OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru kalippaalai

ganesheit February 18, 2020

2.21 திருக்கழிப்பாலை –157
Thiru kalippaalai


Place history— this is river Cauvery northern 4th temple. Three main saints sang decades here. In this temple place vaalmigi saint conducted poojaas and then got boons
தல விளக்கம் : காவிரி வடகரை 4வது திருத்தலம். மூவர் பாடல் பெற்ற திருத்தலம். வால்மீகி முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றது.
சுவாமி : பால்வண்ண நாதர்
அம்பிகை : வேத நாயகி
தீர்த்தம் : கொள்ளிடம்
தல மரம் : வில்வம்
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் om thiru chitrambalm


219 புனலா டியபுன் சடையாய் அரணம்
Punnal aadiya pun sadaiyaai aranam

கங்கை நீரின் மூழ்கிய சடையை உடையவனே
In the ganges water dipped hair possessed lord Siva


அனலா கவிழித் தவனே அழகார்
Anal aaga velithavaneea alagaar

முப்புரங்களையும் அழலெடுமாறு விழித்து எரித்தவனே அழகிய
The three castles are destroyed by fore head eye fire and then lovely form of


கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
Kanal aadalinaai kalippalaiyul

நெருப்பில் நின்று ஆடல் புரிபவனே சுழிப்பாலையுள் எழுந்தருளியவனே
Fire place standing and then dancing all the time and the thiru kalippaalai temple place descended and blessed all


உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.
Yunavaar kalal kai tholuthu yulguthumeea

உன்னுடைய நீண்ட திருவடிகளைக் கைகளால் தொழுது நினைகின்றோம்
Long Siva your long feet are prayed by folded hands and then thinking all the time
01


220 துணையா கவொர்தூ வளமா தினையும்
THUNAIYAAGA VOOR THOO VALA MATHINAIYUM

தனக்கு துணையாகுமாறு தூய அழகிய உமையம்மையையும்
To helpful to lord Siva and that pure and not ego filled form of lords yumaadevi


இணையா கவுகந் தவனே இறைவா
EANAIYAAGA YUGANTHAVANEEA EARAIVAA

உன் திருமேனியின் ஒரு பாகமாக இணைத்துக் கொண்டு மகிழ்ந்தவனே இறைவனே
Lord Siva you have carried lords yumaadevi in your left part of body and then got happy form it


கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
KANAIYAAL EAYIL EAI KALIP PAAAIYUL

முப்புரங்களைக் கணையால் எய்து கழிப்பாலையில் மேவி இருப்பவனே
And then three castles are shot an arrow and then destroyed it and then in form descended in kalip paalai temple place and blessed all


இணையார் கழலேத் தவிடர் கெடுமே.
EANAIYAAR KALAL EEATHA EADER KEDUMEEA

உன் இரண்டு திருவடிகளை ஏத்த இடர் கெடும்
Lord Siva your twin feet are praying and then praising and those disciples problems will be perished
02


221 நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
NEDIYAAI KURIYAAI NMIR PUN SADAIYIN

மிகவும் பெரியவனே நுண்ணியனே நிமிர்த்துக் கட்டப்பட்ட சடையாகிய முடியை உடையவனே
Lord Siva you are bigger form and then smaller form appearing in this world and then you have tied your hair in the crown straight form


முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
MUDIYAAI SUDU VENN PODI MUTRANI VAAI

முடியை உடையவனே திருநீற்றைத் திருமேனி முழுவதும் அணிந்தவனே
And that upward hair possessed saint form appearing in this world and then all over the body place white ashes are adorned form appearing


கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
KADIYAAR POLIL SOOL KALIP PAALAIYUL

மணம் கமழும் பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் எழுந்தருளியிருப்பவனே
The fragrance filled plantations are covered place thiru kalippaalai temple place lord Siva you have descended and then blessed all


அடியார்க் கடையா அவலம் மவையே.
ADIYAARKU ADAIYAA AVALAM AVAIYAVEEA

உன் அடியவர்கள் அவலங்களை அடைய மாட்டா
Lord Siva your disciples will not affect by any problems in life
03


222 எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
EALIYAAI ARIYAAI NILAM NEER RODU THEE

அன்பர்க்கு எளியவனே அல்லாதார்க்கு அரியவனே நிலம் நீர் தீ
Lord Siva you are simple form to your disciples and others you are rare form and then you are appearing in this world land water fire


வளிகா யமென வெளிமன் னியதூ
VALI KAAYAM EANNA VELI MANNIYA THOO

காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும்
Wind and space form appearing to all


ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
PLIYAAI YUNAAIYEEA THOLUTHU YUNNU MAVARKKU

தூய ஒளியோனே, உன்னையே வணங்கி நினைப்பவர்க்கு

Lord Siva you are pure light form and then those disciples who are praying and thinking you


KALIYAAI KALIP PAALAI AMARNTHAVANEEA
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

அன்பு செய்பவனே கழிப்பாலையில் விளங்குபவனே
lord Siva in reciprocal form showing love towards them and then in that form descended in kalippaalai temple place
04


223 நடநண் ணியொர்நா கமசைத் தவனே
NADA NANNIYOOR NAAGAM ASAITHAVANEEA

நடனத்தை விரும்பி ஒப்பற்ற பாம்பைக் கச்சாக கட்டியவனே
You have liked the dancing all the time and then wonderful snake you have tied belt form in the waist place


விடநண் ணியதூ மிடறா விகிர்தா
VEDA NANIYA THOO MIDARAA VEGIRTHAA

விடம் பொருந்திய தூய மிடற்றினனே வேறுபட்ட பல வடிவங்களைக் கொண்டவனே
The poison filled pure throat lord Siva you have possessed and then verities of form lord Siva you are appearing in this world


கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
KADAL NANNU KAALIP PATHI KAAVALANEEA

கடலை அடுத்துள்ள கழியில் விளங்கும் தலத்தில் விளங்குபவனே
In the nearby seashore place existing kalippaali temple place you have dwelling


உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.
YUDAN NANNI VANANGUVAN YUN ADIYEEA

என் உடல் உறுப்புக்கள் நிலத்தில் பொருந்த வணங்குவது உன் திருவடிகளையாகும்
I am laid down on the floor and the prayed your feet
05


224 பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
PERAIYAAR SADAIYAAI PERIYAAI PERIYA

பிறையணிந்த சடையினனே பெரியோனே பெருமை பொருந்திய
The curved moon adorned on the pigtail place lord Siva you are elderly form appearing in this world and then glory filled


மறையார் தருவாய் மையினா யுலகிற்
MARAIYAAR THARU VAAI MAIYINAAL YULAGIL

வேதங்கள் கூறும் உண்மைப் பொருளாய் உள்ளவனே மண்ணுலகில்
Veethaas are propagating true matter form existing in this world and then in this land place


கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
KARAIYAAR POLIL SOOL KALIPPAALAI YULLAAI

கருமை நிறம் பொருந்தியப் பொழில் சூழ்ந்த கழிப் பாலையுள் எழுந்தருளியவனே
The darkness filled plantations are filled kalippaalai temple place you are descended


இறையார் கழலேத் தவிடர் கெடுமே.
EARAIYAAR KALAL EEATHA EADER KEDUMEEA

எங்கும் தங்கும் உன் திருவடிகளை ஏத்த இடர் கெடும்
N all the place you are staying those sacred feet are to be praised and those disiples impediments will be removed
06


225 முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
MUTHIRUM SADAIYIN MUDI MEEAL VELANGUM

முதிர்ந்த சடை முடியின் மேல் விளங்கும்
The ripped hair place existing


கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
KATHIR VEN PERAI YAAI KALIPPAALAI YULLAAI

வெண்மையான ஒளிக்கதிர்களை உடைய பிறையைச் சூடியவனே கழிப்பாலையில் எழுந்தருளியவனே
Lord Siva you have adorned the white rays are emanating moon and in that form lord Siva you have descended in kalippaalai temple place and then blessed all


எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
Eathir kol moliyaalearanthu eeathu mavarkku

முன்னிலையில் பரவல் என்னும் வகையில் எதிர் நின்று பரவி இரங்கி உன்னை துதிக்கும் அடியவர்க்கு
To stand before you and then pray and praise you and then melted form praying disciples


கதிரும் வினையா யினஆ சறுமே.
ATHIRUM VENAI AAYINA AASARUMEEA

நடுக்கத்தைத் தரும் வினைகளாகி குற்றங்கள் அகலும்
Those bad deeds are shivering form of sins are gone away
07


226 எரியார் கணையால் எயிலெய் தவனே
EARIYAAR KANAIYAAL EAYIL EAITHAVANEEA

தீக்கடவுள் பொருந்திய கணையால் முப்புரங்களை அழித்தவனே
The tip of fire arrow shot form lord Siva you have destroyed three castles


விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
VERIYAAR THARU VEEL SADAIYAAI EARAVIL

விரிந்து விழும் சடைக்கற்றையை உடையவனே இரவில் the spread over form hair is falling of hair possessed lord Siva and then in the night time


கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
KARI KAADALINAI KALIPPAALAI YULLAAI

கரிந்த சுடுகாட்டில் ஆடுபவனே கழிப்பாலையில் விளங்குபவனே
Burning burial ground place you are dancing and that form lord Siva you have descended in kalippaalai temple place


உரிதா கிவணங் குவனுன் னடியே.
YURI THAAGI VANANGUVAN YUNNADIYEEA

உன் திருவடிகளை எனக்கு உரியவாகக் கொண்டு வணங்குவேன்
Lord siva your sacred feet are right filled form I am praying
08


227 நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
NALA NAARANAN NAAN MUGAN NANLLAL YURA

நன்மைகளை புரியும் திருமால் நான்முகன் இருவரும் அடிமுடி கண்டோம் என்று உன்னை நண்ணிய போது
The creation work is doing bharma and then preservation work is doing thirumal are lied form stated that head and feet is seen by them and that time lord Siva


கனலா னவனே கழிப்பா லையுளாய்
KANAL AANAVANEEA KALIP PAALAI YULLAAI

கனல் வடிவோடு ஓய்கி நின்றவனே கழிப்பாலையில் எழுந்தருளியவனே
Appeared in fire pole form and that form of lord Siva descended prime lord form in thiru kalippaalai temple place and blessing all


உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
YUNAVAAR KALALLEEA THOLUTHU YUNNU MAVARKKU

முப்புரங்களை எய்து எரித்தவனே உன்னுடைய நீண்ட திருவடிகளையே தொழுது நினைவார்க்கு
Lord Siva you have shot an arrow and then destroyed three castles and those disciples who are praying under your feet and then thinking all the time


கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.
EALATHAAM VENAI THAAN EAYIL EAITHA VANEEA

முப்புரங்களை எரித்த உன்னை நினைவார்க்கு வினைகள் இல்லை
To whom there is no bad deeds and its effect on their part
09


228 தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
THAVER KONDA THOLIL SAMAN VEEDAROEUM

தவத்தினராகிய வேடங்கொண்டு திரிவதை தொழிலாகக் கொண்ட போலியான சமணத் துறவி வேடத்தி
னரும்
To penance performing saints form wandering those samanaas those fake persons


துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
THUVAR KONDANAR NUNN THUGIL AADAIYUM

பழுப்பு நிறம் ஏற்றிய நுண்ணிய ஆடையைப் போர்த்தித் திரியும் புத்தர்களும் ஆகிய
The saffron color tainted dress covered form of buthaas


அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
AVAR KONDA VITTADIGAL YURAIYUM

அவர்கள் கொண்ட கொள்கைகள் உண்மையானவை அல்ல என விடுத்து நீ, தலைமைக் கடவுளாக விளங்கும் சிவபிரான் உறைவதும்
Who’s preaching doctrines are not true one so you may kept away from it and then the leader form lord Siva dwelling


உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.
YUVAR KONDA KAALIPPATHIUL YULGUTHUMEEA

உவர் நீரையுடைய உப்பங்கழிகள் உடையதும் ஆகிய கழிப்பாலையை நாம் நினைத்துப் போற்றுவோம்
The salt fields are filled place is thiru kalippaalai we may think over and then prize it
10


229 கழியார் பதிகா வலனைப் புகலிப்
KALIYAAR PATHI KAAVALANAIPUGALI

உப்பங்குழிகள் பொருந்திய தலமாகிய கழிப்பாலைத் தலைவனாகிய சிவபிரானை
The salt fields are filled place is thiru kalippaalai and that place leader lord Siva


பழியா மறைஞா னசம்பந் தனசொல்
PALIYAA MARAI GAANA SAMBANTHANA SOL

புகலிப் பதிக்குரியவனாய் மறை நெறி வரைத் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பரவிய இத்திருப்பதிகட்தை ஓதுவதையே
in the seergaalli place descended veethaa excelled ganasambather who has praised form sang the above decade and then who are all the time chanting it


வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
VALIPAA IVAI KONDU ADI VAALTHA VALLAAR

வழிபாடாகக் கொண்டு போற்றவல்லார்
And then daily praying lord Siva ad then praise him with prayer songs


கெழியார் இமையோ ரொடுகே டிலரே.
KELIYAAR EAMAIYOORODU KEEDILAREA

வானோர்களோடு பொருந்தி விளங்குவர் கேடு முதலியன இல்லாதவர் ஆவர்
Who will ultimately enter in to upper world and the live with them and then sinless form living there for ever
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணநாதர், தேவியார் – வேதநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

February 18, 2020

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: