THIRU AAMATHOOR
2.44 திருஆமாத்தூர் 180
THIRU AAMATHOOR
THIS IS central kingdom temple. This is 21st temple in this cluster. Three main saints sang decade here. In this temple place nanthideevar kamatheenu cow conducted poojaas. Lord rama prayed here. Lord Siva is to all souls mother form existing in this temple place and the put his grace on all souls. Thandabani swamigal descended in this place
பண் – சீகாமரம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
470 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
THUNNAM PEO KOVANAMUM THOLUM YUDAI AADAI
தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும் யானைத் தோலை மேல் ஆடையாகவும் கொண்டு
The soiled cloth is stitched form and then adorned low in cloths in the waist place and the elephant skin is adorned as upper dress
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
PINNAM SADAI MEELOOR PILAI MATHISOODI
பின்னிய சடை மீது இளம்பிறையைச் சூடி
And then well twisted hair place the young moon is adorned
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
ANNAM SEEAR THANN KAANALAMMATHUOOR AMAN THAN
அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருவாமத்தூரில் விளங்கும் இறைவனின்
And then lark birds are dwelling the cool plantations are covered place thiru aamathoor where dwelling lord Siva
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.
PONNANG KALAL PARAVA POKKAMUM POKKAMEEA
பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமோ?
Those disciples who are not praised the lovely feet of lord Siva who are not to be appeared good form in this world
01
471 கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
KAI MAAVIN THOL POORTHA KAABAALI VAAN YULAGIL
யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும் வானுலகில்
Lord Siva who has adorned the elephant skin as upper dress and then bon garland adorned form appearing in this world and the in the upper space place
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
MUMAA MATHIL EAITHAAN MUKKANAAN PEEAR PADI
திரிந்து இடர் விளைவித்த முப்புரங்களை எய்தழித்தவனும் முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின் புகழப்பாடி
Wandering three castles which is give trouble to ordinary people and then devas so lord Siva shot an fire arrow and then destroyed it and that three eyes are possessed lord Siva’s glory is praising form
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
AMMAA MALAR SOLAI AAMATHOOR AMMAAN EAMM
அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம்
And then lovely big flowers are filled in the plantations are covered place is aamathoor place dwelling lord Siva alone is
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.
PEMMAAN EANRU EEATHAATHAAR PEYARIL PEEYAREEA
தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்
My prime leader and in this way those persons who are not praised lord Siva they are ghosts with in those ghost forces who is wilder one
02
472 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
PAMBARAI SAATHIYOOR PANDARAGAN VINDA THOOR
பாம்பை இடையில் கட்டியவன் ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருகூத்தை ஆடியவன்
Snakes are tied in the waist place and then unique form of dance named panderangam is performing form
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
THEEBAL EALA MATHIYAM SOODIYA SENNIYAAN
வாய் பிளந்து மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன்
The mouth opened form of the lean moon adorned on the hair place
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
AAMBAL POOM POIGAI AAMATHOOR AMAAN THAN
ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய ஆமாத்தூரில் எழுந்தருளியவன்
And then ambal flowers are bloomed ponds are covered place is amathoor where descended lord Siva
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.
SAAMBAL AGALATHAAR SAAR BALLAAR SAR BILAMEEA
சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின் சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை
And the lord Siva who has adorned sacred ashes all over the body so those lord Siva’s disciples alone is guide to us in this world and there is no other real guide available in this world
03
473 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
KOO NAAGA PEEAR ALGUL KOL VALAI KAI MAATHARAAL
வலிய நாகத்தின் படம் போன்ற பெரிய அல்குலையும் திரண்ட வளையல்கள் அணிந்த கைகளையும் உடைய பார்வதி தேவியின்
The mighty powerful dancing snake like secret part are possessed and then the bangles are adorned on the fore hand possessed lords parvathi who has
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
POO NAAGAM BAGAMAA PLGI AVALOODUM
அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது இடப்பாகமாகக் கொண்டு அவ்வுமையம்மையோடு
Adorned glittering ornaments are adorned lords parvathi who has been given left part of lord siva’s body place
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
AANAGAM KAATHAL SEI AAMATHOOR AMMAANAI
ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும் ஆமாத்தூர் அம்மானைக்
And that twin form of male and female body possessed form of appearing place is aamathoor where lord Siva dwelling
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.
KAANAATHA KANN EALLAAM KAANAATHA KANGALLEEA
காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்
And that form of appearing lord Siva is not seen with visual eyes those eyes are only blind eyes in this world
04
474 பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
PAADAL NERI NINRAAN PAING KONRAI THADAAREEA
பாடும் நெறி நிற்பவனும் பசிய தன்மையான கொன்றை மாலையை
In singing form standing in this world and then lust green leaves are filled konrai flower garland adorned form
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
SOODAL NERININRAAN OOLAM SEER KAIYINAAN
சூடும் இயல்பினனும் சூலம் பொருந்திய கையினனும்
And that natural form appearing in this land place and then soolam battle force carried on the hand place
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
AADAL NERI NINRAAN AAMAATHOOR AMAAN THAN
ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய
And then all the time dancing form appearing in this world and that form seated in the thiru aamathoor temple place and then blessing all
வேட நெறிநில்லா வேடமும் வேடமே.
VEEDA NRI NILLAA VEEDAMUM VEEDA MEEA
மெய் வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்
Those true appearance form of lord Siva whose seiva way of life is not followed and those persons appearances are only false appearance in this world
05
475 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
SAAMA VARAI VILLAAGA SANTHITHA VENG KANAIYAAL
பொன்மயமான மேரு மலையை வில்லாகக் கொண்டு அதன் கண் பொருந்திய கொடிய கணையால்
The golden color possessed meru hills are converted as bow form and then fire arrow shot with that bow
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
KAAVAL MATHIL EAITHAAN KANNUDAI NETRIYAAN
காவலை உடைய மும்மதில்களை எய்து அழித்தவனும் நெற்றிக் கண்ணனும்
And then three castles are burnt down in to ashes which is well protected one, lord Siva who has possessed fore head eye
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைத்
YAAVARUM SENRU EEATHUM AAMATHOOR AMMAANAI
எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான்
And that form of lord Siva is pray and then praised form lord Siva seated in thiru aamathoor temple place and that form of lord Siva
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.
THEEVAR THALAI VANANGUM THEER VARKUM THEEVANEEA
தேவர்கள் தலை வணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்
Who is leader to inthira and that inthiran is upper world king
06
476 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
MAARAATHA VENG KOOTRAI MAATRI MALAI MAGALAI
யாவராலும் ஒழிக்கப்படாத கூற்றுவனை ஒழித்து மலைமகளைத் தணித்து
No one can destroy those powerful death god ema is kick and then killed by lord Siva and then hill lady lords parvathi
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
VEERAAGA NILLAATHA VEEDA MEEA KAATINAAN
வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொரு பாகன் என்ற வடிவத்தைக் காட்டியவனும்
Is not standing in separate form but given left part of lord Siva’s body and tat twin form appearing in this world
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
AARAATHA THEE AADI AAMAATHOOR AMMAANAI
ஆறாத தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக்
All the time burning fire in it lord Siva dancing and then in that form dwelling in thir aamathoor temple place and whose glory is
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.
KOORAATHA NAA VELLAAM KOORAATHA NAAKALEEA
கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக் கருதப்படுவர்
Not chanting with tongue and those persons are even they are tongue they are considered as only dump persons in this world
07
477 தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
THAALAAL ARAKAN THOL SAAITHA THALAIMAGAN THANN
தோல்வி உறாத இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு
Ravana hitherto not lost any battle fields but now lord Siva stamped under the kailai hills and then destroyed his mighty power and that leader form of lord Siva to who
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
NAALAA THERAI EANREEA NAMBAN THAN NAAMATHAAL
உகந்த நாள் திருவாதிரை யாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு
Good day is thiru vaathirai and that thinking form disciples are
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
AAL ANAAR SENRU EEATHUM AAMAATHOOE AMMANAI
உரியவனாகிய அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர் அம்மான்
Going in that day to thiru aamathoor temple and there they pray lord Siva
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.
KEELAA SEVI EALLAAM KEELAA SEVIGALLEEA
புகழைக் கேளாச் செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்
and that glory filled lord Siva whose glory is not heard by ears those ears are considered only as deaf only
08
478 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
PULLUM KAMALAMUM KAI KONDAAR THAAM ERUVAR
கருடப்பறவை தாமரை ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால்
Thiru mal and bharma who are possessed vulture and lotus flower as their seated place but they are daily praying in the meditation form
உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
YULLUMAVAN PERUMAI VOPPU ALAKKUM THANMAIYATHEEA
தியானிக்கப்ப்டும் சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ
And that form of lord Siva’s glory not scalable one
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
ALLAL VELAI KALANI AAMAATHOOR AMMAAN EAMM
சேறாக இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானகிய எம்
In the slush place paddy is growing fields are surrounded place is thiru aamathoor who is my lord Siva
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
VALLAL KALAL PARAVA VAALKAIYUM VAAL KAIYEEA
வள்ளலின் திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாமோ?
And those philanthropist feet are not pray prayed and that life is not at all good life
09
479 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
PICHAI PERER PEIYAA PIN SAARAA KOO SAARAK
மகளிர் பிச்சையிட்டுப் பின்னே வர தன் தலைமை தன்மை கெடாதபடி
Those ladies are giving begging food to lord Siva and then followed him and that leadership status is not spoilt form
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
KOCHAI PULAL NARU EER YURIVI PORTU YUGANTHAAN
இழிவான புலால் மணம் வீசும் யானைத் தோலை போர்த்து மகிழ்ந்தவனாகிய
And then low graded flesh smell emanated elephant skin adorned and then got happy from it
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
ACHANTHAN MAADEEVIKU EENTHAAN THAN AAMAATHOOR
உமையம்மை அஞ்ச அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது ஆமாத்தூரை
On that form seeing lords Yumadevi got afraid of and that temple place is thiru aaathoor where lord Siva dwelling
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
NICHA NENAIYAATHAAR SENGAMUM NENJAMEEA
நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமோ?
Those disciples who are daily not thinking in the mind place those minds are not at all good minds
10
480 ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
AADAL ARAYU ASAITHA AAMAATHOOR AMMAANAI
படம் விரித்து ஆடும் பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானை
The dancing snake is tied in the waist place as belt form and that form lord Siva dwelling
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
KODAL EARUM PURAVIN KOCHAI VAYATH THALAIVAN
காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட கொச்சை வயம் என்னும் சீகாழிப் பதிக்குத் தலைவனாகிய
The ganthal flowers are growing the dark color fields place is seergaali and its place leader is ganasambanther
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
NAADA ARIYA SEER GAANASABANTHANTHANN
நாடற்கு அரிய புகழை உடைய ஞானசம்பந்தன்
Who has rare glory filled form who has sung the above poems
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
PAADAL EAVAI VALLAARKU EALAIYAAM PAAVAMEEA
பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை
And then those disciples who are repeatedly sang before lord Siva who do not have any sins in life
11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அழகியநாதேசுவரர், தேவியார் – அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM