OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru then kurangu aaduthurai

ganesheit March 2, 2020

2.35 திருத்தென்குரங்காடுதுறை
Thiru then kurangu aaduthurai


This is River Cauvery southern side 31st temple. In this temple place their gana sambanther and thiru naayukku arasar sang decade. In this temple place king sukreevan and anuman prayed. Now it is called in the name of aaduthurai
காவிரி தென்கரை 31ஆவது தலம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்றது. சுக்கிரீவன் அனுமான் வழிபட்டது. ஆடுதுறை என வழங்கப்படுகிறது.
சுவாமி : ஆபத சகாயேஸ்வரர்
அம்பிகை : பவளக் கொடியம்மை வண்டார் கருமென் குழலம்மை
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM


372 பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
PARAVAK KEDUM VAL VINAI PAAR EDAM SOOLA

பரவ வலிய வினைகள் கெட்டொழியும் பூதகணங்கள் சூழ
While we are praying and then praising all the time our bad deeds will be gone away and then the demon forces are covered form


இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
EARAVIL SUDU KAAT IDAI NINRU EARI AADI

இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும்
in the mid night time standing in the burning burial ground place and then dancing


அரவச் சடையந் தணன்மேய அழகார்
ARAVACH SADAI ANTHANAN MEEYA ALAGAAR

அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது
The snakes are adorned on the hair place of lord Siva who has descended in this land place bharmin form


குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.
KURAVAP POLIL SOOL KURUNGU AADU THURAIYEEA

குராமரம் பொழில் சூழ்ந்த குரங்காடு துறையே
Those temple place is named kurangu aadu thurai which is covered by kura plantations
01


373 விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
VINDAAR PURAM MOONRU EARITHA VIMALAN

தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும்
Three castle assuraas who are enmity developed with lord Siva those three assuraas three castles are destroyed by fire and that pure form of lord Siva


இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
EANDAAR PURAM KAATIDAI NINRU EARI YAADI

இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டின் நின்று எரியாடுபவனும்
The creeper plant named indeaar (thotaal sinungi) spread over in the burial ground place where lord Siva carrying in the hand place fire pot and then dancing


வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
VANDAAR KARUM MEN KULAL MANGAI YOOR BAAGAM

வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாக
And then honey bees are in thick cluster form encircling the thin hair possessed lords Yumaadevi who is given left part of his body

கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.
KONDAAN NAGER POL KURANGU AADU THURAIYEEA

கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை
And that twin appearance form lord Siva dwelling place is kurangu aadu thurai temple place
02


374 நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
NERAI VIL PURAM KATU EADAI NEER EALAIYOODUM

நிறைதல் இல்லாத சுடுகாட்டில் நின்று
Not to be filled those burial ground place standing


இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
EARAI ILL EARIYAAN MALU EANTHI NINRU AADI

அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும்
And then never existing shed form of fire carried on the hand place
And then malu battle force carried on the hand place and together with lords parvati dancing


மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
MARAIYIN OLI VAANAVER THAANAVAR EEATHUM

வேத ஒலியால் தேவர் அசுரர் ஆகியோரால் தொழப்படும்
And then veetha chanting form deevaas and then asuraas are praying form


குறைவில் லவனூர் குரங்காடு துறையே.
KURAI VIL AVAN VOOR KURANGU AADU THURAIYEEA

குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர் குரங்காடுதுறை
Lord Siva appearing without any deficiency and then whose dwelling place is kurangaadu thurai
03


375 விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
VILLIKUM NUTHAL MEEAL ORU VENN PERAI SOODI

விழியை உடைய நெற்றியின் மேல் தலைவன் முன் பாகத்தில் பிறைசூடி
Lord Siva who has possessed fore head eye and then above head place curved moon adorned form


தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
THELIKKUM PURAM KAATU EADAI SEERNTHU EARI YAADI

ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி
And then sound raising form of burial ground place approached and then where burning fire pot carried in the hand place and then dancing


பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
PALIKKUM PARISEEA PALI THEERNTHAVAN VOOR PON

பழித்துரைக்கப் பலியேற்றத் திரியும் சிவபிரானது ஊர் பொன்
And then that form of lord Siva is cursed by others and then begging food accepted form lord Siva wandering place it is


கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.
KOLIKKUM PUNAL SOOL KURANGU AADU THUAIYEEA

கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்
And then gold is winnowed form river Cauvery flowing place is kurangu aadu thurai
04


l376 நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
NEER AAR THARU MEEANIYAN NETRIYOOR KANNAN

நீறு பூசிய மேனியன் நெற்றிக் கண்ணன்
Lord Siva who has adorned all over the body the white ashes and then who has possessed fore head eye


ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
EEAR AAR KODI EAMM EARAI EENDU EARI YAADI

விடைக்கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன்
Lord Siva carried on the hand place bull emblem studded flag and who is my leader and then abundant form of burning fire place standing form dancing


ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
AAR AAR SADAI ANTHANAN AAYILAI YAALOOR

கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன் உமையொரு
Lord Siva who has adorned Ganges on the hair place who has grace filled form appearing in this world and then lords Yumadevi is


கூறான்நகர் போல்குரங் காடு துறையே.
KOORAAN NAGER POL KURANGU AADU THURAIYEEA

பாகன் அவனது நகர் குரங்காடுதுறை
Taken left part of his body and then whose dwelling place is kurangaadu thurai
05


377 நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்
NALLIRUM MALAR KONRAI YUM NAARUM KARANTHAI

குளிர்ந்த கொன்றை மலர் மணம் வீசும் சிவகரந்தை
The cool form of konrai flowers and the fragrance filled form of thiru neetru pachai leaves


துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
THULIRUM SULAVI SUDU KAATU EARI YAADI

தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும்
All are clubbed form adorned in the hair place and then dancing in the burial burning ground place


மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
MILIRUM ARAVATHAVAN MEEVIYA KOIL

அழகனாய் விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது
And that hand some form of lord Siva who has tied snake as belt form in the waist place and whose dwelling temple place it is


குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.
KULIRUM PUNAL SOOL KURANGU AADU THURAIYEEA

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை
Where cool water covered form appearing place is kurangu aadu thurai
06


378 பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
PALAGUM VENAI THEERPAVAN PAAR PATHIYOODUM

பிறவிதோறும் பழகிய வினைகள் தீர்ப்பவன் பார்வதி தேவியோடு
At every birth lord Siva befriend with us and then removed our bad deeds and with lords parvathi


முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
MULAVAM KULAL MONTHAI MULANGU EARI YAADUM

முழவு குழல் மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும்
Where the drum named mulayu monthai raising sound form lord Siva standing in the fire place and then dancing


அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
ALAGAN AYIL MOOVILAI VEEAL VALAN EANTHUM

அழகன் கூரிய மூவிலை வேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும்
And those handsome form of appearing lord Siva who has carried three leaves form of sharpened vel battle force which is symbol to win in the war


குழகன் னகர்போல் குரங்காடு துறையே.
KULAGAN NAGER POL KURANGU AADU THURAIYEEA

இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை
And young chap form of appearing lord Siva whose residential place is kurangaadu thurai
07


379 வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
VARAI AARTHU EADUTHA AVV ARAKKAN VALI VOLGA

கயிலை மலையை ஆரவாரித்துப் பெயர்த்து இராவணனின் வலிமை கெடுமாறு
With emotional sound raised form of ravana who has tried to lift kaiyilai hills whose mighty power is destroyed form


நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
NERAI YAAR VERALLAAL NRITHITAVAN YOOR AAM

காலில் அமைந்த பெருவிரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர்
By lord Siva used his leg big finger and the stamped under the hills those lord Siva’s dwelling place it is


கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
KARAI AARNTHU EILI KAAVERI KOLAK KARAI MEEAL

கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல்
Up to boundary level flowing the river Cauvery and on its bank place


குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.
KURAIYAAR POLILSOOL KURANGU AADU THURAIYEEA

ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடுதுறையாகும்
Where birds sounds are filled form of plantations are covered place is kurangaadu thurai
08


380 நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
NEDIYAA NODU NAAN MUGANUM NENAI VONNAA

திருமால் பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன்
Thirumaland bharma are not even in thinking form of seeing lord Siva and that mannerism filled lord Siva


படியா கியபண் டங்கனின் றெரியாடி
PADIYAAGIYA PANDANGALIN EARI YAADI

பாண்டரங்கக் கூத்தை ஆடியவன் எரியில்
இன்று ஆடுபவன்
Who has been dancing the pandarangam form of dancing and then fire place standing form of dancing


செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
SEDIYAAR THALAI EEANTHIYA SENGAN VELL EEATRIN

முடை நாற்றம் வீசும் தலயோட்டை ஏந்தியவன் சிவந்த கண்களை உடைய திருமாலாகிய
And then carried in the hand place highly stinging skull as begging bowel form and then red color eyes are possessed form of thirumal


கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.
KODIYAAN NAGER POL KURANGU AADU THURAIYEEA

வெள்விடையைக் கொடியாக உடையவன் அவனது நகர் குரங்காடுதுறை
Who has converted himself in bull form and then lord siva carried those bull emblam studded flag in his hand place whose dwelling place is kurangaadu thurai
09


381 துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
THUVAR AADAIYAR VEEDA MALLAA SAMAN Kaiyar

The saffron color tainted dress adorned buthaas and then false saintly form of revealing appearance possessed samanaas
துவராடை அணிந்த புத்தர்களும் வேடமல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய


கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
KAVER VAAI MOLI KAATHAL SEIYAATHAVAN YOORAAM

கீழ்மையாகப் பேசும் ஐய உரைகளை விரும்பாதவன் சிவன் ஊர்
Those low graded persons are talking doubtful doctrines are not accepted form of people living place is kurangadu thurai


நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
NAVAIYAAR MANI PON AGILSANTHANAM YUNTHI

மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள் பொன் அகில் சந்தனம் ஆகியவற்றை உந்தி வந்து
From the hill place smashed form of ruby diamonds gold agill and sandal wood trees all are pushed down by water falls


குவையார் கரைசேர் குரங்காடு துறையே.
KURAIYAAR KARAI SEEAR KURAGU AADU THURAIYEEA

குவியலாகக் கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாகும்
Which is heaped form placed in the river bank of River Cauvery and that wealthy place is kurangaadu thurai
10


382 நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
NALLAAR PAYIL KAALIYUL GAANA SAMBANTHAN

நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன்
The good people are living place is seergaali where descended gaanasambanther


கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
KOLEEARU YUDAIYAAN KURANGU AADU THURAI MEEAL

கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறை மேல்
The killing instinct filled the bull is used as travelling vehicle by lord Siva who has descended in the kurangaadu thurai place


சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
SOL AAR TAMIL MALAI PATHUM THOLUTHU EEATHA
பாடிய தமிழ் மாலை பத்தையும் பாடித் தொழ
Those disciples who are singing in tamil garland form of above ten poems


வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.
VALLAAR AVAR VAANAVAROODUM YURAI YURAI VAAREEA

வல்லவர் வானவரோடு உறைவர்
And that excelled disciples are ultimately settled down in the deeva land
11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – குலைவணங்குநாதர், தேவியார் – அழகுசடைமுடியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

March 2, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: