Thiru pugali
2.29 திருப்புகலி – திருவிராகம் 165
Thiru pugali
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்
om thiru chitram balam
Place explanation see decade no 137
306 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
MUNNILAI KALAI PORULLUM MOOYULAGIL VAALYUM
பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும்
All the 64 arts meaning and then three worlds life form analyzing form given to all living beings and then preserved it
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
PANNIYA ORUTHAR PALAVOOR VENAVIN JAALAM
ஒருவராக விளங்கும் சிவபெருமானின் பழமையான ஊர் யாதென வினவின்
And that wonderful one person is lord Siva whose good old hamlet if you enquired
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
THUNNI EAMAIYOORGAL THTHI SEITHU VANANGUM
தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும்
Where deevaas are entered in this land and the conducted poojaas and then prayed
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே
SENNIYAR VERUPPURU THIRU PUGALI YAAMEEA.
சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்
Lord siva who is mind and head place dwelling and his descended place is thiru pugali alias seergaali temple place
01
307 வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
VANDIRAI MATHISADAI MILAITHA PUNAL SOODI
வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதிசூடிய சடையின் மேல் தாங்கிய
The hard form of waves are emanating of ganges is adorned on the moon adorned pigtail place bearing
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
PAND EARI KAI YAADU PARAMAN PATI EANBER
பழமையான தீயைக் கையில் ஏந்தி ஆடும் பரமனது பதி
And that good old fire is hand pot place bearing form dancing lord Siva whose dwelling place is
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
PUNDARIGA VAASAMATHU VEESA SOLAI
தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும்
Where lotus flower fragrance spread over plantations are covered place
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.
THEN THERAI KADAL POLI THIRU PUGALI YAAMEEA
பொலிந்ததும் ஆகிய திருப்புகலி யாகும்
Is thiru pugali temple place
02
308 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
PAAYUNAYUU SINTHAI AVER PATARODU KOODI
இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள் பத்தர்களோடு கூடிப்பரவ
Lord Siva’s glory filled prayer songs are singing and those mentality filled disciples who are clubbed with other disciples and then singing prayer songs
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
NAA ANAYUM ANTHANAR VERUPPIDAM AAM EANBAR
அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம்
Those disciples tong place dwelling bharamin form appearing lord Siva whose willingness filled place is
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
POO VANAYUU SOLSI EARUL MAALAI EATHIR KOORA
பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத் தரும் மாலைப் பொழுது
In flowers are filled plantations place where darkness is given evening time
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.
THEEVANA VELLAA VALAR THIRU PUGALI AAMEEA
தெய்வத் தொடர்பான விழாக்கள் திகழும் திருப்புகலி எனக்கூறுவர்
That god’s festivals are daily moving place is thiru pugali which place is liked by lord Siva
03
309 மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
MAI THAVALUM MAAMIDARAN MAA NADAM ATHU AADI
கருமை நிறம் பொருந்திய மிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி
The black color throat possessed lord Siva with happiness form and the best dancing is doing form
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
KAI VALI YINAAL LODU KALANTHA PATHI EANBAR
வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி
Where lords parvathi bangles are adorned in the hand place and the lord Siva mingled form dwelling place it is
Where lord Siva dwelling with lords yumathevi in mingled form those temple place is
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடி
SEI PANI PERUTHU EALLUM YURITHIRARGAL KOODI
உருத்திரர்கள் பெரிதான இறை தொண்டுகளைப் புரிந்து
Yurithirars are big form slavery and menial work is doing under lord Siva’s feet
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
THEAIVAMATHU eanakkuru THIRU PUGALI YAAMEEA
பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்
Who are with lord Siva clubbed form dwelling place is thiru pugali
04
310 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
MUNNAM EARU MOONRU SAMAYANGAL AVAI AAGI
முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு
At first six types of religious form existing in this world and then as per their doctrines
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
PINNAI ARUL SEITHA PERAIYAALAN YURAI KOIL
ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில்
Are acceptable form put grace on them and that form of lord Siva curved moon adorned form dwelling temple place
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
PUNNAI MALAR POLILGAL AKKIN OLI KAATA
சங்குகள் ஒளிவிடும் புன்னை மலர்ச் சோலைகள் உடையதும்
Sangu flowers are glittering form and then punnai plantations are covered place
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.
SEN NEL VAYALLAAR THARU THIRU PUGALI YAAMEEA
செந்நெல் விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்
Where red color paddy growing paddy fields are filled place is thiru pugali
05
311 வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
VANGAM MALIYUM KADAL VEDATHINAI NUGARNTHA
மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற்கடலில் தோன்றிய விடத்தினை உண்ட
The wooden ships are filled place is thiru paarkadal sea where emanated poison is consumed
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
ANGANAN ARUTHI SEITHU EARUKKUM EADAM EANBER
அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிக விரும்பி இருக்கும்
And those lovely grace filled lord Siva willingly dwelling place
கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
KONGU ANAVIYAN POLILIN MAASU PANI MOOSA
மணம் நிறையுமாறு பனி படர்ந்து மாகடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய
With mind filled form the snow spread over form and then honey filled form plantations are covered place and then lovely
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.
THEANGANAYU THEENMALI THIRU PUGALI YAAMEEA
தென்னை மரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்
The coconut trees are covered form of place is thiru pugali
06
312 நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
NAL GURAYUM EANBAMUM NALANGAL AVAI AAGI
வறுமை இன்ப வாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய் தம்மை வழிபடுவாரின்
Lord Siva not only gave poverty stricken life but also gave happiness form of life in this world and then those disciples are praying under his feet
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
VAL VENNAIGAL THEERTHU ARULUM MAINTHAN EADAM EANBER
வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம்
And that disciples wild bad deeds are removed brave fighter form appearing lord Siva’s dwelling place it is
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
PALGUM ADIYAARGAL PADIYAAR EASAI PAADI
பெருகிய அடியார்கள் நிலமிசை இசை பாடி வாழ்த்துவதும்
Multiplied form of disciples in this land place singing prayer songs form praising lord Siva
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
SELVA MARAIYOOR YURAIYUM THIRU PUGALI AAMEEA
செல்வம் நிரம்பி மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்
And then wealth filled form of veetha chanting bharmins are filled place is thiru pugali
07
313 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
PARAPPURU PUGAL PERUMAIYAALAR VARAI THANAAL
பரவிய புகழாளரும் பெருமையாளன் தன்னால்
All the place glory spread over form and then greatness filled form of lord Siva
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
ARAKKANAI ADARTHU ARULLUM ANNAL EADAM EANBER
கயிலை மலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம்
Who has with kailai hills stamped ravana and that leader form of lord Siva’s dwelling place it is
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
NERUKKURU KADAL THERAI KANN MUTHA MANI SINTHA
நெருங்கி வரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால்
The land place approaching sea waves are spill over pearls and diamonds
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.
SERUKKURU POLIL PLI THIRU PUGALI YAAMEEA
பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்
those greatness filled place and then plantations are covered place is thiru pugali temple place
08
314 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
KOODALODU KOON MATHI KULAAYASADAI THAN MEEAL
காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின் மேல்
With ganthal flowers the stooped form of curved moon dwelling hair place
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
AADARAVAM VAITHU ARULLUM APPAN EARUVARKKUM
ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும் திருமால் பிரமர்
And in addition dancing snakes are adorned form and that leader form of lord Siva and then bharma and thirumal
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
NEEDA EARI YAAGI EARU PAALUM ADI PEENI
தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும் மேலும் அடி முடிகளைத்
Searched lord Siva’s feet and head under and upper place but failed and then lord Siva appeared before then fire glow form
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.
THEEDA YURAIYUM NAGER THIRU PUGALI YAAMEEA
தேட நின்றவருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்
And that form of lord Siva dwelling place is thiru pugali
09
315 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
KATRA AMANAR YUTRU YULLAYU THEERAR YURAI SEITHA
கல்வி கற்ற சமணர்களும் நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும்
Well learnt samanaas and then religious well studied buthaas who not knowing the true matter and the propagating
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
KUTRA MOLI KOLGAI ATHU EALLAATHA PERUMAANOOR
குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனு ஊர்
Those sin filled doctrines are not acceptable place it is
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
PON THODI MADANTHAYARRUM MAINTHER PULAN EAINTHUM
பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும் ஐம்புலன்களையும்
The golden bangles are adorned ladies and young persons are five sense organs
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
SETRAVER VERUPPURU THIRU PUGALI YAAMEEA
வென்ற ஞானவரும் விரும்பும் திருப்புகலியாகும்
Who are own over it and that gaana filled persons are liked place is thiru pugali
10
316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
SENTHAMIL PARAPPURU THIRU PUGALI THAN MEEAL
செந்தமிழ் மொழி பரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய
The pure tamil language ever blooming form of thiru pugali place descended
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
ANTHA MUTHAL AAGI NADUVAAYA PERU MAANAI
ஆதி அந்தம் நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான் மீது
Where lord Siva is begging and end and middle form existing lord Siva
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
PANTHAN YURAI SEN TAMILGAL PATHU EASAI KOORA
ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும்
Where ganasambanther sang the above decade and then those disciples who are daily singing it with musical notes filled form
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
VANTHA VANNAM EEATHUM AVER VAANAM YURAI VAAREEA
வகையில் பாடிப் பரவுவார் வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்
And that disciples are ultimately attain mukthi in rightful way
11
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam
February 26, 2020