Seergaali
2.59 சீகாழி 195
Seergaali
For place explanation see decade no 137
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
633 நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
NALAM KOL MUYTHUM MANIYUM ANIYUM THIRAL VOOTHAK
அழகிய முத்துக்கள் மணிகள் அணிகலன்கள் ஆகியவற்றை நீர் பெருக்குடைய கடலில்
The lovely form of pearls diamonds and then ornaments are bring in the wooden ships
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
KALANGAL THANNIL KONDU KARAI SEER KALI KAALI
மரக்கலங்கள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில்
And then placed in the sea shore place of seergaali which is all the time emotional filled of workers are working place
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
VALAM KOL MALU OMRU YUDAIYAAI VEDAIYAA EANA EEATHI
வெற்றி விளைக்கும் மழு ஒன்றை ஏந்தியவனே விடையூர்தியனே என ஏத்தி
Where lord Siva you are carrying winning force filled malu battle force and then moving on the back of bull in that way praising lord Siva
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
ALANGAL SOOTA VALLAARKU ADAIYAA ARU NOYEEA
மலர் மாலை முதலியன சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா
and then flower garland form praying lord Siva and those disciples the rare form of deceases are not approached
01
634 ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
YOORAAR YUVARI SANGAM VANGAM KONDU VANTHU
ஊர் தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்ககள் கடல் ஓத நீர் வழியே கொண்டு வந்து
The crawling form of sea shells are collected in the wooden ships and then bringing through water ways
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
KAARAAR VOTHAM KARAI MEEAL YUARTHUM KALI KAALI
கடல் ஓத நீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில் எழுந்தருளிய
And then placed in the seashore place is seergaali where lord Siva you have descended
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
NEER AARR SADAIYAAI NETRI KANAA EANRU EANRU
கங்கை தங்கிய சடையனே நெற்றிக் கண்ணா என்று பல முறையும் அவனது
And then lord Siva you have possessed ganges adorned hair and then fore head eye possessor and in that way so many times
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.
PEEAR AAYIRAM PETHATRA THEERUM PENI THAANEEA
பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்
Lord Siva’s thousands of names are murmuring then that disciples diseases will be removed
02
635 வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
VADI KOL POLILIL MELALAI VARI VANDU EASAI SEIYA
திருத்தமான சோலைகளில் மழலையாய் வரி வண்டுகள் இசை பாட
In the row form of grown plantation place where childlike form honey bees are singing songs
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
KADI KOL POTHIL THEANRAL ANAIYUM KALI KAALI
மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல் வீதிகளை அடைந்து மணம் பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில்
In the seergali place the fragrance filled breeze are entering in the street place and then and giving pleasant mind to all
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
MUDI KOL SADAIYAAI MUTHAL VAA EANRU MUYANRU EEATHI
எழுந்தருளிய முடி கொள் சடையாய் முதல்வா என்று தவம் முயன்று ஏத்தி
Where lord Siva descended in the hair place flowers are adorned form lord Siva you are appearing in principal form and in that way saints are seated in meditation form
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.
DI KAI THOLUVAARKU EALLAI ALLAL AVALAMEEA
அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன இல்லை
And those form lord Siva’s feet are praising and that disciples are not affected any type of problems and sorrows
03
636 மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
MANAI KEEA EAARA VALAM SEI PAVALAM VALAR MUTHAM
ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும் முத்துக்களையும்
The waves are raising sound from it bringing out coral and then pearls
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
KANAI KUM KADALLUL VOOTHAM EEAARUM KALI KAALI
வீதிகளில் கொண்டு வந்து சேர்ந்து வளம் செய்யும் கலிக்காழிப்பதியில்
And then placed in the sea shore place and then and in that way wealth emanating place is seergaali temple place
பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
PANAI KAI PAGATTU EER YURIYAAI PERIYAAI EANA PEENI
பனை போன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே பெரியாய் என விரும்பப்பேணி
Lord Siva you are palm trunk like nose possessed elephant’s skin is pealed and then adorned it as upper dress and that elder person you are and in that way praised lord Siva
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.
NENAIKA VALLA ADIYAAR NENGIL NALLAAREEA
நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெறி உடையார் ஆவர்
And then thinking in the mind place and those disciples are good rule following persons in life
04
637 பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
PARUTHI EARUNGUM PAARIL SEERAAR PANI YAALEEA
கதிரவன் உலா வரும் உலகின் கண் சிறப்புமிக்க தொண்டுகளோடு
The sun moving in this world and then where the good menial acts are doing
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
KARUTHI VINOOR MANOOR VERUMBUM KALI KAALI
கருதிகளை அறிந்த விண்ணோடும் மண்ணோடும் விரும்பி வழிபடும் கலிக்காழியுள்
And then seergaali place upper world deevaas and then in this land people are praying
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
SURUTHI MARAI NAAN GAANA SEMMAI THARU VAANAI
மேவிய செவி வழியாகக் கேட்டு ஓதப்பெறும் நாங்கு வேதங்களான செம்மையைத் தருபவனை
And ten ear place hearing form four veethaas are and then lord Siva giving goodness to all
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.
KARUTHI EALUMIN VALUVAA VANNAM THUYAR POO MEEA
நினைத்து அவனை வழிபட எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்
And in that way thinking form praying those disciple’s sorrows will be removed
05
638 மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
MANTHA MARUYUM POLILIN EALIL AAR MATHU YUNDU
தென்றல் தவழும் பொழிலின் கண் எழுச்சியோடு தேனை உண்டு
The breeze crawling plantations place where emotional filled form honey is sucking by honey bees
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
GANTHAM MARUVA VARI VAND EASAI SEI KALI KAALI
மணம் பொருந்தியனவாய் வரி வண்டுகள் இசை செய்யும் கலிக்காழியில் விளங்கும்
In that way mind oneness form in the seergaali place striped bees are singing songs
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
BANTHAM NEENGA ARULLUM PARANEEA EANA EEAATHI
பந்தங்கள் நீங்க அருளும் பரனே என ஏத்தி
Those disciples who are praying lord Siva and then praising to remove relationship bonds and in this way and that disciples
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.
SEINTHAI SEIVAAR SEMAI NEENGAA THU EARUPPAAREEA
அவனைச் சிந்தையில் நினைவார் செம்மை நீங்காதிருப்பர்
Thinking lord Siva who are living good life in this world
06
639 புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
PUYALAAR POOMO NAAMAM VOTHI PUGAL MALGA
மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும்
This dark color clouds giving rain so that wealth emanated in this land place living
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
KAYALLAAR KANNAR PANNAAR OLI SEI KALI KAALI
கயல் போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ் பொருந்த இசையோடு ஓதி ஒலி செய்யும் கலிக்காழியுள்
Ladies who are possessed kayal fish like eyes and that ladies are lard Siva’s sacred names are musical notes are filled form singing and those place is seergaali
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
PAYIL VAAN THANNAI PATHI YAARA THOLUTHU EEATHA
விளங்கும் அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த
Where active form of existing lord Siva who is love form of praying and then praising
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.
MUTAL VAAR THAM MEEAL VEMAI KOOTRA MUDU KAADEEA
முயல்வார் மேல் கொடிய கூற்றுவன் வந்தடையான்
Those mentality possessed persons on whom the wild death god ema will not approach them
07
640 அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
ARAKKAN MUDI THOOAL NERIYA ADARTHAAN ADIYAAR KU
இராவணனின் முடி தோள் ஆகியன நெரிய அடர்ந்தருளிய தன் அடியவர் கட்டு
Lord Siva who has at first stamped the ranana and then blessed and then to his disciples
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
KARAKKA GILLA ARUL SEI PERUMAAN KALI KAALI
மறைக்காமல் அருளைச் செய்யும் பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை
Without any concealment form lord Siva blessed them and who has descended in the seergaali temple place
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
PARAKKUM PUGALLAAN THANNAI EAATHI PANIVAAR MEEAL
அடைந்து உலகம் முழுவதும் பரவிய அப்புகழாளனை ஏத்தி பணிவார்க்கு
Those disciples entered and then pray and then praised lord Siva who has glory filled in the whole world
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.
PERUKKUM EANBAM THUNBA MAANA PENI POOMEEA
இன்பங்கள் பெருகும் துன்பத்தரும் பிணிகள் போம்
To that disciples happiness will be multiplied and then sorrow giving diseases will be removed
08
641 மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
MAANAA YULAGAM KONDA MAALUM MALARONUM
பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட திருமாலும் நான்முகனும்
Thirumal once taken the form of pigmy bharamin form and then requested three feet land from maavali king and then taken gigantic form and then the whole world is scaled by three feet steps and bharma
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
KAANAA VANNAM EARIYAAI NIMIRNTHAAN KALI KAALI
காணாத வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான் உறையும் கலிக்காழியை
Who are unable to see lord Siva in deity form and then lord Siva appeared before them in fire pole form and that form of lord dwelling in seergali temple place
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
PONAAR MUDIYAAL PANGAM THANNAI PUGALTHU EEAATHI
அடைந்து அணிகலன் பூண்ட தனங்களை கொண்ட அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றி
We may enter in to the temple where lords parvathi adorned well decorated ornaments in the bosom place and then seated with lord Siva who is praised and then prayed
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.
KOONAA NENJAM YUDAIYAARKU EALLAI KUTRAMEEA
திருகல் இல்லாத மனமுடைய அடியவர்க்குக் குற்றம் இல்லை
Those disciples who have straight forward mind and that disciples will be sinless persons in this world
09
642 அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
ANGI ALLAAL MOLITHU THIRI VAAR AMAN AATHAR
அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும்
With fear emanating form and then sorrow giving wards are talking and wandering everywhere those ignorance filled samanaas
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
KANGI KAALAI YUNBAARKU ARIYAAN KALI KAALI
காலையில் கஞ்சியையுண்டு திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை
In the morning time gruel consuming form wandering buthaas who are not known lord Siva whose residential place is seergaali
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
THANJAM AAYA THALAIVAN THANAI NENAI VAARGAL
அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனே நினைபவர்கள்
Where entering disciples who are surrender under lord Siva’s feet and then thinking him
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.
THUNGAL EALLAA NALLA YULAGAM PERUVAAREA
இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்
And that disciples will not once again getting birth and death those happiness filled Siva logam will get
10
643 ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
YOOLI AAYA PAARIL VOONGUM YUAR SELVA
உலக முடிவில் அழிய இம்மண்ணுலகில் அழியாது மிகுந்த உயர் செல்வம் உடைய
At the ultimate destruction of yooli time in this land seergali alone in floating form and those wealth filled place
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
KAALI EESAN KALALEEA PEENUM SAMBANTHAN
காழியில் எழுந்தருளிய ஈசனின் திருவடிகளை பேணும் ஞானசம்பந்தன்
And those seergaali place descended ganasambanther who is all the time thinking lord Siva’s feet
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
THAALLUM MANATHAAL YURAITHA TAMILGAL EAVAI VALLAAR
பணிவான உள்ளத்தோடு உரைத்த தமிழ் மாலை ஆகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லார்
Who has sang the above songs and then those disciples who are submissive form repeatedly singing before lord Siva
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.
VAALI NEEGAA VAANOOR YULAGIL MAGI VAAREEA
நிலையான வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்
Ever permanent life in the upper world will be living
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
March 13, 2020