OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU KUDA VAAYIL

ganesheit February 18, 2020

2.22 திருக்குடவாயில்
THIRU KUDA VAAYIL


PLACE HISTORY—THIS is River Cauvery southern side temple. This is 94th temple. Thiru gana sambanther sang a decade here. Now it is called in the name of kudavaasal. In this place karudan (vulture) sun god thaalaippiya saint bhrugu saint prayed here. In this temple place thiru mana bindu saint conducted poojaas and then got boons. The other names are kathali vanam vaan migaasalam
தல விளக்கம் : காவிரி 94ஆம் தென்கரை தலம். ஞானசம்பந்தர் பாடல் பெற்றது. கருடன் சூரியன் தாலப்பிய முனிவர் பிருகு முனிவர் வழிபட்டத் தலம். திருண பிந்து முனிவர் வழிபட்டு பேறு பெற்றத் தலம். வேறு பெயர்கள் : கதலிவனம் வன்மீகா சலம்
சுவாமி : கோணேஸ்வரர், சூரியேஸ்வரர் பிருகு நாதர்
அம்பிகை : பெரிய நாயகி
தல மரம் : வாழை
தீர்த்தம் : அமிர்த
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்


230 திகழுந் திருமா லொடுநான் முகனும்
THIGALLUM THIRUMALODU NAAN MUGANUM

எல்லோராலும் அறியப்பெறும் திருமால் பிரமன் ஆகியோரால்
ALL ARE WELL KNOWN FORM OF BHERMAA AND THIRUMAAL


புகழும் பெருமான் அடியார் புகல
PUGALLUM PERUMAAN ADIYAAR PUGALA

புகழ்ந்து போற்றப்படும் தலைவனும் அடியார்கள் தன்னைத் துதித்துப் போற்ற
Who are praised by them as their leader and then lord Siva’s disciples are prayed and then praised form


மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
MAGILLUM PERUMAAN KUDAVAAYIL MANNI

மகிழும் பெருமான் குடவாயில் என்னும் தலத்தில் நிலைபெற்று
On seeing it lord Siva got happy form seated in kudavaayil temple place and ten blessed all and then permanently seated there


நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.
NIGALLUM PERUM KOIL NILLAA YAVANEEA

விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான்
In big temple place where lord Siva seated
01


231 ஓடுந் நதியும் மதியோ டுரகம்
VOODUM NATHIYUM MATHIYOODU YURAGAM

பெருகி ஓடி வந்த கங்கையையும் பிறைமதியையும் பாம்பையும்
With flooded form of river ganges and curved moon and then snakes are


சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
SOODUM SADAIYAN VEDAI THILKODI MEEAL

சூடிய சடையை உடையவன் பழமையான தனது கொடியில்
Adorned in the hair place and then in the good old flag place


கூடுங் குழகன் குடவா யில்தனில்
KOODUM KULAGAN KUDA VAAYIL THANIL

விடை இலச்சிலை பொருந்திய குடவாயிலில் நீடி
Bull emblem studded form flag carried on the hand place


நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.
NEEDUM PERUM KOIL NILLAAYAVANEEA

விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான்
Lord Siva descended in the kudavaayil big temple place
02


232 கலையான் மறையான் கனலேந் துகையான்
KALAIYAAN MARAIYAAN KANAL EEANTHU KAIYAAN

பீதாம்பர ஆடையணிந்த திருமால் வேதங்களை ஓதும் நான்முகன் என்பவராகவும் கனலைக் கையில் ஏந்திய உருத்திரனாகவும்
The costly silk dress named peethaambaram adorned sub lord Thirumal and then all the time veethaa chanting form of bharmaa and then firepot carried on the hand place that destroying god ruthiran


மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
MALAIYAAL AVAL BAAGAM MAGILTHA PERAAN

அறக்கருணை புரியும் மலைமகள் பாகனாகவும் மறக்கருணை புரிய
The tharmaa grace pouring form of seated with lords yumaadevi and then harsh form of punishment at first given and then realizing their sin lord Siva blessed form


கொலையார் சிலையான் குடவா யில்தனில்
KOLAIYAAR SILAIYAN KUDA VAAYIL THANIL

கொலை தொழிலுக்குரிய வில்லை ஏந்தியவனாகவும்
In that killing instinct filled bow and arrow carrier and that form of lord Siva


நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.
NELAIYAAR PERUM KOIL NELLAAYAVANEEA

நிலைத்து விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான்
Who has descended ever permanent form temple named big temple place
03


233 சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
KALAYUM SADAIYAAN SUDU GAADU EADAMAA

சுற்றிய சடைக் கற்றையை உடைய முடியன் சுடுகாட்டை இடமாகக் கொண்டவன்
The crown form of twisted hair possessed lord Siva in saint form appearing and then burial ground is taken as his dwelling place


நலமென் முலையாள் நகைசெய் யநடங்
NALA MEN MULAIYAAL NAGAI SEIYA NADAM

அழகிய தனபாரங்களை உடைய உமையம்மை கண்டு மகிழுமாறு
The lovely breasts are possessed lords Yumaadevi is seen form


குலவுங் குழகன் குடவா யில்தனில்
KULAYUM KULAGAN KUDAVAAYIL THANIL

சுடுகாட்டை ஆடுகளமாகக் கொண்டு நடம் புரியும் இளையோன் குடவாயிலில்
Lord Siva dancing in the burial ground to give happiness to lords parvathi and that young chap form lord Siva descended in the kudavaayil temple place


நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.
NELAYUM PERUM KOIL NELLAA YAVANEEA

விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான்
Descended big temple place and then blessing all
04


234 என்றன் உளமே வியிருந் தபிரான்
EAN THAN YULLAM MEEVI EARUNTHA BERAAN

என் உள்ளத்தில் விரும்பி உறையும் தலைவன் ஆவான்
In my mind place willingly dwelling leader is lord Siva


கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
Kanran manipol mideran kayilai

ஒளி குன்றிய நீலமணி போன்ற மிடற்றினான்
The radiation meager of ruby diamond form throat possessed lord Siva


குன்றன் குழகன் குடவா யில்தனில்
Kunran kulagan kudavaayil thanil

கயிலாய மலையில் உறைபவன் குடவாயிலில் பலரும் அறியப்படுவதாய்
Who is dwelling in the kaiyilao hills place and then kudavaayil temple place all are known form of


நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.
Nira perum koil nillaayavaneea

நிற்கும் பெருங்கோயிலில் நிலவும் பெருமான்
Where established big temple place lord Siva is dwelling
05


235 அலைசேர் புனலன் னனலன் னமலன்
ALAISEERAR PUNALAN ANALAN AMALAN

அலைகள் வீசும் கங்கையை அணிந்தவன் அனல் ஏந்தியவன் மும்மலம் அற்ற அமலன்
The waves are emanating Ganges are adorned in the hair place and then carried fire pot in the hand place and then three types of impurities removed form lord Siva dwelling (aanavam kanmam maayai)


தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
THALAI SEEAR PALIYAN SATHURAN VITHRUM

தலையோட்டில் பலி பெறுபவன் சதுரப்பாடு உடையவன் நடுங்கத்தக்க
In the bharma’s skull place accepting begging food and all types of powers are possessed person and then shivering emanated form of


கொலைசேர் படையன் குடவா யில்தனில்
KOLAI SEEAR PADAIYAN KUDAVAAYIL THANIL

கொலைக்கருவியாகிய சூலத்தை ஏந்தியவன் குடவாயிலில்
.
The killing instinct filed sollam battle force carried in his hands and then kuda vaayill temple place


நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே
NELAI SEEAR PERUM KOIL NILLAAYAVANEEA

நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய பெருமான் where ever permanent form constructed big temple place lord Siva descended and then blessed all
06


236 அறையார் கழலன் னமலன் னியலிற்
ARAIYAAR KALALAN ANALAN EAYALIN

ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்தவன் அழல் ஏந்தியவர் இசைமரபுடன் கூடிய
The sound raising form of brave anklets are adorned in the leg place and then carried fire pot in his hand place and then musical hereditary filled form of


பறையாழ் முழவும் மறைபா டநடங்
PARAI YAAL MULAYUM MARAIPAADA NADAM

பறை, யாழ் முழவுடன் வேதங்கள் பாட நடனமாடும்
Instruments are drum yawl mulayuu and then veethaas are chanting form of lord Siva all the time dancing


குறையா அழகன் குடவா யில்தனில்
KULAIYAA ALAGAN KUDA VAAYIL THANIL

குறையாத அழகன் குடவாயிலில்
With full- fledged handsome appearance form of in kudavaayil temple place


நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.
NERAIYAAR PERUM KOIL NELLAA YA VANEEA

நிறைவாக அமைந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவன்
With good heart loving form of big temple place lord Siva seated and then blessed all
07


237 வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
VARAIYAAR THERAL THOL ARAKKAN MADIYAVW

மலை போல் திரண்ட தோள்களை உடைய இராவணன் மடியுமாறு
The rock like mighty powerful shoulders are possessed ravana perished form


வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
VERAIYAAR VOOR KAAL VERAL VAITHA PERAAN

அவன் பெயர்த்த கயிலை மலை அவன் மீது அழுந்திப் அழுந்தத் தன்
Ravana who has excavated the kaiyilai hills are stamped him


வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
VARAIYAAR MATHIL SOOL KUDAVAAYIL MANNUM

மலை போன்றுயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயில் நிலை பெற்று
The hills like form of high raised castles are covered place is kudavaayil where permanent form dwelling


வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
VERAIYAAR PERUM KOIL MAGIL THAVANEEA

கயிலை மலை போன்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் இறைவன்
Where kaiyilai hills form of constructed big temple place happily lord Siva dwelling
08


238 பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
PON OPPAVANUM PUYAL OPPAVANUM

பொன்னிறத்தினனாகிய பிரமனும் புயல் நிறத்தினனாகிய திருமாலும்
The golden color body possessed thirumal and cloud like dark color body possessed thirumal


தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
THANN OPPU ARIYAA THALALLAAI NIMIRNTHAAN

தனக்கு உவமையாகாவனாய்த தழலுருவில் உயர்ந்து
Who are not comparable form to lord Siva who is fire form appeared before them and then lord Siva


கொன்னற் படையான் குடவா யில்தனில்
KOL NAL PADAIYAAN KUDA VAAYIL THANIL

குடவாயிலில் கொல்லுல் தொழில் புரியும் நல்ல படைக்கலன்கள் ஏந்தியவன்
Descended in kudavaayil temple place and who has carried in the hand place the kiler act doing the weapons are carried in the hand place


மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
MANNUMPERUM KOIL KAGILTHAVANEEA

நிலை பெற்ற பெருங்கோயிலில் மகிழ்ந்துறையும் பெருமான்
And in that form lord Siva descended happily in the big temple place
09


239 வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
VEYILIN NERAIYAAR VERI PORVAIYINAAR

வெயிலில் காய்பவராகிய சமணர்கள் விரித்துப் போர்த்த போர்வையினராகிய
[n the sun heat place drying the samanaas and then spread over form of saffron cloth covered form of wandering the buthaas


பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
PAYILLUM MURAIYEEA PAGER PAAVIGAL PAAL

புத்தர்கள் ஆகிய சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறும்
Who are repeated form stating their deficiency filled doctrines


குயிலன் குழகன் குடவா யில்தனில்
KUYILAN KULAGAN KUDA VAAYIL THANIL

And then young chap form appearance possessed lord Siva dwelling in kudavaayil temple place
இளமையான தோற்றத்தை உடையவன் குடவாயிலில்


உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.
YUYARUM PERUM KOIL YUARINTHAVANEEA

உயர்ந்துள்ள பெருங்கோயிலில் உயர்ந்தோனாய் விளங்கும் இறைவன்
Named perum koil and that highly regarded form appearing to all
10


240 கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
KADU VAAI MALI NEER KUDAVAYIL THANIL

வேகம் வாய்ந்த ஆற்று நீரின் வளம் உடைய குடவாயில் நகரில் விளங்கும்
The fastly moving canal water with it fertile form appearing kudavaayil city place existing


நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
NEDUMAA PERUM KOIL ILLAA YA VANEEA

நீண்டுயர்ந்த சிறந்த பெருங்கோயிலில் விளங்கும் இறைவனை
And that high towers are possessed the best big temple place seated lord Siva in active form


தடமார் புகலித் தமிழார் விரகன்
THADAMAR PUGALI THAMIL AAR VERAGAN

நீர் நிலைகளோடு கூடிய புகலிப் பதியினனாகிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன்
Ganasambanther who has descended in the water bodies filled place is seergaali


வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.
VADAMAAR TAMIL VALLAVER NALLAVAREEA

Tat ganasambanther blessed form sang the above poems and those disciples who are singing it repeatedly and that disciples will get all the benefits in life
அருளிய மாலையாக அமைந்த இப்பதிகத்தை ஓதவல்லவர் நன்மைகளை அடைவர்
11


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோணேசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

February 18, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: