OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEN KAADU

ganesheit March 13, 2020

2.61 திருவெண்காடு 197
THIRU VEN KAADU


PLACE HISTORY SEE DECADENO 184
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM


655 உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
Yundaai nangai yumaiyor panga eanru yulgith

நஞ்சை உண்டவனே, உமைபங்கா என்று கூறி மனத்தில் தியானித்து
LORD Siva you have consumed poison and then half part is given to lords parvathi in this way lard Siva is put in meditation


தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
Thondaai thiriyum adiyaar thangal thuyaramgal

தொண்டராகிய பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள்
Those disciples who are doing menial service under lord Siva’s feet whose sorrows are


அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
Andaa vannam aruppaan eanthai yoor polum

நெருங்கா வண்ணம் அவற்றை தீர்த்தருளும் எந்தை ஊர்
Not to be approached form which is removed by lord Siva


வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே.
VEN THAAMARAI MEEAL KARU VANDU YAAL SEI VEN KAADEEA

வெண் தாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல
ஒளித்துத் தேனுண்ணும் திருவெண்காடு ஆகும்
In the white lotus flower place dark color honey bees are raising yawl like musical sound raising form sucking honey from the flowers those place is thiru ven kaadu
01


656 நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
NAATHAN NAMAI AALVAAN EANRU NAVINRU EEAATHI

நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன் பெயரைப் பலமுறையும் கூறி ஏத்திப் பல நாள்கள்
Lord Siva who is ruling us in that way lord Siva’s name is so many times chanting and then praising so many days


பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
PAATHAM PANNAAL PANIYUM ADIYAAR THANGAL MEEAL

திருவடிகளைப் பரவும் அடியவர்க்கும் வரும்


ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
EEATHAM THEERA EARUNTHAAN VAALUM YOOR POLUM

குற்றங்களைத் தீர்த்து அருள எழுந்தருளியிருப்பவர் ஊர்
So that our sins are removing form lord Siva descended here and then whose dwelling place is


வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே.
VETHATHU OLIYAAL KILI SOL PAYILUM VEN KAADEEA

வேத ஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்
Where veetha chanting sound is repeating the parrot and that place is thiru ven kaadu
02


657 தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
THANN MUTHU ARUMBA THADA MOON RUDAIYAAN THANAI YUNNI

குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து
The cool pearls are germinated three temple ponds are considered as sacred water of lord Siva and in that way lord Siva is thinking


கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
KANN MUTHU ARUMBA KALAL SEEVADI KAI THOLUVAARGAL

கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கை தொழுவார்கள்
And then disciples are from the eye place water drop lets are emanated form of praying lord Siva’s feet and that disciples are


உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
YUMM MUTHU ARUMBA YUVAGAI THARU VAAN YOOR POLUM

உள்ளங்களில் முத்துக்களை போன்ற தூய நன்மை தோன்ற உவகைத் தரும் இறைவனது ஊர்
And then whose mind place pearls form pure benefits are emanated firm happiness giving place is


வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.
VENN MUTHU ARUVI PUNAL VANTHU ALAKKUM VEN KAADEEA

Where the white pearls form water falls are bringing water that place is thiru ven kaadu
வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்

03
658 நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
NARAIYAAR VANTHU NAALUM KURUGI NANUGAA MUNN

தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்கு முன்
In the gray hair emanated and then old age sets in before that body going weak


உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
YURAIYAAR VEERAA YULGU VAARGAL YULLATHEEA

உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து
And then those persons talking wards are not in co-ordinate form


கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
KARAI YAA VANAM KANDAAN MEEYUM YOOR POLUM

கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர்
Before that in the mind place leaned and then melted form lord Siva created us in this place whose dwelling place is


விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே.
VERAIYAAR KAMALATHU ANNAM MARUYUM VEN KAADEEA

மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கி மகிழும் திருவெண்காடாகும்
Where the lotus fragrance filled place Anna birds are staying and then got happy those place is thiru ven kaadu
04


659 பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
PILLAI PERAIYUM PUNALLUM SOODUM PEMMAAN EANRU

இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று
The young stopped moon and then ganges are adorned on the hair place that form of lord Siva and then in that way praying


றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
YULLATHU YULLI THOLUVAAR THANGAL YURU NOIGAL

மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத்
and those persons deceases are big deceases are kept away from praying persons to whom lord Siva put his grace on them those person’s leader is dwelling place it is


தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
THALLI POGA ARULLUM THALAIVAN YOOR POOLUM

தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர்
And then kept away the deceases from this place and that leader place it is


வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.
VELLAI SURI SANGU KULAVI THIRIYUM VEN KAADEEA

வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித் திரியும் திருவெண்காடாகும்
Where white conches are wandering form of internal lines are possessed form of place is thiru ven kaadu
05


660 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
OLI KOL MEENI YUDAIYAAI YUMBER AALI EANRU

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே உம்பர்களை ஆள்பவனே
The light filled form of golden color body possessed lord Siva and then upper world deevaas are ruling form


றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்
ALIYAR AAGI ALUTHUTRU YOORUM ADIYAAR KAT KU

என்று அன்புடையவராய் அமுது பொருந்தும் அடியவர்க்கு
In that love form weeping and then approaching lord Siva


கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
EALIYAAN AMARARKU ARIYAAN VAALUM YOOR POLUM

எளியவன் தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர்
And that form of lord Siva is simple person to us but rare person to deevaas whose hamlet is


வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே
VELIYA YURUVATH THAANAI VANANGUM VENN KAADEEA
.
வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்
Where the white color elephant named iraavatham praying form and then got grace from lord Siva and that place is thiru ven kaadu
06


661 கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்
KEEALVITH THANAIYA KOOTRAM THANAI KURIP PINAAL

உயிர் கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை சிவபிரானை நினையும் குறிப்பினால்
The seed form of death god ema who is trying to corner the margandaya life but lord Siva with his thinking mind


மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
MAAL VITHU AVANAI MAGILTHU ANGU EEATHA MAANIKAAI

மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வோடு ஏத்திய சுவேத கேது முனிவரை
Kicked and then killed the death god ema and then that sweatha saint happily praised lord Siva


ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
AAL VITHU AMARER YULAGAM ALIPPAAN YOOR POLUM

அமருலகம் ஆளச் செய்து அணி செய்தவன் ஊர்
Who has afterwards allowed to rule the upper world and that decorated form of lord Siva’s dwelling place


வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.
VEELVI PUGAIYAAL VAANAM EARUL KOOR VEN KAADEEA

வேள்விப் புகையில் வானம் இருள் கூர்கின்ற வெண்காடு ஆகும்
Where yaaga fumes are going upward and then emanated darkness those place is thiru ven kaadu
07


662 வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
VARAIYAAR MUN KAI MALAIYAAL VERUVA VARAI YOONRI

வளையலணிந்த முன் கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த கயிலை மலையைக் கால்களால் ஊன்றி நெரித்து
The bangles are adorned fore hand possessed lords parvathi got afraid of ravana who has lifted the kaiyilai hills but lord Siva stamped him under the hills and then in this word


முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
MULAIYAAR MATHIYAM SOODI EANRU MUPPOOTHUM

முளைமதி சூடிய இறைவனே என அடியவர் முப்போதும்
disciples are praise him as the germinated form of moon adorned on in the hair place and then in this way three times a day


இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
EALAIYAATHU EAATHA EARUN THAAN EANTHAI YOOR POOLUM

தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர்
Daily praying and then praising lord Siva descended temple place it is


விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.
VELAI YAAR KALANI PALANAM SOOL THA VEN KAADEEA

விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்
Where the well grown paddy fields are filled place is thiru ven kaadu
08


663 கரியா னோடு கமல மலரான் காணாமை
KARIYAN NODU KAMALA MALARAAN KAANAAMAI

கரிய திருமாலும் கமல மலரில் உறையும் நான்முகனும் அடிமுடி காண இயலாதவாறு
The dark color thirumal and lotus flower place dwelling bharama who are unable to see lord Siva’s feet and head


எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்
EARIYAAI NIMIRNTHA EANGAL PERUMAAN EANBAAR KATKU

எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே என்பார்கட்கு
But afterwards begged under lord Siva’s feet and then after wards lord Siva appeared in fire pole form and in that way praying disciples


குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
YURIYAAN AMARARKU ARIYAAN VAALUM YOOR POLUM

உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர்
Lord Siva is rightful god to them and then to those deevaas lord Siva is rare form to them


விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.
VERIYAAR POLILIN VANDU PAADUM VEN KAADEEA

வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்
Where the bloomed flower plants place honey bees are singing place is thiru ven kaadu
09


664 பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
PAADUM ADIYAAR PALARUM KOODI PARINTHU EEATHA

பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப் பரிவுடன் ஏத்த
Where singing disciples are clubbed form and then melted form praying and then praising lord Siva


ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
AADUM ARAVAM ASAITHA PERUMAAN ARIVINRI

ஆடும் பாம்பை இடையில் கட்டியுள்ளவனாகி
And then lord Siva who has tied the snake in the waist place as belt form


மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
MOODAM YUDAIYA SAMAN SAAKIYAR GAL YUNARAATHA

அறிவற்ற மூடர்களாகிய சமண சாக்கியர்கள் உணர இயலாத
The ignorance filled idiots form of samanaas and then buthas who are nor realized lord Siva in the mind place


வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.
VEEDAM YUDAIYA PERUMAAN PATHIYAAM VEN KAADEEA

வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும்
And that abstract form appearance possessed lord Siva whose temple place is thiru ven kaadu
10


665 விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
VEDAIYAAR KODIYAAN MEEVI YURAIYUM VEN KAATTAAI

விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை
The bull emblem studded flag carried in the hand place by lord Siva whose dwelling place is thiru venkaadu


கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
KADAIYAAR MAADAM KALANTHU THONRUM KAALIYAAN

கடை வாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன்
The good big entrances are possessed storied buildings are possessed place is seergaali where descended ganasambanther


நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
NADAIYAAR EANN SOL GAANA SAMBANTHAN TAMIL VALLAAR KU

ஒழுக்க நெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைந்த இப்பதிகத் தமிழை ஓதவல்லார்களை
The above songs are character filled and then good wards are clubbed form composed the above songs and then those disciples who are daily chanting it


கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே.
ADAIYAA VENAIGAL AMARA LOGAM AALVAAREEA

வினைகள் அடையா அமர் அமர லோகம் ஆள்வர்
And that disciples are not affected by bad deeds and then ultimately rule the upper world
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

March 13, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: