THIRU THALAI SANG KAADU
2.55 திருத்தலைச்சங்காடு 191
THIRU THALAI SANG KAADU
THIS is river Cauvery 45th southern side temple. Here thirugaana sambanther sang a decade. Now it is called in the name of thalaiseng kaadu. Here thirumal prayed and then got conch from lord Siva
தல விளக்கம் : தலை சையந்தணர்கள் எல்லால் பெருவிருப்பால் வந்து உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத்தொண்டரோடும் ஆளுடைய பெருந்தகையாரை எதிர்கொண்டு வண்ங்கி அழைத்துச் சென்றனர். அங்குற்று பெருந்திருமாடக் கோயிலை எய்தி அருமறையப் பொருளானாரைப் பணிந்து அழகிய நல்ல வலம் புரிச்சங்கின் வடிவில் ஓங்கார ரூபமாக விளங்கும் இறைவர் சார்ந்து விளங்குமாற்றைப் பாடியருளியது இப்பதிகம். காவிரி தென்கரை 45ஆம் திருத்தலம். ஞானசம்பந்தர் தலைச்செங்காடு என வழங்கப்படுகிறது. திருமால் வழிபட்டு பாஞ்சசன்னியம் என்னும் சங்கு பெற்ற தலம்.
சுவாமி : சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர்
அம்பிகை : சௌந்தர நாயகி
தலமரம் : புரச மரம்
தீர்த்தம் : சங்கு தீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு)
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
590 நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்
Nalla sanga venn kulaiyum thodum peithoor naal veetham
அழகிய சங்க வெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே
The lovely form of ear ornaments named sagam ven kulai and then thoodu adorned and then four veethaas are without any doubt blessed form gave this world
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
Sola sangai eallaatheer sudu kaadu allaal karuthaatheer
சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே
You have taken only burial ground as your dancing place and nothing else
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக்
குயிலாலுந்
Kulai sengaai paing kamugin kulir kolsolai kuil aalum
நீர் குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய
The water filled bunches form grown red color fruits filled the tree plantations where coco birds are singing form of and those specialty filled
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.
Thalai sangai koyilleea koyillaga thaalntheereea
தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்
Place thalai sangai temple is accepted as your dwelling place
01
591 துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
THUNI MALGU KOOVANAMUM THOOLUM KAATI THONDU AANDEER
துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்தி கோலம் காட்டி ஆட்கொண்டவரே
With cotton cloth made loin cloths adorned form in the waist place and then skin dress adorned form appearing to the whole world and then taken your disciples are in slave form
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
MANIM MALGU GANDATHEER ANDERKU EALLAAM MAAN BAANEER
நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே தேவர்களுள் மாட்சிமை உடையவரே
The blue color ruby diamond form of throat possessed lord Siva and then devas leader you are
*பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
PENNI MALGU NOOL MAARBER PEERIYOOR VAALUM THALAI SAMGAI
நீர் முறுக்கியப் பூணுதல் மார்பிளராகிய அந்தணர் வாழும் தலைசங்கையில் விளங்கும்
The sacred three knotted thread adorned in the bosom place where bharamins are living place is thalai sangai
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
ANI MANGU KOYILLEEA KOYILLAAGA AMARNTHEEREEA
அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்
Which is lovely temple is accepted as your temple place and then seated there
02
- பிணி – பிணித்தல்
592 சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
SEER KONDA PAADALEER SENKAN VELL EEATRU YOORTIYEER
சிறப்பு மிக்க பாடல்களைப் பாடுபவரே சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே
The specialty filled songs are singing and then red color eyes are possessed thirumal is converted himself as bull form and then then lord Siva used as his travelling medium
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
NEER KONDUM POO KONDUM NEENGAA THONDAR NINRU EEATHA
நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட
Disciples are sacred water and flowers are carried on the hand place and then daily praying under your feet
தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
THAAR KONDA NOOL MAARBER THAKOOR VAALUM THALAI SANGAI
மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே நீர் தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள
Lord Siva you have adorned the flower garland and then sacred three knotted thread where good people are living place
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.
EEAAR KONDA KOYILLEEA KOYILLAAGA EARUNTHEEREEA
அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்
Thalai sangai temple has been accepted as your dwelling place
03
593 வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
VEEDAM SOOL KOLGAIYEER VEENDI NEENDA VENN THINGAL
தாமே விரும்பியப் பற்பல வடிவங்களோடு வ்ரும் இயல்பினரே! நீண்ட வெண்திங்களாகிய
Lord Siva you have been willing form taking so many appearances in this world and those mannerism filled god you are and then curved form of white moon is adorned
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
VOODAM SOOL GANGAIYUM YUCHI VAITHEER THALAI SANGAI
ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே நீர் தலைச்சங்கையில்
As boat form and then which is floating form Ganges are adorned in your hair place and then in thalai sangai place
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
KOODAM SOOL MANDABAMUM KULAAYA VASAL KODI THOORUM
கூடம் மண்டபம் வாயிலில் கொடி தோன்றும் மாடம்
Where roof form towers mandabaas and flag hosted mansions
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
MAADAM SOOL KOYILEEA KOYILAAGA MAGILTHEEREEA
மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
And then high raised buildings covered form lord Siva you have taken temple as your dwelling place
04
594 சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
SOOLAM SEER KAIYINEER SUNNA VENNEERU AADALEER
சூலம் ஏந்திய கையை உடையவரே பொடியாகிய வெண்ணீற்றைப் பூசி ஆடுபவரே
The soolam battle force carried on the hand place and then sacred ashes are adorned all over the body and then dancing all the time
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
NEELAM SEEAR GANDATHEER NEENDA SADAI MEEAL NEER EEATREER
நீலகண்டரே நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே
Lord Siva your throat is blue color diamond form appearing and then long hair place Ganges are adorned form
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்
AALAM SEEAR THAN KAANAL ANNAM MANNUM THALAI SANGAI
நீர் வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில்
And then in the water bodies are filled place which is cool plantations covered one where anna birds are dwelling form of place is thalai sangai
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே
KOOLAM SEEAR KOYILLEEA KOYILLAAGA KONDEEREEA.
உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்
Where established lovely temple place is accepted as your temple and then dwelling here
05
595 நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
NEELA NEEROODU AGAASAM ANALKAAL AAGI NINRU EAINTHU
நிலம் நீர் ஆகாயம் அனல் காற்று ஆகிய ஐம்பூத வடிவாய் நின்று
Lord Siva you are appearing five vast forces form in this world such as land water fire wind and space form
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
PULA NEERMAI PURAM KANDAAR POKKAM SEIYAAR POOTRU VOOVAAR
ஐம்புலன்களை வென்று நிற்பவரே பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே
Five sense organs are own over form of lord Siva and then without any lie those persons prayers are accepted by lord Siva
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
SALA NEETHAR ALLAATHAAR THAKKOOR VAALUM THALAI SANGAI
நீர் வஞ்சமும் இழிசெயல்களும் இல்லாதோர்க்கள் வாழும் தலைச்சங்கையில்
In the thalai sangai temple surrounding places living people are without any vengeance form of thinking and low graded thinking form living
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.
NALA NEERA KOYILLEEA KOIL AAGA NAYANTHEEREEA
அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்
And those place lord Siva you have dwelling in the temple
06
596 அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
ADI PULGU PAING KALALGAL AARPA PEERTHOOR ANAL EEANTHI
திருவடியிற் பொருந்திய கழல் ஆர்த்த அனல் ஏந்தி
Lord Siva in the leg place anklets are adorned form and then fire pot carried in the hand place and then
கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
KODI PULGU MEN SAAYAL YUMAIYOOR BAAGAM KOODINEER
கொடி போன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவரே
Lords yumaadevi has possessed lean creeper plant like body and who is given left part of his body
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
PODI PULGU NOOL MAARBAR PURI NOOLAAR THALAI SANGAI
நீர் வெண்பொடி பூசிப் பூணூல் அணிந்த மார்பினராய்
முப்புரி நூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில்
And then lord Siva who has adorned white ashes all over the body and three knotted thread adorned in the bosom place and then bharmins are living place is thalai sangai
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
KADI PULGU KOOYILLEEA KOILAAGA KALANTHEEREEA
விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாக கொண்டுள்ளீர்
Those place is fragrance filled temple lord Siva you have accepted as your dwelling place
07
597 திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
THERAI YAARNTHA MAA KADAL SOOL THEN EALANGAI KOOMAANAI
திரைகளோடு கூடிய பெரிய கடல் சூழ்ந்த இலங்கை மன்னனை
The waves are encircled the sri langa place king ravana
வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
VARAI AARNTHA THOOAL ADARA VERALLAAL YOONRUM MAANBINEER
அவனுடைய மலை போன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவிரல் உடையவரே
Whose hillock like shoulders are smashed form lord Siva you have put on the kaiyilai hills put your big leg finger
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
ARAI YAARTHA MEGALAI YEER ANTHA NAALAR THALAI SANGAI
இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே நீர் அந்தணாளர் பல்கி வாழும் தலைச்சங்கையில்
Lords yumaadevi who has adorned megalai ornament in the waist place and then taken left part of lord Siva’s body and then in the thalai sangam temple place where bharmins are abundant number form living
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.
NERAI YAANTHA KOYILEEA KOYILLAAGA NENAINTHEEREEA
முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்
In those place as per rule established the temple has been accepted as your temple
08
598 பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
PAAL YOONGU PAAM BANAI MEEALLAANUM PAIN THAA MARAIYAANUM
பாயாக அமைந்த பாம்பணை மேல் பள்ளி கொள்ளும் திருமாலும் பசிய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் சென்று
The mat form of snake coiled body place sleeping thirumal and then lust green leaves are filled the lotus flower pond place dwelling bharma and then who are
போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
PEEI YOMGIYAI KAANGILAAR PURAM NINRU VOORAAR POTRU VOOVAAR
காண இயலாதவரே புறச் சமயங்களில் நில்லாத அகச்சமயங்களால் அறிந்து போற்றப்படுபவரே
Unable to see your feet and head and then external material form of seeing the god where god not available but those religion meditation and penance persons are realizing lord Siva internally and that form pray and then praised lord Siva
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
THEE YOONGU MARAIYAALAR THEGALLUM SELVATH THALAI SANGAI
முத்தீ வளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில்
In thalai sangai temple place where three types of yagaa fire developing rich bharamins are living place it is
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
SEEI YOONGU KOYILLEEA KOYILLAAGA SEERNTHEEREEA
உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்
Those wealth filled place established temple is accepted as your dwelling place
09
599 அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
ALAIYAARUM PUNAL THURANTHA AMANAR GUNDAR SAAKIYAR
அலைகளை உடைய நீரில் குளியாத அமணர் குண்டர் சாக்கியர்
With waves emanating form of water body place not taking bath those samanaas and buthaas
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
THOLAIYAATHU ANGU ALAR THOOTRA THOTRAM KAATI AAT KONDEER
இடைவிடாது அலர் தூற்ற தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே
Who are without any interruption talking ill about lord Siva and then those disciples who are praying humble form to whom lord Siva giving you appearance and then accepted them as your slave
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
THALAIYAANA NAAL VEETHAM THARITHAAR VAALUM THALAI SANGAI
நீர் நிலையாக நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில்
Lord Siva permanent form dwelling in thalai sangai temple place where ever veethaas are chanting and then knowing its meaning those bharamins are living place it is
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.
NELAI YAARNTHA KOYILLEEA KOYILLAAGA NINREEREEA
நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்
And that place established temple has been accepted as your dwelling place
10
600 நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
NALIRUM PUNALKAALI NALLA GAANA SAMBANTHAN
குளிர்ந்த நீரால் வளம் பெரும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்த
In the cool water with it wealth is multiplied place seergaali where descended gaana sambanther who will all the time thinking the wellbeing of this people
குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
KULIRUM THALI SANGAI VOONGU KYIL MEEYAANAI
தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை
In the cool temple place is thalai sangai where established the temple place dwelling lord Siva
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
OLIRUM PERAIYAANAI YURAITHA PAADAL EAVAI VALLAAR
ஒளிரும் பிறையை அணிந்தவனை போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர்
Lord Siva glittering and light emanating form of moon adorned on the hair place who is praised form sang the above ten poems by his disciples
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.
MILIRUM THERAI SOOLNTHA VAIYATHAARKU MEEAALLAREEA
This sea covered place dwelling people who are considered as highly regarded persons in this world
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செங்கணாயகேசுவரர், தேவியார் – சௌந்தரியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM