OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru puram bayam

ganesheit February 26, 2020

2.30 திருப்புறம்பயம் – திருவிராகம்
Thiru puram bayam


Place history –this is river Cauvery northen side temple. It is46th temple in this cluster. In this temple place sanagaathi saints and others are prayed . it is also called in the name of thiru perambiyam
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalam


317 மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை
MARAM PAYAM MALINTHAVER MATHIL PALI SARUTHANAI

வீரமும் பயமும் கொண்டு தன்னோடு போர் தொடுத்த அசுரர்களின் முப்புரங்களின் வலிமையை அறுத்தாய்
Tre brave but fearful assuraa are who are waged war with lord Siva so those assuraas three castles are destroyed


நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை
NERAM PASUMAI SEMAIYOODU EASAINTHU YUNATHU NEERMAI

உனது தன்மை பசுமை நிறமும் செம்மையும் கலந்தது
Lord Siva you have mingled with green body possessed lords parvathi but your body color is red one


திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்
THERAM PAYANURUM PORUL THERINTHU YUANARU NAALVARKKU

ஆகமங்களின் பயனாகச் சொல்லத்தக்க பொருளைத் தெரிந்துணர விரும்பிய முனிவர் நால்வர்க்கு
the effects of aagamaas and veethas benefits are wanted to know by sanagaathi saints of four persons


கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்.
ARAM PAYAN UNARTHANAI PURAM PAYAM AMARNTHOOI

அறமாகிய பயனை உணர்த்தியருளினாய் புறம்பயம் அமர்ந்தவனே
Lord Siva you have preached them the dharma effect and in this form lord Siva you have seated puram bayam temple place
01


318 விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்
VERITHANAI THIRU CHADAIARITHU OLUGU VELLAM

சடையை விரித்துப் பெருகி வந்த கங்கை வெள்ளத்தை தாங்கினாய்
Lord Siva you have spread over hair place bearing the Ganges river


தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்
THARITHANAI ATHANRIYUM MEGAP PERIYA KAALAN

அஃதன்றியும் மிகப்பெரிய காலனின் பிடரி
And then more over the big death god ema neck place


எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்
EARUTHIRA YUTHAITHANNAI EALANG GILAIYOOR PAAGAM

வருந்துமாறு உதைத்தாய் விளங்கும் அணிகலன் பூண்ட உமையம்மையை மேனியின் ஒரு பாகமாகப்
You have kicked and then ever glittering form of ornaments are adorned lords yumaadevi has been left part of your body


பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்.
PORUTHUTHAL KARUTHINAI PURAM PAYAM AMARNTHOOI

பொருத்தியுள்ளாய் புறம்பயத்தில் எழுந்தருளியவனே
And that twin form lord Siva you have descended in the puyam param temple place
02


319 விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை
VERITHANAI KUVITHANAI VELUNGU YUIR YUMINTHANAI

எல்லாமாக விரிந்து நின்றாய் நுண்ணியனாகக் குவிந்துள்ளாய் ஊழிக் காலத்தில் விழுங்கிய உயிர்களை வினைப் போகத்திற்காக் மீண்டும் உடலோடு உலவ விட்டாய்
Lord Siva you have expanded all the world thing form and then micro form you have been appearing in this world and then at the end of yooli time lord Siva you have engulfed all the living beings and then afterwards cause and effect form you gave body to those souls and then allowed to live in this world


திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்
THIRI THANAI KURUNTHOSI PERUM THAGAIYUM NEEYUM

உன் நிலையை விடுத்துப் பல்வகை வடிவங்கள் எடுத்து திரிந்தாய் குருந்தொசித்த திருமால் மோகினியாக வா அவரோடு கூடிய
Lord Siva you have come down from your place and then taken so many verities of forms in this world and then wandering everywhere, and then the powerful thirumal has broken the kuranthaa tree and then who has taken mohini avathaar and then mingled with lord Siva


பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்
PERITHANAI PUNARMTHANAI PENANGU MAYAANAM

பிரிந்தும் புண்ர்ந்தும் விளையாடினாய் பிணம்புழும் சுடுகாட்டில்
And then separate form and mingled form play with thirumaland then dead bodies are eaten by insects and in that burial ground place


புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.
PURINTHANAI MAGLTHANAI PURAM PAYAM AMARN THOOI

விரும்பி மகிழ்ந்தாய் புறம்பயம் அமர்ந்த பெருமானே
Lord Siva you have willingly dwelling there and in that form of lord Siva you have also descended in the puram bayam temple place
03


320 வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
VALAM KELU KADUM PUNNALOODU SADAI VODUNGA

வளமை பொருந்தியதாய்க் கருமையாகப் பெருகி வந்த கங்கையோடு கூடிய சடையை
and then fertile form of river Ganges with frowned face form flooded ganges is taken in your hair place


துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
THULANG AMAR EALAM PERAI SUMANTHATHU VELANGA

விளங்கும் இளம்பிறையை கலங்கத் தாங்கி
And then ever active form young moon is taken in that hair place


உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
YULAM KOLA VALANTHAVAR SUDUM SUDALAI NEERU

மனம் நெகிழ்ந்து வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றோடு தோன்றும்
Those disciples who are praying with melted heart to whom before lord Siva appearing in the sacred ashehes adorned all over the body form

புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்.
PULAM KOLA VELANGINAI PURAM PAYAM AMARTHOOI

உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்
புறம்பயம் அமர்ந்த பெருமான்
Lord Siva in this way showed to their knowledge and in then in that form appearing in the thiru puyam baram temple place
04


321 பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்
PERUM PENI PERAPPINODU EARAPPILAI YOR BAGAM

பெரிதாகப் பற்றிய நோய் பிறப்பு இறப்பு இல்லாதவன்
Lord Siva does not have affected by any big deceases and he does not have in this world birth and death


கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
KARUM BODU PADUM SOLLIN MADANTHAIYAI MAGILNTHOOI

கரும்படு சொல்லி என்னும் பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன்
Lords yumaathevi has yet another name karum banna soli( sugar cane like tastier wards are talking lady) with her lord Siva mingled happily


சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
SURHM PUNA ARUMU AVIL THIRUNTHI EALU KONRAI

வண்டுகள் தேனுண்ண அதனால் அழகுற அவிழும்
கொன்றை மலர்களை
Honey bees are penetrayed in to the konrai flowers and then sucking the honey from the flowers so that the flowers are converted in to bloomed form


விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே.
VERUMBINAI PURAM PAYAM AMARNTHA EARAI YOONEEA

விரும்பியவன் புறம்பயம் அமர்ந்த இறைவனே
That puram payam place lord Siva willingly seated in prime god form

05
322 அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்
ANAL PADU THADAKKAI AVAR EATH THOLILAREENUM

தீ வளர்க்கும் நீண்ட கையை உடைய அந்தணர்கள் அவர் எத்தொழிலை மேற்கொண்டவர் ஆயினும்
The yagaa fire developing bharamins and others who are whatever type of work is doing and those people


நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே
NENAI PUDAI MANATHAVAR VENAI PAGAIYUM NEEYEEA

உன்னை நினையும் மனத்தவராயின் அவர்தம் தீவினைகட்கு பகையில் இருந்து தீர்ப்பவன் நீ

All the time thinking you and that disciples bad deeds are given relief from opponents


தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
THANAR PADU SUDAR SADAI THANIP PERAI YODU ONRAAI

தீக்கொழுந்து போன்ற ஒளிபொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்த
The fire glow form of glittering light filled hair place and then special form curved moon adorned form


புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்.
PUNAL PADU KEDAKKAIYAI PURAM PAYAM AMARNTHOOI

கங்கை கிடக்குமாறு செய்துள்ளவன் புறம்பயம் அமர்ந்த பெருமான்
And then in addition Ganges are laying down in your hair place and that form of lord Siva descended in puram bayam temple place
06


323 மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
MARAI THURAI MARUTHAVAR THAVATU ADIYAR YULLAM

பாவமான செயல்களை விரும்பாத தவத்தைப் புரியும் அடியவர் உள்ளங்களில்
The sinful acts are not liked and those penance performing disciple’s mind


அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
ARATHURAI VORUTHU TUNATHU ARUL KELAMAI PETROOR

அறநெறிப் பயனையும் அடைய விரும்பாதவாறு அதனை கடிந்து உன் அருள் உரிமையைப் பெற்றோர்
Who are not liked dharma benefits and then kept it away and then they attained your rightful grace


திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
THERANTHULA THERATHINAI MATHITHU AGALA NINRUM

திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய் நின்றும்
Those persons status you have put your grace on them and that mannerism form you are appearing but you are kept away from them


புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.
PURANTHULLA THERATHINAI PURAM PAYAM AMARNTHOOI

வேறாய் நின்றும் அருள் புரிபவன் புறம்பயம் அமர்ந்தோய்
And that distinguished place you have seated and then put your grace on your disciples and in that form lord Siva you have seated in puram bayam temple place
07


324 இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
EALANGAIYAR EARAINGSERAI VELANGALIN MULANGA

இலங்கை மக்கள் வணங்கும் தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு முழங்க
Sri langa people are praying ravanaa who is trapped under kaiyilai hills


உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி
YULAM KELLU THADAKKAIGAL ADARTHIDALLUM ANGI

அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சி
And that ravana’s mighty powerful heads and shoulders are stamped and then got afraid of


வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு
VALAM KOLA EALUNTHAVAN ALANG KAVINA VANGU

போற்ற வாளும் நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக
And then sang samaveetha to appease lord Siva and then prayed under lord Siva’s feet to forgive his sin and lord Siva got happy and then gave him sphere and long life and the blessed him


புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.
PULANG KALAI VELANGINAI PURAM PAYAM AMARNTHOOI

ஐம்புலன்களை அடக்கி வழிபடுமாறு அருள் புரிந்தவர் புறம்பயம் அமர்ந்தவன்
And that lord Siva blessed him to control five sense organs and that form of lord Siva seated in thiru puyam baram temple place
08


325 வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்
VADAND KEDA NUDANG KUNA EADARNTHA EADAI ALLI

ஆல் இலையில் துயின்ற திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்து தோன்றிய பிரமனும்
In all tree leaf place slept thiru mal and then from his umbilical card place appeared bharma


கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்
KEDANTHAVAN EARUNTHAVAN ALANTHU YUNARALLAAGAAR

உன்னை அளந்தறிய இயலாதவராயினார் பின்
Who are unable to scale your feet and head


தொடர்ந்து வருந்த நிமிர்ந்துடன் வணங்கப்
THODARNTHAVAR YUDAMBODU MINIRNTHU YUDAN VANANGA

அவர்கள் தொடர்ந்து பழைய உருவோடு வணங்க
And then afterwards they have with their old form prayed before lord Siva


புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.
PUDANG ARUL SEI THONRINAI PURAM PAYAM AMARNTHOOI

அவர்கட்கு கருடப்புள் அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாக கொண்டு படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள் புரிந்தவர் புறம்பயம் அமர்ந்தவன்
And then lord Siva who has seated in this puram bayam temple place blessed them with creation and preservation work and then in addition gave them vulture and anna birds as their vehiles
09


326 விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
VEDAKKU ORUVAN NANRENA VEDAKKU ORUVAR THEETHENA

ஊன் உடலால் நன்றென்று கூறும் தேரர்கள் தீதென்று கூறும் சமணர்கள்
This flesh filled body is good one in that way propagating buthaas and this flesh body is bad one and in that way propagating samanaas


உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
YUDAL KUDAI KALAINTHAVAR YUDAM BINAI MARAIKKUM

உடலில் உடையின்றித் திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தி
And the necked form wandering samanaas and then body is covered with cloth form wandering buthaas


படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்
PADAKKARGAL PEDAKKU YURAIPADUTHU YUMAIYOOR BAAGAM

புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடக நூல் முதலியவற்றின் உரைகளைக் கொள்ளாது உமையம்மையை ஒரு பாகமாட்
Who are propagating religious book named peedagam from its wards are not accepted and then lord Siva who has taken lords yumaathevi in his left part of his body


அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே.
ADAKKINAI PURAM BAYAM AMARNTHA YURAVOONEEA

கொண்டு விளங்கும் புறம்பயம் அமர்ந்த வலியவனே
And that twin form of appearing lord Siva alone prime and powerful god in this world
10


327 கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்
KARUNG GALI PERUM THERAI KARAIKKU YULLAYU MUTHAM

கரிய உப்பங்கழிகள் பெரிய அலைகளால் விளங்கும் முத்துக்களை தந்து
The dark color salt fields are lashed by big waves and then giving pearls


தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
THARUM KALUMALA THERAI TAMIL KILAMAI GAANA

உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும் தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞானசம்பந்தன்
Ganasambanther who is leader to seer gali place people and then rightful owner to pure tamil language


சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்
SURUMBU AVIL PURAM PAYAM AMARNTHA TAMIL VALLAAR

வண்டுகள் ஒலி செய்யும் புறம்பயம் அமர்ந்த பிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தனடி வல்லவர்கள்
Where the honey bees are raising humming sound in the puram bayam place dwelling lord Siva and on him sang the above decade who are excelled to sing it before lord Siva


பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.
PERUM PENI MARUNGU ARA VORUNGU VAR PERAPPEEA

காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப் பெறுவர்
and that disciples will get relief from the good old birth and death
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சாட்சிவரதநாதர், தேவியார் – கரும்பன்னசொல்லம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 26, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: