OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU AALAVAAI

ganesheit October 31, 2019

047 திருஆலவாய்
THIRU AALAVAAI


பண் – கௌசிகம்
திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM


498 காட்டு மாவ துரித்துரி போர்த்துடல்
KAATU MAAVATHU YURI PORTHU YUDAL

In the forest place dwelling elephant skin is pealed and then adorned it as upper dress


நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான்
NAATA MOONRUDAI YAAYURAI SEIVANAAAR

Lord Siva you are possessed three eyes


வேட்டு வேள்விசெய் யாவமண் கையரை
VEETU VEELVI SEIYAA AMAN KAIYAR

The good yaaga fire is not conducting those samanaas are


ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.
VOOTI VAATHU SEIYA THIRU YULLAMEEA

They are brought in the oration completion and then driven them away place give me your permission to do so please reply my request
காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப் போர்த்திய இறைவனே, மூன்று கண்ணுடைய பெருமானே! நல் வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம் செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக் குறிப்பு யாது? உரை செய்வாயாக.
01

மத்த யானையின் ஈருரி மூடிய
MATHA YAAANAIYIN EER YURI MOODIYA

The mad elephant skin is pealed and then adorned it as upper dress


அத்த னேயணி ஆலவா யாய்பணி
ATHANEEA ANI AALAVAAYAAI PANI

My dear leader you are dwelling in thiru aaalavaai temple place


பொய்த்த வன்றவ வேடத்த ராஞ்சமண்
POITHA VANN THAVA VEEDATHAAN SAMAN

The face appearance possessed samanaas


சித்த ரையழிக் கத்திரு வுள்ளமே.
SITHARAI ALIKKA THIRU YULLAMEEA

With them oration form of ward duel and then own over them what is your wards to do so. Please allow me to take part in that event
மதம் பொருந்திய யானையின் தோலை உரித்துப் போர்த்திய அத்தனே! அழகிய ஆலவாயில் விளங்கும் நாதனே! பொய்த்தவ வேடம் கொண்ட சமணரிடம் வாது செய்து அழிப்பதற்குத் திருவுள்ளம் யாதோ? உரைப்பாயாக.


02
500. மண்ண கத்திலும் வானிலும் எங்குமாந்
MANAGATHILUM VAANILLUM EANU MAAM

Lord Siva you are firmly seated in this land and upper world and then everywhere


திண்ண கத்திரு ஆலவா யாயருள்
THINNAGATH THIRU AALAVAAI YAAYA ARUL

And then you are also seated in thiru aalavaai temple place and then blessed all


பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
PENNAGATHU SAAKIYA PEEI AMAN
Buthaas and than saamanaas are put in to ward duel


தெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
THENNAAR KARPU ALITHIRU THIRU YULLAMEEA

Whose doctrines are deficient filled one and then try to destroy it oration will you give me permission to do same please reply to my request
இப்பூவுலகத்திலும், விண்ணுகலத்திலும், மற்றும் எல்;லா இடங்களிலும் உறுதியாய் விளங்கும் ஆலவாயில் வீற்றிருக்கின்ற ;இறைவனே! பௌத்தர்களும் சமணர்களும் வாதம் புரியும் தன்மையில் அவர்தம் கல்வியைத் தகுதியற்றதாக அழிதல் செய் வதற்குத் திருவுள்ளம் யாது? உரைத்து அருள்வாயாக.


03
501. ஓதி யோத்தறி யாவமண் ஆதரை
VOOTHI YOOTHARI YAAVAMAN AATHARAI

Veethaas are not chanting and then realized its true gaana way of life those samanaaas are


வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
VAATHIL VENRU ALIKKA THIRU YULLAMEEA

I wanted to own over them please your mental thinking to do same


ஆதி யேதிரு ஆலவா யண்ணலே
AATHIYEEA THIRU AALAVAAI ANNAALEEA

The good old prime lord you are and then seated in thiru aalavai temple place


நீதி யாக நினைந்தருள் செய்திடே.
NEETHIYAAL NENAAITHU ARUL SEITHIDEEA

Please in balanced form evaluate my request and then bless me to take part in the competition
வேதங்களை ஓதி உணுரும் ஞானம் அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம் யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே, நடு நிலையிலிருந்து அருள் செய்வாயாக.


04
502. வைய மார்புக ழாயடி யார்தொழுஞ்
VAIYA MAAR PUGALAAI ADIYAR THOLUM

In the whole universe lord Siva your glory is spread over and then prayed by your disciples


செய்கை யார்திரு ஆலவா யாய்செப்பாய்
SEIGAIYAAR THIRU AALAVAAI YAAI SEPPAAI

And in that glory filled form seated in thiru aalavaai temple place please tell me


கையி லுண்டுழ லும்மமண் கையரைப்
KAIYIL YUNDU YULALUM AMAN KAIYARAI

In the hand place accepting begging food and then consuming it those low graded samanaaas


பைய வாதுசெ யத்திரு வுள்ளமே.
PAIYA VAATHU SEIYA THIRU YULLAMEEA

In slow and gradual form take part in competition what is your reply please tell me
உலகெங்கும் பரவிய புகழை உடையவனே! அடியவர்கள் தொழுது போற்றும் திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் சமணராகிய கீழ் மக்களுடன் மெதுவாக நான் வாதம் பரிவதற்குத் தன்மை யாது? உதை;தருள்வாயாக.


05
503. நாறு சேர்வயல் தண்டலை மிண்டிய
NAARU SEAR VAYAL THANDALAI MINDIYA

The paddy seedlings are planted in the field place and then flower plantations place


தேற லார்திரு ஆலவா யாய்செப்பாய்
THEER ALLAAR THIRU AALAVAI YAAI SEPPAAI

Spill over the honey and that place is thiru aaalavaai where lord Siva you have seated please tell me


வீறி லாத்தவ மோட்டமண் வேடரைச்
VEERILAATH THAVA MOOTU AMAN VEEDARAI

The ignanimus form of penance performing bulky samanaas


சீறி வாதுசெ யத்திரு வுள்ளமே.
SEERI VAATHU SEIYATH THIRU YULLAMEEA

Who are angry form of brought in to ward dual will you give me acceptance to do same
நாற்றுக்கள் நடப்பட்ட வயல்களிலும், சோலைகளிலும் பெருக்கெடுத்து வழியும் தேன் நிறைந்த திருவாலவாயிலில் வீற்றிருந்தருளும்; சிவபெருமானே, பெருமையில்லாத தவத்தைப் புரியும் முரடர்களாகிய சமணர்களைச் சினந்து வாது செய்ய உன்னுடைய திருவுள்ளம் யாது, சொல்லியருள்வாயாக.
06

பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழுந்
PANDU ADITHAVATHAAR PAYIL VAAR THOLUM

With good old penance performing disciples are praying under your feet so you are simple form to them


தொண்ட ருக்கெளி யாய்திரு ஆலவாய்
THONDARUKKU EALIYAAI THIRU AALAVAI

And that simple form lord Siva you are descended in thiru aalavaai temple place


அண்ட னேயமண் கையரை வாதினில்
ANDANEEA AMAN KAIYARAI VAATHINIL

Lord Siva you are whole universe form existing and that greatness filled form you are dwelling in this place
I am put in to samanaas in oration completion won over then will you allow me to do so


செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.
SENDU ADITHULAR TH THIRU YULLAMEEA

Please reveal your mental thinking in that kind of act
தொண்டு தொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப் பொருளாக விளங்கும் பெருமை உடையவரே! சமணர்களை வாதில் வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?
07

அரக்கன் றான்கிரி யேற்றவன் தன்முடிச்
ARAKKAN THAAN GERIYEATRAVAN THAN MUDI

The kaiyilai hills are excavated by ravana whose heads are trapped under the hills


செருக்கி னைத்தவிர்த் தாய்திரு ஆலவாய்ப்
SERUKKINAITH THAVIRTHAAI THIRU AALAVAAI

And his ego filled mind is smashed and that form of lord Siva you are seated in thiru aalavaai temple place

பரக்கும் மாண்புடை யாயமண் பாவரைக்
PARAKKUM MAANBUDAIYAAI AMAN PAAVARAI

Lord Siva your glory is spread over everywhere and those samanaas are not praying lord that boon they are not got


கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே.
KARAKA VAATHU SEIYATH THIRU YULLAMEEA

Who are controlled form brought them in oration please reveal your sacred mind thinking to me
கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை அழித்தவரே, திருவாலவாயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து வழிபடும் பேறு பெறாதவர்களாகிய சமணர்களை அடக்குவதற்கு அவர்களடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
08

மாலும் நான்முக னும்மறி யாநெறி
MAALUMNAAN MUGANUM ARIYAA NERI

Bharmaa and thirumal are not known your mannerism


ஆல வாயுறை யும்மண்ண லேபணி
AALAVAAI YURAIYUM ANNALEEA PANI

And that way lord Siva you have seated in thiru aalavaai temple place


மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
MEELAI VEEDU YUNARAA VETRU ARAIYARAI

To do service under lord Siva’s feet and then try to attain upper world that way is not tried by naked form of samanaas


சால வாதுசெ யத்திரு வுள்ளமே.
SAALA VAATHU SEIYATH THIRU YULLAMEEA

With whom I wanted to own over then in oration religious conflict will I take part please reveal your inner mind to me
திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த், திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே! இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டு நெறியினை அடைவதற்குரிய வழியை உணராது, ஆடையின்றித் திரியும் சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?


09

கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்
KALIKKARAIP PADU MEEN KAVERVAAR AMAN

In the water bodies place living fishes are caught and then ate it those buthaas and then and good deed of life is


அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமே
ALIPPARAI ALIKKATH THIRU YULLAMEEA

Destroying those samanaass so I wanted to control them please give me your acceptance to it


தெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்
THELLIKUM POOM PUNAL SOOL THIRU AALAVAAI

The sound raising river covered place seated lord Siva in thiru aalavai temple place


மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.
MALUPPADAI YUDAI MANTHANEEA NALGIDEEA

Where you have carried malu battle force on hands and that form of leader you are so please give your consent to do the act
நீர் நிலைகளில் உள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன் மார்க்கங்களை அழித்து வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?


10
508. செந்தெ னாமுர லுந்திரு ஆலவாய்
SENTHU EANAA MURALLUM THIRU AALAVAAI

The honey bees are raising humming sound and that temple place lord Siva you have seated and then blessed all


மைந்த னேயென்று வல்லம ணாசறச்
MAINTHANEEA EANRU VALL AMANAN AAGA ARACH

And that leader you are and then called in that way your follower I am wanted to remove the deficiencies in the preaching’s of samanaas


சந்த மார்தமிழ் கேட்டமெய்ஞ் ஞானசம்
SANTHAMAAR TAMIL KEETA MEI GAANA SAM

The musical notes are filled form of sang the above songs are by gana sambanther


பந்தன் சொற்பக ரும்பழி நீங்கவே
PANTHAN SOL PAGARUM PALI NEENGA VEEA

Those disciples who are repeatedly singing it before lord Siva so as to remove curse on our part
வண்டுகள் முரலும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் மைந்தனே என்று விளித்து, வலிய அமணர்களின் நெறிகளிலுள்ள குற்றங்கள் நீங்கச், சந்தமுடைய தமிழால் இறைவன் திருவுளம் யாது? எனக் கேட்ட மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பழிநீங்க ஓதுவீpர்களாக.
11
திருச்சிற்றம்பலம்

October 31, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: