OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru chitru eamam

ganesheit October 22, 2019

042 திருச்சிற்றேமம்
Thiru chitru eamam

பண் – கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்— om thiru chitram balam

தல வரலாறு – காவிரித் தென்கரைத் தலம் 127 –இல், இது 106 ஆவது திருத்தலம். பிரமரிசி, சித்தர்கள் வழிபட்ட தலம். சித்தாய்மூர் என வழங்கப் பெறுகிறது. பக்கத்தில் அரிச்சந்திரநதி, செண்பக நதி உள்ளன. ஈசன் தன் அடியவர் ஒருவருக்குப் பொன் வழங்க அருளிய தலச் சிறப்புக் கொண்டது.


444 நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்

 NIRAIVENDINGAL VAANMUGA  MAATHARPAADA NEELSADAIK
The full moon form of glittering face possessed lords yumadevi singing and then long hair possessed lord Siva


குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்

KURAIVENDINGAL SOODIYOR AADALMEYA KOLKAIYAAN
Who has adorned the third day curved moon and the dancing and that mannerism possessed form of


சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்

SIRAIVANDIYAL SEIPAIM POLIR PALANAJSOOLSEER REMATHTHAAN
The winged bees are rising yawl like musical sound that lust green plantations are covered place and paddy fields are covered one is thiru chitreamam where lord Siva descended who is prayed by whole world


இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.

IRAIVANENRE YULAKELAAM EAATHTHA NINRA PERUMAANE

வெண்மையான முழு நிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த, திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்து அருளுகின்ற இறைவர், உலகமெல்லாம் ஏற்றிப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவார்.


01
445. மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்

MAAGATHTHINGAL VAAN MUGA MAATHAR PAADA VAAR SADAI
In the space place glittering form of face possessed lords yumaadevi singing and then and then long hair possessed
பாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்

PAAGATHTHINGAL SOODIYO RAADAL MEYA PANDANGAN
Lord siva who has adorned the curved cut of moon on the hair place and then dancing the padarangam verity of dance
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்

MEGATHTHAADU SOLAI SOOL MIDAISIRREMAM MEVINAAN
The clouds are crawling on the top of the plantations that place thiru eamamam where lord Siva seated and then blessed all


ஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே

AAGATHTHOR KOL AAMAIYAIP POONDA ANNAL ALLANE
That form of lord Siva who has adorned tortoise skull on the bosom place as ornament form
ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தை உடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச் சந்திரனைச் சூடிப், பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் தவழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?
02


446. நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்

NEDUVENDINGAL VAANMUGA MAATHAR PAADA NEELSADAIK
The white full moon form of lords parvathi is singing and then long hair possessed lord Siva


கொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்

KODUVENDINGAL SOODIYO RAADAL MEYA KOLKAIYAAN
The curved form of moon adorned lord Siva who is dancing in consonance to singing that rule following lord Siva


படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்

PADUVANDI YAL SEIPAIM POLIR PALANJSOOLSIR REMATHTHAN
The honey bees are yawl form of humming sound raised those plantations are covered place is chitreamam where lord Siva descended


கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே.

KADUVENGA KOOTRAI KAALINAAR KAINTHA KADAVUL ALLANE
Who has kicked and killed the wild death god ema and that form of lord Siva he is
வெண்ணிறப் பூரணச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச் சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ் போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த, திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன், கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?


03
447. கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்

KATHIRAAR THINGAL VAAN MUGA MAATHAR PAADAK KANNUTHAL
The rays are filled glittering form of face possessed lords yumaadevi is singing and then fore head eye possessed lord Siva


முதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்

MUTHIRAAR THINGAL SOODIYO RAADAL MEYA MUKKANAN
Who has adorned young moon on the hair place that form of three eyes are possessed lord Siva


எதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்

EATHIRAAR PUNALAM PUNSADAI YELILAARUJSIR REMATHTHAAN
Lord Siva who has taken ganges on the hair place and then lovely form seated in chitreamam temple place


அதிரார்பைங்கண் ஏறுடை யாதிமூர்த்தி யல்லனே.

ATHIRAARPAINGAN EARUDAI YAATHIMOORTHTHI YALLANE
Who has taken lust green eyes are possessed bull as his travelling medium and that good old prime god and then deity form appearing here
கதிர் வீசும் சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமா தேவியார் பண்ணோடு பாட, நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் கழுத்தில் கட்டிய சதங்கை ஒலிக்கும், பசிய கண்களை உடை இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆரமுது அல்லவோ!
04

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்

VAANARTHINGAL VAANMUGA MAATHAR PAADA VAAR SADAIK
In the space place glittering form of face possessed lords Yumadavi is singing and then long hair possessed lord Siva


கூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்

KOONAAR THINGAL SOODIYO RAADAL MEYA KOLKAIYAAN
The stooped form of moon adorned on the hair place and then dancing accordingly those concept form of lord Siva dwelling in this place


தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்

THENAARVANDU PAN SEUNTH THIRUVAARUJSIR REMATHTHAAN
In the flower place sucked the honey and then those honey bees are haply singing in chitraman temple place


மானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே.

MANAARVILINAN MATHODUM MAKILNTHAMAINTHAN ALLANE
The stage like frightening eyes are possessed lords umaadevi with her brave form seated place it is
வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமா தேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடை முடியில் வளைந்த பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப், பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு, இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?


05
449. பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்

PANIVENDINGAL VAANMUGA MAATHAR PAADA PALSADAIK
The cool form of moon like face possessed lords yumaadevi with musical notes are filled form singing and the spread over form of hair possessed lord Siva
குனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்

KUNIVENDIGANL SOODIYO RAADAL MEYA KOLKAIYAAN
Who has stooped form of moon adorned on the hair place and then dancing as per musical notes are filled form


தனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தா
ன்

THANIVELVIDAIYAN PULLINATH THAAMAJSOOLSIR REMATHTHAN
The single bull is accepted as his travelling medium and then birds and flower ponds are filled place is chitreamam where lord Siva dwelling


முனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே
.

MINIVU MOOPPUM NEEKKIYA MUKKAN MOORTHTHI ALLANE
Who has any like and dislike in this world who is all the time appearing in young form without attaining old age in this world and then three eyes are possessed form appearing in this world
குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமா தேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுயில் வளைந்த பிறைச் சந்திரனைச் சூடி, ஆடல் புரிபவர் சிவபெருமான். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவராய், மூப்பினை அடையப் பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?
06

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடில

ILARUNTHINGAL VAANMUGA MAATHARPADAK KEDILAA
The kindling form of raising the full moon and just like face possessed lords yumaevi is singing form and then flawless form of appearing lord Siva


வளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவ
ன்

VALRUNTHINGAL SOODIYO RAADAL MEYA MAATHAVAN
Ever growing form of moon is adorned on the hair place and then dancing all the time


தளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தா
ன்

THALIRUNG KOMPUM MATHUVUMAAR THAMAJSOOL SIR REMATHTHAN
The tender leave and fully flowers are bloomed form of and then honey spillover form of garlands are adorned form lord Siva seated in thiru chit eamam temple place


ஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லன
ே.

OLIRUM VENNOOL MAARPANEN NULLATH THULLAAN ALLANE
And then lord Siva who is glittering form of three knotted thread adorned on the bosom place and then embedded in to my mind
கிளர்த்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று, ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச் சந்திரனைக் சூடித் திருநடனம் செய்யும் இறைவன், தளிரும், கொடிகளும், தேன்துளிக்கும் மலர் மாலைகளும் சூடி விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரி நூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்தில் உள்ளவர் அல்லரோ?


07
451. சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்

SOOLNTHA THINGAL VAAN MUGA MAATHAR PAADA SOOLSADAIP
The full moon form of glittering form of face possessed lords yumaadevi who is singing and then in the spread over hair place


போழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்

POLNTHA THINGAL SOODIYO RAADAL MEYA PUNNIYAN
Adorned form lord Siva dancing in punniya form


தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்

THALNTHA VAYARSIR REMATHTHAN THADAVARAIYAITHTHAN THALINAAL
The fertile paddy fields are filled place is chitreamam where lord Siva dwelling who has put his leg big finger on the kaiyilai hills


ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே
.

AALNTHA ARAKKAN OLGAN RADARTHTHA ANNAL ALLANE
And then stamped ravana under hills and then smashed him and that leader is lord Siva
சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப் ;பாடச் , சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய ;மூர்த்தியாகிய சிவபெருமான், வயல் வளம் மிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அ;பெருமான் தம் காற் பெருவிரலை ஊன்றிப், பெரிய கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லலோ?


08
452. தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்ச
டைத்

THANIVENDINGAL VAANMUGA MAATHARPADATH THALSADAITH
The unique form of white moon life face possessed lords yumaadevi singing form and then lowly hanging hair possessed lord Siva


துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்

THUNIVENDINGAL SOODIYO RAADAL MEYA THONMAIYAN
The cut form of white moon adorned on the hair place and then dancing that good old lord Siva


அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனு
ம்

ANIVANNACHCHIR REMATHTHAN ALARMELANTHA NAALANUM
The lovely chitreamam temple place dwelling lord Siva and lotus flower place seated bharma and then ruby black color diamond form of body color possessed thirumal are not seen in visual form lord Siva carried malu battle force on his hands


மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லன
ே.

MANIVANNANUMUN KAANKILAA MALUVAAT SELVAN ALLANE
ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாடத், தாழ்ந்த சடையில் இளம் பிறைச் சந்திரனச் சூடித் திருநடனம் செய்கின்ற , மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றான். அப்பெருமான் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?
09

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்

VELLAITH THINGAL VAANMUGA MATHARPAADA VILSADAIP
The white color moon possessed glittering light form of face possessed lords yumaadevi who are singing and then lord Siva’s hair untied form


பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்

PILLAITH THINGAL SOODIYO RADALMEYA PIGNAGAN
Who has adorned toddler form of young moon adorned on the hair place and then doing sacred dance all the time


உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்

ULLATHTHAR SIRREMATHTHAN URUVAARPUTHTHAR OPPILAAK
Lord Siva is willingly dwelling place is chitreamam and then lord Siva created all the living beings and then including


கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

KALLATHTHAARAITH THANAKKIYUT KARANTHU VAITHTHAN ALLANE
But who is concealed form to those buthaas and samanaas and then existing in this world
வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் பிறைச் சந்தரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவன், விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்கைளப் படைத்தும், அவர்களுக்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.
10


454. கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்

KALLILOTHAM MALKUTHAN KAANAL SOOLNTHA KAALIYAAN
The stone with it constructed long protection walls that sea covered place is seer gaali where descended gana sambanther


நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்

NALLAVAAYA VINRAMIL NAVILUM GNAANA SAMPANTHAN

செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்

SELVANUOOR SIRREMATHTHAIP PAADAL SIRAAR NAAVINAAL
The rich person lord Siva seated place is chitreamam where the above ten songs are sung by gaana sambanther and then


வல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.

VALLARAAKI VALTHTHUVAAR ALLALININRI VAALVARE
Those disciples who are memorized it and then sang before lord Siva and that disciples will live without any problems in life

கற்களால் ஆகிய மதிலில், கடல் அலைகள் மல்கும் குளிர்ந்த கடற் கரைச் சோலை சூழ்ந்த சீர்காழியில் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி, நல்ல ;இசைத் தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓத
வல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.


11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பொன்வைத்தநாதர், தேவியார் – அகிலாண்டேசுவரியம்மை.
திருச்சிற்றம்பலம் om thiru chitram balam

October 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: