OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru pugali

ganesheit February 21, 2020

2.25 திருப்புகலி –161
Thiru pugali

Place history – see decade no 137
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam


262 உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
YUGALI YAAR KADAL VOONGU PAAR YULEEAR

தாவிச் செல்லும் அலைகள் உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின் கண் வாழ்பவர்களே
Leaf forward waves are filled sea covered place living people you are and in that encircled and trapped place you are living


அகலி யாவினை யல்லல் போயறும்
AGAILIYAA VENAI ALLAL POI ARUM

வினைகள் பெருகாமல் ஒழியும் அல்லல் போகும்
If you pray lord Siva the bad deeds will not be multiplied and your problems in life are gone away


இகலி யார்புர மெய்த வன்னுறை
EAGALI YAAR PURAM EAITHAVAN YURAI

தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபெருமான் உறையும்
Three castle assuraas who are defied lord Siva whose three castles are destroyed by lord Siva wit fire arrow and that form of lord Siva dwelling place it is


புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.
PUGALIYAM NAGER POTRI VAAL MINEEA

புகலி எனப் பெயர் பெற்ற சீகாழிப்பதியை போற்றி வழிபடுங்கள்
Andin that form of seergali temple you may pray and then praise lord Siva because at the destruction of yooli time this seergaali alone floated on the sea place
01


263 பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
PANNIYAAL VATHOOR EEAATEAR PAAL MATHI

அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும் பால் போன்ற வெண்மையான பிறைமதியை
The decorated form of moving the bull which is employed by lord Siva and milk like white color moon


கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
KANNIYAAR KAMAL KONRAI SEEAR MUDI

கண்ணியாகப் புனைந்தவனும் மணம் கமழும் கொன்றை மாலை சேர்ந்த முடியினனும் ஆகிய
Adorned in the hair place as flower form and then on addition konrai flower garland also adorned in the hair place


புண்ணி யன்னுறை யும்பு கலியை
PUNNIYAN YURAI YUM PUGALIYAI

புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை
And punniya deity form of dwelling lord Siva in the seergaali temple place


நண்ணு மின்னல மான வேண்டிலே.
NANNUM EANN NALAM AANA VEENDILLEEA

நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின் வழிப்படுங்கள்
If you want benefits in life please pray him
02


264 வீசு மின்புரை காதன் மேதகு
VEESU MIN PURAI KAATHAN MEEA THAGU

ஒளி வீசும் மின்னன் போன்ற அணி பூண்ட காதினனும்
The glittering lightning like stones are studded ear ornaments are adorned form lord Siva


பாச வல்வினை தீர்த்த பண்பினன்
PAASA VAL VENAI THEERTHA PANBINAN

பற்றுக்கள் வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும்
Who has removed lust feelings on our part and that highly regarded mannerism possessed lord Siva


பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
POOSU NEETIRINAN POOM PUGALIYAI

திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிபதியைwho has adorned sacred ashes all over the body and that form of lord Siva descended temple place it is


பேசு மின்பெரி தின்ப மாகவே.
PEESUMIN PERITHINBA MAAGAVEEA

இன்பம் பெரிதாக விளைய வேண்டின் புகலியை அடைந்து அவனைப் புகழ்ந்து பேசுங்கள்
If you want happiness in life in bigger form ten you may approach pugali temple and then pray him
03


265 கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
KADI KOL KOOVILLAM MATHAM VAITHAVAN

மணம் கமழும் வில்வம் ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும்
Lord Siva who has adorned the fragrance filled vilvam leaves and then yoomathai flowers are adorned on the hair place


படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
PADI KOL PAARIDAM PEESUM PANN MAIYAN

பெரியான இவ்வுலகில் உன்னோடு புகழ்ந்து போற்றும் தன்மையாளனும்
And then in this big world mingled with you and then praised form praying mannerism filled lord Siva


பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
PODI KOL MEEANIYAN POOM PUGALI YULL

திருநீற்றுப் பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை
Lord Siva who has adorned sacred ashes all over the body and that form of lord Siva descended in the pugali temple place


அடிகளை யடைந் தன்பு செய்யுமே.
ADIGALAI ADAINTHU ANBU SEIYUMEEA

அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள்
Who may be approached and then shower love towards him by doing menial service under his feet
04


266 பாதத் தாரொலி பல்சி லம்பினன்
PAATHATHAAR OLI PAL SELAM BINAN

பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும்
In the leg place adorned sound raising anklets are verity form adorned


ஓதத் தார்விட முண்ட வன்படைப்
VOOTHATHAAR VEDAM YUNDA VAN PADAI

பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும்
And then in the milk sea place emanated poison swallowed as food form


பூதத் தான்புக லிந்ந கர்தொழ
BOOTHATHAAN PUGALI LIN NAGER THOLA

பூத்ப் படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப் பதியை அடைந்து தொழுது
Lord Siva who has possessed demon forces and that form of lord Siva dwelling in the seergaali temple place where you may enter and then pray him


ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.
EEATHATHAARK KU EADAM EALLAI EANBAREEA

துன்பங்கள் வருதற்கு இடம் இல்லை என்பதாகும்
So that you may not entertain any form of sorrows in life
05


267 மறையி னான்ஒலி மல்கு வீணையன்
MARAIYINAAN OLI MALGU VEENAIYAN

வேதங்களை அருளியவனும் ஒலி நிறைந்த வீணையை உடையவனும்
Lord Siva who has blessed form gave veethaas to this world and the sound filled veenaa instrument carried on the hand place


நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
NERAIYINAAR NIMIR PUNN SADAIYAN EAMM

பூரணனாய் நிமிர்த்துக் காட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும்
And then in full- fledged form of hair is tied as crown form


பொறையி னானுறை யும்பு கலியை
PORAIYINAAN YURAI YUM PUGALIYAI

எமது பொறுமையை மலராகக் கொள்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே
My calmness is considered as flower form and then accepted it and that form of lord Siva dwelling place it is


நிறையி னாற்றொழ நேச மாகுமே.
NERAIYINAAL THOLA NEESAM AAGUMEEA

குறிக்கொண்டு தொழ அதுவே அன்பு வழிபாடாக அமையும்
And then if you considered as deity form and which will be converted as love form of prayer in this world
06


268 கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
KARAVEDAI MANATHAARAI KAAN GILAAN

வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும்
The vengeance filled minded persons are not liked to see and that form of lord Siva


இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
EARAVIDAI PALI KOLLUM EAMM EARAI

இரவில் பலியேற்கும் இயல்பினனும் எம் இறைவனும்
At night time getting begging food and that mannerism filled lord Siva who is my lord


பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
PERU VEDAI YUARNTHAAN PUGALIYAI

போர்வல்ல விடை பொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப்
The ferocious form of waging war that form of bull emblem studded flag possessed lord Siva and whose dwelling place is pugali temple


பரவி டப்பயில் பாவம் பாறுமே.
PARAVIDA PAYIL PAAVAM PAARUMEEA

பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்
If you pray and then praise lord Siva and then your sins will be perished
07


269 அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
ARUMBINAAR MULAI N MANGAI PANGINAN

தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும்
The lotus flower buds form of breasts are possessed lords Yumadeevi is given left part of his body


விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
VERUMBINAAN ARAKKAN YURAM SEGUM

தன் மீது விரும்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்ந்த
Even though ravana liked lord Siva but his ego filled form of mind so his mighty power is stamped under the kailai hills


பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
PORUPPINAAN POLILAAR PUGALI YOOR

கயிலை மலையினனும் பொழில் சூழ்ந்த புகலியூரைத் தன்
And that kayilai place dwelling lord Siva and then also plantations are covered place is pugali


இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.
EARUPPINAAN ADI EEATHI VAALTHUMEEA

இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள்
Which is also his dwelling place and that form of lord Siva’s sacred feet are praised and then pray him
08


270 மாலும் நான்முகன் றானும் வார்கழற்
MAALUM NAAN MUGAN THAANUM VAAR KALAL

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும்
Thirumal and bharma are tried to search ego filled form lord Siva’s head and feet


சீல மும்முடி தேட நீண்டெரி
SEELAMUM MUDI THEEDA NEENDU EARI

திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய்
போலு மேனியன் பூம்பு கலியுள்
But failed in that work and then they begged under lord Siva’s feet you are the prime lord in this world and then lord Siva appeared then in fire glow form of appearing in pugali place


POOLU MEEANIYAN POOM PUGALIYUL
நீண்டவனும் அழகிய புகலியுள்

And then fire pole form from earth to sky appeared in pugali temple place


பால தாடிய பண்ப னல்லனே.
PAALATHU AADIYA PANBAN NALLANEEA

பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்
Who has daily taking bath with cow milk and other products and then happily dwelling here and that form of mannerism filled lord Siva who is doing favor to his disciples
09


271 நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
NINRU THOIPAVAR NEESAN THEERAR SOL

நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள் தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை
In the standing form consuming food that low graded samanaas and then buthaas whose preaching are


ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்
VONRA THAGAVEEA YAAYUNAR VINUL

ஒரு பொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள்

Not to be accepted as real one and those disciples whose intuitive mind place


நின்ற வன்னிக ழும்பு கலியைச்
NINRAVAN NIGALLUM PUGALIYAI

நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச்
Standing form of lord Siva who has descended in pugali temple place


சென்று கைதொழச் செல்வ மாகுமே
SENRU KAI THOLA SELVAM AAGUMEEA.

சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்
Where you may enter and then pray him and then you will get all form of wealth in this life
10


272 புல்ல மேறிதன் பூம்பு கலியை
PULLAM EEARI THAN POOM PUGALIYAI

விடை மீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை
Lord Siva who has ascended on the bull place and whose lovely abode is pugali temple


நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
NALLA GAANA SAMBAYHAN NAAVINAAL

நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால்
Where descended ganasambanther who is doing favor to all and then with his tongue


சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
SOLLUM MAALAI EER AINTHUM VALLAVAR

போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள்
Who has praised form of stated the above Tamil decade in garland form of poems


கில்லை யாம்வினை இருநி லத்துளே.
EALLAIYAAM VENAI EARU NILAT THULLEA

அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை
Those disciples who are singing it repeatedly before lord Siva who will not affect any form of defects in this world
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 21, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: