THIRU KARUGAAYOOR
046 திருக்கருகாவூர்
THIRU KARUGAAYOOR
பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAMBALAM
தல வரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 – இல், இது 18- வது திருத்தலம். திருக்களாவூர் என வழங்கப் படுகிறது. பிரமன், கௌதமர், சந்திரன் வழிபட்டது. இதற்கு முல்லை வனம், மாதவிவனம், கர்ப்பபபுரி என்பன வேறு பெயர்கள்
488 முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
MUTHU EALANGU YUMMAI ANJAVEEA
The pearls like soft laughter possessed lords Yumaadevi got afraid of
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
MATHA YAANAI MARUGA AVV YURI VANGIYAK
The mad elephant skin is pealed and then adorned it
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
KANTHAI PORTHA KADAYUL KAARUGAVOOR EAMM
And that skin adorned form lord Siva seated in thiru karugaavoor temple place as my leader
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
ATHAR VANNAM ALALUM ALAL VANNAMEEA
Whose body color is fire glow like red color
முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும் உமாதேவி அஞ்சுமாறு, மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய, கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர். அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
01
489. விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
VIMUTHA VALLA SADAIYAAN VENAIYULGUVAAR
Lord Siva who has carried Ganges on the hair place and that form of lord Siva and then those disciples who are doing menial service under his feet
கமுத நீழலக லாததோர் செல்வமாங்
AMUTHA NEELAL AGALAATHATHOOR SELVAMAAM
And that form of your service is nectar of happiness giving act under lord Siva’s feet
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
KAMUTHA MULLAI KAMALGINRA KARUGAAVOOR
The white color mullai jasmine fragrance spread over place is thiru karugavoor
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
AMUTHAR VANNAM ALALUM ALAL VANNAMEEA
And then blesses all and then who is giving nectar form of happiness and that form of lord Siva’s body color is fire like one
கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே, நும் பணி ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் பொன்ற சிவந்த வண்ணமாகும்.
02
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
PALAGA VALLA SERU THONDER PAA VIN EASAI
To get intimacy with lord Siva and those simple disciples and the with musical notes are filled form singing
குழக ரென்றுகுழை யாவழை யாவருங்
KULAGAR EANRU KULAIYAA ALAI YAAVARUM
With love filled submissive form called him
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
KALAL KOL PAAADAL YUDAIYAAR KARUGAA VOOR EM
Those anklets are adorned sacred feet alone singing form and then that lord Siva seated place is thiru karugaavoor
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
ALAGER VANNAM ALALUM ALAL VANAAMEEA
And that hand some form of lord Siva’s body color is red fire glow like one
பழகுவதற்குரிய சிறப்புடைய சிறந்த தொண்டர்கள், இன்னிசையோடு பாடி அழகான சிவபெருமானைக் குழைந்து அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட பாக்களைப் பாட, திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான சிவபெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
03
பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன்
PDI MEI POOSI MALAR KOITHU PUNARNTHUDAN
The sacred ashes are adorned on the body place and then disciples are all the time sprayed flowers under his feet and then prayed
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
SEDER ALLAA YULLAM NALGIYA SEL VATHAN
Those disciples are given sinless form of mind to them and that rich person is lord Siva
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
KADI KOL MULLAIKAMALUMKARUGAA VOOR EM
The fragrance filled mullai flowers are spread over fragrance everywhere and that temple place is thiru karugaavoor who is also my lord Siva
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
ADIGAL VANNAMALALUM ALAL VANNAMEEA
Who’s body color is red one
திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர்கொண்டு தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக், குற்றமில்லாச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
04
மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச்
MAYAL INRI MALAR KOITHU VANAG GIDA
Without any fainting’s in mind flowers are plucked and then tied as garland than adorned it to lord Siva and then prayed him
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
SSEIYA YULLAM MIGA NALGIYA SELVATHAR
To whom lord Siva gave the good form of mind given to them and that rich person is lord Siva
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
KAITHAN MULLAI KAMALUM KARUGAAYOOR EMM
The thalai flower trees and mullai flowers are bloomed place is thiru karugaavoor
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
EYAR VANNAM ALALUM ALAL VANNAMEEA
And that leader lord Siva’s body color is red fire like one
மயக்கமில்லாமல் மலர் கொய்து போற்றி வணங்கும் அடியவர்கட்குச், செம்மையான உள்ளம் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்து அருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
05
493. மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
MAASIL THONDER MALAR KONDU VANAG GIDA
The flaw less form of mind possessed disciples are prayed lord Siva
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர்
AASAI YAAR ARUL NALGIYA SELVATHAR
Whose likings are satisfied form lord Siva blessed them
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
KAAI SENATHA VEDAIYAAR KARUGAA VOOR EMM
To get angry that bull is taken as travelling medium by lord Siva who is dwelling in thiru karugaavoor temple place and then blessed all
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
EESAR ANNAM EAIYUM EARI VANNAMEEA
And that form of lord Siva’s body color is red one
மாசில்லாத தொண்டர்கள் மலர் தூவி வணங்கிட, அவர்கள் விருப்பம் நிறைவேற அருள் நல்கும் செல்வரான சிவபெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வானமாகக் கொண்டு திருக்கருகாவூரில் வீற்றிருந்து அருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
06
494. வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
VENTHA NEERU MEI POOSIYA VEETHIYAN
Lord Siva who has adorned sacred ashes all over the body and then appearing in veetha chanting bharmin form
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
SINTHAI NINRU ARUL NALGIYA SELVATHAN
And the seated in the thinking mind of disciples and blessed then those rich person is lord Siva
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
KANTHA MAVAL KAMALUM KARUGAA VOOR EMM
The fragrance filled mullai flowers are bloomed place is thiru karu gaavoor who is my father
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
EANTHAI VANNAM EARIYUM EARI VANNAMEEA
Who’s body color wood burning like red color one
திருநீறு பூசிய வேதியராய், அடியவர்தம் சிந்தையில் நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகள் மலரும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
07
இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
08
495. பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார்
PANNIN NEER MOLIYAAL YAALAI YOOR PAAGANAAR
The musical notes are filed form softly talking lords yumaadevi is taken left part of his body
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங்
MANNU KOLAM YUDAI YAM MALARAA NODUM
And then decorated form of lotus flower place seated bharma and thirumal
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம்
KANNAN NEEDDA ARIYAAR KARUGAAYOOR EMM
Who are unable to see in visual form and that abstract form lord Siva seated in thiru karugaavoor temple place
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
ANNAL VANAM ALALUM ALAL VANAMEEA
And then elderly person is lord Siva who’s body color is lotus flower like red one
பண் போன்று இனிய மொழி பேசும் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவர், அலங்கரிக்கப் பட்ட கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும், காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவரது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
09
496. போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
PORTHA MEIYINAR POTHU YULVAAR GAL SOL
The saffron color dress adorned buthas who are wandering everywhere and who’s preaching’s are
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
THEERTHAM EANRU THELIVEERTHELIYEEAN MIN
You need not consider as valuable one
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
KAARTHANMULLAIKAMALUM KARUGAAYOOR EMM
The clouds are covered form of mullai flower plantations are converted place is thiru karugaavoor where lord Siva dwelling and then blessed all
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. AATHAR VANNAM ALALUM ALAL VANNAMEEA
And that my lord Siva’s body color is fire glow like one
மஞ்சட் காவி ஆடையால் போர்த்த உடம்பினர்களும், பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் என் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
10
497. கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர்
KALAVA MANJAI YULAYUM KARUGAA YOOR
The feathers are spread over form of dancing the peacock that place is lord Siva dwelling one
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல்
NELAYUU PADAL YUDAIYAAN THAN NEEL KADAL
Who is praised by prayer songs and that form of disciples
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
KULAYUU GAANA SAMBANTHANA SEN TAMIL
With love form the above songs are sung and which is composed by ganasambanther in pure Tamil
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
SOLA VALLAR AVER THOL VENAI THEERUMEEA
Those disciples who are sung it and then they will be placed in rich pace and then whose good old bad deeds will be removed
மயில் தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் , புகழ்ப் பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி, ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஒத வல்லவர்களின் தொல்வினை தீரும்.
11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – முல்லைவனேசுவரர், தேவியார் – கரும்பனையாளம்மை.
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM