THIRU PAASOOR
2.60 திருப்பாசூர் 196
THIRU PAASOOR
THIS IS thondai kingdom temple. This is 16th temple in this cluster. Here thiru gaanasambanther and thiru naayukku arasar sang decade here. In this temple place lords ambigai thirumaal and inthiran prayed
தல விளக்கம் : தொண்டை நாட்டுத் தலம். 16ஆவது திருத்தலம். ஞானசம்பந்தர் நாவுக்கரசர் பாடல் பெற்றது. அம்பிகை திருமால் இந்திரன் வழிபட்ட தலம்.
சுவாமி : வாசீஸ்வரர், பசுபதிஸ்வரர், பாசூர் நாதர், பசுபதி நாதர்
அம்பிகை : மோகனாம்பாள்
தல மரம் : மூங்கில்
தீர்த்தம் : சோம தீர்த்தம்
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
644 சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
Sinthai eadaiyaar thalaiyin mesaiyaar seng sollaar
மனத்திலும், தலையின் மேலும் வாக்கிலும் உறைபவர்
LORD SIVA is dwelling in the mind brain and tongue wards form dwelling
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
Vanthu MAALAI VAIGUM POLYHU EANN MANATHU YULLAAR
மாலை காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர்
And then evening time approaching time he will enter in to my mind and then activate it
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்
MAINTHER MANAALAR EANNA MAGILVAAR YOOR POLUM
மைந்த மணாளா என்று அழைக்க மகிழ்பவர்
Who will call me as son bride groom and then got happy for it
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
PAIN THAN MAATHAVI SOLAI OOLNTHA PAASOOREEA
அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்
And that form of lord Siva dwelling place is the lust green maathavi creeper plant is spread over form of plantations are covered place is paasoor
01
645 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
PEERUM POLUTHUM PEYARUM POLUTHUM PEMMAAN EANN
இடம் விட்டுச் செல்லும் போதும் வரும் போதும் பெம்மானே என்று
When moving away and then come back we called it that lord Siva is my god to protect me
றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
AARUM THANAIYUM ADIYAAR EEATHA ARUL SEIVAAR
மனம் நிறைவனும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர்
And then lord Siva on hearing those wards are with mind filled form and then those disciples who are prayed and then praised who will put his grace on us
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
YOORUM ARAVAM YUDAIYAAR VAALUM YOOR POLUM
ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர் அவர் வாழும் ஊர்
And that form of lord Siva who is adorning the crawling snake all over the body place whose dwelling place it is
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.
PAARIN MISAIYAAR PAADAL VOOVAA PAASUREEA
உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்
Where the world people all the time singing and those sound is hearing form of place is paasoor
02
646 கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்
KAIYAAR THOLUTHU THALAI SAAI THU YULLAM KASIVAAR KAN
கைகளால் தொழுதும் தலையைத் தாழ்த்தியும் உள்ளம் உருகி வழிபடும்
Those disciples who are praying lord Siva with folded hands and then head bowed form and then with melted heart form
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்
MEIYAAR KURAIYUM THUYURUM THEERKUM VIMALANAAR
அடியவர்க்கும் இடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன்
Ti those disciples whose place deficiencies and then sorrows removed form of pure lord Siva who is in unique form
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்
NEI AADUTHAL ANJU YUDAIYAAR NELAAYUM VOOR POLUM
நெய் முதலிய அனைத்தும் ஆடுதல் உடையவன் அவன் எழுந்தருளிய ஊர்
Lord Siva who will daily ghee and then other cow products are taking as his bathing material and that form of lord Siva dwelling place is
பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.
PAI VAAI NAAGAM EENUM PAASUUREEA
பாம்பின் படம் போலக் காத்தல் பூக்கள் மலர்ந்துள்ள பாசூர் ஆகும்
Where the snake dancing head form gaanthal flowers are bloomed place is paasoor
03
647 பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்
PONGU AADARAYUM PUNALLUM SADAI MEEAL POLI VEITHA
சினந்து படம் எடுத்தாடும் பாம்பும் கங்கையும் சடையின் மேல் விளங்கி தோன்ற
The angry form dancing snake and then ganges are adorned on the hair place and then explicit form of
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
KONGAAR KONRAI SOODI EANN YULLAM KULIR VITHAAR
தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர்வித்தவர்
The honey filled konrai flowers are adorned form and then give me coolness to my mind
தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்
THANGAA THALIYUM THAAMUM VAALUM YOOR POLUM
அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர்
And that form living place with his lover is
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.
PAINGAN MULLAI PAL ARUMBU EENUM PASOOREEA
பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூர் ஆகும்
Where the lust green form of mullai jasmine creeper plants are giving flower buds those place is paasoor
04
648 ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்
AADAL PURIYUM EAI VAAI ARA VONRU ARAI SAATHUM
ஆடும் ஐந்து தலைப் பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள
The dancing snake is tied as belt form in his waist place and that
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
SEEDER SELVAR SINTHAIYUL EANRUM PERIYAATHAAR
மேலான செல்வர் நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர்
Highly regarded rich person and then those persons who are thinking him from that disciples he will not separate from them
வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்
VAADAL THALAIYIL PALI THEER KAIYAAR YOOR POLUM
ஊன் வாடிய தலையோட்டில் பலி தேரும் கையினர் அவரது ஊர்
And flush dried form of human skull accepting begging food whose dwelling place is
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
PAADAL KUILGAL PAYIL POON SOOLAI PAASUUREEA
பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகள் உடைய பாசூர் ஆகும்
Where singing coco birds are living flower plantations are encircled place is paasoor
05
649 கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்
KAAL NIRU ATHIRA KANAL VAAI NAAGAM KACHAAGA
திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாகக் கட்டிக்கொண்டு
And then feet is put on the land and beating the land with musical notes are filled form and then lord Siva tied snake as belt form
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
THOL VONRUDAIYAAR VEDAIYAAR THAMMAI THOLU VAAR GAL
தோலை ஆடையாக உடுத்தவர் விடை ஊர்தியர் தம்மைத் தொழுவார்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழுபவர்களின்
And skin dress adorned form and then bull is used as his travelling medium and then those disciples who are with love filled form praying
மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்
MAAL KONDU VOODA MAIYAL THEER PAAR YOOR POLUM
மயக்கங்கள் தீர்ப்பவர் அவரது ஊர்
Whose faintings are removed form and that form of lord Siva’s dwelling place
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.
PAAL VEN MATHI THOOI MAADAM SOOLNTHA PAASOOREEA
பால் போன்ற வெண்மதி தோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆகும்
Where the milk like white moon crawyalling on the storied building tower place is paasoor
06
650 கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
KANIN AYALLEEA KANN VORU YUDAIYAAR KALAL YUNNI
இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர் தம் திருவடிகளை நினைந்து
Lord Siva with his two eyes and then one more eye possessed in the fore head place and that appearance form of lord Siva whose sacred feet are thinking
எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்
EANNUM THANAIYUM ADIYAAR EAATHA ARUL SEIVAAR
எண்ணும் போதெல்லாம் அடியார் ஏத்த அருள் உவகைகள் தருபவர்
By those disciples who are pray and praising to whom lord Siva put his grace on them and then happy life is given to them
உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்
YULL NINRU YURUGA YUVAGAI THARUVAAR YOOR POLUM
உவகைகள் தருபவர் அவரது ஊர்
And those happiness form of lord Siva dwelling place is
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.
PANNIN MOLIYAAR PAADAL VOOVAA PAASOOREEA
பண்ணிசை போல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூர் ஆகும்
Where the musical notes are filled form of soft wards are speaking lades are singing all the time those place is paasoor
07
651 தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
THEESU KUNRAA THENNEER EALANGAI KOMAANAI
புகழ் குன்றாத தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை
Not glory reduced form sea covered place is srilanka and its place king ravanaa
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
KOOSA ADARTHU KOOR VAAL KODUPPAAR THAMAIYEEA
மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர் தம்மையே
Whose mind is hesitated form stamped under the kaiylai hills and then after realizing his sin lord Siva blessed form gave him sharpened sphere and those mannerism filled lord Siva
பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்
PEESI PETHATRA PERUMAI THARU VAAR YOOR POLUM
பல காலம் பேசிப் பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர் அவரது ஊர்
Those disciples who are so many times talking and then murmuring his name and glory whose dwelling place is
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
PAASI THADAMUM VAUALUM SOOLNTHA PAASOOREEA
பசுமையான நீர் நிலைகளும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்where lust green plantations and water bodies are filled place is paasoor which is covered by paddy fiends
08
652 நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்
NAGU VAAI MALAR MEEAL AYANUM NAGATHU ANAI YAANUM
விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் நாகணையில் பள்ளி கொள்ளும் திருமாலும்
The bloomed lotus flower place dwelling bharma and then snake bed place sleeping thirumaal
புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்
PUGU VAAI ARIYAAAR PURAM NINRU VOORAAR POTRU VOOVAAR
புகுமிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்கும்
Who are not known lord Siva’s dwelling place and then external form not known form and that form of lord Siva who has
செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்
SEGU VAAI YUGU PATRALAI SEEAR KAIYAAR YOOR POLUM
அழிந்த வாயிற் பல்லுடைய தலையோடு சேர்ந்த கையினை உடையவர் சிவபெருமான் அவரது ஊர்
And then dead man skull which has teeth filled form and then carried on the hand place those lord Siva’s dwelling place if you enquired
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
PAGU VAAI NAARAI AARAL VAARUM PAASOOREEA
பிளந்த வாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை கௌவி உண்ணும் பாசூர் ஆகும்
Where the opened mouth possessed lark birds are eating the aaral fishes those place is paasoor
09
653 தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்
THOOYA VEIL NINRU YULVAAR THUVAR THIOI AADAIYAAR
நல்ல வெயிலில் நின்று உழல்பவரும் துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள்
In good sunshine place wandering samanaas and then saffron dress adorned buthaas
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
NAAVIL VEIYA SOLLI THREEVAAR NAYAM EALLAAR
நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித் திரியும் நீதி அற்றவர்கள்
With their mouth wild wards are uttering form wandering those not balanced mind possessed persons
காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்
KAAVAL VEEVA KANAI ONRU EAITHAAR YOOR POLUM
காவல் புரியும் முப்புரங்களும் வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர்
And well-guarded three castles are fired and then destroyed with single arrow whose dwelling place if you enquired
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
PAAVAI KURAVAM PAYIL POON CHOLAI PAASOOREEA
பாலை போல மலரும் குரா மரங்கள் செறிந்து சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்
The palm tree flowers like kuraa tree flowers are filled place is paasoor which is covered by plantations
10
654 ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்
GAALAM YUNARVAAN KAALI GAANA SAMBANTHAN
கலை ஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன்
Gana sambanther who has possessed art gaanam and siva gaanam who has descended in the seergaali temple place
தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்
THEENUM VANDUM EANN EISAI PAADUM PAASOOR
தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும்
The honey bees are singing good songs those place is thiru paasoor
கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்
GAANAM YURAIVAAR KALAI SEEAR PAADAL EIVAI VALLAAR
காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை
And those forest are filled place dwelling lord Siva and then in the thiru paasoor temple lace sang the above songs
ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.
YOONAM EALARAAI YUMBER VAANAM YURAI VAAREEA
ஓத வல்லார் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்
Those disciples who are singing the above songs and that disciples are flawless form ultimately live in the upper world
11
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பாசூர்நாதர், தேவியார் – பசுபதிநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.