THIRU KLIP PAALAI
044 திருக்கழிப்பாலை
THIRU KLIP PAALAI
பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM
தல வரலாறு – காவிரி வடகரைத் தலங்கள் 63 – இல், இது 4 ஆவது திருத்தலம். மூவர் பாடல் பெற்றது. வால்மீகி முனிவர் வழிபட்டது.
466 வெந்த குங்கிலி யப்புகை விம்மவே
VEENTHA KUNGIL YAM PUGAI VEMMA VEEA
In thefire place sprayed kungkuliyam fragrance spread over every where
கந்தம் நின்றுல வுங்கழிப் பாலையார்
GANTHAN NINRU YULLAYUN KALI PAALAIYAAR
That fragrace spread in thiru kaalippaalai temple place where dwelling lord Siva
அந்த மும்மள வும்மறி யாததோர்
ANTHAMUM ALAYUM ARIYAATHA THOOR
Who is not scaled what type of mannerism possessed lord Siva which is not known
சந்த மாலவர் மேவிய சாந்தமே.
SANTHA MAA MALAR MEEVOYA SAANTHAMEEA
And that lord Siva’s calmness is also not measured one
நெருப்பில் இடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால், நறுமணம் கமழும் திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவி;ல்லாதவர். இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர். அப்பெருமானின் சாந்த நிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும்.
01
467. வானி லங்க விளங்கும் இளம்பிறை
VAAN EALNGA VELANGUM EALAM PERAI
In the space place giving light that moon
தான லங்கல் உகந்த தலைவனார்
THAAN ALANGAL YUGANTHA THALAIVANAAR
Lord Siva adorned it as garland form in the hair place that form of leader he is
கானி லங்க வருங்கழிப் பாலையார்
KAAN EALANGA VARUM KALIP PAALAAIYAAR
The sea sode plantations are covered place isthiru kalip paali where lord Siva dwelling
மான லம்மட நோக்குடை யாளொடே.
MAAN ALLAAAM MADA NOKKU YUDAITAALODEEA
The stage like eyes are possessed lords yumaadevi with whom lord Siva seated
வானம் பிரகாசிக்க விளங்கும் இளம் பிறைச் சந்திரனை மாலை போல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான், கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமா தேவியாரோடு வீற்றிருந்தருளுவார்.
02
கொடிகொள் ஏற்றினர் கூற்றை யுதைத்தனர்
KODI KOL EATRINAR KOOTRAI YUTHAITHANAR
Lord Siva carried bull flage on his hand place and the kicked and then killed death god ema
பொடிகொள் மார்பினிற் பூண்டதோர் ஆமையர்
PODI KOL MAARBINAR POONDATHOOR AAMAIYAR
In the sacred bosom place white ashes are adorned and then tortoise skull adorned as ornament form
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
KADI KOL POOMPOLIL SOOL KALIP PAALAIYUL
The fragrance filled flower gardens are surrounded place is thirukalip paalai where lord Siva descended
அடிகள் செய்வன ஆர்க்கறி வொண்ணுமே.
ADIGAL SEIVNAA AARKU ARI VONNUMEEA
And that form of lord Siva’s activities are not known by any body else
இறைவன் எருதுக் கொடியை உடையவர். காலனைக் காலால் உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் செயல்களை யார்தான் அறிந்து கொள்ள முடியும்? ஒருவராலும் அறிந்து கொள்ள முடியாது.
03
பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
PANN ALAM PADA VANDARAI KONRAIYIN
In the flower place available honey is sucked and then singing humming songs
தண்ண லங்கல் உகந்த தலைவனார்
THANN ALANGAL YUGANTHA THALAI VANAAR
That cool konai flower garland willing adorned by lord Siva who is my leader
கண்ண லங்க வருங்கழிப் பாலையுள்
KANN ALANGAL VARUM KALIP PAALAIYUL
The eyes are mesmerized form of thiru kalippaalai temple place
அண்ண லெங்கட வுள்ளவ னல்லனே.
ANNAL EAM KADAYUL AVAN ALLANEEA
Lord Siva seated who is our leader
பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக், குளிர்ச்சி பொருந்திய கொன்றை மாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான், கண்ணைக் கவரும் பேரழகினை உடைய திருக்கழிப் பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவர். அவரே எம் கடவுள் அல்லரே?
04
470. ஏரி னாருல கத்திமை யோரொடும்
EEARINAAR YULAGATHU EAMAI YORODUM
The emotional filled minded upper world deevaas and then in this land people are together praying form of lord Siva
பாரி னாருட னேபர வப்படுங்
PAARNAAR YUDANEA PARAVAP PADUM
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெஞ்
KAAINAR POLIL SOOL KALIP PAALAI EAM
The clouds are crayaling on the top of the plantions are covered place is kalippaalai
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.
SEERINAAR KALALEEA SINTHAI SEI MINEEA
Where seated lord Siva’s feet are thinkover all the times to get betterment in life
எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு, மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும், மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள்.
05
துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்
THULLUM MAAN MARI AANG KAIYIL EEANTHI YOOR
The leap forward form of stage is carried on the hand place
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
KOLVANAAAR EADU VEN THALAIYIL PALI
And then wandering every hamlets to collect begging food
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
KALVANAAR YURAIYUM KALIPP PAALAIYAI
That culprit form lord Siva dwelling place is seergaali
உள்ளு வார்வினை யாயின வோயுமே.
YULLUVAAR VENAI AAYINA VOOYUMEEA
Those who are thinking over in meditations and that persond bad deeds are eliminated
துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய கையில் ஏந்தி, ஊர் தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற, கள்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைத்து ஏத்த வினையாவும் நீங்கும்
06
472. மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
MANNINAAR MALI SELVAMUM VAANAMUM
In this land place available big wealth and then in the upper world ultimately got wealth
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
EANNI NEER EANITHU EEATHUMIN BAAGAMUM
think over in mind
Those wealth will be given lord Siva alone in this world and then who has taken lords parvathi in his left part of body
பெண்ணி னார்பிறை நெற்றியோ டுற்றமுக்
PENNINAAR PERAI NETRI YOODU YUTRA MUKK
That twin form of lord Siva who has adorned the curved moon on the hair place and then
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.
KANNINAAR YURAIYUM KALIP PAALAIYEEA
Lord Siva who has possessed three eyes thatform of lord Siva seated place is thiru kalippaali
மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும், வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும், தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி, தன் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும், பிறைச் சந்திரனைச் சடை முடியில் அணிந்தவனும், முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப் பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக.
07
இலங்கை மன்னனை ஈரைந் திரட்டிதோள்
EALANGAI MANANAI EER EAINTHU EARATI THOL
The sri lanka king named ravana whose twenty shoulders and then heads are smashed form
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
THULAG VOONRIYA YHOO MALU VAALINAAR
Lord Siva stamped him under kaiyilai hills and then carried the pure malu force carried on the hand place
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
KALANGAL VANTHU YULAYUM KALIP PAALAIYUL
The wooden ships are all the time arriving place is thiru kalippaalai
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
VALAM KOLVAAR VENAI AAYINA MAAYUMEEA
And those disciples who are encircling the temple place and that disciples bad deeds will be removed
இலங்கை மன்னனான இராவணின் இருபது தோள்களும் நொறுங்கும்படி, கயிலை மலையில் தன் காற் பெருவிரலை ஊன்றிய, தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய, சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற, மரக் கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர் களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும்.
08
ஆட்சி யால்அல ரானொடு மாலுமாய்த்
AATCHIYAAL ALARAANODU MAALU MAAI
In the lotus place seated bharma and then yhirumal who are creation and preservation work is given by lord Siva to them and because of that ego filled mind
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
THAATCHI YAAL ARIYAATHU THALARN THANAR
They tried to search lord Siva’s head and feet but
Failed and then got tired
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
KAATCHI YAAL ARIYAAN KALI PAALAIYAI
And are not seen in visual form and that form of lordSiva seated in thiru kalippaalai temple place
மாட்சி யால்தொழு வார்வினை மாயுமே.
MAATCHIYAAL THOLUVAAR VENAI MAAYUMEEA
Who is not seen by book knowledge and not seen by soul knowledge and then those disciples who are prayed by humble form of mind and that disciples bad deeds will be removed
தாமரை மலரி;ல் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்கு காரணமாக, இறைவனுடைய திருமுடியையும், திருவடியையும் அறிய முற்பட்டுத் தமது நூலறிவாலும், ஆன்ம அறிவாலும் அறியப் படாதவனான சிவ பெருமான், வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப் பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும்.
09
475. செய்ய நுண்துவ ராடையி னாரொடு
SEIYA NUNN THUVAR AADAIYINAAAR RODU
The red saffron color adorned buthaas and then dirty body possessed samanaas
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
MEIYIN MAASU PRANGIYA VEERILLAAK
And those ignaaanimus low graded persons we need not have any connection
கையர் கேண்மையெ னோகழிப் பாலையெம்
KAIYAR KEENMAI EANNOO KALIP PAALAI EM
And then go away from their preaching’s and pray under lord Siva’s feet who are dwelling in thiru kalippaalai temple place
ஐயன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.
EAIYAN SEAVADIYEEA ADAINTHU YUIMINEEA
Those disciples you are pray under his feet and then surrender and then got upliftment in life
சிவந்த மெல்லிய மஞ்சட் காவி உடைகளை உடுத்திய புத்தர்களோடும், அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ் மக்களாகிய சமணர்களோடும் நட்பு உனக்கு ஏனோ? அழகி குளிர்ச்சி மிகுந்த சீர்காழியில் அவதரித்த அருமறை வல்ல ;ஞானசம்பந்தன்
101
476. அந்தண் காழி அருமறை ஞானசம் ANTHAN KAALI AARU MARAI GAANA SAM
The lovely cool place descended gaanasambanther in seer gaali temple place who is excelled in rare form of veethaas
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
BANTHAN PAAI PUNAL SOOL KALIP PAALAI YAI
The water bodies are filled place is seer gaali
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
SINTHAIYAAR SONNA SEN TAMIL VALLAVAR
With Siva gaana form of mind sang the above songs and those disciples who are excelled in it
முந்தி வானுல காடன் முறைமையே.
MUKTHI VAAN YULAGU AADAL MURAIMIYEEA
And the beforehand reserved a place in upper world
அழகிய குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறை வல்ல ஞான சம்பந்தன்,: பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக் கழிப்பாலையைப் போற்றிச், சிவசிந்தையோடு சொன்ன செந்தமிழ் ஆகிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் எல்லோரும், முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர்.
11
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM