THIRU VEN KAADU
2.48 திருவெண்காடு –184
THIRU VEN KAADU
THIS IS River Cauvery 11th northern side temple. Three main saints sang songs here. Here inthiran and then white elephant prayed
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
513 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
KAN KATTU NUTHALANUNG KANAL KAATUM KAIYAANUM
நுதலிடைக் கண் கொண்டவன் கையில் கனல் ஏந்தியவன்
In the fore head place eye possessed form and the fire pot carried on the hand place
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
PEN KAATUM YURU VAANUM PERAI KAATUM SADAIYAANUM
உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியின் பிறையணிந்த சடைமுடியினன்
Lords parvathi has been given left part of lord Siva’s body and then who has adorned the curved moon on the hair place
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
PANN KAATUM EASAIYAANUM PAYIR KAATUM PUYALAANUM
பண்ணில் இறை வடிவானவன் பயிரை வளர்க்கும் மேகமானவன்
In the musical notes form lord Siva existing in this world and the plants are growing form of rain giving clouds form appearing in this world
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே
VENN KAATIL YURAIVAANUM VEDAI KAATUM KODIYAANEEA.
விடை ஏந்திய கொடியை உடையவன் வெண்காட்டில் உறையும் பெருமான்
Lord Siva who has carried bull emblem studded flag on his hands and then in that form lord Siva dwelling in the thiru ven kaadu temple place
01
514 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
PEEI ADAIYAA PERIYU EAITHUM PILLAIYI NOODU YULLA NELAI
வழிபடுவோரைப் பேய்கள் சாரமாட்டா பேய் பிடித்திருந்தாலும் விலகும் மகப்பேறு வாய்க்கும் மன
Those who are praying lord Siva ghost forces will not approach them even if ghosts are entered in to their body it will gone away and then child will be germinated in the womb place
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
VAAYINAVEEA VARAM PERUVAR EIYURA VEENDA VONRUM
விருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர் சிறிதும் சந்தேகம் வேண்டா
And then our good wishes are fulfilled and then all other things are get from the god so you need not get any doubt from it
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
VEEI ANA THOOLUMAI PANGAN VEN KAATU MUKKULA NEER
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மைபங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குள நீரில்
Lord Siva who has descended with lords parvathi in thiru venkaady temple place you may approach there and then take bath in the three temple ponds
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
THOOI VENAIYAA AVAR THAMMAI THOOVAAM THEE VENAIYEEA.
மூழ்ககி எழுந்து வழிபடுவோரை பேய்கள் சாரமாட்டா பேய் பிடித்திருந்தாலும் விலகும்
And then enter in to the temple and prayed lord Siva who are not approach the ghost forces even if they are caught hold by ghosts that will left away
02
515 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
MANOODU NEER ANAL KAALODU AAGAAYAM MATHI EARAVI
மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி
Lord Siva is in the form of land water fire wing space moon sun
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
EANNIL VARUM EAYAMAANAN EAGA PARAMUM EANN THESAIYUM
எண்ணற்றனவாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை
And then innumerable form of life forms and eight deity forms and then with it this life and next birth and eight directions
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம்
பேராளன்
PENNINODU AAN PERUMAIYODU SEUMAIYUMAAM PEERAALAN
பெண், ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய சிவபிரான்
And then male and female forms and then bigger and smaller form appearing lord Siva glory filled form appearing in this world
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே
VINNAVAR KON VELI PADA VENN KAADU EADAMAA VERUMBINANEEA.
இந்திரன் வழிபடத் திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளான்
And then inthiran praying form lord Siva descended in the thiru ven kaadu temple place
03
516 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
VEDAM YUNDA MEDATRU ANNAL VENN KAATIN THANN PURAVIN
நஞ்சுண்ட கண்டனாககிய சிவபிரான் எழுந்தருளிய வெண்காட்டை அடுத்துள்ள தண்காட்டில்
Lord Siva who has consumed poison and then conserved in the throat place and that form lord Siva descended in the thiru venkaadu temple place and then nearby place cool forest place
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
MADAL VINDA MUDAT THAALAI MALAR NILALAI KURUGU EANRU
மடல் விரிந்த வளைந்த தாழை மலர் நிழலைக் குருகு என்று எண்ணி
Where thalai flowers are bloomed in the bird form and that shadow is seen by fishes as thinking
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
THADA MANDU THURAI KENDAI THAAMARAIYIN POO MARAIYAK
நீர் நிலையில் வாழும் கெண்டை மீன்கள் தாமரைப் பூவின் அடியில் மறைய அதனைக் கண்ட
and those fishes are living in the water bodies concealed under the lotus flower leaves
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.
KADAL VINDA KATHIR MUTHA NAGAI KAATUM KAATCIYATHEEA
கடல் முத்துக்கள் நகைப்பது போல ஒளி விடும் காட்சியால் புலப்படுகிறது
And then on seeing it by pearls are laughed and then emanated its rays are seen form
04
517 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
VELAI MALI THANN KAANAL VENN KAATAAN THIRU VADI KEEL
கடல் நீர் நிரம்பிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த வெண்காட்டு இறைவன் திருவடிகளை
Where sea water filled form cool plantations are covered place is thiru ven kaadu where dwelling lord Siva’s feet
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
MAALAI MALI VANN SAANTHAAL VALI PADU NAN MARAIYAVAN THANN
மாலைகளாலும் நிறைந்த வளமையான சந்தனத்தாலும் வழிபட்ட மறையவராக
Are adorned by flower garland and then rich sandal paste and with it prayed form of bharamin
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
MEEAL ADAR VENN KAALAN YUIR VINDA PENAI NAMAN THOOTHAR
சுவேத கேதுவின் உயிரைக் கவர வந்த இயமனை அச்சிவன் உதைத்து அழித்ததால் அந்த இயமனுடைய தூதர்கள்
Named suveetha keethu life is tried to corner by death god ema who is kicked and then killed by lord Siva so ema’s servants are
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.
AALAM MIDATRAAN ADIYAAR EANRU ADARA ANJUVAREEA
சிவபிரான் அடியவர் என்றால் அஞ்சி விலகுவர்
Afraid and then gone away if they see lord Siva’s disciples
05
518 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
THANN MATHIYUM VEI ARAYUM THAANGINAAN SADAIYIN YUDAN
தனது சடைமுடியோடு தண்மதியையும் வெய்ய அரவையும் தாங்கியவனும்
Lord Siva in his hair place cool moon the angry snake carried form
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
VONN MATHIYA NUTHAL YUMAIYOOR KOORU YUGANTHAAN YURAI KOLI
ஒளி பொருந்திய மதி போன்ற நுதலை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில்
And then light glittering form of fore head possessed lords Parvathi and with her lord Siva dwelling temple place it is
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
PANN MOLIYAAL ANAN NAAMAM PALA VOOTHA PASUM KILLAI
பசிய கிளிகள் இனிய குரலால் இறைவன் திருப்பெயர்ளை ஓதி்க் கொண்டு
The lust green form of parrots are with it wonderful throat sound calling lord Siva’s name and then chanting it in mnthraa form
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும்
வெண்காடே.
VENN MUGIL SEEAR KARUM PANNAI MEEAL VEETRU EARUKKUM VEN KAADEEAA
வெண்முகில் சேரும் உயரிய கரிய ப
னை மீது வீற்றிருக்கும் வெண்காடு ஆகும்
And that place is thiru ven kaadu where the white clouds are approaching on the palm tree top where parrots are seated
06
519 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
SAKKAR MAARKU EETHAANUM SALANTHARANAI PELANTHAAUM
திருமாலுக்கு சக்கராயுதம் அளித்தவனும் சலந்தராசுரனைப் பிளந்து அழித்தவனும்
Lord Siva who gave circle force to thirumal and with that circle force the asuraa named salantharan cut into two forms and then destroyed him
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
AKKARAI MEEAL ASAINTHAANUM ADAINTHA EAIRAAVATHAM PANIYA
இடையில் எலும்பு மாலை அணிந்துள்ளவனும் தன்னை அடைந்து ஐராவதம் பணிய
And then lord Siva in the waist place bone garland adorned form and then the elephant named iraavatham surrender and then prayed under lord Siva’s feet
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
MIKKA THANUKKU ARUL SURAKKUM VEN KAADU VENAI THURATHUM
அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும் வினைகளைப் போக்கும்
To it abandent form of grace poured on them and bad deeds are removed form and then
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே
MUKKULAM NAANGU YUDAIYAANUM MUKKAN YUDAI EARAIVANEEA.
முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய இறைவனே ஆவான்
Lord Siva has possessed three ponds to remove sins and in that form lord Siva descended in thiru ven kaadu temple place and then who has possessed three eyes
07
520 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
PANN MOITHA EANN MOLIYAAL PAYA MEITHA MALAI EADUTHA
பண்ணிசை போலும் இனிய மொழியினளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த
And then musical notes are filled soft form of talking lords Parvathi who is afraid form of lifted the kaiyilai hills
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
YUNN MATHAN YURAM NERITHAN ARUL SEITHAAN YRAI KOIL
பித்தனாகிய இராவணனின் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவபிரான் உறையும் கோயில்
and that lunatic person named ravana whose bosom is smashed form and then who has realized his sins lord Siva put his grace on him and that form of lord Siva dwelling temple place it is
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
KAN MOITHA KARU MANGAI NADA MAADAK KADAL MULANGA
கண்கள் பொருந்திய தோகையைக் கொண்ட நீலமயில்கள் நடனமாடவும் கடல் முழங்கவும்
The well eye sight possessed blue color feathers are possessed peacocks are dancing form and then sea waves are raising thunder sound form
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
VINN MOITHA POLIL VARI VANU EASAI MURALLUM VENN KAADEEA
வானளாவிய பொழிலில் வரி வண்டுகள் இசை பாடவும் விளங்கும் வெண்காடாகும்
Where up to sky level grown plantations where the stripped wings are possessed honey bees are singing humming songs and that form of place is thiru ven kaadu
08
521 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
KALLAAR SENG KAMALATHAAN KADAL KEDANTHAAN EANA ERUVARGAL
தேன் பொருந்திய செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் கடலிடை துயிலும் திருமால் ஆகியோர்
The honey filled red color lotus flower place dwelling bharma and then sea place sleeping thirumaal and then all are
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும்
உணர்வரியான்
VOL LAANMAI KOLA KOODI YUYARNTHU THAALNTHUM YUNAR VARIYAAN
தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற்பொருட்டு மிக உயர்ந்ததும் ஆழ்ந்ததும் அவர்கள் உணர்வதற்கு அரியவனாகிய சிவபிரான்
Whose ego is removed form and then best disciples form converted themselves and then high and low fire form appeared before them and then they are not known in visual eye form and those rare form of lord Siva
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
VELLAANAI THAVAM SEIYUM MEETHAGU VENN KAATAAN EANN
வெள்ளானை தவஞ்செய்து வழிடும் நிலையில் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான்
Who has descended in white elephant praying form in thiru ven kaadu temple place
றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.
YULL AADI YURU KAATHAAR YUNAR YUDAIMAI YUNAROOMEEA
என்று மனங்கசிந்து உருகாதவரின் ஞானத்தை மதியோம்
In that form those disciples are not melted form praying before lord Siva whose gaana is not appreciated one
09
522 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
POOTHIYARGAL PINDIYARGAL MINDU MOLI PORUL EANNUM
போதி மரத்தின் அடியில் தவம் செய்யும் பக்தர்கள் அசோக மர நிழலில் தவம் செய்யும் சமணர்கள் கூறும்
In the bothi tree under it seated in meditation form of buthaas and then asoga tree shadow seated in penance form those samanaas whose preaching are not considered as good one
வன்புரைகளைப் பொருளாகக் கருதும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
PEETHAIYARGAL AVER PERIMIN ARIYUDAIEER EATHU KEEN MIN
பேதையர்களைப் பிரிவீர்களாக அறிவுடையவரே இதனைக் கேளுங்கள்
Those ignorance filled persons you my get rid of and ganaa knowledge filled persons you are please here it
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
VEETHIYARGAL VERUMBIYA SEER VDEYAN VENN KAATAAN EANN
வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய வெண்காட்டில் உறையும் ஈசன் பெயர்களை
In thiru ven kaadu place veethaa chanting bharaamins are who is loved lord Siva
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
VOOTHIAVAR YAATHU MORU THEETHILAR EANRU YUNARUMINEEA
ஓதியவர் ஒரு தீங்கும் இலராவர் என்று உணருமின்
Whose name is all the time chanting form of disciples are will not affect any type of problems in life please realize it
10
523 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
THANN POLIL SOOL SANBAIYAR KON TAMIL GAANA SAMBANTHAN
குளிர்ந்த பொழில்கள் சூழப்பட்ட சண்பை நகர்த் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன்
The cool plantations are covered place is seergal and this place leader is tamil gaana sambanther
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை
வெண்காட்டைப்
VINN POLI VENN PERAI SENNI VEGIRTHAN YURAI VENN KAATAI
விண்ணிற் பொலியும் பிறைமதி சேர்ந்த சென்னியினை உடைய விகிர்தன் உறையும் திருவெண்காட்டைப்
In the space place wandering curved moon adorned in the hair place and that young chap form of appearing in the thiru ven kaadu temple place
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
PANN POLI SEN TAMIL MAALAI PAADIYA PATHU EAVAI VALLAAR
பண்ணிசை பொலியப் பாடிய இச்செந்தமிழ் மாலை
With musical notes are filled form sang the above pure tamil poems ten in number
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே
MANN POLIYA VAALTHAVAR POOAI VANN POLIYA PUGUVAAREEA.
பத்தையும் வல்லவர்
மண் பொலிய வாழ்வதோடு வான்பொலியவும் சென்று வாழ்வர்
Those disciples who are repeatedly singing it before lord Siva and that disciples are not only living glory filled form in this world but also in the upper world
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுவேதாரணியேசுவரர், தேவியார் – பிரமவித்தியாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM