OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU NELLVAAYIL

ganesheit February 21, 2020

2.26 திருநெல்வாயில் –162
THIRU NELLVAAYIL


PLACE HISTORY – this is river Cauvery northern side temple. This is third temple in this cluster. Now it is called in the name of sevapuri (there is yet another temple named thirunelvaayil arathuraiavailable. This is central kingdom temple)
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் –OM THIRU CHITRAM BALAM


273 புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
Pudaiyinaar pulli kaal porunthiya

வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும்
In the paddy fields place grabs are moving form


மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
Madaiyinaar mani neer nel vaayillaar

வாய்க்கால்களை அடுத்துள்ள நீர் மடையில் நீலமணி போன்ற தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவா
In the canal nearby place water bodies are the blue color form of clear water available place in nel vaayil where dwelling lord Siva


நடையி னால்விரற் கோவ ணந்நயந்
Nadaiyinaal veral kovanam nayanthu

ஒழுக்கத்திற்குக் காட்டாக நால்விரல் அளவுள்ள கோவண
To cover secret part lord Siva tied four finger breath loin cloth adorned form


துடையி னாரெம துச்சி யாரே.
Yudaiyinnaar eamathu yuchiyaareea

ஆடையை உடையவர் அவர் எம்முடி மேல் திகழும் மாண்பினர்
Appearing who is existing in my head place as prime god form
01


274 வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்
Vaanginaar mathil meeal kanai vellam

முப்புரங்களை மீது கணை தொடுக்க வில்லினை வளைத்தவர் பெருகி வந்த கங்கை நீரைச் சடைமிசைத்
Three castles are destroyed by bow and fire arrow and then flooded form of Ganges river


தாங்கி னார்தலை யாய தன்மையர்
Thanginaar thaliyaaya thanmaiyar

தாங்கியவர் மேலான தன்மைகளை உடையவர்
Is carried in his hair place and then highly regarded good qualities are filled form appearing in this world


நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
Neengu neera NEL VAAYIL THOLA

ஓடும் நீரினை உடைய நெல் வாயில் என்னும் தலத்தினர் நாம் தொழுமாறு புகழால்
Ever water flowing place is nelvaayil temple place we are praying form with glory filled form


ஓங்கி னாரெம துச்சி யாரே.
OONGINAAR EAMATHU YUCHIYAAREEA

ஓங்கி விளங்குபவர் அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்
Appearing in this temple place who is all the time dwelling in my head place
2


275 நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ
NICHAL EEATHUM NEL VAAYILLAAR THOLA

நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல்வாயிலில்
Daily we are praising and then praying form lord Siva descended in the nel vaayil temple place


இச்சை யாலுறை வாரெம் மீசனார்
EACHAIYAAL YURAI EAMM EESANAAR

இச்சையோடு விளங்குபவர் எம் ஈசர்
In that willingness form lord Siva dwelling in this temple place


கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
KACHAI AAVATHOOR PAAMBINAAR KAVIN

பாம்பைசக் கச்சையாக அணிந்தவர் உயிர்கட்கு
Lord Siva who has tied snake as belt form and then all the living beings


இச்சை யாரெம துச்சி யாரே.
EACHAIYAAR EAMATHU YUCHI YAAREEA

விளங்குபவர் அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்
Lord Siva protecting form appearing in this world who is also seated in my head place
03


276 மறையி னார்மழு வாளி னார்மல்கு
MARAIYINAAR MALU VAALINAAR MALGU

வேதங்களை அருளியவர் மழுவாகிய வாளினை உடையவர்
Lord Siva blessed form gave veethaas to this world and then malu battle force carried on his hand place


பிறையி னார்பிறை யோடி லங்கிய
PERAI YINAAR PERAI YOODIEALANGA

சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர்
வானளாவ வளர்ந்து
And then in the hair place curved moon adorned form appearing in this world and then well grown form of paddy


நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
NERAIYINAAR NEL VAAYILLAAR THOLUM

நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால் நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர்
Fields are appearing in the entrance place so this place is called in the name of nel vaayil where lord Siva descended


இறைவ னாரெம துச்சி யாரே.
EARAIVANAAR EAMATHU YUCHIYAAREEA

நம்மால் தொழத்தரும் இறைவர் அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்
And in this form praying lord Siva who has seated in my head place
04


277 விருத்த னாகிவெண் ணீறு பூசிய
VERUTHAN AAGIYA VEN NEERU POOSIYA

முதியவராய்த் திருவென்ணீறு அணிந்துள்ள
In old age appearing form lord Siva adorned sacred ashes all over the body


கருத்த னார்கன லாட்டு கந்தவர்
KARUTHANAAR KANAL AATU YUGANTHA

தலைவர் தீயில் ஆடுதலை உகந்தவர்
That leader who is dancing in the fire place willingly


நிருத்த னாரநெல் வாயில் மேவிய
NERUTHANAAR NEL VAAYIL MEEVIYA

நடனம் புரிபவர் நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும்
And all the time dancing form lord Siva appearing in the nel vaayil temple place and that unique form of lord Siva


ஒருத்த னாரெம துச்சி யாரே.
ORUTHA NAAR EAMATHU YUCHIYAAREEA

பெயருக்கு உரியவர் அவர் எமது உச்சியில் விளங்குபவர்
Who is prime god to this world and who is dwelling in the head place
05


278 காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
KAARINAAR KONRAI KANI YAAR MALGU

கார் காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற கண்ணியை சூடியவர்
And then lord Siva who has adorned konrai flowers in the head hair place and which is blooming in the summer time


பேரி னார்பிறை யோடி லங்கிய
PEERINAAR PERAI YOODI EALANGIYA

நிறைந்த புகழை உடையவர் பிறைசூடி விளங்கும் இயல்பினர்
and that full-fledged glory filled form and then moon adorned form appearing in this world


நீரி னாரநெல் வாயிலார் தொழும்
NEERINAAR NEL VAAYILLAAR THOLUM

நெல்வாயிலில் உறைபவர் நாம் தொழத் தகும்
That form of lord Siva dwelling in nel vaayil temple place and then we are praying form


ஏரி னாரெம துச்சி யாரே.
EEARINAAR EAMATHU YUCHIYAAREEA

அழகர் அவர் எமது உச்சியில்
விளங்குபவர்
Handsome form appearing and who is also dwelling in the head place
06


279 ஆதி யாரந்த மாயி னார்வினை
AATHIYAAR ANTHAM AAYINAAR VENAI

உலகிற்கு ஆதி அந்தமாக விளங்குபவர் குரோதமான செயல்களை புரிந்த
Lord Siva is the beginner of this world and then at the yooli time put an end to this world and then those assures who are doing bad acts


கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
KOTHIYAAR MATHIL KOOTU ALITHAVAR

அசுரர்களின் மதில் கூடங்களை அழித்தவர்
Those asuraas castles are destroyed


நீதி யாரநெல் வாயி லார்மறை
NEETHI YAARA NEL VAAYILLAAR MARAI

நீதியை உடையவர் நெல்வாயிலில் எழுந்தருளியிருப்பவர்
And that balanced ethical rule form acting in this world and then in that form descended in the nel vayil temple place


ஓதி யாரெம துச்சி யாரே.
VOOTHIYAAR EAMATHU YUCIYAAREEA

மறைகளை ஓதியவர் அவர் எமது உச்சியில் உறைபவர்
Lord Siva who is all the time chanting veethaas and that form of lord Siva who is dwelling in my head place
07


280 பற்றி னான்அரக் கன்க யிலையை
PATRINAAN ARKKAN KAYILAIYAI

கயிலை மலையைப் பற்றி எடுத்த இராவணனை
The kailai hills are tried to lift by ravana


ஒற்றி னாரொரு கால்வி ரலுற
VOTRINAAR ORU KAAL VERAL YURA

ஒரு கால் விரலைப் பொருந்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர்
Lord Siva put his leg big finger and then his ten heads are smashed under the kaiyilai hills


நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
NETRI YAARA NEL VAAYILLAAR THOLUM

நெல்வாயிலில் விளங்குபவர் நாம் தொழும் தன்மையர்
In that form lord Siva descended in nelvaayil arathurai where all are praying form


பெற்றி யாரெம துச்சி யாரே.
PETRIYAAR EAMATHU YUCHIYAAREEA

அவர் எமது உச்சியில் உறைபவர்
Who dwelling in the hair place
08


281 நாடி னார்மணி வண்ணன் நான்முகன்
NAADINAAR MANIVANNAN NAAN MUGAM

நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும் நான்முகனும்
The blue color body possessed thirumal and then bharma


கூடி னார்குறு காத கொள்கையர்
KOODINAAR KURUGAATHA KOLGAIYAR

கூடித் தேடிக் குறுக முடியாத இயல்பினராய் எரி உருவோடு
Who are searched lord Siva’s head and feet but failed afterwards lord Siva appeared fire pole form before them


நீடி னாரநெல் வாயி லார்தலை
NEEDI NAAR NEL VAAYILLAAR THALAI

நீடியவர் நெல்வாயிலில் எழுந்தருளி இருப்பவர் தலை
And then from land to space place fire glow form appeared and that form of lord Siva in nel vaayil arathurai


ஓடி னாரெம துச்சி யாரே.
VOODINAAR EAMATHU YUCHIYAAREEA

ஓட்டைக் கையில் உடையவர் அவர் எமது உச்சியில் உறைபவர்
And that form of lord Siva who has carried begging bowel on his hands and who is seated in the head place
09


282 குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்
KUNDAMAN THUVAR KOORAI MOODAR SOL

குண்டர்களாகிய சமணர்களும் துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப்
The bulky body possessed smanaas and then saffron color tainted dress adorned buthaas whose wards are


பண்ட மாகவை யாத பண்பினர்
PANDA MAAGA VAIYAATHA PANBINAR

பொருளாகக் கொள்ளாத பண்பினர்
Not at all considered as good one and that mannerism possessed form


விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
VINN THAYANGU NEL VAYILLAAR NANGAI

வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர் கொடிய நஞ்சை
The paddy fields are well grown form of surrendered place is nel vaayil temple
And the wild poison


உண்ட கண்டரெம் உச்சி யாரே.
YUNDA GANDAR EAMM YUCHIYAAREEA

உண்டவர் நீலகண்டர் அவர் எமது உச்சியார்
Is consumed by lord Siva and then got blue color throat and then who has seated meditation form in my head place
10


283 நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்
NENN PAYANGU NEL VAAYIL EESANAI

நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக் கொண்டு விளங்கும் ஈசனை’
In the nel vaayil temple place be friend form appearing lord Siva


சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
SAMBAI GAANA SAMBANTHAN SOLEAVAI

சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தை
Ganasambanther who has descended in the seergaali temple place and then sang the above songs


பண்ப யன்கொளப் பாட வல்லவர்
PAN PAYAN KOLA PAADA VALLAVAR

பண்ணின் பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர்
And those disciples who are singing in the musical notes are filled form before lord Siva and then pray him


விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.
VINN PAYAN KOLUM VEETKAI YAALAREEA

வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்
And that disciples are going to get mukthi and in that likings are possessed persons they are
11

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

February 21, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: