OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEEGAMBAM

ganesheit October 22, 2019

041 திருவேகம்பம் – திருவிருக்குக்குறள்
THIRU VEEGAMBA
M
பண் – கொல்லி
திருச்சிற்றம்பலம்

தல வரலாறு – தொண்டை நாட்டுத் தலங்கள் 32 -இல், இது முதலாவது திருத்தலம். அம்பிகையானவள் மணலால் இலிங்கம் அமைத்து பூசித்த தலம். சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இடக்கண் பார்வை அருளிய இடம். இரத சப்தமியன்று சூரிய ஒளி சுவாமியின் மீது படும் சிறப்பு உடையது.

433 கருவார் கச்சித், திருவே கம்பத்

KARUVAAR KATCHI THIRUVE KAMPATH
TO ALL LIVING BEINGS IN THIS WORLD lord Siva is prime nucleus matter form of seated in the kangipuram temple named thiru kachi eagambam

தொருவா வென்ன, மருவா வினையே.

THERUVA VENNA MARUVA VINAIYE
That unique form of lord Siva is pray and then praised form surrender under his feet those disciples are not affected by bad deeds
யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி வணங்க, வினை வந்து சாராது.
01

மதியார் கச்சி, நதியே கம்பம்

MATHIYAAR KATCHI NATHIYE KAMBAM
The moon is crawling on the top of the mansions are filled place is kanchipuram where flowing the river named kambai on its bank place situated thiru eagambeswarer temple


விதியா லேத்தப், பதியா வாரே.

VITHIYAA LETHTHAP PATHIYAA VARE
Where lard Siva prayed as per aagamaa rules form those disciples will be ultimately leader to demon forces
மதி தவழும் மாடங்களை உடைய கச்சியில், கம்பை நதிக்கரையில் விளங்கு கின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி ,அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள்


02
435. கலியார் கச்சி, மலியே கம்பம்

KALIYAAR KATCHI MALIYE KAMPAM
The festivals are all the time going on in the kanchipuram eagaambeswarer temple place seated lord Siva


பலியாற் போற்ற, நலியா வினையே.

PALIYAR POTRA NALIYAA VINAIYE
Those disciples who are prayed with poojaa articles
That disciples will be affected by bad deed effects
விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில், வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்ப நாதரைப், பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை.
03

வரமார் கச்சிப், புரமே கம்பம்

VARAMAAR KATCHIP PURAME KAMBAM
Those disciples who are praying in the eagambeswarer temple they will get all types of boons from lord Siva


பரவா ஏத்த, விரவா வினையே.

PARAVAA EATHTHA VIRAVA VINAIYE
In kanchipuram and they will not be followed by any type of bad deed effects
தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத் தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும். இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும்.


04
437. படமார் கச்சி, இடமே கம்பத்

PADAMAAR KATCHI IDAME KAMPATH
The arty facts are filled place is kanchipuram


துடையா யென்ன, அடையா வினையே.

THUDAIYA YENNA ADAIYAA VINAIYE
Where lord Siva seated who is prayed by disciples as their leader that disciples will not attract any form of bad deeds
சித்திர வேலைப்பாடுகளை உடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு, திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது.


05

நலமார் கச்சி, நிலவே கம்பம்

NALAMAAR KATCHI NILAVE KAMBAM
The goodness giving kanchipuram temple place named thiru eagambam where prayed with love form


குலவா வேத்தக், கலவா வினையே.

KULAVAA VETHTHAK KALAVAA VINAIYE
And then internal mind happiness form and those disciples bad deeds will be removed
நலம் தரும் கச்சி நகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.


06
439. கரியின் னுரியன், திருவே கம்பன்

KARIYIN NURIYAN THIRUVE KAMPAN
The elephant skin is pealed and then adorned it as upper dress by lord Siva who is seated in thiru eagambam temple place


பெரிய புரமூன், றெரிசெய் தானே.

PERIYA PURAMOON RERISEI THANE
And three castle assuraas are giving trouble to deevaas whose castles destroyed by fire arrow
யானையின் தோலை உரித்துப் போர்த்துக் ;கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்று புரங்களையும் எரியுண்ணும்படிச் செய்தார்.
07

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்

ILANGAI YARASAI THULANGA VOONRUM
The sri lankan king ravana is trapped under kaiyilai hills and then destroyed his mighty powers


நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.

NALANGGOL KAMPAN ILANGU SARANE
And that lord Siva’s feet is surrendered which will give us bright life in this world
இலங்கை மன்னனான இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு, காற் பெருவிரலை ஊன்றி, அவன் நலத்தை அழித்த திருவேகம்பன், திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும்.


08
441. மறையோன் அரியும், அறியா வனலன்

MARAIYON ARIYUM ARIYAA VANALAN
Bharama and thirumal are not seen lord Siva’s real appearance form lord Siva appeared before them in fire pole form


நெறியே கம்பம், குறியால் தொழுமே.

NERIYE KAMPAM KURIYAAL THOLUME
Who has been dwelling in kachipuram temple in concept form and then deity form
பிரமனும், திருமாலும் அறிய முடியாத வண்ணம் நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான், கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும், போற்றித் தொழப் பெறும் குறியாகவும் உள்ளார்.
09


442. பறியாத் தேரர், நெறியில் கச்சிச்

PARIYAATH THERAR NERIYIL KATCHI
The hair is not plucked that buthaas and hair plucked those samanaas who religious philosophy is not followed


செறிகொள் கம்பம், குறுகு வோமே.

SERIKOL KAMPAM KURUKUVOME
In kanchipuram place descended lord Siva who is knowledge inflated form seated whose sacred temple entered and then prayed him
தலைமயிர் பறியாத புத்தர்களும், அது பறிக்கப் பட்ட சமணர்களும், கூறும் நெறியில் அமையாது, கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்ப நாதனின் திருக்கோயிலை அடைந்து வழிபடுவோமாக.
10


443. கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்

KOTCHAI VENTHAN KATCHI KAMPAM
Kochai vayam alias seergaali seergaali place descended ganasambanther who has praised form sang the above poems


மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.

MECHUJ SOLLAI NANSUM PUGALE
Those disciples who are singing before lord Siva they will live in this world long glory filled form
கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன், திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்; பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்.
11
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

October 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: