SEERGALI
2.11 சீகாழி
SEERGALI
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம் OM THRU CHITRAM BALAM
FOR EXPLANATION SEE DECADE NO 137
111 நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
NALLAANAI NAAN MARAI YOODIYA AAR ANGAM
நன்மையே வடிவானவன் நாங்கு மறைகள் அவற்றோடு இயலும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றில்
Lord Siva appears all the time in goodness form who has sang four veethaas and then six angaas
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
VALLAANAI VALLAVAR PAAN MALINTHU VOONGIYA
வல்லவன் அவற்றை கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து
And then those veethaas and six angaas are well learnt by bharamins
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
SOLLAANAI THONN MATHIL KAALIYEEA KOILLAM
அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன் பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும்
கோயிலை
Who are chanting it in prayer form before lord Siva those abstract form lord Siva appearing in this world and then good old seergaali place which is surrounded by protection walls those temple place
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.
EALLAANAI EATHA NINRAARKU YULA EANBAMEEA
தனது வீடாகக் கொண்டவன் அத்தகையோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்
Is considered by lord Siva as his dwelling place and that form of lord Siva who is praised by prayer songs those persons will get happiness in this world
01
112 நம்மானை மாற்றி நமக்கரு ளாய்நின்ற
Nammanai maatri namakku arulaai nira
நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும்
Our sins are removed and then showered his blessings on us
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
PEMMAANAI PEEYDN AADAL PURINTHAANAI
தலைவன் பேய்களோடு ஆடல் புரிபவன்
That leader who is all the time dancing with demon forces
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
AMMAANAI ANTHANAR SEERU MAANI KAALI
அரிய வீரன் அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில்
That rare fighter form of lord Siva in seergaali place where bharmins are also living there
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.
EAMMAANAI EATHA VALLAARKU EADAR ILLAIYEEA
விளங்கும் எம் கடவுள் அத்தகையோனை ஏத்துவார்க்கு இடர் இல்லை
Who is my lord Siva and that form of lord Siva is praising by those disciples who are not affected any form of impediments in life
02
113 அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
ARUTHAANAI ANBU SEITHU EEATHA GILLAAR PAAL
தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும் படையலை
Those who are not showered love towards lord Siva whose sacred food is not accepted by lord Siva
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
PORUNTHAANAI POI ADIMAI THOLIL SEI VAARUL
உண்ணாதவன் பொய்யாக அடிமை செய்வாரிடம் பொருந்தாதவன்
And then false form of doing menial service under his feet who is not enter in to their mind
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
VERUTHAANAI VEETHIYAR VOOTHUM MIDAI KAALI
புதுமைக்கும் புதியவன் நாங்கு வேதங்களை ஓதும் வேதியர் நிறைந்த காழிப்பதியில்
That form of lord Siva is novel person and then four veethaas are chanting seergaali place
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.
EARUNTHAANAI EEATHU MIN NUM VENAI POOGAVEEA
இருப்பவர் அத்தகையோனை நும் இடர் போக ஏத்துவீராக
Dwelling lord Siva and that form of lord Siva you may praise him with prayer songs so that you’re your impediments in life will be removed form
03
114 புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்
PUTRAANAI PUTRU ARVAM MARAIYIN MISAI
புற்று வடிவானவன் புற்றில் வாழும் பாம்பினைத் தன் அரை மீது
The lord Siva is appearing in sand don form and then where living snakes are tied on his waist place as belt form
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
SUTRANAI THONDU SEIVAAR AVAR THAM NODUM
சுற்றியவன் தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் பெருமைகளை விடுத்து
Those disciples who are serving under his feet to whom he is simple person to be friend with them
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
ATRAANAI ANTHANAR KAALI AMAR KOIL
பழகியருள்பவன் அந்தணர்கள் நிறைந்த காழிப்பதி மீது
And then blessed them and then bharmins are filled seergali place
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
PATRAANAI PATRI NINRAAKKU EALLAI PAAVAMEEA
பற்றுடையவன் அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம் இல்லை
Is much attachment possessed person and those disciples who are standing before him those persons will not affect by sins
04
115 நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
NERIYAANAI NENJU EADAM KOLLA NEVAAR THAM
நமக்கு நிதியாக விளங்குவோன் தம் நெஞ்சில் அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு
Lord Siva appears to us in ethical form and then those disciples who are put him in mind place at meditation time
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
VEETHIYAANAI VINNAVAR THAAM VEYANTHU EAATHIYA
நன்னெறி காட்டுபவன் தேவர்கள் எல்லாம் தொழும் நெறியாயும்
Lord Siva showed then good path and then all the deevaas are praying form appearing in this world
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
KATHIYAANAI KAAR YULLAAYUM POLIL KAALIYAAM
மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத் தன் ஊராகக் கொண்டவன்
The clouds are wandering plantations are covered place is considered as his dwelling place
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.
PATHIYAANAI PAADU MIN NUM VENAI PAARAVEEA
அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக
And that form of lord Siva you may pray him and then singing prayer songs so as to remove your bad deeds
05
116 செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
SEPPAANA MEN MULAI YAALAI THAGAL MEENI
செப்புல் போன்ற மென்மையான தனங்களைக் கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளான்
The soft gross form of breasts are possessed lords yumaadevi who is kept left part of lords Siva’s body
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
VAIPPAANAI VAAR KALAL EEANTHI NENAIVAAR THAM
தன் திருவடிகளை நினைப்பவர்களிடம் ஒப்பப் பழகுபவன்
Those disciples who are thing lord Siva’s feet who will be friend with them on equal form
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
VOPPAANAI VOOTHAM YULLAAYU KADAL KAALI
கடல் நீர் உலாவுவதும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில்
The sea waves are wandering sea shore nearby place situated seergali
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.
MEIYAANAI MEEVIYA MAANTHER VEYANTHAAREEA
மெய்ப்பொருளாக விளங்குபவன் அத்தகையோனை விரும்பி வழிபட்ட மக்கள் பிறரால் வியந்து போற்றப்படும் புகழ் உடையோர்
Where that true matter form lord Siva is dwelling those form of lord Siva is willingly praying persons will be praised by others in astonishing form
06
117 துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
THUM BAANAI THUNBAM ALITHA ARULAAKIYA
நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன் நாம் துயர் உறும் போது அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப் புரியும்
So as to rectify us lord Siva gave us problems in life while we are tiling and then moiling in that sorrow lord Siva will remove it and then put his grace on us
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
EANN BAANAI EEAL EASAI YIN NELAI PEENU VAAR
இன்ப வடிவாய் இருப்பவன் ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப் போற்றுவாரிடம்
Lord appearing happiness form in this world and then seven musical notes are well known form singing with prayer songs and then praising
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
AN BAANAI ANI POLIL KAALI NAGER MEEYA
அன்பு செய்பவன் அழகிய பொழில் சூழ்ந்த காழி நகரில்
To whom lord Siva showered love towards them and then lovely plantations are covered place is seergaali city place
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.
NAMBAANAI NANNA VALLAAR VENAI NAASAMEEA
நம்மால் விரும்பப்படுபவனாய் அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்
We are liked him and then praised him those disciples bad deeds will be removed
07
118 குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
KUNDRAANAI KUNRU EADUTHA PUYAM NAAL EAINTHUM
மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன் தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெய்ர்த்தெடுத்த இராவணனின் இருபது தோள்களையும்
Lord Siva has taken hills as his dwelling place and then lord Siva descended kailai hills are tried to pluck by ravana whose twenty shoulders are
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
VEENRAANAI MEN MALARRAANODU MAAL THEEDA
வென்றவன் மெல்லிய தாமரை மலரில் வாழும் நான்முகனும் மாலும் தேட (ஓய்கி நின்றவன்)
Smashed form won over his mighty powers and then soft form of lotus place living bharma and thiumal who are searched feet and head of lord Siva but lord Siva appeared to them in fire pole form only
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
NINRAANAI NEER EALAI YAALODYM KAALIYUL
நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன் அத்தகைய தம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களாக
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.
NANRAANAI NAM PERUMAANAI NANUGUMEEA
That goodness doing form of lord Siva seated in this place so you may realize his glory and then pray him
08
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
09
119 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
SAAVAAYUM VAATHU SEI SAAVAGER SAAKIYAR
தம் கொள்கைக்கு அழிவு வந்த போதும் விடாது வாது செய்யும் சமணச் சாக்கியர்களின்
To their doctrine samanaas and buthaas are entertain destruction but they are not retread back and then got fast attachment with it
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
MEEVAATHA SOL AVAI KEEATU VEGULEEAN MIN
பொருந்தாத் உரைகளைக் கேட்டு அவர்களையோ சைவத்தையோ வெருளாது
Those half backed doctrine are heard and then not follow it and then not afraid of
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
POOVAAYA KONRAI YINAANAI PUNAL KAALI
கொன்றைப்பூ வன்னிதளிரும் புனல் சூழ்ந்த காழி நகரின்
And then lord Siva who has adorned konrai flower garland who is dwelling in seergaali temple place
கோவாய கொள்கையி னாணடி கூறுமே.
KOOVAAYA KOLGAI YINAAN ADI KOORUTHU MEEA
தலைவனாய் மேலான சிவ நெறிக்கு உரியவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக
That leader form of lord Siva who has evolved the highly regarded Siva doctrine whose sacred feet are glorified form pray and then praised him
10
120 கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
KAALIYAAR SEER VOTHAM MALGUM KADAL KAALIYUL
கழிகளின் வழியே வரும் மிக்க கடல் நீர் நிறைந்ததும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள் கோயில் கொண்டு
In the sea shore place much water is guessing into land place and then sea shore nearby place situated seergali temple place descended lord Siva
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
VOLIYAATHU KIL KONDAANAI YUGANTHU YULLGI
நீங்காது உறையும் இறைவனை நினைந்து மகிழ்ந்து
Where permantly dwelling lord Siva who is thinking form and then got happiness from it
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
THALIYAAR SOL GAANA SAMBANTHAN TAMIL AARA
அவனைப் பொருந்தியவனாய் ஞானசம்பந்தன் பாடிய தமிழை
All the qualities are filled form the saint named gaanasambanther who has sung the above Tamil poems
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.
MOLIVAAR GAL MOO YULAGUM PERU VAAR GALLEEA
மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள் மூவுலகையும் பெறுவர்
Those disciples who with full devotion filled form prayed and them praised by prayer songs and that disciples will get three worlds to rule it
11
திருச்சிற்றம்பலம்
Om thiru chiram balam