THIRU KARU VOORAA NELAI
2.28 திருக்கருவூரானிலை 164
THIRU KARU VOORAA NELAI
THIS IS KONGU KINGDOM temple place. Out of 7 temples in this cluster it is 7th temple. Ganasambanther sand decade here. Place name is karur, aanilai is temple name. In this temple place cow named kamatheenu prayed. Out of 63 nayan maars one nayanmaar named pugal chola naayanaar who is king while ruling in kruoor place one another nayanmaar earpather descended here. The poems named thiru vesaippaa is blessed form sang by karuyoor teevar and that place it is
கொங்கு நாட்டு 7ஆம் தலம். ஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. கருவூர் என்பது ஊரின் பெயர். ஆனிலை என்பது கோயிலின் பெயர். காமதேனு வழிபட்ட தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் புகழ்ச்சோழ நாயனார் ஆண்ட போது எறிபத்த நாயனார் தோன்றிய தலம். திருவிசைப்ப அருளிய கருவூர் தேவரின் தலம்.
சுவாமி : பசுபதி நாதர்
அம்பிகை : கிருபா நாயகி, சௌந்தர்ய நாயகி
தீர்த்தம் : ஆம்பிராவதி
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் –om thiru chitram balam
295 தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
THONDEALLAAM MALAR TOOVI EEATHA NANGU
தொண்டர்கள் மலர்த்தூவி நஞ்சினை
Disciples are sprayed flowers under the feet of lord Siva and then lord Siva sea place emanated poison
சுண்ட லாருயி ராய தன்மையர்
YUNDALLAA YUIR AAYA THANMAIYAR
உண்டவரும் அரிய உயிர் போன்றவரும்
Is consumed by lord Siva and then rare life form of lord Siva
கண்ட னார்கரு வூரு ளானிலை
KANDA NARKU KARU YOOR AANILAI
கற்கண்டு போல் இனிப்பவருமாய் இறைவர் கருவூர் ஆனிலையில்
And then tit bits form tastier form of lord Siva who has descended in the karuvoor aanilai temple place
அண்ட னாரரு ளீயும் அன்பரே.
ANDANAAR ARUL EEYUM ANBAREEA
விளங்கும் தேவராவார். அருள் வழங்கும் அன்புடையவர் அவர்
And permanent form dwelling here who deevaas leader who will pour grace on all his disciples
01
296 நீதி யார்நினைந் தாய நான்மறை
NEETIYAAAR NINATHU AAYA NAAN MARAI
நீதியின் வடிவானவர் நினைந்து ஆராயத்தக்கதாய நான்கு மறைகளை
Lord Siva balanced rule form and then thinking form of all the four veethaas are all the time analyzing form
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
OOTHIYAAR RODUM KOODALAAR KULAI
ஓதும் அந்தணர்களோடு கூடியவர் குழை அணிந்த
Bharmins are all the time chanting it and then lord Siva mingled with them who has ear ornament adorned form
காதி னார்கரு வூரு ளானிலை
KAATHINAAR KARUYOOR AANILAI
திருச்செவியர் கருவூர் ஆனிலையில்
On the ear place and then karuyoor place established the temple named aanilai
ஆதி யாரடி யார்தம் அன்பரே.
AATHIYAAR ADIYAAR THAM ANBAREEA
விளங்கும் முதல்வர் அடியார்களுக்கு அன்பர்
Where lord Siva dwelling as principal form who is befriend to his disciples
02
297 விண்ணு லாமதி சூடி வேதமே
VINNULLAA MATHI SOODI VEETHAMEEA
வானத்தில் உலாவும் மதியைச் சூடியவர் வேத
And then in the space place wandering moon adorned on the hair place and then
பண்ணு ளார்பர மாய பண்பினர்
PANNULLAR PARAMAAYA PANINAR
இசையாக விளங்குபவர் மேலான பண்பினர்
Veethaa music form existing in this world and highly regarded qualities are filled form
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
KANNULLAAR KARU YOOR AANILAI
கூத்தர் கருவூர் ஆனிலையில் விளங்கும்
All the time dancing lord Siva who is dwelling in the karuvoor aanailai temple place
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.
ANNALAAR ADIYAAR KU NALLAREEA
தலைவர் அடியவர்கட்கு நல்லவர்
Alas leader form who is best guide to his disciples
03
298 முடியர் மும்மத யானை யீருரி
MUDIYAAR MUM MATHA YAANAI EER YURI
சடைமுடியை உடையவர் மும்மதங்களை உடைய யானையை உரித்தவர்
Lord Siva who has possessed long pig tail and then mad elephant skin pealed and then adorned it as upper dress
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
PODIYAAR POON KANAI VEELAI SETRAAR
வெண்பொடி பூசியவர் மன்மதனைச் செற்றவர்
Lord Siva adorned white ashes all over the body and then lust creating god manmathan is punished
கடியு ளார்கரு வூரு ளானிலை
KADI YULLAAR KARU VOOR AANILAI
சிறப்புடையவர் கருவூர் ஆனிலையில் விளங்கும்
And that special form lord Siva descended in the karuvoor aanilai temple place
அடிகள் யாவையு மாய ஈசரே.
ADIGAL AAYAYUM AAYA EESAREEA
தலைவர் அவர் எல்லாமாய் விளங்கும் ஈசராவார்
Who is leader to all and then all forms lord Siva existing in this world
04
299 பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
PANGAYAM MALAR PAATHAR PAATHIYOOR
தாமரை போன்ர திருவடிகள் தம் திருமேனியின் பாதியாக
Lotus flower form of feet possessed lord Siva who has half part of his body
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
MANGAIYAR MANI NEELA GANDAR VANN
உமையம்மையைக் கொண்டவர் நீலமணி போன்ற கண்டத்தினர்
Is given to lords yumaadevi and then ruby diamond form of throat possessed appearing in this world
கங்கை யர்கரு வூரு ளானிலை
GANGAIYAAR KARU YOORIL AANILAI
ஆகாய கங்கையைத் தாங்கியவர் அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும்
Who has carried space place emanated Ganges adorned on the hair place and in that form of lord Siva who has dwelling in the karuvoor aanilai temple place
அங்கை யாடர வத்தெம் மண்ணலே.
ANGAI AADARAVATHU EAMM MANNANEA
அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடைய எம் தலைவராவார்
And then lovely hand place possessed the dancing snake who is my leader
05
300 தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
THEEVAR THINGALLUM PAAMBUM SENNIYIL
தேவர்கட்கு எல்லாம் தேவர் திங்கள், பாம்பு ஆகியவற்றை முடிமேல் சூடியவர்
Lord Siva is deevaas leader who has adorned moon and snakes on the hair place
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
MEEVAR MUM MATHIL EAITHA VILLIYAR
மும்மதில்களை எய்த வில்லை உடையவர்
Who had destroyed three castles with bow and arrow
காவ லர்கரு வூரு ளானிலை
KAAVALAR KARU VOOR AANILAI
எல்லோரையும் காப்பவர் கருவூர் ஆனிலையில் விளங்கும்
Who is guarding all living beings in this world who is dwelling in the karuvoor temple place aanlai
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.
MOOVAR AAGIYA MOIBBAR ALLAREEA
இவர் அயன் அரி அரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சக்தி வழங்கியவர் அல்லரோ!
Ant that form of lord Siva who has given power to bharma thirumal and ruthiran so as to function in this world
Nakes all over
301 பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
PANNINAAR PADI EEATRER NEETRER MEI
பண்களின் வடிவாய் இருப்பவர் படிந்து ஏறுதற்கு உரிய விடையூர்தியர் நீறணிந்தவர் திருமேனியில்
Lord Siva is good qualities filled form appearing in this world and then submissive form ascending on the back of the bull and then all over the body sacred ashes adorned form appearing in this world and then in his half part of his body
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
PENNINAAR PERAI THANGU NETRIYAR
உமையம்மைக் கொண்டுள்ளவர் பிறை சூடிய திருமுடியர் நெற்றியில்
Place taken lords yumaadevi and then curved moon adorned in his sacred hair place and then in the fore head place
கண்ணி னார்கரு வூரு ளானிலை
KANNINAR KARUYOOR YULAR AANILAI
கண்ணுடையவர் கருவூர் ஆனிலையில்
Possessed one more eye and then descended in the karuvoor temple aanilai place
நண்ணி னார்நமை யாளும் நாதரே.
NANINAAR NAMAI YAALUM NAATHAREEA
எழுந்தருளியிருப்பவர் நம்மை ஆளும் நாதர் ஆவர்
Descended and then blessed all who is ruling us and leader to all
07
302 கடுத்த வாளரக் கன்க யிலையை
KADUTHA VAAL ARKKAN KAYILAIYAI
வாளொடு சினந்து வந்து கயிலையைப் பெயர்த்த
With sphere carried form and then angry form ravana tried to lift kaiyilai hills
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
EADUTHAVAN THALAI THOLUM THAALINAAL
இராவணன் தோள் தலை ஆகியவற்றை தாளினால்
Whose head and shoulders are all are stamped with his leg finger
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
ADARTHAVAN KARU VOOR AANILAI
அடர்த்தவன் பின் கருவூன் ஆனிலையில்
And then smashed him and then afterwards karoor aanilai temple place
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.
KODUTHAVAN ARUL KOOTHAN ALLANEEA
அருள் கொடுத்தவன் கூத்தன் கருவூரில் விளங்கும் பெருமான்
Calm form blessed all and that dancing form of lord Siva who is dwelling in the karuyoor temple place
08
303 உழுது மாநிலத் தேன மாகிமால்
YULUTHU MAANILATHU EENAMAAGI MAAL
எல்லாமாய் விளங்கும் இறைவனின் பாதங்களைப் பன்றி வடிவெடுத்துப் பெரிய நிலத்தை உழுது சென்று பாதம் தேட முயன்ற திருமால்
Lord Siva is existing all form of things in this world but whose feet are tried to see by excavating the land by pig form by thirumal
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
THOLUTHU MAAMALAROONUM KAAN GILLAAR
பிரமன் ஆகியோர் தொழுதும் காண்கிலர்
And bharma searched lord Sivas head but failed and then afterwards prayed under his feet but failed to see him
கழுதி னான்கரு வூரு ளானிலை
KALUTHINAAN KARU YOORUL AANILAI
அத்தகைய பெருமான் கருவூன் ஆனிலையில்
And that form of lord Siva who has descended in the karuyoor aanilai temple place
முழுது மாகிய மூர்த்தி பாதமே.
MULUTHUM AAGIYA MOORTHI PAATHAMEEA
நான் எளிதில் வணங்க எழுந்தருளியுள்ளான்
I am simple form to see his feet who is dwelling here
09
304 புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
BUTHAR PUN SAMANAR AATHAR POIYURAI
புத்தர்களும் புன்மையான அறிவுற்ற பொய்யுரைகளைக் கூறும்
Buthaas who are bad form of untrue wards are talking
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
PITHAR PEESIYA PECHAI VITTU MEI
பித்தர்களாகிய சமணர்களும் பேசும் பேச்சுக்களை விட்டு
And then lunatic form of samanaas whose preaching wards are kept away
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
PATHER SEER KARUVOOR AANILAI
உண்மையான பக்தர்கள் சேரும் கருவூர் ஆனிலையில் விளங்கும்
And then true disciples are approaching karuvoor aanilai temple place where lord Siva is all the time active form
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.
ATHAR PAATHAM ADAINTHU VAAL MINEEA
மேலான இறைவனின் திருவடிகளை அடைந்து வாழுங்கள்
So in that highly regarded lord Siva’s sacred feet are approached and then live happily for ever
10
305 கந்த மார்பொழிற் காழி ஞானசம்
GANTHAMAAR POLIL KAALI GAANA SAMBANTHER
மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய
The fragrance filled plantations are covered place is seergali temple place descended
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
PANTHER SEER KARU VOOR YUL AANILAI
ஞானசம்பந்தன் கருவூர் ஆனிலையை அடைந்து
Ganasambanther who has entered into karuvoor aanilai temple place
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
EANTHAIYAI SONNA PATHUM VALLAAR
எம் தந்தையாகிய இறைவன் மேல் பாடிய
இப்பதிகப்பாடல் பத்தையும்
Who has sang the above ten poems on lord Siva who is my father
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
SIN THAIYUL THYARAAYA THEER VAREEA
ஓத வல்லவர் மனத்துயர் தீர்வர்
Who are daily singing it as prayer song form and that disciples will get relief from the mind sorrow
11
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பசுபதீசுவரர், தேவியார் – கிருபாநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM