OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru aamathoor

ganesheit March 5, 2020

2.50 திருஆமாத்தூர் 186
Thiru aamathoor


See place explanation decade no 180
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam


535 குன்ற வார்சிலை நாண ராவரி
வாளி கூரெரி காற்றின் மும்மதில்
KUNRA VAAR SELAI NAAN ARAA VARI VAALI KOOR EARI KAATRIN MUM MATHIL

மேரு மலையை நீண்ட வில்லாகவும் வரிகளை உடைய பாம்பை நாணாகவும் மிக்க எரியை அம்பாகவும் காற்றை ஈர்க்காகவும் கொண்டு முப்புரங்களை
Lord Siva you have converted meru hills as bow and then stripped snake is converted as rope to the bow and then fire god is converted an arrow tip and then air god is converted as long pole of the arrow and then shot an arrow so as to won over


வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
VENRAVAARU EANGANEEA VEDAI YEERUM VEETHIYANEEA

வென்றது எவ்வாறு விடை மீது ஏறி வரும் வேதியனே
The three castle how tis magic is done please tell me and lord Siva you have ascended on the back of the bull in vetha chanting bharmin form


தென்ற லார்மணி மாட மாளிகை
சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
THEN RALLAAR MANI MAADA MAALIGAI SOOLIGAI EATIR NEENDA PENNAI MEEAL

தென்றல் காற்று வீசுகின்ற அழகிய மாடமாளிகைகளின் தூளிகைக்கு மேலான நீண்டுயர்ந்த பனை மரத்தில்
In the amanthoor place breeze is moving on the high raised mansion and then nearby place the palm tree is grown above those mansions and in those palm tree place


அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.
ANRIL VANTHU ANAIYUM AAMATHOOR AMMAANEEA

அன்றில் பறவை வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே
Where the anril birds are staying and then got happy and that form of amathoor temple place dwelling lord Siva
01


536 பரவி வானவர் தான வர்பல
ருங்க லங்கிட வந்த கார்விடம்
PARAVI VAANAVER THAANAVER PALARUM KALANGIDA VANTHA KAAR VIDAM

விண்ணவனே தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய கரிய விடத்தைக் கண்டு
lord Siva you are upper world leader and then deevaas and asuras are got afraid of when the milk sea is grinded time emanated the dark color poison and then on seeing it


வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
VERUVA YUNDU YUGANTHA ARUL EANN KOL VINNAVANEEA

வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்கு காரணம் யாது
Lord Siva you have collected those poison and then consumed it and then got happy from that act and those grace form act you have done please tell me the reason for it


கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
KARAVIN MAAMANI PON KOLITHILI

From the waterfalls sandal wood agil wood all are washed down those pambai river water


சந்து காரகில் தந்து *பம்பைநீர்
SANTHU KAAR AGIL THANTHU PAMBAI NEER

மறைவில்லாமல் சிறந்த மணிகளையும்
பொன்னையும் கொழித்துக் கொண்டு தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில் ஆகியவற்றை அடித்துக் கொண்டு வரும் பம்பையாற்று நீர்
WITH OUT ANY concealment the best ruby diamonds are gold are winnowed form and the in the pambai river place felled sandal wood agil trees are pushed down by waterfalls


அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.

ARUVI VANTHALAIKKUM AAMATHTHOOR AMMANE
ஒழுக்கு வந்து அலைக்கும் ஆமாத்தூர் இறைவனே
Those water falls are placed those things in the amathoor place where lord Siva you are dwelling
02

  • பம்பை என்பது ஒரு நதி.

537 நீண்ட வார்சடை தாழ நேரிழை
பாட நீறுமெய் பூசி மாலயன்
Neenda vaar sadai thaala neer ealai paada neeru mei poosi maal ayan

நீண்ட சடை அவிழ்ந்து தொங்க உமையம்மை பாட திருநீற்றை மெய்யில் பூசித் திருமால் பிரமன் முதலானோர்
Lord Siva your long hair un tied form hanging and then lords yumaadevi is singing form and then all over the body place you have adorned sacred ashes and then bharma and thirumal


மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
Maanda vaar sudalai nadamaadum maan pathu venn

மாண்ட கடை ஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம் யாதோ
And others are died and then those burning burial ground place lord Siva you are dancing please tell me the reason for it


பூண்ட கேழல்ம ருப்பரா விரி
கொன்றை வாளரி யாமை பூணென
POONDA KEEAL MARUPPU ARAA VERI KONRAI VAAL VARI AAMAI POON EANA

பன்றிக் கொம்பு பாம்பு விரிந்த கொன்றை மலர் மாலை ஒலியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு
The pig horns snakes and the bloomed form of konrai flower garland and then tortoise skull all are adorned as ornaments form all over the body


ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.
AANDA NAYAGANEEA AAMATHOOR AMMAANEEA

ஆட்கொள்ளும் தலைவனே ஆமாத்தூர் இறைவனே
And then all the living beings are surrender at the end of the life and that prime leader form lord Siva you are dwelling in the aamathoor temple place
03


538 சேலின் நேரன கண்ணி வெண்ணகை
மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
Seealin neerana kanni ven nagai maan VILITHIRU MAATHAI BAAGAM VAITHU

சேல் போன்ற கண்ணையும் வெண்ணகையும் மான் போன்ற விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு
The sale fish like eyes and white teeth like laughter and then sage like eye lids and that lovely form of lords yumaadevi is given left part of body


தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
EEAL MAATHAVAM NEE MUYAL GINRA VEEDAM EATHU EANN

இயன்ற பெரிய தவத்தை மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்
But have saintly penance form seated in meditation lord Siva how it is possible please tell me


பாலின் நேர்மொழி மங்கை மார்நட
மாடி யின்னிசை பாட நீள்பதி
PAALIN NEER MOLI MANGAI MAAR NADAM AADI EAN EASAI PAADA NEEL PATHI

பாலையொத்த இனிய மொழி பேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசை பாட
The milk life soft form of loveable form of talking ladies who are dancing and then singing songs


ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
AALAI SOOL MANI AMATHOOR AMAANEEA

கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே
Where the sugar cane industry covered form and then paddy fertile fields are covered form of temple place is amathoor lord Siva you are
04


539 தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
தூவி நின்கழ லேத்து வாரவர்
THONDAR VANTHU VANANGI MAAMALAR THOOVI NIN KALAL EEATHUVAAR AVAR

மாமலர் தூவி நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள்
Those disciples are floral tribute given form submitted under your feet and then prayed in praising form of prayer songs


உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
YUNDIYAAL VARUNTHA EARANGAATHATHU THENNAI KOLAAM

உறைவின்மையால் வருத்தவும் அதற்கு இரங்காததற்குக் காரணம் யாதோ
But they are without food got sorrow but you are not melted their request what is the reason for it


வண்ட லார்கழ னிக்க லந்தும
லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
VANDALLAAR KALINIK KALANTHU MALARNTHA THAAMARAI MAATHAR VAAL MUGAM

வண்டல் மண் பொருந்திய வயல்களிர் நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரை கண் மாதர்களின் ஒலி பொருந்திய முகத்தைப் போல பூக்கும்
The rich alluvial soil filled the paddy field place where paddy is growing and then in between weed form grown the lotus flowers which is appearing the ladies happy face form and that rich place is


அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.
ANDA VAANAVAR THOLUM AAMATHOOR AMMAANEEA

ஆமாத்தூரில் அண்டங்களில் வாழும் தேவர் முதலியோரால் வணங்கப்பெறும் இறைவனே
Aamathoor temple where the whole universe place living deevaas are and others are praying place it is
05


540 ஓதி யாரண மாய நுண்பொருள்
அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
VOOTHI AARANAM AAYA NUNN PORUL ANRU NAALVAR MUNN KEETKA NAN NERI

வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள் அறியாது மயங்கிய சனகாதியர் அன்று உபயம் கேட்க அவர்கட்கு
Veethaas are at first well memorized but its inner meaning is not known form of sanagaathi saints and then got faintings and the approached lord Siva to know the meaning for veetha and then to whom


நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
NEETHI AAYA NELAI YURAIKINRA NEERMAI ATHU EANN

ஞானமார்க்கத்தை முறையோடு ஆல் நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தன்மைக்குக் காரணம் யாது
Lord Siva you have elaborately explained at first gaana way of life and then inner meaning of veethaas where you have seated all tree shadow in five boohaas are seen form please explain your reason for it


சோதியே சுடரே சுரும் பமர்
கொன்றை யாய்திரு நின்றி யூருறை
JOOTHIYEEA SUDEREEA SURUMBU AMAR KONRAI YAAI THIRU NINRI YOOR TURAI

சோதியே சுடரே வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனே திருநின்றியூரில் விளங்கும்
Lord Siva you have fire glow form and then with in spark form and then you have adorned konrai flower garland and then seated in thiru ninriyoor temple place in active form


ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
AATHIYEEA ARANEEA AAMATHOOR AMMAANEEA

முதல்வனே அரனே ஆமாத்தூர் இறைவனே
Lord Siva you are prime good old principal form and then seated in theaamathoor temple place
06


541 மங்கை வாணுதன் மான்ம னத்திடை
வாடி யூடம ணங்க மழ்சடைக்
MANGAI VAAL NUTHAL MAAN MANATHIDAI VAADI YOODA MANAM KAMAL SADAI

மங்கையாகிய ஒளி நுதலை உடைய மான் போன்ற பார்வதி தேவி வாடி ஊட மணம் கமழும் சடையில்
The lighting form of fore head possessed lords yumaadevi who has possessed stage like eyes and then got sorrow and then with light form of angry and then in that way in the hair place


கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
GANGAI YAAL EARUNTHA KARUTHAAVATHU EANNAI KOLLAAM

கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாது
Ganges is kept concealed form please tell me the reason for it


பங்க யமது வுண்டு வண்டிசை
பாட மாமயி லாட விண்முழ
PANGAYAM MATHU YUNDU VANDISAI PAADA MAA MAYIL AADA VINN MULAYU

தாமரை மலரிலுள்ள தேனை உண்டு வண்டுகள் இசை பாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட விண்
மேகங்களாகிய முழலை
In the lotus place honey bees are sucked the honey and then singing humming songs and then in consonance the peacocks are dancing accordingly and then in the space place clouds are raising thunder sounds


வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
ANG KAIYAAL ATHIRKUM AAMATHOOR AMMAANEEA

அழகிய கையால் ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே
And the lord Siva you are raising drum sound in your hands (yudukkai) and that lovely form lord Siva you have seated in aamathoor place my god form
07


542 நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
NINRU ADARTHIDUM EIMPULAN NELAIYAATHA VANNAM NINAINTHU YULATHIDAI

மாறி நின்று மயக்கும் ஐம்புலன்களை மனத்தால்
Our sense organs are all the time liked mesmerized our mind those five types of external receptors which has to be won over by meditative mind


வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
VENRU ADARTU VORU PAAL MADA MAATHAI VERUMBUTHAL EANN

வென்று அவித்தும் ஒரு பாகத்தே இளம் பெண்ணை விரும்பி ஏற்றுள்ளது யாது காரணத்தாலோ?
Lord Siva you have won over the five sense organs and then afterwards you have young lady is willingly accepted so please tell me the reason for it


குன்றெ டுத்தநி சாசரன் திரள்
தோளி ருபது தான் நெரிதர
KUNRU EADUTHA NESAASARAN THOL EARUPATHU THAAN NERI THARA

அன்று குன்றினை பெயர்த்தெடுத்த இராவணனின் திரண்ட இருபது தோள்களும் தெரியுமாறு அடர்த்துப் பின்
Once Ravana tried to lift the kaiyilai hills but you have trapped him and then stamped his the twenty shoulders and then smashed it and then afterwards


அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
ANRU ADARTHU YUGANTHAAI AMATHOOR AMMAANEEA

அவன் பால் கருணை காட்டியவனே ஆமாத்தூர் இறைவனே
Ravana has realized his sin you have showered your grace on him and that form lord Siva you have seated in aamathoor temple place
08


543 செய்ய தாமரை மேலி ருந்தவ
னோடு மாலடி தேட நீண்முடி
SEIYA THAAMARAI MEEAL EARUNTHAVANOODU MAAL ADI THEEDA NEEL MUDI

செந்தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் நான்முகன் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் தேட அவர்கட்கு
and the in the red color lotus flower place seated bharma and the thirumal tried to search your feet and head


வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
VEIYA AAR ALALLAAI NIMIR GINRA VETRIMAI EANN

ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய் நிமிர்த்த வெற்றிக்குக் காரணம் யாது
But you have appeared before then the wile heated fire pole form appeared please tell me that winning appearance form and then its reason for it


தைய லாளொடு பிச்சைக் கிச்சைத
யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
THAIYAL AAL LODU PICHAIKKU EACHAI THAYANGU THOL ARAI AARTHA VEEDAM KONDU

உமையம்மையோடு பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய் விளங்கும் தோலாடையை இடையில் கட்டிய வேடம் மேற்கொண்டு மாதரார் இல்லங்களில்
With lords Yumaadevi you have been going for begging food and the skin dress willingly adorned on the waist place and the approaching every door steps


டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
EIYAM EAATRU YUGANTHAAI AAMATHOOR AMMAANEEA

ஐயம் ஏற்று உகந்தவனே ஆமாத்தூர் இறைவனே
From the ladies you have collected begging food and that happy form you have seated in the aamathoor temple place
09

544 புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
BUTHAR PUN SAMAN AATHAR POIM MOLI NOOL PEDITHALAR THOOTRA NIN ADI

புத்தர்களும் புல்லிய சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம்மொழியும் நூல்களைப் பிடித்துக் கொண்டு பழிக்கவும்
Buthaas and then vengeance filled samanaas are those ignorance filled form propagating untrue wards from their religious books and then cursing other religions


பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
PATHAR PEENA NINRA PARAMAAYA PAANMAI ATHU ENN

பத்தர்களால் விரும்பப்படும் மேலாந்தன்மை உடையவன் ஆதற்குக் காரணம் யாது
Where lord Siva is liked by his disciples and those highly regarded place lord Siva is seated please tell me the reason for it


முத்தை வென்ற முறுவ லாளுமை
பங்க னென்றிமை யோர் பரவிடும்
MUTHAI VENRA MURUVAL AAL YUMAI PANGAN EANRU EAMAIYOOR PARAVIDUM

முத்தை வென்ற முறுவளை உடைய உமையம்மை பங்கனே என்று தேவர்கள் பரவிப் போற்றும்
The pearls are own over form of teeth possessed lords parvathi is taken left part of his body and in that way praised and then prayed upper world deevaas


அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
ATHANEEA ARIYAAI AAMATHOOR AMMAANEEA

தலைவனே காண்டற்கு அரியவனே ஆமாத்தூர் இறைவனே
And that form of leader you are but you are rare form to visual appearance and in that form seated in the aamathoor temple place
10


545 வாடல் வெண்டலை மாலை யார்த்தும
யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
VAADAL VEN THALAI MAALAI AATTHU MAYANGU EARUL EARI EEANTHI MAANADAM

தசை வாடிய வெண்டலை மாலையைக் கட்டிக் கொண்டு நன்னிருளில் எரி ஏந்தி
The flesh dried form of white skull garland tied form you have been dancing fire pot carried form dancing in the mid night time


ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
AADAL MEEYA THEN EANRU AAMATHOOR AMMAANAI

ஆடுவதன் காரணம் யாதோ என்று ஆமாத்தூர் இறைவனே
Please tell me the reason for it and in that way asking amathoor lord Siva


கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
KODAL NAAGAM ARUMBU PAIM POLIL KOCHAI YAAR EARAI GAAANA SAMBANTHAN

காந்தள் நாகம் போல் அலரும் பசிய பொழில் சூழ்ந்த கொச்சை வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன்
The ganthal flowers are snake for bloomed in the seergaali plantations are covered place where descended gaana sambanther


பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
PAADAL PATHUM VALLAAR PARA LOOGAM SEER VAAREEA

போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லார் மேலான வீட்டுலகம் அடைவர்
Who has sung the above poems number in ten and then those disciples who are sang before lord Siva and that disciples will get highly regarded upper sivalogm at the end of life in this world
11


ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,
ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ – பசு.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

March 5, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: