Thiru earum boolai
2.36 திருஇரும்பூளை – வினாவுரை
Thiru earum boolai—question and answer form
காவிரித் தென்கரை 98ஆவது திருத்தலம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. ஆலங்குடி என வழங்கப்படுகிறது. விசுவாமித்திரர் பூசித்து வழிபட்ட தலம். தல விசேஷம் : தட்சிணாமூர்த்தி
This River Cauvery 98th southern side temple. Here gaanasambanther sang a decade. Now it is called in the name of aalang gudi. Here saint visuvaamithirar conducted poojaas and then rayed lord Siva and in this temple place special place is given to thachi naamoorthy
சுவாமி : காசி ஆரண்யேஸ்வரர் ஆபத் சகாயேஸ்வரர்
அம்பிகை : ஏலவார் குழலி
தீர்த்தம் : அமிர்த புஷ்கரணி
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam
383 சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
Seer arr kalaleea tholuveer eathu seppeer
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே இதனைச் சொல்வீராக
The goodness filled lord Siva’s feet are daily praying disciples please tell me
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
Vaaraar mulai mangai yodum yudan aagi
கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய்
Lord Siva you have seated bra adorned lords parvati with her seated form
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
Earaar erum poolai Eadam konda eesan
அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன்
Lord Siva you have seated in the earum poolai temple place
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.
KAARAAR KADAL NANGU AMUTHU YUNDA KARUTHEEA
கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்கு காரணம் யாதோ?
And then in the dark color sea place poison which is consumed as nectar form what is the reason for it?
01
384 தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
THOLLAAR KALALEEA THOLU THONDARGAL SOLLEER
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே சொல்வீராக
The worthy feet are praying my dear disciples please tell me
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
KULALAAR MOLIK KOL VALAI YUDAN AAGI
வேய்க்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய
The flutelike soft wards are talking and then abundant bangles are adorned lords parvathi
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EALIL AAR EARUM POOLAI EADAM KONDA EESAN
அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
With her dwelling lord Siva in tee arum poolai temple place
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.
KALAL THAAN KARI KAANEADAI AADU KARUTHEEA
தன் திருவடிகளால் கரித்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாது?
And then lord Siva dancing in the burial ground what is the reason for it
02
385 அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
ANBAAL ADI KAI THOLUVEEREA ARIYEEREEA
அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே அறிவீர்களோ
with love form lord Siva’s feet are praying my dear disciples will you know it
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
MIN POL MARUNGUL MADAVAAL LODU MEEAVI
மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி
Lord Siva who has mingled with lords parvathi who has possessed lighting like waist
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EANBAAI EARUM POOLAI EADAM KONDA EESAN
மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன்
And then happily seated lord Siva in the earum poolai temple place
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
PN POL SADAIYIL PUNAL VAITHA PORULLEEA
பொன் போன்ற தன் சடை மீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது?
And then lord Siva who has possessed golden color hair on it Ganges are kept in concealed form what is the reason for it
03
386 நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
NACHITHOLUVEERNAMAKU EATHU SOLLEER
சிவபெருமானை விரும்பித் தொழும் அடியவர்களே நமக்கு கூறுவீராக
Lord Siva is willingly praying my dear disciples you may please tell me
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
KACHI POLI KAAMAK KODI YUDAN KOODI
காஞ்சி மாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமட்சியாகிய
Lords parvathi who is seated in the temple of kanchipuram in the name of kaamatchi
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EACHITHU EARUM POOLAI EADAM KONDA EESAN
இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
Lord Siva lust filled form seated in the erum poolai temple place
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
YUCHI THALAIYIL PALI KONDU YULAL YOONEEA
தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ?
Lord Siva who is collecting begging food in the bharma skull and then wandering everywhere please tell me the reason for it
04
387 சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
SUTRAANTHU ADI THOLUVEER EATHU SOLEER
சூழ்ந்தும் நிறைந்ததும் சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே சொல்வீராக
Lord Siva is covered form and then temple place filled form lord Siva’s feet are daily praying my dear disciples please tell me
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
NATRAL KULAL NANGAI YODUM YUDAN AAGI
அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய்
the lovely form hanging long hair possessed lords parvathi with her seated form
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EATREEA ERUM POOLAI EADAM KONDA EESAN
இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
And then twin firm dwelling in the irum poolai temple place
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.
PUTRU ADARAYU EANBU POONDA PORULLEEA
புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகளாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ?
Lord Siva who has adorned the sand don place living snakes are adorned all over the body and then in addition bone garland also adorned it please tell me the reason for it
05
388 தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
THOODAAR MALAR THOOI THOLU THNDARGAL SOLLEER
இதழ் நிறைந்த மலர்களைத் தூவித் தொழும் தொண்டர்களே சொல்வீராக
The petals are filled flowers are spraying under the feet of lord Siva those disciples you are please tell me
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
SEEDAAR KULAL SEEI EALAI YOODU YUDAN AAGI
திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய்
Lords Parvathi who has thick hair and then well selected ornaments are adorned all over the body and with her you have seated
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EEDAA EARUM POOLAI eadam konda eesan
பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன்
With that glory filled form of lord Siva seated in the earum poolai temple place
காடார் கடுவே டுவனான கருத்தே.
KAADAAR DADU VEEDUVAN AANA KARUTHEEA
காட்டில் வாழும் கருமையான வேடனாய் வந்தது ஏனோ?
Lord Siva who has converted himself as wild hunter form please tell me the reason for it
06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
07
389 ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
VORUKKUM MANATHAN PARU YULLEER EATHU SOLLEER
ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே சொல்வீராக
With oneness form of mind possessed you have mingled with other disciples please tell me
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
PARUKKAI MATHA VEELAM YURITHU YUMMAI YOODUM
நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு
Lord Siva who has long nose possessed and mad elephant skin is pealed and then adorned it as upper dress and fearing with lords youmadevi
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EARUKKAI EARUM POOLAI EADAM KONDA EESAN
இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன்
Lord Siva you have seated in the earum poolai temple place
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.
ARAKKAN YURAM THEER THU ARUL AAKIYA VAAREEA
இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ?
Lord Siva at first ravanaas mighty power is destroyed and the afterwards you have put your grace on them please tell me the reason for it
08
390 துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
THU YAR AAYINA NEEKITH THOLUM THONDER SOLLEER
துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே சொல்வீராக
Your sorrows are relieved form praying disciples please tell me
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
KAYAL AAR KARUM KANNI YODUM YUDAN AAGI
கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய்
The kayal fish like dark color eyes are possessed lords Yumadevi with her lord Siva you have seated
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EAYAL BAAI EARUM POOLAI EADAM KONDA EESAN
இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன்
Lord Siva naturally dwelling place is irum poolai
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
MUYAL VAAR EARU VARKKU EARI YAAGIYA MEI MAIYEEA
காண முயண்ற திருமால் பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ?
Bharma and then thirumal tried to see your head and feet but you are rare form to them and then afterwards you have fire glow pole form appeared appeared before them please tell me the reason for it
09
391 துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
THUNAI NANMALAR THUITH THU THOLUM THONDERGAL SOLLEER
திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே சொல்வீராக
As per appropriate good flowers are sprayed form praying under the feet of lord Siva please tell me
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
PANAI MEN MULAI PAAR PATHI YOODU YUDAN AAGI
பருத்த தனபாகங்களைக் கொண்டுள்ள பார்வதி தேவியோடு உடனாய்
The big breasts are possessed lords Parvathi with her lord Siva seated beside her
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EANAI YIL EARUM POOLAI EADAM KONDA EESAN
இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
The unique form of place is irum poolai where lord Siva you are dwelling
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
ANAI VIL SAMAN SAKKIYAM AAKIYA VAAREEA
அணைத்து வழிபடுதல் இல்லாத சமண பௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ?
Samana and butha religious people are not go pro to siva religion why you have created in this world
10
392 எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
EANTHAI EARUM POOLAI EADAM KONDA EESAN
எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன்
Lord Siva who is my father seated in the erum poolai temple place
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
SANTHAM PAYILSAMBAIYUL GAANA SAMBANTHAN
ஆகிய பெருமானை வேதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன்
And that form of lord Siva who is prayed and then praised by ganasambanther who is excelled in the veethaas and then descended in the seergaali place
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
SEN THANN TAMIL SEPPIYA PATHIVAI VALLAAR
செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப் பாடல்கள் பதத்தையும் ஓத வல்லவர்
Ganasambanther who has praised with good tamil wards form of above poems and then those disciples who are chanting it repeatedly before lord Siva
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
BANTHAM ARUTHU VOONGU VAR PAANMAIYI NAALEEA
மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர்
Those disciples are in this world bond is broken form and then attain highly regarded place
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காசியாரண்ணியேசுவரர், தேவியார் – ஏலவார்குழலம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM