OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU POON THAARAAI

ganesheit November 1, 2019

இரண்டாம் திருமுறை
SECOND THIRUMURAI


2.01 திருப்பூந்தராய்
THIRU POON THAARAAI


This is one of the seergali temples
பண் – இந்தளம்
திருச்சிற்றம்பலம்

1 செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
SEN NELLAMG KALANI PALANATHA AYALEEA SELUM

செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான
The red color paddy growing those lovely paddy fields are possessed


புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
PUNNAI VEN KILIYIL PAVALAM PURAI POON THAARAAI

புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள் வெண்மையான துணியிற் பவளங்கள் பரபினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்
And then nearby places punnai tree covered plantations place the flowers are shedding which is appearing on the white color cloth like red color flowers are spread over form appearing place is poon thaaraai

துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
THUNNI NAL EAMAI YOOR MUDI THOOI KALALEER SOLLEER

நல்ல தேவர்கள் நெருங்கிவந்து தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே
The thick form good deevaas are bowed their heads which are touched under lord Siva’s feet and that form of holly feet lord Siva you have possessed

பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
PINNU SEN SADAI YIL PERAI PAAMBUDAN VAITHATHEEA

பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ சொல்வீராக
My dear lord Siva on the well twisted hair place you have adorned the moon which is enemy to snakes and those snakes are also adorned on yet another hair place so please tell me the reason for it
2.1.1


2 எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
EATRU THEN THERAI EEARIYA SANGINODU EPPIGAL

எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறி வந்த சங்குகளும் இப்பிகளும்
The sea waves are lashing on the sea shore nearby place conches and ippess are crawling form


பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
PON THIGAL KAMALAP PALANAM PUGU POON THAARAAI

பொன் போல் விலங்கு தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும்
The golden form of bloomed the lotus flower ponds where they are entering that place is ponthaarai alias seerkali place


சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
SUTRI NAL EMAIYOOR THOLU PON KALALEER SOLLEER

சீகாழிப்பதியில் நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே
The good devas are covered form praying under your feet so please tell me


பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.
PETRAM EERUTHAL PETRIMAIYOO PERU MAANEEREEA

அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் ஏற்ற தம்மைத் தாகுமோ சொல்வீராக
The good royal elephants are available but you have taken only bull as your travelling medium please tell me the reason for it
2.1.2


3 சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
SANGU SEM PAVALAM THERAL MUTHAVAI THAANGODU

பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு
The sea waves are conches red color coral cluster and pearls all are carried form


பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
Pongu then therai vanthu alaikkum punal poon thaaraai

வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய் என்னும்
Bubbling form of waves are lashing that clear water filled place is poon thaaraai


துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
Thunnaga maal kalitrin yuri poorthu yugantheer

சீகாழிப் பதியில் உயரிய பெரிய களிற்று யானையை உரித்து அதன்

தோளைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே THOLAIP PORTHTHU MAKILNTHURAIYUM IRAIVARE
Lord Siva you have pealed the big mad elephant skin and then adorned it as upper dress and then got happy for that act so please tell me


மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே
Mangai pangamum angathoodu vonriya maan batheea.

உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஒர் உடம்பில்

ஒன்று வித்துள்ள மாண்பு யாதோ சொல்வீராக ONRU VITHTHULLA MAANPU YAATHO SOLVERAGA
Lord Siva you have given left part of your body to lordess yumaadevi please tell me what is the reason for that highly regarded act
2.1.3


4 சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
SEEMA VEN MATHIL PON ANI MAALIGAI SEEAN YUAR

பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப் பெற்ற அழகிய மாளிகைகளும்
The might powerful protection walls are covered form the high raised mansions are decorated with gold plates


பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
POO MANAM KAMALUM POLIL SOOL THARU POON THAARAAI

மிக உயர்ந்து மலர் மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்
The highly acceptable fragrance emanating plantations are covered place is poon thaaraai


சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
SO MANUM MARAYUM THODER SENSADAIYEER SOLEER

திங்களும் பாம்பு தங்கிய செஞ்சடை உடையவராய் எழுந்தருளிய இறைவரே
Lord Siva on your red color hair place moon and snakes are dwelling form dwelling in poonthaaraai temple place please tell me


KAMAN VENPODI YAAGAK KADAIKKAN SIVANTHATHE
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

உயிகட்கும் போகத்தின் மேல் அவா வினை விளைக்கும் மன்மதன் வெண் பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ சொல்வீராக
All living beings are given lust feelings by manmathen who is converted in to white dust form lord Siva you have opened your forehead eye what is the reason for it
2.1.4


5 பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
PALLA MEEN EARI THEERNTHU YULALUM PAGU VAAYANA

நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள்
In the shallow water pits trapped the fishes are tried to consume as food by lark birds which has possessed long open mouths


புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
PULLUM NAAL THORUM SEER POLIL SOOL THARU POON THAARAI

நாள்தோறும் பல இடங்களிலிருந்து வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்
And then daily different place staying those water filled plantations are covered place is poon thaaraai


துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
THULLUM MAAN MARI EEANTHIYA SENG KAIYINEER SOLEER

துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே
Lord Siva on your red color hand where the leap forward those stage is carried please tell me

வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.
VELLA NEERORU SEN SADAIVAITHA VEYAPPATHEEA

பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ சொல்வீராக
The flooded form of descended the River Ganges is stopped on your red color hair place please tell what is the reason for it
2.1.5


6 மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
MATHUEALANGIYA MNGAIYAR AADA MARUNGU EALLAA

அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும் ஊர் மருங்கெலாம் பூத்துள்ள ஆழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் ஒளி மிக்க அழகிய தமது திரு மேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே காதுகள் இரண்டினில் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத் தோட்டையும் அணிந்தற்குக் காரணம் யாதோ சொல்வீராக
The lovely ladies are in and surrounded places are dancing


போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
POOTHILAGA KAMALAMATHU VAAR PUNAL POON THAARAAI

And all the water bodies place bloomed lotus flowers which are shedding the honey and water bodies filled place is poon thaaraai


சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
JOOTHIYAM SUDAR MEENI VENEER ANIVEER SOLEER

The light filled form of body place the lovely sacred ashes are adorned form of appearing lord Siva please tell me


காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.
KAATHU EALANGU KULAI SANGA THODODU YUDAN VAITHATHEEA

Lord Siva in your one ear place conch ornament and in another ear thoodu ornament form appearing to this world please tell me the reason for it
2.1.6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.
2.1.7
7 வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
VARUKKA MAAR THARUVAAN KADUVAN NODU MANTHIGAL

இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள் பெண் குரங்குகளோடு கூடி மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும்

With the species form separated the male monkeys mingled its female counter part


தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
THARUK KOL SOLAI THARUM KANI MAANTHIYA POON THAARAAI

கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருந்து
The plantations are covered place where abundant amount of fruits are consumed up to the stomach filled level and then happily living place is seergali


துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
THURAKKU MAAL VEDAI NEEAL VARU VEER ADIKEEAL SOLEER

செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சி தரும் அடிகளே இராவணனின் தருக்கினை
Thirumal is converted himself as bull form and then ascended on the back of it and in that moving everywhere and that form of lord Siva you are please tell me


அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.
ARAKKAN AATRAL ALITHU ARUL AAKIYA AAKKAMEEA

அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திர்க்குக் காரணம் யாதோ சொல்வீராக
Lord Siva you have destroyed ravana power and then after realizing his sin lord Siva you have instantly blessed him and then gave so many fighting instruments please tell me the reason for it
2.1.8


8 வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
VARI KOL SENG KAYAL PAAI PUNAL SOOLNTHA MARUNGU EALLAAM

மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல் மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும்
In all the directions the stripped body possessed red color kayal fishes are leaf forward way of water bodies are filled place


புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
PURISAI NEEDY YUAR MAADAM NELAAVIYA PON THAARAAI

மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்
Where the protection walls are covered form big mansions are constructed place is poon thaaraai temple place


சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
SURUTHI PAADIYA PAANIYAL THUU MOLIYEER SOLEER

வேதங்களைப் பாடியும் இசைப்பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளி விளங்கும்
The veethaas are chanting and musical notes are filled form of talking form lord Siva you have descended in this temple place so please tell me


கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.
KARIYA MAAL AYAN NEEDI YUMAI KANDILLAA MAYEEA

இறைவரே கரிய திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயாலாமைக்குரிய காரணம் யாதோ சொல்வீராக
The dark color thirumaal and bharma are searched your feet and head but unable to see it what is the reason for it please tell me
2.1.9


9 வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
VANDALAM KALANIM MADAI VAALAIGAL PAAI PUNAL

வளம் மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில்
The fertile form of rich alluvial soil filled place and then where water bodies place vaalai fishes are leap forward


புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
PUNDAREEGAM MALARNTHU MATHU THARU POON THAARAI

தாமரை மலர்கள் மலர்ந்து தேனைத்தரும் பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்
And then where lotus flowers are giving honey those pace is poon thaaraai alias seergali temple pace


தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
THONDER VANTHU ADI POOTRI SEI THOL KALALEER SOLEER

தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே
Where the disciples are coming and then praying under your feet where anklets are adorned good old form appearing to this world


குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.
GUNDAR SAKKIYAR KOORIYA THAANG KURI EANMAIYEEA

சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழிமொழிகட்க்குக் காரணம் யாதோ சொல்வீராக
Samanaas and buthaas are talking untoward cursing wards against you what is the reason for it


2.1.10
10 மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
MAGARA VAAR KADAL VANTHU ANAYUM MANAL KAANAL VAAI

சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளை கொண்டுள்ள
The shark fishes are dwelling in the deep sea place where sand dons are abundantly available in the sea shore place


புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
PUGALI GAANA SAMBANTHAN EALIL MIGU POON THAARAAI

புகலிப்பதியில் தோன்றிய ஞானசமந்தன் அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய
Where gaana sambather descended in the pugali place which is covered by sea side plantations


பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
BAGAVA NAARAI PARAYU SOL MAALAI ATHUM VALLAAR

இறைவரைப் பரவிப் பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓத வல்லவர்
In that lovely form of place named poon thaaraai where lord Siva descended whom praised form of sang the above songs by those disciples


அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.
AGAL VAR THEEVENAI ALVENAI YOODU UDAN AAVAREEA

தீவினை அகல்வர் அவர்கள் நல்வினை உடையவர் ஆவார்
and those disciples will get away by bad deeds and then they will be converted in to good deed performers
2.1.11

திருச்சிற்றம்பலம்—OM THIRU CHITRAM BALAM

November 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: