand place the ruthraatcha seeds are carried form chanting manthraas repeatedly 108 times or 1008 time chanting as per rule form chanting it


தக்க வானவ ராத்தகு விப்பது
THAKKA VAANAVARAA THGU VIPPATHU

And then that effect of chanting is put you in deevaa land


நக்கன் நாமம் நமச்சி வாயவே.
NAKKAN NAAMAM NAMASIVAAYA VEEA

And that lord Siva who is in nirvana form and then chanting his name namassivaya that five letter ward alone give you all the things in this world


உள்ளம் நெகிழ்ந்து அன்பு மிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத், தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது, சிவ பெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தேயாகும்
03


523. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
EAYAMAN THOOTHARUM ANJUVAAR EANN SOLLAAL

The ema diplomats will got afraid of to go near you if you chanted five letter ward


நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
NAYAM VANTHU VOOTHA vallaar thamani naninaal

That way giving happiness to mind that five letter ward is chanted


நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
Neyamanthaan nenaivaarku eani yaan netri

Those disciples who are daily chanting him with manthra ward to whom lord Siva is so intimate and then doing all the betterment in life


நயனன் நாமம் நமச்சி வாயவே.
Nayanan naamam namachivaayaveea

And that fore head eye possessed lord Siva’s name is namasivaya five letter ward


இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான். தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும், நெற்றிக் கண்ணை உடையவனுமான சிவபெருமானின், திருநாமம் நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும்.
04


524. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
Kolvaar reeanum gunam pala namaigal

The killing work doing persons and then good habits are not possessed and good charter is not possessed those persons are


இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
Eallaareea reanum eayambuvaar adiyin

If they chanted five letter ward


எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
Eallaa th theengaiyum neekuvaar eann paraal

That will remove all types of problems in life which is stated by good people


நல்லார் நாமம் நமச்சி வாயவே.
Nallaar naamam nama chivaaya veea

And that specialty filled ward is namasivaya only


கொலைத் தொழிலில் நற்குணமும், பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும், ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களே ஆனால், எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர். அத்தகைய சிறப்புடையது, எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்n;பயரான நமச்சிவாய என்பதாகும்.
05
525. மந்த ரம்மன பாவங்கள் மேவிய
Mantharam ana paavangal meeviya

The manthraa hill amount of sins are did persons


பந்த னையவர் தாமும் பகர்வரேல்
Panthanaiavar thaamum pagervarreel

And then relationship bond tied persons and then those persons are chanted five letter ward


சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
Sinthum val venai selvamum malgumaal

Those persons wild bad deeds vanished and then wealth will be filled


நந்தி நாமம் நமச்சி வாயவே.
Nanthi naamam namachivaayaveea

If chanted five letter ward namachivaaya

மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து, பாசங்களால் கட்டுண்டவர்களும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களே யானால், அவர்களது கொடிய வினைகள் தீர்ந்து போகும். அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய என்பதாகும்.
06


526. நரக மேழ்புக நாடின ராயினும்
Naragam eeal pugal naadinar aayinum

To go to seven hells that form of sinners


உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
Yurai sseivaayinar aayin yuruthirar

If they chanted devotion filled form of five letter ward they will be going in the ruruthira demon forces form


விரவி யேபுகு வித்திடு மென்பரால்
Veravee yeea pugu vithidu eanbaraal

And then live with them


வரதன் நாமம் நமச்சி வாயவே.
Varathan naamam namachivaayaveea

And then lord Siva’s disciples are expecting boons will be given and that manthra ward is nama sivaaya


ஏழு நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகள் ஆனாலும், திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்துவசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தேழுத்தே ஆகும்.
07


527. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
Ealangi mannai eadutha adulkkal meeal

The sri langa king ravana who is tried to lift kaiyilai hills


தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
Thalamkol kaal veral sangaran yoonrallum

Instantly lord Siva stamped him under the hills


மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
Malangi vaai moli seithavan yui vagai

Who has cried with pain and then to give upliftment in life and then all the time doing good to all by lord Siva


நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
Nalam kol naamam nama chivaaya veea

Whose sacred name is five letter ward is nama sivaaya only


இலங்கை மன்னனாகிய இராவணன் திருக் கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல, சங்கரன் தன் காற் பெருவிரலை; ஊன்றவும், கயிலையின் கீழ் நெருக் குண்டான். அவன் வாய்விட்ட அலற, அவனுக்கு உய்யும் நெறி அருளி, நன்மை செய்வதையே இயல்பாக உடையது சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தாகும்.
08


528. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
Bothan pothena kannanum annal than

In the lotus place seated bharma and then lotus flower form broad eyes are possessed thirumal who are tried to search


பாதந் தான்முடி நேடிய பண்பராய்
Baganthaan mudi neeadiya pan baraai

Lord Siva’s feet and head but failed in their act


யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
Yaathum kaan barithaagi alarnthaver

And did not see it with their visual eyes


ஓதும் நாமம் நமச்சி வாயவே.
Voothum naamam namachivaayaveea

And then they kept away their ego and then chanted the five letter ward namasivaya and then got elevated place in life


தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும், எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் தேட முயற்சித்து, காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர், அவர்கள்; நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தேயாகும்.
09


529. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
Kangi mandaiyar kaiyil yunn kaiyergal

The begging bowel named mandai from consuming gruel and those buthaas and then in the hand place accepting the food and then consumed it those samanaass


வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
Ven sol minder veravilla eanbaraal

They are all thetime talking wild wards only and they have not got boon to chant lord Siva’s name


விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
Vingai andergal veenda amuthu sei

The upper ward deevaas are requested so that to save them from destruction lord Siva consumed sea place emanated poison as food form


நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
Nangu yul kandan nama chivaaya veea

That poison stagnated throat possessed lord Siva’s name is namasivaaya


மண்டை என்னும் ஒருவிதப் பாத்திரத்தி;ல் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும், கைகளையே பாத்திரமாகக் கொண்டு, அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர். தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு, அதைக் கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமம் நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.
10


530. நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
Nanthi naamam nama chivaaya eannum

Lord Siva’s yet another name is nanthi hose sacred name is namasivaya and that five letter ward


சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
Santhaiyaal tamil gaana sambanthan sol

Ganaasambanther who has musical notes are filled form singing it


சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
Sinthaiyaal magilthu eaatha vallaar eallaam

And then those disciples who are singing it with mind filled happiness form and that disciples are


பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
Bantha paasam arukka vallaargallea

Possessed capacity to terminate the relationship bond


நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய, நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்தைச், சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன், அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ் ஓதுவல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர்.
11
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam

September 10, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: