OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THITU MALA BAADI

ganesheit September 7, 2020

048 திருமழபாடி
THITU MALA BAADI


பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM

509 அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
ANG KAI YAAR ALALAN ALAGAAR SADAI

In the lovely hand place lord Siva carried fire pot and then lovely hair place The River Ganges are carried form


கங்கை யான்கட வுள்ளிட மேவிய
GANGAIYAAN KADAYULEADAM MEEVIYA

And then lord Siva surpassed place material and then time and then ever permanent form lord Siva existing in this world


மங்கை யானுறை யும்மழ பாடியைத்
MANGAIYAAN YURAIYUM MALA BADI

And then in his sacred left part of body place lord Siva carried lords yumaadevi and then in this form seated in thiru malabadi temple place


தங்கை யாற்றொழு வார்தக வாளரே.
THAM KAIYAAL THOLUVAAR THAGA VAALAREEA

Those disciples who are praying twin form of lord Siva are good mannerism filled person in this world
இறைவன் அழகிய கையில் நெருப்பு ஏந்தியவன். அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி , இடம், பொருள், காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான், தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக், கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர்.
01


510. விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
VITHIYUMAAM VELAIYAAM OLI AARNTHATHOOR

Ganges are carried on the hair place of lord Siva who’s sacred feet are to all souls destiny form and that destiny effect form and then mingled with lord Siva’s golden rays and then attained mukthi


கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
GATHIYUMAAM KASI VAAM VASI AATRAMAA

And that destiny form and then converted mind in to melted form and attracted by lord Siva and then Siva gaana way of life


மதியு மாம்வலி யாம்மழ பாடியுள்
MATHIYUMAAM VALIYAAM MALA BAADIYUL

And that form of lord Siva seated in thiru mala baadi temple place who’s sacred feet are to be prayed


நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.
NATHIYAM THOOI SADAI NAATHA NAL PAATHAMEEA

And that river adorned sacred hair place of lord Siva’s feet are to be prayed
கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும், அவ்விதி யின் விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம். மனத்தைக் கசியவைத்துத் தன் வயப் படுத்தும் சிவஞானத்தை விளைவிக்கும் திருமழபாடியில் வீற்றிருந்தருளும் இறைவனின் திருவடிகளை வழிபடுவீர் களாக.
02


511. முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
MULAVINAAN MUTHU KAADU YURAI PEI GANAM

Lord Siva who has carried mulayu muscal instrument on his hands and then in the burial ground place dancing the ghost forces lord Siva mingled form dancing


குழுவி னான்குல வுங்கையி லேந்திய
KULUVINAAN KULAYUM KAIYIL EANTHIYA

And in that dancing form lord Siva carried on the hand place


மழுவி னானுறை யும்மழ பாடியைத்
MALUVINAAN YURAIYUM MALA BAADIYAI

Malu battle force carried form dwelling in thiru malabadi temple place


தொழுமின் நுந்துய ரானவை தீரவே.
THOLUMIN YUM THUYAR AANAVAI THEERAVEEA

Where you may pray and then praised lord Siva so as to remove sorrow in life
இறைவன் முழவு என்னும் வாத்தியத்தை உடையவன். சுடுகாட்டில் உறையும் பேய்க் கணத்துடன் குலவி நடனம் புரிபவன். அழகிய கையில் மழுப்படையை உடையவன். அப்பெருமான் வீற்றிருந்து அருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படித் தொழுது போற்றுங்கள்.
03


512. கலையி னான்மறை யான்கதி யாகிய
KALAIYINAAN MARAIYAAN GATHI YAAGIYA

Lord siva in 64 arts form existing and then four veethaas form and then all the souls are surrendering place is kaiyilai hills where lord Siva dwelling


மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
MALAIYINAAN MARUVAAR PURAAM MOON RU EAITHA

The opponent assuraas three castles are fired by fire arrow shot form


சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
SELAIYINAAN SEAR THIRU MALA BADIYAI

In that way lord Siva carried meru hills as bow form carried on his hands and that form of lord Siva seated in thiru malabaadi temple place


தலையி னால்வணங் கத்தவ மாகுமே.
THALAIYINAAL VANAGATH THAVAM AAGUMEEA

Where we are bowed head form prayed so that our penance effect enhanced form
இறைவன் ஆயகலைகள் அறுபத்து நான்கு ஆனவர். நான்கு மறைகள் ஆகியவர். உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவர். பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக் கணையை ஏவிய, மேரு மலையை வில்லாக உடையவர்;. அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால்வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும்.
04


513. நல்வி னைப்பயன் நான்மறை யின்பொருள்
NAL VENAI PAAYANAAN MARAIYIN PORUL

Lord Siva is good deed effect form appearing in this world and then four veethaas meaning form existing in this world


கல்வி யாயக ருத்தன் உருத்திரன்
KALVI YAAYA KARUTHAN YURUTHIRAN

And then the effect of education that concept and then inner meaning form existing in this world and then lord ruthraa form wandering in this world


செல்வன் மேய திருமழ பாடியைப்
SELVAN MEEYATHIRU MALA PAADIYAI

And rich young chap form lord Siva seated in thiru malabaadi temple place


புல்கி யேத்தும் அதுபுக ழாகுமே.
PULGI EAATHUM ATHU PUGAL AAGUMEEA

Where you may go and then pray and then praise him and that prayer will give you glory filled place in this life
இறைவன் நல்வினையின் பயனாகியவன். நான்மறையின் பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன். உருத்திரனாகத் திகழ்பவன். அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் போற்றுங்கள். அது உமக்குப் புகழ் தரும்.
05


514. நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
NEEDINAAR YULAGUKKU YUIRAAI NINRAAN

This spread over land lord Siva is appearing soul form


ஆடி னானெரி கானிடை மாநடம்
AADINAAN EARI KAAN EADAI MAANAADAM

And that form of lord Siva dancing in the burial ground place


பாடி னாரிசை மாமழ பாடியை
PAADINAAR EASAI MALABAADIYAI

The disciples are with musical notes are filled form singing prayer songs in thiru mala badi temple place


நாடி னார்க்கில்லை நல்குர வானவே.
NAADINAARKU EALLAI NAAL GARAYU VAANAVEEA

Those disciples who are going pro with lord Siva and that disciples will not affect by poverty
பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திரு நடனம் ஆடுபவன். பக்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை
06


515. மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
MINNINAR EADAIYAAL ORU BAGAMAAI

The lighting like waist are possessed lords Yumaadevi is taken left part of lord Siva’s body


மன்னி னானுறை மாமழ பாடியைப்
MANNINAAN YURAI MALA BAADIYAI

And then lord Siva seated permanent form in thiru malabaadi temple place


பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
PANNINAAR EASAI YAAL VALIBAADU SEI

With musical notes are filled form praying disciples


துன்னி னார்வினை யாயின வோயுமே
THUNNINAAR VENAI YAAYINA VOOYUMEEA.

Who’s bad deeds will be removed
மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை, இசைப் பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினையாவும் நீங்கும்.
07


516. தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
THEN EALANGAIYAR MANAN SELU VARAI

The southern part situated Sri langa king Ravana who is stamped under the kaiyilai hills


தன்னி லங்க அடர்த்தருள் செய்தவன்
THANIL ANGU ADERTHARUL SEITHAVAN

And then after realizing his fault and then samaveetha to appease lord Siva and then got happy and blessed him long life


மன்னி லங்கிய மாமழ பாடியை
MAN EAALANGIYA MAA MALA BAADIYAI

In that form lord Siva seated thiru malabadi temple place permanently


உன்னி லங்க வுறுபிணி யில்லையே.
YUNNIL ANGA YURU PINI EALLAIYEEA

So that in this body place existing hardened deceases will be removed
இராவணனைச் செழுமையான கயிலை மலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான். அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற, உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும்.
08


517. திருவின் நாயக னுஞ்செழுந் தாமரை
THIRU VIN NAAYAAGANUM SELUM THAAMARAI

The wealth god lakshmi’s husband is thiru maal and then rich lotus place seated bharma


மருவி னானுந் தொழத்தழல் மாண்பமர்
MARUVINAANUM THOLATH ALAL MAAN BAMAR

Who are ultimately given up ego and then prayed under his feet and then lord Siva appeared fire pole form


உருவி னானுறை யும்மழ பாடியைப்
YURU VINAAN YURAIYUM MALA BAADIYAI

And that fire glow form appearing lord Siva and whose dwelling place is thiru malabaaadi


பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.
PARAVINAAR VENAI PATRU ARUPPAR GALLEA

Where lord Siva is prayed and then praised by prayer songs those disciples lust attachment will be removed
திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்து அருளும் பிரமனும், தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான், வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர்.
09


518. நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
NALIYUM NANRU ARIYAACH SAMAN SAAKIYAR

The goodness is not known those samanaas and buthaas


வலிய சொல்லினும் மாமழ பாடியுள்
VALIYA SOLLINUM MAA MALA BAAADIYUL

Who are talked bad wards to give pain to others those wards are disregarded and then pray in the thiru malabadi temple place


ஒலிசெய் வார்கழ லான்திறம் உள்கவே
OLI SEIVAAR KALALAAN THIRAM YULGAVEEA

Where lord Siva adorned the sound raising anklet in the leg place and that form of lord Siva is put in meditation and pray him


மெலியும் நம்முடன் மேல்வினை யானவே.
MELIYUM NAM MUDAN MEAL VENAAI YAANAVEEA

So that here after the bad deeds on our part will be removed
நன்மை அறியாத சமணர்களும், புத்தர்களும் பிறரை வருத்தும் மொழிகளை வலிய உரைத்தாலும், அவற்றைப் பொருளாகக் கொள்ளாது, திருமடிபாடியில் வீரக்கழல்கள் ஒலிக்கத் திரு நடனம் புரியும் சிவபெருமானின் அருட் செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினை யாவும் மெலிந்து அழியும்
10


519. மந்தம் உந்து பொழில்மழ பாடியுள்
MANTHAM YUNTHU POLIL MALA BAADIYUL

The breezes are wandering in the thiru malabadi temple place those flower plantations are covered place it is


எந்தை சந்தம் இனிதுகந் தேத்துவான்
EANTHAAI SANTHAM EANITHU YUGANTHU EAATHUVAAAN

Lord Siva who is my father and then prayed with musical notes are filled form singing prayer sings


கந்த மார்கடற் காழியுள் ஞானசம்
GANTHAMAAR KADAL KAALIYUL GAANA SAM

The fragrance filled seergaali place flowing sea shore plantations covered place descended gaana sambanther


பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.
BANTHAN MAALAI VALLAARKU EALLAI

தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானைச், சந்தம் பொலியும் இசைப் பாடல்களால் போற்றி, வாசனை வீசும் கட:லுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
11


திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam
OM THIRU CHITRAM BALAM

September 7, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: